|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

தமிழ் மண்ணில் அணுஉலை வேண்டாம் திருமா!


தமிழ் மண்ணில் அணுஉலை வேண்டாம். இதுதான் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு. அணுஉலை வேண்டாம் என்ற கருத்தை நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றார் திருமாவளவன். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 28வது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 

கூடங்குளம் அணுஉலைகளை மூட வலியுறுத்தி நடந்துவரும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டம். வருங்கால சந்ததி நல்ல முறையில் பிறந்து வளர வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போராட்டம் நடத்தப்படுகிறது. ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் யுரேனியம் அதிக அளவில் கிடைக்கிறது. அதனை விற்பனை செய்வதற்காக அவர்கள் இந்தியா போன்ற நாடுகளில் அணுஉலைகளை அமைக்கும் திட்டங்களைத் திணிக்கின்றனர்.

அணுஉலை பாதுகாப்பானது, பாதுகாப்பில்லாதது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த கருத்தாய்வெல்லாம் தேவையுமில்லை. தமிழ் மண்ணில் அணுஉலை வேண்டாம். இதுதான் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு. அணுஉலை வேண்டாம் என்ற கருத்தை நாடாளுமன்றத்தில் பேசுவேன். என்னோடு ஒருமித்த கருத்துடைய மக்களவை உறுப்பினர்களையும் வலியுறுத்தச் செய்வேன். இந்தக் கருத்தை பேச அனுமதி கிடைக்கவில்லை என்றால் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வேன் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...