|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 April, 2013

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது?


 சகோதரி ஒருவருக்கு பங்காரு அடிகளாருடன் நடந்த ஒரு நிகழ்வு உங்கள் கவனத்திற்கு.. இது போன்ற போலி சாமியார்களையும் தானே கடவுள் பட்டம் கொடுத்து கொள்ளும் மூடர்களையும் நம்பி மக்கள் எத்தனை நாள் ஏமாற போகிறார்கள்.. தெரிந்து நடந்தால் மக்களுக்கு நல்லது... பிறரும் இது போன்றவர்களிடம் ஏமாறாமல் இருக்க பகிரவும் நண்பர்களே.. நான் ஒரு முறை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்திக்க எனது அம்மா, தங்கை மற்றும் ஒரு உறவினருடன் சென்று இருந்தேன் . நாங்கள் நால்வரும் ஆயிரத்து நூற்றி எட்டு ருபாய் வைத்து தட்டு எடுத்து கொண்டு வரிசையில் காவல் இருந்து சென்றோம். 

உள்ளே ஒரு அறையில் பெரியவர் அமர்ந்து இருந்தார்...எனக்கு போனவுடனேயே மனம் சோர்ந்து விட்டது காரணம் அவரது கால் ஒரு தட்டின் மேல் வைக்க பட்டு இருந்தது... ஒரு முதியவர் அவரது காலை கழுவி கொண்டு இருந்தார். தட்டில் நிறைய தாள் காசுகளும் இருந்தன. நான் அவர் அருகில் சென்றவுடனே "உனக்கு வெளிநாடு செல்ல பலன் இருக்கு என்று கூறினார்".... எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது .... நான் வெளிநாட்டிலிருந்து தான் வருகின்றேன் என்றேன்.. உடனே அவர் முகம் கறுத்து விட்டது... பின் உனக்கு திருமணம் நடக்கும் என்றார்.... ((நான் திருமணமானவள்)) .. உனக்கு மேலும் என் உதவிகள் தேவை என்றால்... நீ பணம் தரவேண்டும் என்று கையாலே சைகை காட்டினார்.

நாங்கள் வெளி நாட்டில் இருந்து வந்து இருப்பது தெரிந்தவுடனே .... நீங்கள் ஒவொருவரும் தனித்தனியாக ஆயிரத்து நூற்றி எட்டு ரூபா தட்டு எடுத்து கொண்டு தான் வர வேண்டும்.. இப்பொழுது ஒருவருக்கு மட்டும் தான் வாக்கு சொல்ல முடியும் என கூறி விட்டார்... அதற்கு பிறகு அவரை சந்திப்பதை நிறுத்தி விட்டோம்...... பணத்துக்காக கோவில் நடத்தி ஊரை ஏமாற்றுபவர்களில் அவரும் ஒருவர் என தெரிந்து கொண்டேன்...இது போன்ற போலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நியாப்படுத்தியும் இங்கு யாரும் கருத்திட வராதீர்கள்.. உங்களுக்கு இப்படிப்பட்ட மூடர்கள் மீது நம்பிக்கை இருப்பின் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.. மற்றவரை சேர்த்து ஏமாற வைக்க வேண்டாம்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...