|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

Unakagavey Piranthaen - உனக்காகவே பிறந்தேன் குறும்படம்!


பரோட்டா பிரியர்களுக்கு...!

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி கிடைக்கிறதா?

பரோட்டாவின் கதை தெரியுமா ? பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ? நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா . Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது . இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது . மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் . இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது. மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விடனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். இப்போது ஆவது  நாமும் விளித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

தமிழகத்திற்கு 43 திட்டங்களை அறிவித்த ஜெ!

கிட்டத்தட்ட ஒரு மினி பட்ஜெட்டை நேற்று முடிவடைந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது சமர்ப்பித்தார் முதல்வர் ஜெயலலிதா. 43 திட்டங்களை அவர் நேற்று அறிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அதன் அடிப்படையில் இந்தத் திட்டங்களை அவர் அறிவித்தார். தமிழகத்தின் மாநகரங்களிலிருந்து சாதாரண குக்கிராமம் வரை பயன் பெறும் வகையில் இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன.

நேற்றுடன் முடிவடைந்த 2 நாள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டுக்குப் பின்னர் நிறைவுரை ஆற்றி இந்தத் திட்டங்களை அறிவித்தார் ஜெயலலிதா. அவரது பேச்சு விவரம்: ஒரு நல்லாட்சி என்பது வலுவான மற்றும் சிறந்த கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே சாத்தியப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளேன். மக்களின் விருப்பங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது. அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, எனது எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறேன். எனது அரசில் வேளாண்மைக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருள்களையும் உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். உரம் போன்ற பொருள்களைத் தேவையின்போது வழங்காமல் பின்னர் வழங்கினால் அது வீணானதாகும். எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சாதுர்யமாகச் செயலாற்றிட வேண்டும். விவசாயிகள் தங்கள் கிராமங்களைவிட்டுச் செல்கிறார்களா? அவர்களின் வாழ்வில் அமைதி, நிம்மதி ஏற்படுகிறதா? உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா போன்ற அம்சங்களைக் கண்காணிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் என்னுடைய விருப்பமான துறை குழந்தைகள் மற்றும் இளைஞர் நலனாகும். ஒவ்வொரு குழந்தையும் சரியான கல்வி வாய்ப்பு, சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைப் பெற்றிட வேண்டும். குழந்தைகளை சமுதாயத்தின் மதிப்புமிக்க சொத்துகளாக உருவாக்க வேண்டும். மகளிர் நலனிலும் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மகளிரின் சுகாதாரம், கல்வி, வருவாயைப் பெருக்கும் வழிமுறைகளுக்கு ஆட்சியர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்கள் ரேஷன் கடைகளில் சரியாக இருப்பு வைக்கப்படுகிறதா, சரியாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மகளிர் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுபோன்ற கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை வாரத்துக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும். மக்களுக்குக் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வீட்டு வாசலுக்கே குடிநீர் வசதி கிடைக்காவிட்டாலும், அருகிலாவது கிடைப்பதற்கு வழி செய்திட வேண்டும். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்குக் குடிநீர் குழாய்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ளது. அதில், எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் கண்காணிப்பது அவசியம்.

அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். கோயில் நிலங்கள், உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான நிலங்கள், மத்திய அரசின் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு ஏதும் இல்லாதபடி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அங்குள்ள வேளாண்மைப் பணிகள், குறிப்பாக, அறுவடைக்குப் பிந்தைய பணிகள், உணவு தானியம் வீணாவதைத் தடுப்பது, உணவுப் பொருள்களின் திருட்டைத் தடுப்பது போன்றவற்றில் யுக்திகளைக் கையாள வேண்டும்.

கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மீன்வளத் துறையின் திட்டங்கள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, குப்பை கொட்டும் தளங்கள், நீர் நிலைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தங்களது கவனத்தைச் செலுத்திட வேண்டும். மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களின் குழுவுடன் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் மாதந்தோறும் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். அப்போது, மாவட்டங்களில் உள்ள சத்துணவுக் கூடங்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள், சுகாதார வளாகங்கள், கிராமச் சாலைகள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட காட்சிகளை ஆட்சியர்கள் காண்பித்து அதன் செயல்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதன் பின்னர் 43 திட்டங்களை அவர் அறிவித்தார். அவை...
- கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்படும்.
- உக்கடம், ஆத்துப்பாலம், வடக்கு சுற்றுச்சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்.
- ராமநாதபுரம் மாவட்டம் ஆழ்கடல் மீன்பிடிப்பு இனி, டோக்கன் முறை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அனுமதிக்கப்படும்.
- அரியலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்துள்ள 42 கி.மீ. நீளமுள்ள சாலை சீரமைக்கப்படும்.
- கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 
- ஈரோடு மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
- ஈரோடு மாவட்டம் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே சாலை விரிவுபடுத்தப்படும்.
- காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சரக்கு முனையம் அமைக்கப்படும்.
- பெரியகுளம் - கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.
- நாகப்பட்டினத்தில் மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

- பொன்னேரி வருவாய் கோட்டம் பிரிக்கப்பட்டு, அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும். அதில், அம்பத்தூர், மாதவரம் தாலுகாக்கள் இருக்கும்.
- சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
- திருவண்ணாமலையில் நடைபெறும் மகாதீப திருவிழாவுக்கு மாநில அரசின் பங்கான 50 சதவீதம் 70 சதவீதமாக உயர்த்தப்படும்.
- சித்ரா பௌர்ணமி தினம் மதப் பண்டிகையாக அறிவிக்கப்படுகிறது.
- வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
- வேலூரில் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- பட்டாசு ஆலைகளில் பணியாற்றுவோருக்கான பயிற்சி முகாம், சிவகாசியில் அமைக்கப்படும்.
- நாமக்கல் புறநகர்ப்பகுதியில் பஸ் கட்டுமானத்துக்கான பிரிவு தொடங்கப்படும்.
- கடலில் மீனவர்கள் காணாமல் போகும் நேரங்களில் தேவையின் அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்படும்.

- தேடுதல் பணியில் ஈடுபடும் கடலோர போலீஸôருக்கு அதிவேக படகுகள் வழங்கப்படும்.
- தூத்துக்குடி நகருக்கு கூடுதல் தண்ணீர் அளிக்கப்படும்.
- தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்.
- தூத்துக்குடி வி.வி.டி. சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
- பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பயிற்சி சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும். அந்தக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும். 
- எஸ்.எம்.எஸ். முறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களின் வருகை பதிவு கணக்கிடப்படும்.
- கடலூர் மாவட்டத்துக்கென ஒரு பெருந்திட்ட வளாகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- புதிதாக கட்டப்படும் அரசு விடுதிகளில் சூரிய மின் சக்தி அமைப்புகள் நிறுவப்படும்.

- மேட்டூர் அணையில் இருந்து ஜூனில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, அங்குள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிக்கான நிர்வாக ஒப்புதல் ஜனவரியிலேயே அளிக்கப்படும்.
- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் சீராகச் செல்லும் வகையில் ஒருங்கிணைந்த அளவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இணைப்புச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மலைப்பகுதியில் சுற்றுலா தலமாக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்கும். 
- கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக் கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அங்குள்ள மாம்பழங்களை கொள்முதல் செய்து, மாம்பழக் கூழுடன் பால் சேர்த்த கலவையை மதிய உணவுத் திட்டத்தில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும்.
- அரியலூர் மாவட்டம் மருதயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
- மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டவுடன் அனைத்து கால்வாய்களையும் பராமரிக்கும் பணி தொடங்கப்படும். அணை ஜுனில் திறக்கப்படும் போது, அவை நல்ல முறையில் இருப்பதற்கு வழி செய்யப்படும்.
- தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து, அவற்றை பயிரிடும் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனை சந்தை அமைக்கப்படும். 
- திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன்மூலம், 60 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருவது தவிர்க்கப்படும். 
- மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதின் அளவு 45-லிருந்து 18 ஆகக் குறைக்கப்படும்.
- அனைத்து மாவட்டங்களிலும் சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு தனி உதவியாளர் நியமிக்கப்படுவார்.
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிரிண்டருடன் இணைந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
- தூத்துக்குடி மாவட்டம் கோரப்பள்ளம் கண்மாய் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்படும்.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் பெரிய அளவில் உள்ளன. எனவே, அவை மறுசீரமைப்பு செய்யப்படும். 
- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும்.

கலெக்டர்களுக்கு விருது: கலெக்டர்கள் மாநாட்டின் போது பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 6 கலெக்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.

செக்ஸ் உறவுகளுக்கும் கூட கால நேரம்...?


எதுக்கும் ஒரு கால நேரம் வேண்டாமா என்பார்கள். செக்ஸ் உறவுகளுக்கும் கூட கால நேரம் பார்ப்பவர்கள் உண்டு. சிலருக்கு அதுகுறித்தெல்லாம் கவலையில்லாமல் இருக்கும். எப்போது தோன்றுகிறதோ அப்போது தேவை என்ற மன நிலையில் இருப்பவர்கள் அவர்கள். அது ஒருபுறம் இருக்கட்டு்ம். அருமையான 'வின்டர்' நேரத்தில் அதிகாலையில் எழுந்து உறவுக்கு தயாராவது போல ஒரு அருமையான விஷயம் இல்லை என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மிக மிக ரம்மியமான அனுபவமாக இது இருக்கும் என்பது அவர்களின் கூற்று. வின்டர் எனப்படும் குளிர்காலம்தான் செக்ஸ் உறவுகளுக்கு சரியான காலம் என்கிறார்கள் இவர்கள். அதுவும் காலையிலேயே செக்ஸ் உறவை மேற்கொள்வது மிக மிக சிறப்பான ரொமான்டிக் விஷயம் என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உங்களுக்குள் உறைந்து கிடக்கும் ரொமான்ஸ் மனோ பாவத்தையு அகழ்ந்தெடுத்து அருமையான அனுபவத்தைக் கொடுக்கிறதாம் இந்த குளிர்கால உறவுகள். மேலும் எப்போதும் ஒரே மாதிரியான சூழலிலேயே உறுவு கொண்டு போரடித்துப் போயிருப்பவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து. அடுத்த நாள் அதிகாலையில் நடக்கப் போகும் ஆட்டத்துக்காக இரவெல்லாம் கற்பனை செய்து, குதூகலிப்புடன் தூங்கப் போய்,அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்து உறவுக்குள் நுழைவது நிச்சயம் சிலிர்ப்பான ஒன்றுதான்.

குளிர்காலம் என்றில்லாமல், பிற சமயங்களிலும் கூட அதிகாலை செக்ஸ் உறவு என்பது மனதுக்கும், உடலுக்கும் மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது செக்ஸாலஜிஸ்ட்டுகளின் கருத்தாகும். அதிகாலையில் நமது மனமும், உடலும் புத்துணர்வுடன் இருக்கும், புதுப் பொலிவுடன் இருக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும். இந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது இருவருக்குமே அது இனிமையைக் கூடுதலாக கொடுக்குமாம். மேலும் நல்லதொரு தூக்கத்திற்குப் பின்னர் உடல் புதுத் தெம்புடன் இருக்கும் என்பதால் அதிகாலை உறவின் சுகமே அலாதியானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிகாலையில் உறவு கொள்வதை விட இன்னும் சிறப்பான விஷயம், போர்வைக்குள் இருவரும் செய்யும் முன்விளையாட்டுகள்தான். இந்த முன்விளையாட்டுக்கள் அதிகாலை உறவுக்கு மேலும் வலு சேர்க்கிறதாம்.இரவு நேரங்களில் இருப்பதை அதிகாலையில்தான் இந்த முன்விளையாட்டுக்களுக்கு கூடுதல் 'கிக்' கிடைக்கிறதாம்.

சின்னச் சின்ன தொடுதல்கள், உரசல்களுடன் அதிகாலை விளையாட்டில் இறங்கும்போது அந்த இன்ப உணர்வுகள் நாள் முழுமைக்கும் உங்களை வேகமாக வழி நடத்திச் செல்ல உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதிகாலையில்தான் பிரம்மன் தனது படைப்புத் தொழிலை மேற்கொள்கிறான் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு நம்பிக்கை. அதற்கும், அதிகாலை உறவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அதிகாலை உறவுகளுக்கும், மற்ற நேரத்து உறவுகளுக்கும் நிச்சயம் பெரிய வித்தியாசம் உண்டு என்பது செக்ஸ் துறை நிபுணர்களின் கருத்தாகும். என்னதான் இன்ஸ்டன்ட் காபி சுவையாக இருந்தாலும் பில்டர் காபி போல வராது இல்லையா, அது போல இதை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வாய்புண்களை குணமாக்கும் மாம்பூ!


முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்

தொண்டை வலி குணமடையும் தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.  மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும் மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம் 

கொசுத்தொல்லை நீங்க; உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்

18ம் தேதி கவியரசு கண்ணதாசன் விழா !

சென்னை சர்.பி.டி தியாகராயர் அரங்கில் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் கவியரசு கண்ணதாசன் விழா வரும் 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்க உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் வரும் 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் கவியரசு கண்ணாதாசன் விழா நடைபெற உள்ளது. அப்போது கண்ணதாசன் விருது வழங்கும் விழா-2011, 'வாழும் தமிழே வாலி' நூல் வெளியீட்டு விழா, வழிகாட்டி மையம் தொடக்க விழா மற்றும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அந்த சங்கத்தின் நிறுவனரும், பொது செயலாளருமான காவிரிமைந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகிலேயே அசுத்தமான நாடு இந்தியா, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்!

உலகிலேயே இந்தியா தான் மிகவும் அசுத்தமான நாடு என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது, இந்திய மக்களிடையே சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வு இல்லை.  கிராமப்புறங்களில் இன்றைக்கும் மக்கள் கழிப்பறைகள் இல்லாததால் பொது இடங்களில் அசுத்தம் செய்கின்றனர். இந்தியா கல்வித் துறையில் தான் வெற்றி பெற்றுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, சுற்றுப்புறத் தூய்மை ஆகிய துறைகளில் இந்தியா இன்னும் வெற்றி காணவில்லை. ஏனென்றால் நம் நாடு தான் மிகவும் அசுத்தமானது. சுற்றுப்புறத் தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. பொது இடங்களில் இயற்கை உபாதைகள் கழிப்பவர்களில் உலகிலேயே இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர். கிராமப்புறங்களுக்கு சென்றால் அங்குள்ள பெண்களிடம் செல்போன் இருக்கிறது. ஆனால் கழிப்பறை இல்லை. அப்படியே கழிப்பறை இருந்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்றார்

தமிழக காவல்துறைக்கு 34 திட்டங்கள்...!


 தமிழக காவல்துறையை மேம்படுத்தவும்,அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் 34 புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நேற்றுடன் முடிவடைந்த காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டின் இறுதியில் ஆற்றிய உரையின்போது இந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் அவரது பேச்சு:

காவல்துறை சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருமுயற்சி எடுத்துள்ளேன். நான் உங்களிடம் ஒழுங்கு, சட்டப்படி செயல்படுதல், அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றுதல் ஆகியவற்றை எதிர்பார்க்கிறேன். தேவையில்லாமல் தடியடி பிரயோகம், துப்பாக்கிச்சூடு, லாக்கப் மரணம் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். லஞ்சத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

போலீஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட நடத்தை மிகவும் முக்கியம். போலீசாரின் செயல்பாட்டிற்கும், அரசின் மதிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதுதான் நிர்வாகத்தினுடைய செயல்பாட்டை மக்களுக்கு பிரதிபலிக்கும். தமிழ்நாடு போலீஸ் இன்னமும் சிறப்பாக செயல்பட்டு, இதர மாநில போலீசாருக்கு முன்மாதிரியாக திகழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
ஸ்டேஷனுக்கு வரும் பெண்கள் உட்கார சீட்; 
1. போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்கள் குறிப்பாக பெண்கள் உட்கார வசதியாக தமிழ்நாட்டில் உள்ள 1492 போலீஸ் நிலையங்களிலும் ரூ.1 கோடி செலவில் தலா 10 சேர்கள் வழங்கப்படும். இவ்வாறு வழங்குவது நாட்டில் இதுவே முதல்முறை.

2. சென்னை நகரில் போக்குவரத்து மேலாண்மையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

3. தேவைப்படும் மாவட்டங்களுக்கு கூடுதல் ரோந்து வாகனங்கள் வழங்கப்படும். பழைய ரோந்து வாகனங்கள் மாற்றப்பட்டு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

4. கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடங்கப்படும்.

5. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையிலும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியிலும் புதிதாக அனைத்து மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்படும்.

செக் போஸ்ட்கள் அதிநவீனமாகும்: 
6. மாநில எல்லைகளில் உள்ள போலீஸ் வாகன சோதனை சாவடிகளில் குடிநீர் வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், விரைவில் தகவல் தொழில்நுட்பம், நவீன சாதனங்களுடன் ஒருங்கிணைந்த வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.

7. தஞ்சாவூர், திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

8. அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆயுதப்படை வளாகங்கள் அமைக்கப்படும்.

திருப்பூருக்கு போலீஸ் கமிஷனர்:
9. அரியலூர் மாவட்ட ஆயுதப்படைக்கு 4 பிளட்டூன்கள் (60 போலீஸ்காரர்கள் கொண்ட படை) அனுமதிக்கப்படும்.

10. மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் பிரச்சினைகள், இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருப்பூரில் புதிதாக போலீஸ் ஆணையரகம் ஏற்படுத்தப்படும்.

11. கோவையில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், புதிதாக போக்குவரத்து பிரிவுக்கு தனியாக துணை ஆணையர் பதவிக்கு அனுமதி அளிக்கப்படும்.

12. பெரம்பலூர், வத்தலக்குண்டு, சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.

13. அனைத்து வணிக நிறுவனங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்படும்.

பந்தோபஸ்து போலீஸாருக்கு தங்குமிடங்கள்: 
14. போலீஸ் பந்தோபஸ்துக்கு செல்லும் போலீசாரின் வசதிக்காக 500 பேர் தங்கும் வகையிலான தங்குமிடம் கமுதியிலும், திருவண்ணாமலையிலும் கட்டப்படும். பெண் போலீசாருக்கு தங்குமிடம் தனியாக கட்டப்படும்.

மதுரை, கோவையிலும் இனி ஸ்பாட் பைன்: 
15. சென்னையைப் போல இதர 5 போலீஸ் ஆணையரகங்களிலும் ஸ்பாட் பைன் வசூலிக்கும் இ-செலான் முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும், சோதனை அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த முறை கொண்டுவரப்படும்.

16. விழுப்புரத்திலும், திருவண்ணாமலையிலும் போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்காக விருந்தினர் இல்லங்கள் கட்டப்படும்.

17. தேனியில் நக்சலைட் தடுப்பு படை அமைக்கப்படும்.

18. போலீசாரின் பயிற்சி காலம் முன்பு இருந்ததைப் போல 7 மாதங்களாக மாற்றப்படும்.

19. போலீஸ் பாய்ஸ் கிளப் நிதி ஒதுக்கீடு ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும்.

20. போலீஸ் பாய்ஸ் கிளப் உறுப்பினர்கள் தங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிக்கட்டிடங்களை வகுப்பு நேரம் முடிந்த பிறகு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

21. அரியலூர், திருப்பூர், தர்மபுரியில் போலீஸ் பாய்ஸ் கிளப் தொடங்கப்படும்.

22. சாலை விபத்துகளில் உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.25 ஆயிரம் ரூ.50 ஆயிரமாகவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

23. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படும்.

24. கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மீட்கப்படுவோரின் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.

25. கிராம கண்காணிப்பு குழுக்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக ரூ.2 கோடி அனுமதிக்கப்படும்.

26. போலீசாரின் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, விடுதிக் கட்டணத்தைக் கருத்தில் கொண்டு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

27. மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கும், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கும் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

28. அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், நகர போலீஸ் அலுவலகங்களுக்கும், டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் ரூ.5 கோடி செலவில் ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.

29. திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. பிரிவுகள் தொடங்கப்படும்.

30. சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு ஒரு அறிவியல் அதிகாரியும், ஒரு கிரேடு-1 அறிவியல் உதவியாளர் பணியிடமும் அனுமதிக்கப்படும்.

துப்பாக்கிச் சுடுதலில் ரவுண்டு 50 ஆக அதிகரிப்பு: 
31. துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழங்கப்படும் ரவுண்டுகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்படும். மேலும், துப்பாக்கி பயிற்சி ஆண்டுக்கு 2 முறை அளிக்கப்படும்.

32. கமாண்டோ போலீஸ் பயிற்சியாளர்களுக்கு உரிய தங்குமிட வசதி செய்து தரப்படும்.

33. கமாண்டோ போலீசாரைப் போல, வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்க செய்யும் போலீசாருக்கும் இடர்படி, மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

34. வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் பயிற்சிக்கூடம் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும்.

நீங்கள் வைத்த கோரிக்கைகளை பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டேன். ஒருவேளை ஏதாவது நிறைவேற்றப்படவில்லை என்றால், அவை பரிசீலனை செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு பெங்களூரில் தொடங்கியது


இந்திய பெருங்கடல் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றுள்ள 11 வது மாநாடு பெங்களூரில் தொடங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, கடலோரப் பாதுகாப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது இந்திய பெருங்கடல் நாடுகளின் பிராந்திய அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், கென்யா, உள்ளிட்ட 18 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளைச்சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்கும் 11 வது மாநாடு இன்று பெங்களூரில் தொடங்கியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கென்யா, இந்தோனேசியா,மொரிசியஸ், மற்றும் ஏமன் நாடுகளைச்சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ஸ்ரீலங்கா,தான்சானியா நாடுகளில் இருந்து மூத்த அமைச்சர்களும், அமைப்பில் அங்கம் வகிக்கும் பிறநாடுகளச்சேர்ந்த இணை அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பதினெட்டு நாடுகளிடையே நடைபெறும் வர்த்தகம், முதலீடு, கடலோரப்ப பாதுகாப்பு குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது..2 ஆண்டுகளுக்கு தலைமை பொறுப்பு இந்த மாநாட்டின்போது அடுத்த 2 ஆண்டுகளுக்கான தலைவர் பதவியை இந்தியா ஏற்கவுள்ளது. அதற்கடுத்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் தலைமைப் பொறுப்புக்கு வரவுள்ளன.

மதுரை மீனாட்சி கோவில் சுற்றியுள்ள விதிமீறிய கட்டிடங்களை இடிக்க கலெக்டர் நோட்டீஸ்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களை இடிக்க மாவட்ட கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் மதுரை மீனாட்சி கோவிலும் ஒன்று. இந்த கோவிலை சுற்றியும், கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையிலும் பல்வேறு கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுள்ளன. கோவிலைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ., சுற்றளவில் ஒன்பது மீட்டர் உயரத்துக்கு அதிகமாகக் கட்டடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த உத்தரவு நாளடைவில் செயல்படுத்தப்படாமல் போனது. அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து விதிமுறைகளை மீறிய கட்டிங்களை இடிக்க சர்வே துவங்குவதும், பின்பு கைவிடுவதுமாக இருந்ததனர். இதனால் விதிமீறிய கட்டடங்கள் அதிக அளவில் உருவானது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பொது மக்களும், ஆன்மீக பெரியோர்களும் அரசுக்கு கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சனையில் மாவட்ட கலெக்டர் சகாயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி விதிமீறிய கட்டடங்களின் எண்ணிக்கை, அவற்றின் விவரங்களைத் தெரிவிப்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி உள்ள மிக உயரமான கட்டடங்கள் குறித்த சர்வே எடுக்கும் பணி துவங்கியுள்ளது. இது குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளித்த பின்பு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கும் என்று கூறப்படுகின்றது. மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை தி.நகரில் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நடவடிக்கையைப் போல மதுரையிலும் கலெக்டர் களம் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

 புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர். கேஜி5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டது. மேலும் கட்டி ஏற்படுத்தும் செல்களை பெருகவிடாமல் அழி்க்கும் என்று நேச்சுரல் மெடிசின் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாத்திரை வடிவில் வரவிருக்கும் இந்த மருந்து இன்னும் 5 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த மருந்தால் மிகக் குறைந்த பின் விளைவுகள் தான் ஏற்படுமாம். இது குறித்து மூத்த விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் சிரேஷ் கூறியதாவது, இந்த மருந்து புற்றுநோய் செல்களை பெருக விடாது. அதனால் அந்த செல்கள் தற்கொலை செய்துகொள்ளும். கணையம், மார்பகம் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்களை குணப்படுத்தும் இந்த மருந்து சில கொடிய கட்டிகளையும் அழிக்கும் திறன் கொண்டது என்றார்.

மாணவனை பாலியல் பலாத்காரம் சிக்கியதால் ரோபக் தற்கொலை!


இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் எழுத்தாளருமான பீட்டர் ரோபக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. ஹோமோ செக்ஸ் பழக்கம் கொண்ட ரோபக், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்து கைது செய்ய போலீஸார் வந்ததால் பயந்து போய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பீட்டர் ரோபக். இவர் பிரபலமான கிரிக்கெட் எழுத்தாளர் மற்றும் டிவி வர்னணையாளர் ஆவார். ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். இங்கிலாந்தின் சோமர்செட் அணியில் விளையாடியுள்ளார். அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ்குக்கு எதிராக இனவெறியுடன் இவர் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் எழுத்தாளராக மாறினார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் தங்கியிருந்தபோது அங்குள்ள ஹோட்டலின் 6வது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். இதில் அவர் உயிரிழந்தார். 

அவரது மரணம் குறித்த மர்மம் தற்போது விலகியுள்ளது. பீட்டர் ரோபக் ஒரு ஹோமோ செக்ஸ் பேர்வழி ஆவார். ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவனிடம் அவர் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவன் போலீஸில் புகார் கூறியிருந்தார். இதையடுத்து பீட்டர் ரோபக்கை விசாரிப்பதற்காக போலீஸார் ஹோட்டலுக்குச் சென்றனர். இதனால் அச்சமடைந்த அவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து விட்டதாக அவரது நண்பரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வர்னணையாளருமான ஜிம் மாக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பும் வகையில் தற்கொலை முடிவை பீட்டர் எடுத்து விட்டதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். இத்தகவலை போலீஸார் தன்னிடம் கூறியதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவருடன் தகாத முறையில் நடந்து கொண்டார் பீட்டர் ரோபக். இதையடுத்து நாங்கள் அங்கு சென்று அவரைக் கைது செய்ய முயன்றோம். ஆனால் எங்களிடமிருந்து தப்ப பீட்டர் ரோபக் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு முன்புதான் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ரோபக். தான் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், ஒரு வக்கீலின் உதவி தேவை என்றும் என்னிடம் அவர் கூறினார்.அவரது குரல் மிகவும் பதட்டமாக இருந்தது என்றார் மேக்ஸ்வெல். 55 வயதான ரோபக், சோமர்செட் அணியின் நீண்ட கால தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர். 80களில் இந்த அணிக்காக அவர் ஆடிக் கொண்டிருந்தார். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் கவர் செய்வதற்காக அவர் கேப்டவுன் வந்திருந்தார்.

மேக்ஸ்வெல் மேலும் கூறுகையில்,எனக்குப் போன் செய்தவுடன் நான் ஹோட்டலுக்கு விரைந்தேன். ஆனால் அங்கு அதற்குள் போலீஸார் வந்திருந்தனர்.அவர்கள் என்னை ரோபக்கை சந்திப்பதற்கு ஆரம்பத்தில் அனுமதிக்கவில்லை. பின்னர்தான் அனுமதித்தனர். பிறகு நான் போய் ரோபக்கைப் பார்த்து விட்டு வெளியேறினேன். அதற்கு அடுத்த ஒரு நிமிடத்தில்தான் அவர் மாடியிலிருந்து குதித்து விட்டார். ரோபக்கின் தற்கொலைக்கு வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. கைது நடவடிக்கையிலிருந்து தப்பவே அவர் தற்கொலைக்குப் போய் விட்டார். மிகவும் பயந்த நிலையில் இருந்தார் ரோபக். அவர் மிகத் திறமையானவர். நல்ல எழுத்தாளர். நினைத்தவுடன் அவரால் 1000 வார்த்தைகளை எழுத முடியும். நல்ல வர்னணையாளராகவும் அவர் விளங்கினார். ஏபிசி நிறுவனத்திற்காக சிறப்பாக செயல்பட்டார். பாசத்தையும் வெளிக்காட்டக் கூடியவர். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு சிக்கல் இருந்திருக்கிறது என்றார் மேக்ஸ்வெல்.

வெளியுறவுத் துறைச் செயலரை புறக்கணித்த யாழ் மாணவர்கள்!


யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பபல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஷ்யாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் "இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - இலங்கை நட்புறவும்" என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான ஷ்யாம் சரண் உரையாற்றினார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம் மற்றும் அரச ஏராளமான ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவர்கள் முற்றாகப் புறக்கணித்தனர். குறைந்தளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்களே கலந்து கொண்டனர். 

அவர் பேசுகையில், "இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான உறவில், இலங்கையின் வடபகுதி முக்கிய பங்கு வகித்து வந்தது. தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையிலான கப்பல் போக்குவரத்து இந்த இணைப்பின் பிரதான அம்சமாக இருந்தது. வடக்கில் பலாலி விமான நிலையத்தை புனரமைக்கும் பணியில் இப்போது இந்தியா ஈடுபட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகப் பகுதி கடற்பரப்பில் காணப்படும் சேதமடைந்த கப்பல் கழிவுகளை அகற்றி துறைமுகத்தை துரிதமாகச் செயற்படச் செய்வதற்கும் இந்தியா உதவி வருகிறது. இந்தியாவுக்கும், இலங்கையின் வடபகுதிக்கும் இடையே காணப்படும் இத்தகைய இறுக்கமான தொடர்புகள் மூலம், எதிர்காலத்தில் இந்திய-இலங்கை உறவில் இலங்கையின் வடபகுதி குறிப்பிடத்தக்கதொரு பாத்திரத்தை வகிக்க முடியும். 

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அமைக்கத் திட்டமிடப்பட்டு பின்னர், கிடப்பில் போடப்பட்ட தரைவழிப்பாலம் அமைக்கும் திட்டத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கும், இலங்கையின்ன் வடபகுதிக்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய இறுக்கமான உறவுகள் மேலும் பலமடைவதற்கு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான இராமர் பாலம் விரைவில் அமைக்கப்பட வேண்டும். நான் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த காலத்தில் இந்தப் பாலத்தை அமைப்பது குறித்து இரண்டு நாடுகளும் ஒரு இணக்கத்துக்கு வந்திருந்தன. ஆனால், பின்னர் இலங்கையின் வடக்கில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். இந்தியாவின் உறுதித்தன்மைக்கு அண்டை நாடுகளுடனான அதன் உறவு மிகவும் முக்கியமானது. 

இந்தியாவின் நில மற்றும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் சிறுபான்மை இனங்கள் சார்ந்த பிரச்சினைகள் இந்தியாவையும் ஒரு வகையில் பாதிக்கிறது. இந்த நாடுகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் உறுதித்தன்மைக்கு அவசியமானது. இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் முரண்பாடுகளும், பட்டினியும் நிலவும் போது, இவை எவற்றுடனும் தொடர்புபடாமல் ஒரு தீவு போல இந்தியா இருந்து விட முடியாது. இந்தியாவின் பெரிய பரப்பளவும், அதன் மக்கள் தொகை உள்ளிட்ட பலமான அம்சங்கள் காரணமாகவும் அண்டை நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சம் கொள்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. 

இந்த நிலைமையை மாற்றி அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணவே கட்டியெழுப்பவே இந்தியா பாடுபடுகிறது. சார்க் அமைப்பு தனக்குச் சவால் விடும் ஒரு அமைப்பு என்றே ஒரு காலத்தில் இந்தியா கருதியிருந்தது. ஆனால், சார்க் பற்றிய இன்றைய இந்தியாவின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது. இதுபோன்று அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு புதிய மாற்றங்களுடன் வளர்ந்து வருகிறது. தெற்காசியாவின் பூகோள அரசியலில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள சகல இன, மத மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இதற்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். உறுதியான நிலைத்து நிற்கக் கூடிய ஒரு சமாதானம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியா எமது உறவினர், சீனா எமது நண்பர் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளதால் எங்களுக்குப் பிரச்சினையில்லை. அவர் கூறியபடியே இருந்து விட்டுப் போகட்டும்," என்றார்.

செய்தியாளரானார் கிளிண்டன் மகள் செல்சியா

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மகளான செல்சியா கிளிண்டன் என்பிசி நியூஸ் என்ற அமெரிக்கத் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிய உள்ளார். அவரை சிறப்பு செய்தியாளராக என்பிசி நியூஸ் நியமனம் செய்துள்ளது. மேக்கின் எ டிஃபரண்ஸ் என்ற தொடருக்காக அவர் பணியாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிண்டன், ஹிலாரியின் ஒரே மகளான செல்சியா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படங்கள்தான் காலம் கடந்து நிற்கும்'!


நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள்தான் காலத்தைக் கடந்து நிற்கும் என தமிழக ஆளுநர் ரோசய்யா கூறினார்.  ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சம்மேளனம் சார்பில் பழம்பெரும் நடிகைகள் அஞ்சலிதேவி, செüகார் ஜானகி, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, சரோஜாதேவி, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, காஞ்சனா, கே.ஆர்.விஜயா, ஜெயந்தி, வாணிஸ்ரீ ஆகிய 11 பழம்பெரும் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் மறைந்த பிரபல நடிகைகள் காஞ்சனமாலா, பானுமதி, கண்ணாம்பா, சாந்தகுமாரி, பத்மினி, புஷ்பவல்லி, எஸ்.வரலட்சுமி, ஸ்ரீரஞ்சனி, டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, சாவித்ரி ஆகியோரின் பெயர்களில் வழங்கப்பட்டன. 

விருதுகளை வழங்கி ஆளுநர் ரோசய்யா பேசியதாவது: பல ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாக வரும் 11.11.11 என்ற இந்த நாளில் தகுதியான 11 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கிய ஸ்ரீ கலா சுதா அமைப்புக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 11 பழம்பெரும் நடிகைகளில் வாணிஸ்ரீயால் மட்டும் விழாவுக்கு வர இயலவில்லை. ஆனால் பழம்பெரும் நடிகையும் இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளருமான சச்சு கலந்துகொண்டு அந்தக் குறையைப் போக்கிவிட்டார்.எந்தெந்த நடிகைக்கு எந்தெந்த நடிகையின் பெயரால் விருது கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என துல்லியமாகத் தேர்வு செய்து இந்த விருதுகளை வழங்கியுள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது. ஏனென்றால் இந்த 11 நடிகைகளும் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் தங்களுடைய அபாரமான நடிப்பாற்றலால் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர்கள். 

இந்த நடிகைகள் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த திரையுலகுக்கு பொக்கிஷமாகத் திகழ்ந்தவர்கள். அவர்கள் நடித்த படங்களைக் குடும்பத்தோடு சென்று தைரியமாகப் பார்க்க முடியும். அவர்களுடைய வசன உச்சரிப்பு, நடிப்புத்திறன், பாடும் திறன், நடனத்திறன் உள்ளிட்டவை அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தவை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்த நடிகைகள் அனைவரும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்து நடித்த கதைகள்தான். ஆனால் இப்போது வரும் திரைப்படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா? சண்டை, பாடல் என தொடர்பில்லாமல் ஏதேதோ வருகின்றன. இதற்காக படம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் குற்றம் சொல்லவில்லை. ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக அவர்கள் படம் எடுக்கிறார்கள். அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்பதற்காக ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. பழைய படங்கள், காலத்தைக் கடந்து இன்றும் மக்கள் மனதில் இருப்பதற்குக் காரணம் அவை நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலித்ததால்தான். அந்தக் காலத்துப் படங்களில் மக்களை நல்வழிப்படுத்தும் பல கருத்துகள் இருக்கும். அது போன்ற திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றார் ரோசய்யா. விழாவில் கலந்துகொண்ட பழம்பெரும் நடிகைகள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இணையத்தளங்கள் பதிவு குறித்து பேச்சு நடத்த இலங்கை அரசு அழைப்பு!

வெளிநாட்டில் இயங்கி வரும் இணையத்தளங்கள், பேஸ்புக் பக்கங்கள், வலைப்பூக்கள் உள்ளிட்ட அனைத்து செய்தி சார் இணைய ஊடகங்களையும் பதிவுக்கு உட்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையர்கள் மற்றும் இலங்கை தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்திகளை பிரசுரம் செய்யும் இணையத் தளங்களை பதிவு செய்வதற்கு ஊடக அமைச்சகம் தீர்மானித்துள்ளது. ஊடக அமைச்சகத்தின் இந்தக் கோரிக்கையில் பல்வேறு குழப்ப நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை சார்பாக வெளிநாடுகளில் இயங்கி வரும் இணையத்தளங்களை எவ்வாறு வகையீடு செய்வது அவற்றை எவ்வாறு பதிவு செய்வது என்பது தொடர்பாக தெளிவாக்கப்படவில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு குழப்ப நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தளங்களை பதிவு செய்ய வேண்டியது இன்னமும் சட்டமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தளங்களை பதிவு செய்வது குறித்து, முதல் கட்டமாக அரசாங்கம் வெறுமனே ஓர் கோரிக்கையை மாத்திரம் முன்வைத்துள்ளது. எதிர்காலத்தில் இந்தக் கோரிக்கை நிபந்தனைகளுடன் கூடிய சட்டமாக அமுல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் மீனவர் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!


 பாக் ஜலசந்தி பகுதியில் 3 மீன்பிடிப் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயமடைந்தார். படகுகள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக மீன்வளத் துறையினர் தெரிவித்தனர். இதில் ஒரு மீனவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.கடந்த 9 நாட்களில் இருவேறு சம்பவங்களில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு 14 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். 23 படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நவம்பர் 7-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் சோகம் விடியல் எப்போது ? 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...