|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

டாய்லெட் பேப்பரில் ஒபாமா படம்!

அமெரிக்க அதிபராக கடந்த 2009-ல் பதவியேற்ற ஒபாமா, அடுத்த ஆண்டு வரவுள்ள அதிபர் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று டாய்லெட் பேப்பர்களில் அவரது படத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. ஒபாமா டாய்லெட் பேப்பர் டாட் காம் என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளது. ஒரு ரோல் 10 டாலர் (ரூ.500). ஒபாமா ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  நாட்டையும்  சிறு தொழில்களையும் காப்பாற்ற இந்த டாய்லெட் பேப்பரை வாங்குங்கள் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ளாடை, செருப்புகளில் தலைவர்கள், சாமி படங்களை அச்சிட்டு விற்பது சகஜம். இதை மரியாதை குறைவாக அவர்கள் நினைப்பதில்லை. ஆனால், ஒபாமாவை கேவலப்படுத்தும் நோக்கிலேயே டாய்லெட் பேப்பரில் அவரது படத்தை அச்சிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...