|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 January, 2012

தொழில் ரீதியாகவே எங்கள் தொடர்பு



நடிகர் தனுஷுடன் இணைத்து செய்தி வெளியிட்டதற்காக குமுதம் வார இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ஸ்ருதி. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதி. இதில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும்போது தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் அரும்பியதாகவும், இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளியானது.ஆரம்பத்தில் அமைதி காத்த தனுஷ் மற்றும் ஸ்ருதி தரப்பு, விவகாரம் ஓயாமல் தொடர்ந்ததால், இப்போது மறுப்பு தெரிவித்து வருகிறது.இந்த செய்திகளை முதலில் ஐஸ்வர்யா மறுத்திருந்தார். இப்போது ஸ்ருதி ஹாஸனும் மறுத்துள்ளார். அத்துடன் செய்தியை வெளியிட்டதற்காக குமுதம் பத்திரிகைக்கு அவர் வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னையும் தனுசையும் இணைத்து வெளியான கட்டுரை முற்றிலும் கற்பனையானது. ஆதாரம் இல்லாதது. இதற்காக குமுதத்துக்கு நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். பதில் அளிக்காவிட்டால் அடுத்த கட்டமாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். குறிப்பிட்ட ஆங்கில நாளிதழுக்கும் நோட்டீஸ் அனுப்பவிருக்கிறேன்.சக நடிகர் என்ற முறையில் தனுஷ் படப்பிடிப்பில் தொழில் ரீதியாக எனக்கு உதவிகள் செய்தார். தொழில் ரீதியாகவே எங்கள் தொடர்புகள் இருந்தது. இதை வைத்து தவறான வதந்திகளை பரப்புவது வருத்தம் அளிக்கிறது.தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வும் நானும் நண்பர்களாக இருக்கிறோம். இந்த வதந்தி எங்கள் நட்பை பாதிக்காது," என்றார்.

வாக்காளர்களை வழி நடத்த இதுதான் சரியான நேரம்...

ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் குதிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்த அன்னா ஹஸாரே குழு தற்போது திடீரென தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. பாபா ராம்தேவின் ஆசிரமம் அமைந்துள்ள ஹரித்வாரிலிருந்து நாளை உ.பி. மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அன்னா குழு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார் அன்னா. அதற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பின்னர் அக்குழுவினரில் பலர் குழப்பமான நிலைப்பாடுகளை எடுத்ததாலும், அவர்கள் மீது சரமாரியாக பல்வேறு புகார்கள் எழுந்ததாலும் அன்னா குழுவின் போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைய ஆரம்பித்தது. மும்பையில் அன்னா ஹஸாரே தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இல்லை. உடல்நிலை சரியில்லாததால் உண்ணாவிரதத்தை பாதியில் நிறுத்தினார்.இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம் என அன்னா குழு அறிவித்தது.

இந்நிலையில், இந்த முடிவை அன்னா குழு நேற்று திடீரென கைவிட்டது. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும் என அன்னா குழு அறிவித்தது. ஹரித்வாரில் நாளை பிரசாரம் தொடங்கப்படுகிறது. அன்னா குழு உறுப்பினர்கள் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி உட்பட பலர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். ஆனால் அன்னா வர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்னா குழு கூறுகையில், 5 மாநிலங்களில் அன்னா குழு பிரசாரம் செய்யும். நாங்கள் எந்த கட்சிக்கும் எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம். வாக்காளர்களிடம் ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நேர்மையானவர்களை தேர்ந்ததெடுக்கும்படி கூறுவோம். வாக்காளர்களை வழி நடத்த இதுதான் சரியான நேரம் என்றனர்.

வார பலன்(20-1-12 முதல் 26-1-12 வரை)

மேஷம்
பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியம் ஒன்று நடக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வீர்கள். நீங்கள் விரும்பும் பொருட்களைப் பெற்று மகிழ்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனம் உற்சாகமாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்

பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. வீடு மாற்ற இது உகந்த வாரம்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தாய்வழி உறவுகள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டு. உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.

மிதுனம்

பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். அரசு வழியில் நன்மைகள் கிடைக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கடன் தொல்லைகள் தீரும். மனம் நிம்மதியாக இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். வேலை பளு அதிகரிக்கும்.

கடகம்

பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியடைவீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

சிம்மம்

பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த பிரச்சனைகளை பேசித் தீர்ப்பீர்கள். எதிலும் நிதானமாகச் செயல்படுவீர்ள்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை எளிதில் முடித்துவிடுவீர்ள். வருமானம் இரட்டிப்பாகும். மனம் உற்சாகமாக இருக்கும்.

கன்னி

பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணம் பல வழிகளில் வரும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குழந்தைகளிடம் அன்போடு நடந்து கொள்வீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

துலாம்

பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் எளிதில் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். சமையலறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்கவும். வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்

பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு சீராக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த முக்கிய செய்தி வந்து மகிழ்விக்கும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வீர்கள். சிறிய பயணங்கள் மேற்கொள்ளக்கூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு

பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள்.வேலை பார்ப்போருக்கு: புதிய பதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

மகரம்

பொது: அனுகூலமான வாரம். எடு்ககும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும்.பொருளாதாரம் மேம்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். எதிலும் நிதானம் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்கவும். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். உயர் அதிகாரிகளின் கெடுபிடியும் அதிகரிக்கும்.

கும்பம்

பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு சீராக இருக்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

மீனம்

பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். நேரம் காலம் பார்க்காமல் உழைக்க நேரலாம். கொடுக்கும் வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும்.

நாட்டிலேயே முதல் மாநிலமாக, முழுவதும் தானியங்கி பொதுக் கழிப்பிடங்கள் கேரளாவில் அமைகிறது

மார்ச் மாத இறுதிக்குள் கேரள மாநிலத்தில் 450 மின்-கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, முழுவதும் தானியங்கி பொதுக் கழிப்பிடங்கள் கட்டுமான கேரளாவில் அமைகிறது என்பது குறிபிடத்தக்கது.இந்த இ-கழிப்பறையில், தானியங்கி கதவுகள், சக்திகூடிய நீர் வெளியேற்றம், தானே தூய்மைப் படுத்திக் கொள்ளும் அமைப்பு, கிருமி நீக்கிகள் இவற்றோடு, இவை எல்லாவற்றையும் எஸ்.எம்.எஸ் அலர்ட் மூலம் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறை, கழிப்பறை தொட்டியில் உள்ள நீர் அளவு கண்காணிப்பு அமைப்பு, ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை நீக்க பயோ-காஸ் அமைப்பு அனைத்தும் கொண்டதாக இருக்கும்.இந்தத் திட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள ஈராம் குழுமத்தைச் சேர்ந்த ஈராம் சையண்டிபிக் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த குழுமம் ஏற்கெனவே மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதுபோன்ற அமைப்புகளை செயல்படுத்தி வருகிறதாம்.தற்போது 150 இ-கழிப்பறைகள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளதாகவும், இ-கழிப்பறைகளின் செலவு ரூ.3,50,000 முதல் 8,50,000 வரை ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி

தமிழர்களின் நாகரிகம் ஆற்றங்கரைகளில் தோன்றியது என்பதற்கு சான்றாக, காணும் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் இதையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கீழையூர் வீரட்டானேஸ்வரர், ஏரிக்கரை மூலை ரெட்டை விநாயகர், அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர், வீரபாண்டி அதுல்ய நாதேஸ்வரர், நாரையூர் வரதராஜப் பெருமாள் ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மணம்பூண்டி கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற வீரட்டானேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சியில், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, பஞ்ச சாசன பூஜை, பஞ்சவர்ண பூஜை, விசேஷ திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ ருத்ர மஹா அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அனைவரும் சிவபுராணம், நமச்சிவாய மந்திரங்கள் முழங்க புனித நீராடினர். மணலூர்பேட்டை: இதேபோல் மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விரு இடங்களில் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பிடாகம், பேரங்கியூர், அத்தியூர்திருவாதி, எல்லீஸ்சத்திரம், பம்பை, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையின் கடைசி விழா என்பதால் உற்சாகத்துடன் மக்கள் கலந்து கொண்டனர்

மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பங்கள்...

மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
 இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மருத்துவ மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 31-ம் தேதி மாலை 5 மணி வரை www.tn.health.org, www.tn.gov. ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்கள் தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது மற்ற மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பக் கட்டணமான ரூ. 1,250-க்கு ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செயலாளர், தேர்வுக்குழு, சென்னை -10 என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும். ÷பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் வங்கி வரைவோலையை இணைத்து வரும் பிப்ரவரி 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பிவைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப் பட்டுள்ளது.

நாகி ரெட்டி நூற்றாண்டு விழா திரைப்பட விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு.

மறைந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து விஜயா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை: விஜயா மருத்துவம், கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ், தெலுங்குப் படங்களுக்கு விருதுகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்டு வெளியான தமிழ், தெலுங்குப் படங்களில் இருந்து சிறந்த பொழுதுபோக்குத் திடைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் படத்துக்கு விருதும் ரூ.1.5 லட்சம் ரொக்கத் தொகையும் அளிக்கப்படும். தெலுங்குப் படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 1-ம் தேதி ஹைதராபாதிலும், தமிழ்ப் படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மே 1-ம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் தயாரிப்பாளர்கள் அனுப்ப வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றும் நலமுடன் இருக்க...

நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடாது. பிறர் கூறும் நல்ல கருத்துக்களை கேட்க வேண்டும்.பிறர் நம்மை நம்பும் படி நாம் நடந்து கொள்ள வேண்டும். மனதில் சாந்தி இருக்கும் பொழுது தான் ஆனந்தம் ஏற்படுகிறது. பணம் இருந்தும் அடக்கமாய் இருப்பவன் உயர்ந்தவன். பலம் இருந்தும் பொறுமையாய் இருப்பவன் வீரன். அடிக்கடி கோபம் கொள்ளாதீர்கள். ஏனெனில் கோப உணர்ச்சி கல்லீரலைப் பாதிக்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படாதீர்கள். ஏனெனில் பய உணர்ச்சி சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. நெய்யில் அடியில் தங்கியிருக்கும் கசடைப் பயன்படுத்தக் கூடாது. வெண்ணெயில் உள்ள அழுக்குகளின் திரட்சி இது. எளிதில் ஜீரணமாகாது. இதை உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கல்லீரல் மந்தம் உள்ளவர்களுக்குக் காமாலை நோய் ஆகியவை ஏற்படும். எனவே இதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மனதை ஒருநிலைபடுத்தி இறைவனை நினைத்து தியானம் செய்வது நல்லது. தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அமைதியாய், தெளிவாய், நிதானித்து பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்து விடுகிறது.

உங்களது செயல்பாட்டில் வெற்றியடைய...

நமது தோல்விகளை நினைத்து நொந்து கொள்ளும் அதேநேரத்தில், அதற்கான காரணம் குறித்து எத்தனை பேர் முறையாக ஆய்வு செய்கிறோம்? பலவிதமான திறமைகளையும், ஆற்றல்களையும் கொண்டிருக்கும் நாம், அவைகளை முறையாக பயன்படுத்தவிடாமல் தடுக்கும் பலவீனங்களை அடையாளம் கண்டு களையாமல் இருப்பதால்தான், நம்மால் எதையும் சாதிக்க முடிவதில்லை.
உதாரணமாக, ஒருவர் வரலாற்றுப் பாடத்தில் சிறந்த பகுப்பாய்வு திறனும், நல்ல விஷய ஞானமும் கொண்டிருப்பார். ஆனால், வரலாறு தொடர்பான போட்டித் தேர்வில் அவரால் தேர்ச்சிப் பெற முடியாது. ஒருவர், நடைமுறை ரீதியாக கணிதத்தில் சிறந்த வல்லுநராகவும், சுயமாக தேற்றங்களை உருவாக்குபவராகவும் இருப்பார். ஆனால், அதுதொடர்பான போட்டித் தேர்வுகளைக் கண்டால் பயம். இன்னொருவர், நிறைய பொது விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து, விரிவாக பேசக்கூடியவராக இருப்பார். ஆனால், பொதுஅறிவு வினாடி-வினா போட்டிகளில் வெற்றிபெற முடியாது. ஒருவர் நடைமுறையில், சிறந்த இலக்கியவாதியாக இருப்பார். ஆனால், இலக்கியப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற முடியாதவராக இருப்பார். ஒருவர், வாய்வழி கதை சொல்வதிலும், சம்பவங்களை விவரிப்பதிலும் சிறந்தவராக இருப்பார். ஆனால், அதையே எழுதச் சொன்னால், அவரால் முடியாது. இதுபோன்ற நபர்கள், எதனால் தாங்கள் இந்த வகை திறமைகளில் பின்தங்கியிருக்கிறோம் என்பதைப் பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல அம்சங்கள், இன்றைய வாழ்வின் அத்தியாவசியமான அம்சங்களாக மாறியுள்ளன. எனவே, அவற்றில் தேர்ச்சியடைவது மிகவும் முக்கியம்.
பலவீனங்களை அடையாம் காணல் நீங்கள், ஒரு வரலாற்று நாயகரைப் பற்றி, ஓரிடத்தில் உரையாற்ற செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உரை முடிந்த பின்னால், உங்களது செயல்பாட்டின் மீது உங்களுக்கே திருப்தி ஏற்படவில்லையெனில், பின்வரும் சிலவிதமான கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, அதை சரிசெய்ய வேண்டும்.
* அந்த வரலாற்று நாயகரின் வாழ்க்கையை முதலில் நான் முறையாக புரிந்து கொண்டேனா?
* சரியான முறையில் அவரது வாழ்க்கை சம்பவங்களை ஒப்பிட்டு பேசினேனா?
* முக்கியமான ஆண்டுகள், பெயர்கள் ஆகியவற்றை சரியாக குறிப்பிட்டேனா?
* அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் அழுத்தம் கொடுத்தேனா?
* போதுமான அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேனா?
* கோர்வை சரியாக இருந்ததா?
* எனது உடலசைவுகள் மற்றும் நான் நின்ற விதம் சரியானதா?
* எனது குரல் சத்தம் சரியாக இருந்ததா? மற்றும் நிதானமாக பேசினேனா?
* கொடுக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ப பேசி முடித்தேனா?
உட்பட ஏராளமான அம்சங்கள் சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அதற்காக, வழக்கமான, பலரும் பின்பற்றும் விஷயங்களையே செய்ய வேண்டும் என்பதில்லை. மனித வாழ்க்கையின் மகத்துவமே, பழைய சம்பிரதாயங்களை உடைப்பதும், புதுமையைப் புகுத்துவதும்தான். எனவே, பலரும் வரவேற்கும், பலரும் விரும்பும் அம்சத்தை நீங்கள் கண்டறிந்தால், அதை தயங்காது பயன்படுத்துங்கள்.  உதவியை நாடுதல் உங்களது பலவீனத்தை அடையாளம் காண்பதற்கு, நம்பகமானவர்களிடம் உதவியைக் கோரும் அதே நேரத்தில், அந்த பலவீனத்தை களையவும் சரியான நபர்களின் உதவியை நாடலாம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அதேபோன்ற பலவீனம் இருந்து, அதை களைவதற்கு அவர்கள் என்ன முயற்சி எடுத்து வெற்றி கண்டார்கள் என்பதை அறிந்து நீங்களும் முயற்சிக்கலாம். நீங்கள் மிக சாதாரணமாக நினைக்கும் ஒரு நபர் கூட, உங்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஆலோசனையை கொடுக்கலாம். எனவே, யாரையும் எளிதில் அலட்சியம் செய்துவிட வேண்டாம். மேலும், இது தொடர்பாக நிபுணர்கள் எழுதிய புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் வரும் அவர்களின் ஆலோசனையையும் கேட்டுப் பயன்பெறலாம்.
நீங்கள் சாதனை செய்ய விரும்பும் துறையில், உங்களுக்கு முன்பே ஒரு சாதனையை செய்து முடித்தவரின் செயல்பாட்டையும், அனுபவத்தையும் கவனித்து, அதில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வாழ்வில் வெற்றிபெறுவதற்கு நேர்மறை எண்ணமும், தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியம். ஒரு போட்டித் தேர்வை எழுதுவதற்கோ, ஒரு உரையை சிறப்பாக நிகழ்த்துவதற்கோ, ஒரு சவாலான செயலை செய்து முடிப்பதற்கோ, தன்னம்பிக்கையும், மனோதைரியமும், நேர்மறை எண்ணமும் வேண்டும். இவைகளே, வெற்றிக்கான அடி நாதங்கள்.

முரண் தமிழ் DVD




இதே நாள்...

  • அமெரிக்க அதிபர்கள் பதவியேற்பு தினம்
  •  முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்டம் மசாசூசெட்சில் இடம்பெற்றது(1892)
  •  பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாக பயன்படுத்த அமெரிக்க செனட் சபை அனுமதியளித்தது(1887)
  •  வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு நீள திரைப்படம் திரையிடப்பட்டது(1929)

பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம்!

ஓரினச் சேர்க்கையாளர்களால் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருவதையடுத்து, பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வகுத்துள்ள இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள பாலியல் பலாத்கார சட்டத்தில் காணப்படும் கற்பழிப்பு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மட்டுமே இதுவரை குற்றமாக இருந்த நிலை மாறி, ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் இனி தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பெண்கள் மீதான ஆசிட் வீச்சு குற்றங்களுக்கு தனி சட்டம் கொண்டுவரவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது

அணு உலைக்கெதிரான போராட்டம் 1989


Movie of the Day...! Varumaiyin Niram Sivappu - Tamil Movie


பார்த்ததில் பிடித்தது...

இவர் புனே நகர தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் சம்ராட் மோஸ் (30). எப்போதும் ரூ.2.37 கோடி மதிப்புள்ள 8.5 கிலோ நகைகளை அணிந்து வலம் வருகிறார். இதெல்லாம் பத்தாது என்று, புனே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளாராம்.. அவ்வ்வ்..

 மாத்தியோசி!
 நக்கீரனின் வருத்தம் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...