|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 June, 2011

இதே நாள்

  • சர்வதேச கடல் நாள்
  •  படிவ நிரலாக்க மொழி பி.ஹச்.பி., வெளியிடப்பட்டது(1995)
  •  அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது(2007)
  •  ஐக்கிய ராஜ்யத்தில் முதல் முறையாக தொழிற் கட்சி ஆட்சி அமைக்கப்பட்டது(1929)
  •  ஹேர்மன் ஹொலரித், துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1887)

ராஜபக்சே தண்டிக்கப்பட தீர்மானம்: சட்டப்பேரவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவர் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் சட்டப்பேரவையில் (07.06.2011) ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில்,

இலங்கையில் நிகழ்ந்துள்ளது. போர் குற்றம் என்று சிலர் கூறுகிறார்கள் இதனை இன அழிப்பு போர் குற்றம் என்று எனது கட்சி கருதுகிறது. இறுதிப் போரில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஆதாரங்களும் இருக்கின்றன.

இலங்கை அரசின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசு மக்கள் தொகை கணக்கீட்டின் படி 2008ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கைக்கு 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர். போர் முடிந்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக, இலங்கை அரசு வெளியிட்ட அகதிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 பேர் இதன்படி ஒரு லடசத்து 46 ஆயிரத்து 679 பேர் காணவில்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபை தனது போர் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இத்தகைய பெரிய படுகொலை இரண்டாவது உலக பெரும்போருக்கு பின் உலகில் எங்கும் நடக்கவில்லை. கடந்த காலங்களில் போர் குற்றம் செய்தவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

ஹிட்லரின் தலைமையில் நடைபெற்ற இழிவு மிகுந்த படுகொலைக்காக நூரம் பர்க் எனும் இடத்தில் விசாரனை மன்றம் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். போஸ்னியா மக்கள் 1995 ஆம் ஆண்டில் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இன அடிப்படையில் இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது விசாரனை நடத்தப்பட்டு 2007 ஆம் ஆண்டு தீர்ப்பும் வழங்கப்பட்டது. முன்னாள் தளபதி ரட்கோ மிலாடிஜ் என்பவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதனைப் போன்றே ஆப்ரிக்காவிலுள்ள ருவாண்டாவிலும் போர்க்குற்றவாளிகள் விரசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக தமிழ் மக்களை அழிப்பதற்கு தொடர்ந்த இன அழிப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2008 2009 ஆம் ஆண்டுகளில் உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகள் அனைத்தும் அந்த மக்கள் மீது போடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17, 18 தேதிகளில் மட்டுமே 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளைக் கொடியோடு புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வருமாறு ஐக்கிய நாடுகள் பொறுப்பாளர்காளல் வழிகாட்டப்பட்டும். இவரோடு வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து கூண்டோடு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு உலகில் எங்கும் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்கள் கொல்லப்பட்டது இல்லை. இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை மட்டும் படுகொலை செய்யவில்லை. தமிழக மீனவர்களையும் படுகொலை செய்து வருகிறது. போர் முடிந்த பின்னரும் மீனவர்கள் அவமானப் படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். இனவெறி மிகுந்த கொடுமையான இலங்கை அரசு என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை நாடு, எல்லை கடந்த வந்து இனவெறி கொண்டு தமிழக மீனவர்கள் சுடப்படுகின்றார்கள்.

தமிழ் மக்கள் இலங்கையிலும் தமிழக கடற்கரையில் தமிழக மீனவர்களும் கொல்லப்படும் போது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வன்னிப் பிரதேசத்திலே தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. தமிழ் இனத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டு போர் நடத்திய ராஜபட்சே இன அழிப்பு போர் குற்றவாளியாக அறிவிப்பதற்குரிய முழு பொறுப்பையும் காங்கிரஸ் கட்சி செயல்படுத்த வேண்டும்.

இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான போராட்டத்திற்கு தமிழக முதல்வர்தான் தலைமையேற்க வேண்டும். தமிழகத்தின் 7 கோடி தமிழ் மக்களும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களும் இனதத்தான் எதிர் பார்கிறார்கள். இன அழிப்பு குற்றவாளியான ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை புகழ் மிக்க இந்த அவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என்றார். 

லிட்டருக்கு 46.33 கி.மீ. தரும் வகையில் கார் ஓட்டி கோவை எஞ்சினியர் சாதனை

லிட்டருக்கு 46.33 கி.மீ. செல்லும் வகையில் டாடா மான்சா காரை ஓட்டி கோவையை சேர்ந்த எஞ்சினியர் சாதனை புரிந்துள்ளார். அவரது இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெறுகிறது.

கோவையை சேர்ந்தவர் நாராயணன் மேனன். இவர் அங்குள்ள ஆரோமென் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், டாடா நிறுவனத்தின் மான்சா குவாட்ராஜெட் டீசல் காரை சமீபத்தில் வாங்கினார். இந்த காரை அவர் அதிக மைலேஜ் கொடு்க்கும் விதத்தில் டிரைவிங் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறும்விதமாக சமீபத்தில் இவர் கோவை-அவினாசி நெடுஞ்சாலையில் தனது காரை ஓட்டி காட்டினார். என்ன ஆச்சரியம். கோவை-அவினாசி இடையிலான 72.3 கி.மீ. தூரத்தை அந்த கார் வெறும் 1.58 லிட்டர் டீசலில் கடந்தது.

இதையடுத்து, நாராயணன் மேனனின் பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்த சாதனை குறித்து நாராயணன் மேனன் கூறுகையில்," நல்ல பராமரிப்பும், முறையான டிரைவிங் செய்தாலே கார் நல்ல மைலேஜ் கொடுக்கும்" என்கிறார்

கல்லூரிகளில் விருப்ப பாடமாக வெளிநாட்டு மொழிகள் - இயக்குநர் தங்கர்பச்சான்!

மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகளை விருப்ப பாடமாக வைக்கலாம்'' என்று இயக்குநர் தங்கர்பச்சான் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சினிமா அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்றைய தலைமுறையினருக்கு வயிற்றுப்பிழைப்புக்கான கல்வியைத்தான் அளித்து கொண்டிருக்கிறோம். எங்கு படித்தால் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்பதை விட எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்பதைத்தான் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். தாய்மொழியை கட்டாய பாடம் ஆக்குவதன் மூலம் இந்த மண்ணையும், மக்களையும், மொழியையும், இனத்தையும் நாட்டுப்பற்றையும் நமது இலக்கிய வரலாற்றையும் நம் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டியது கடமை.

எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கியது தாய்மொழி வழிக் கல்விதான். தமிழில் பேசுவதை தரக்குறைவாகவும், ஆங்கிலத்தில் பேசுவதை தகுதி உடையதாகவும் நினைக்கும் போக்கு இங்கு வளர்ந்து இருக்கிறது. படித்தவர்கள்தான் பல மொழி கலந்துபேசி தமிழை சிதைத்துவிட்டோம். படிக்காதவர்கள் ஒழுங்காக தமிழ் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களையும், படித்தவர்கள் சிதைத்துவிட்டார்கள்.

கல்லூரிகளில் விருப்ப பாடமாக வெளிநாட்டு மொழிகள்: தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் உயர்கல்வி வரை தமிழ்மொழியை கட்டாய பாடமாக்க வைக்க வேண்டியது அவசியம். அதேபோல், இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது சிறப்பு பாடமாக படித்த ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி. பெரும்பாலான மாணவர்கள் ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழியை கற்காததால் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு இருந்தும் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவில் பணிபுரிய இந்தியும், வெளிநாடுகளில் பணிபுரிய ஸ்பானிஷ், ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு உள்பட ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழியை உயர் படிப்புகளில் விருப்ப பாடமாக கற்றுக்கொடுப்பதை கட்டாயமாக்கினால் அனைத்து மாணவர்களும், பெற்றோரும் ஏற்றுக்கொள்வார்கள். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க இருக்கும் தமிழக அரசு இந்த யோசனையையும் செவிசாய்த்து நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு தங்கர்பச்சான் கூறி உள்ளார்.

ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அவர்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அவர்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.அதுபோல் மத்திய அமைச்சர்களின் மனைவி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சரவைச் செயலாளர் கே.எம். சந்திரசேகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: மத்திய அமைச்சர்கள் ஆண்டுதோறும் அவர்களது சொத்து விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில் எல்லா அமைச்சர்களும் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜூன் 2-ம் தேதி அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். பிரதமரின் உத்தரவுப்படி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.அந்தக் கடிதத்தில் அமைச்சர்கள், அவர்களது மனைவிகள், மற்றும் அமைச்சரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் அமைச்சரும், அவரது மனைவி, அவரைச் சார்ந்தவர்கள் வர்த்தகம் செய்கிறார்களா அல்லது வெளிநாட்டு அரசு அல்லது தனியார் நிறுவனங்களிலோ அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்களிலோ பணிபுரிகிறார்களா என்று தெரிவிக்க வேண்டும் என கேட்டக் கொள்ளப்பட்டுள்ளனர். நடத்தை விதிமுறை பத்தி 1 (ஏ), 2 (ஏ), 2 (இ), மற்றும் 3.2 ஆகியவற்றின்படி சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

நாட்டுக்கே நல் வழிகாட்டும் மகாராஷ்டிர...

இரு தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில அரசு நல்லதொரு முடிவொன்றை எடுத்திருக்கிறது. இளைஞர்கள் மது அருந்தும் வயதை 21-லிருந்து 25 ஆக உயர்த்தியுள்ளது. இந்தச் சட்டத்தை அமல்படுத்தியிருப்பதன் மூலம் 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் மது அருந்துவது குற்றம். இவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதும் குற்றம்.



ஆனால், பீர் போன்ற குறைந்த போதை தரும் மதுபானங்களை 21 வயது நிறைவடைந்த இளைஞர்கள் இப்போதுள்ளதைப் போல தொடர்ந்து பயன்படுத்தவும், கடைகளில் வாங்கவும் அரசு அனுமதித்துள்ளது.

முதலாவது சட்டம், வணக்கம் சொல்லி வாழ்த்த வேண்டிய ஒன்று. இரண்டாவதாக, பீர் குடிப்பவர்களுக்கும் வயது வரம்பை 25 ஆக உயர்த்தியிருக்கலாம் என்பது நமது ஆதங்கமாக இருந்தாலும், இந்த 21 வயது நிபந்தனையைக் கடுமையாக அமல்படுத்தினால்கூட போதும், அந்த மாநில அரசு தன் மண்ணின் மைந்தர்களுக்குச் செய்யும் பெரும் சேவை என்று உறுதிபடக் கூறலாம்.


ஏனென்றால், 14 வயதுக்குள் மது குடிக்கத் தொடங்குவோர் போதைக்கு அடிமையாகிவிடுவதாகவும், 21 வயதுக்குப் பிறகு மது அருந்தத் தொடங்குவோரில் 9 சதவீதம் பேர் மட்டுமே போதைக்கு அடிமையாகி விடுவதாகவும் அமெரிக்க இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு புள்ளிவிவரம் தருகிறது.



தமிழ்நாட்டில் அந்நிய மதுபான விற்பனை அனுமதிக்கப்பட்டபிறகு, முன்னெப்போதும் இல்லாதவகையில் இளைஞர்கள், குறிப்பாக மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பீர் அருந்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

பிளஸ் 2 படிக்கும் மாணவரின் வயது அதிகபட்சம் 18 ஆக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த மாணவர்கள் நட்புக்காக பீர் மட்டும் குடிப்பதாகச் சொல்லிக்கொண்டு குடிப்பழக்கத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எதற்கெடுத்தாலும் பார்ட்டி வைக்கப்படுகிறது. இவர்கள் வெறும் பீர் குடிப்பதாகவும், அது மது அல்ல, ஆகவே குடிப்பதாக ஆகாது என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு திரைப்படங்களும் மோர் குடிக்கிறதுபோல பீர் என்பதாக வசனங்கள் பேசப்படுகின்றன.


உலக அளவில் பீர் வகை பானங்களில் அனுமதிக்கப்படும் ஆல்கஹால் அளவு 5 விழுக்காடு. ஆனால், இந்திய மதுபானங்களில் இந்த அளவு மீறப்படுகிறது. சில பீர் பாட்டில்களில் 8 விழுக்காடு ஆல்கஹால் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் சொல்லப்படாத அளவாக 15 விழுக்காடு வரை ஆல்கஹால் உள்ளது. இது ஏறக்குறைய அந்நிய மதுபானம் தரும் போதையைத் தருகிறது. இதற்குப் பழகியபின்னர் இவர்கள் அந்நிய மதுபானத் தயாரிப்புகளுக்குத் தாவி விடுகிறார்கள்.



பிளஸ் 2, கல்லூரி மாணவர்கள் குடிப்பதால் அவர்கள் படிப்பு நிச்சயமாகப் பாதிக்கப்படும். ஏனென்றால், ஆல்கஹால் ஜீரண உறுப்புகள் மூலமாக மூளையை வேதிமாற்றத்தால் செயலிழக்கச் செய்கிறது. அதுதான் போதை என கூறப்படுகிறது. 15 வயது வளர்இளம் பருவத்து இளைஞன், பீர் என்று நினைத்துக்கொண்டு அதிக ஆல்கஹால் கலந்திருக்கும் மதுபானத்தைக் குடிப்பதன் மூலம் மூளையின் செல்கள் பாதிக்கப்படுகின்றன. அதன் வளர்ச்சி தடைபடுகிறது. ஆகவே, அவன் படிக்கும் திறன், மனதில் பதியவைக்கும் நினைவாற்றல் குறைகிறது.



டாஸ்மாக் தரும் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பீர் உற்பத்தியும் அந்நிய மதுபான உற்பத்தியும் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.

2007-08; 2008-09; 2009-10 ஆகிய மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பீர் உற்பத்தி 15.8; 17.11; 18.66 கோடி லிட்டராக உள்ளது. அதேபோன்று அந்நிய மதுபான உற்பத்தி இதே காலகட்டத்தில், 27; 31.08; 36.66 கோடி லிட்டராக உள்ளது. ஆண்டுதோறும் பீர் உற்பத்தியைவிட அந்நிய மதுபான உற்பத்தி அதிகரித்துக்கொண்டே இருப்பதைக் காணலாம்.


இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் ஏறி உட்கார்ந்ததுமே ஏதோ விமானத்தை ஒட்டுவது போன்ற உணர்வுக்குத் தாவிவிடுகிறார்கள். போதாக்குறைக்கு இவர்கள் குடித்துவிட்டும் வாகனம் ஒட்டினால்? இன்றைய விபத்துகள் 90 சதவீதம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நிகழ்கின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். ஆயுள் காப்பீட்டுப் பணம் கிடைக்காது என்கிற காரணத்துக்காகவும், ஓட்டுநர் உரிமம் ரத்தாகாமல் இருக்க காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்தும் இதை மறைத்து வருகிறார்கள் என்பதே நிஜம்.

ஆண்டுக்கு ரூ.12,000 கோடி வருவாயை இழக்க எந்த அரசும் முன்வராது. ஆகவே மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களுக்கு மது, பீர் விற்பனை கிடையாது என்பதையும், இதை மீறி அவர்கள் பீர் குடித்தாலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலும் அதிகபட்ச அபராதம் இல்லையென்றால் ஒரு வாரம் சிறைத் தண்டனை என்று சட்டம் திருத்தப்பட்டால் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். அபராதத்துக்குப் பயப்படாவிட்டாலும் சிறைத் தண்டனை என்கிற சமுதாய இழுக்குக்காவது நிச்சயம் பயப்படக்கூடும்.


அப்படியொரு நிலைமையை தமிழக முதல்வர் நினைத்தால் உருவாக்க முடியும். 1991-ல் முதல்முறையாக முதல்வர் பொறுப்பேற்றபோது, இன்றைய முதல்வர் ஜெயலலிதா, சமூகப் பொறுப்புடன் கையொப்பமிட்ட முதல் உத்தரவே சாராயக் கடைகளை இழுத்து மூடுவதற்காகத்தான். மதுவுக்கு எதிரான அவரது கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்க அவர் முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோள். இளைஞர் நலன்கருதி, பெற்றோரின் கவலையை உணர்ந்து இதை அமல்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ராஜ்காட்டிற்கு மாற்றம்

Thousands of Baba Ramdev`s followers plan to join Anna Hazare`s fast on directions of the yoga guru who said he is "sending his supporters" to Rajghat to protest Sunday`s police crackdown at Ramlila ground.

"The government is trying to curb peaceful protesters. But thousands of my followers will participate in Hazare`s fast tomorrow," Ramdev said, adding that he had spoken to Anna who has promised unstinted support. " Anna Hazare and I are together in the war on corruption," Ramdev said.

It also turned out that his aide Acharya Balkrishan wasn`t missing. Addressing the media here, Balkrishan said, "After the police crackdown, I remained in Delhi in disguise, helping out the people who were injured on Sunday."

Ramdev, whose fast entered the third day on Tuesday, hit out at the government`s decision to bar Hazare from Jantar Mantar. He said he forgave the Prime Minister for the crackdown on his agitation, "but history will not forgive him for the political sin he committed." 




ராம்லீலா மைதானத்தில் நடந்த போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு காரணமான, மத்திய அரசை கண்டித்து, மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில், காந்தியவாதி அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் நடத்துகிறார். மேலும், "லோக்பால் வரைவுச் சட்டத்தை உருவாக்க மத்திய அரசு அமைத்த கமிட்டியில் இருந்து அன்னா ஹசாரே தலைமையிலான குழு விலகாது. விலகும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை' என்றும், அக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி ராம்லீலா மைதானத்தில், யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மீது டில்லி போலீசார் நள்ளிரவு நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து, டில்லியின் முக்கிய பகுதியான ஜந்தர் மந்தரில், இன்று உண்ணாவிரதம் நடத்த அன்னா ஹசாரே குழுவினர் முடிவு செய்திருந்தனர். டில்லி முழுவதும் 144 தடை உத்தரவு ஜூன் 16ம் தேதி வரை அமலில் இருப்பதால், இந்த உண்ணாவிரதத்திற்கு டில்லி போலீசார் தடைவிதித்தனர்.
தடையை மீறி, "போராட்டம் நடத்தி கைதாவோம்' என, குழுவின் உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். "இது போன்ற தடை உத்தரவு, அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த, அரசியல் சட்டம் கொடுத்த உரிமையை பறிக்கும் செயலாகும்' எனவும் அவர், அரசை சாடினார். இவ்வாறு அறிவித்த சிறிது நேரத்திற்குள், ஹசாரே குழுவினர் மகாராஷ்டிரா சதனில், கூட்டம் நடத்தி டில்லி போலீசின் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

"தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, கைது செய்யப்படும் போது, வன்முறை சம்பவங்கள் நிகழலாம். அது அரசிற்கு ஆதாயம் தேடித் தரும் என கருதுவதால், உண்ணாவிரதத்தை ராஜ்காட்டிற்கு மாற்றுவதாக' குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்."மத்திய அரசால் அமைக்கப்பட்ட லோக்பால் கமிட்டி கூட்டத்திற்கு அன்னா ஹசாரே குழுவினர் வந்தாலும், வராவிட்டாலும், கமிட்டி தன் கடமையை நிறைவேற்றும்' என, மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று முன்தினம் தெரிவித்தார்.பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை கலைக்க போலீசார் மேற்கொண்ட செயலுக்கு எதிர்ப்பாக லோக்பால் வரைவு மசோதா குறித்த பேச்சை அன்னா ஹசாரே தலைமையிலான குழு அன்று ஒரு நாள் மட்டும் புறக்கணித்தது. ஆனால், அதை அரசு வேறுவிதமாக கருதி, இந்த மசோதாவை திட்டமிட்டபடி உருவாக்குவதாகக் கூறி, ஹசாரே அணுகுமுறையை மத்திய அமைச்சர் கபில் சிபல் தன் பேட்டியில் வெளியிட்டார்.

அமைச்சர் கபில் சிபல் கருத்தை குழு உறுப்பினர் கெஜ்ரிவால் வன்மையாக கண்டித்தார். "ராம்லீலா மைதானத்தில் நடந்த, போலீஸ் அட்டூழியங்களை கண்டித்து, லோக்பால் கமிட்டி கூட்டத்தில் இருந்து, ஒரு நாள் வெளிநடப்பு செய்தோம். அடுத்தடுத்து நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்போம் என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கடிதம் மூலம், ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இவ்வாறு இருக்க, கபில் சிபலின் கருத்துகள், தேவையற்ற பிரச்னைகளை கிளப்பும் முயற்சி' என, கெஜ்ரிவால் தெரிவித்தார்.அதேசமயம் டில்லி ஜந்தர் மந்தரில் திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடத்துவதை குறிப்பிட்டு ஹசாரே சார்பில், பிரபல வக்கீல் சாந்தி பூஷன் டில்லி போலீஸ் கமிஷனருக்கு முன்னதாக ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், "பெரியளவில் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படாத சம்பவம் நடக்காதவரையில், டில்லியின் மத்திய பகுதியில், 144 தடை உத்தரவு ஏன். ஆகவே, திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், லோக் ஆயுக்தா தலைமை பொறுப்பில் இருக்கும் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றவர். முக்கிய பொறுப்பில் இருப்பதால் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியாது என்று குறிப்பிட்டார். அதே சமயம் "பாபா ராம்தேவ் உண்ணாவிரத பந்தலில் போலீசார் நடத்திய தாக்குதலில் இருந்து அரசு அவரை கண்டு மிரண்டிருப்பது தெரிகிறது' என்று கூறியுள்ளார்.இன்று காந்தி சமாதி முன் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு தன் ஆதரவாளர்கள் அதிகளவில் பங்கேற்பர் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

Warning the UPA government that the joint battle against corruption would intensify, the yoga guru said: "We will first fight through `tapa` (satyagraha). If the government does not accept our common demands, we will not hesitate to fight it through struggle."

But with no clear idea about who was exempt from the mutinous hunger strike, Bhavana Goswami, RSS prabhari from Amareli district in Gujarat, stared at the glass of mango shake and dahi bhalla at the Patanjali Ashram cafeteria in confusion. Ramdev had declared on Tuesday morning`s satsang that his followers are free to break their fast saying foot soldiers need to stay strong. "May be I should just have fruit and milk," she said, settling on the shake.

All of Monday when they landed in Haridwar after being herded out of Ramlila Maidan in Delhi, Bhavana Goswami and 100 fellow agitators from Gujarat, fasted with Ramdev.

  

மரத்துப்போனதா மனிதாபிமானம்!

சென்னை, எக்மோர் ரயில் நிலைய வெளிவாசலில் நெருங்கவே முடியாத அளவிற்கு நெடி வீசிய சகதி கிடங்கில் ஒரு உருவம் அனத்தியபடி நெளிந்தது.
அது ஏதோ ஓரு இரண்டு கால்,நான்கு கால் பிராணி அல்ல உயிரும்,உணர்வும் கொண்ட ஒரு மனிதன்வயது 70ற்கு மேல் இருக்கும். இதற்கு மேல் ஒல்லியாக முடியாத என்ற உடல் வாகு. கண்ணில்மட்டுமே உயிர் தேங்கி நின்றது.
பார்த்த உடனேயே யாருக்கும் பரிதாபம் வரக்கூடிய தோற்றம் ஆனால் யாருக்குமே பரிதாபம் வரவில்லையா அல்லது நின்று பார்க்க,என்னாச்சு என்று கேட்க நேரமில்லையா தெரியவில்லை.ஆளாளுக்கு மூக்கை பிடித்துக்கொண்டு பறந்தனர், ஒரே ஒருவர் மட்டும் நெருங்கிவந்தார்.ஆகா... ஒரு மனித நேயம் உள்ளவர் வந்துவிட்டார் என்று நினைத்த போது இந்த வயதானவரின் காலைபிடித்து இழுத்து சென்று கொஞ்ச தூரத்தில் கொண்டு போய் குப்பையை போடுவது போல போட்டுவிட்டு வந்தார். கேட்டபோது, அவர் ரோட்டோர பழக்கடை போடும் இடம் அதுவாம்.

இருந்த நிழலும்,நிலையும் போய் தன்னை இன்னும் சுருக்கிக்கொண்டு கிடந்த அந்த வயோதிகரின் நிலையை பொறுக்கமுடியாமல் 108 க்கு போன்செய்தபோது விபத்தில் அடிபட்டால் மட்டும் சொல்லுங்கள் "கிழே கிடப்பதை' எல்லாம் எடுத்துச் செல்ல வரமுடியாது என்று சொல்லிவிட்டனர்.தொடர்ந்து பல இடங்களுக்கு போன் போட்டபோதும் முறையான பதில் இல்லை. கடைசியில் காவல் நிலையம் சார்பில் வந்து பார்த்துவிட்டு இதில் நாங்கள் செய்வதற்கு ஏதும் இல்லை என்று கூறியவர்கள் ஒரு லுங்கி மட்டும் உபயமாக வழங்கிவிட்டு சென்றனர்.

பிறகு அக்கம்,பக்கம் உள்ளவர்களை அழைத்து அவரிடம் பேச்சு கொடுத்த போது பேச்சு வரவில்லை. கொஞ்சம் பிஸ்கெட்டும், தண்ணீரும் கொடுத்ததும்,பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து ஆசையுடன் சாப்பிட்டார்.இவரது தேவை உணவுதான் என்பது தெரிந்ததும் இன்னும் கொஞ்சம்பிஸ்கெட்டும், தண்ணீரும் வழங்கப்பட்டது. பெரியவர் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.அவரது பேச்சு யாருக்கும் புரியவில்லை.இவரை சுமையாக கருதியவர்கள் யாரோ இப்படி மனிதாபிமானமில்லாமல் ரோட்டில் வீசிச்சென்று உள்ளனர் என்பது மட்டும் புரிந்ததுபின்னிரவில் போகும் போதும் ஒரு பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து சாப்பிட்டபடி ரோட்டோரமாய் பெரியவர் சாய்ந்து கிடந்தார்.

ஒரு உயிருக்கு கிடைக்கும் மரியாதை அவ்வளவுதானா?

ஏமனிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு உத்தரவு!

ஏமனில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தினால் பொது மக்கள் பலியாவதை தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சவளியினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அவர்கள் உதவிக்காக நிறுவப்பட்டுள்ள உதவி மையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்என்றும் மத்திய அரசு மீண்டும் கூறியுள்ளது. இது மத்திய அரசு வெளியிடும் 3வது எச்சரிக்கை அறிவிப்பு என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். ஏமனில் இன்னும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளதாகவும், இந்தியர்களை பத்திராக அழைத்து வர செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஜூன் 11ம் தேதி வரை தொடரும் எனவும் அந்த அதிகாரிகூறினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...