|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

நடிகர் வாத்தியார் ராமன் மரணம்!

பிரபல சின்னத்திரை நடிகர் வாத்தியார் ராமன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசித்து வந்த அவர், சிறிது காலம் உடல்நலமின்றி இருந்தார். அதிகாலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த வாத்தியார் ராமன், கே.பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தில் புகழ்பெற்றார். அது முதல் ஏராளமான திரைப்படங்களிலும், டிவி நாடகங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ரவி, ரமேஷ் ஆகிய மகன்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...