|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 May, 2012

டேசோவின் செயல்திட்டம் என்ன? ராமதாஸ்.

 டெசோ அமைப்பு உருவாக்கியுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார். இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை ஒன்றினைத்து "தமிழீழம்' அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக தமிழீழம் ஆதரவாளர்கள் அமைப்பு (டேசோ)
தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தி.மு.க.தலைவர் தெரிவித்திக்கிறார்.


இலங்கை இனச் சிக்கலுக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு என்பதில் தமிழ் உணர்வாளர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழீழம் அமைப்பதற்காக அல்லது ஈழத் தமிழர் படுகொலையை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத கருணாநிதி, ஆட்சிபொறுப்பை இழந்த பிறகு தமிழீழம் அமைத்தே தீருவேன் என்று முழங்க தொடங்கியிருப்பதுதான் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிக்கிறது. அதுமட்டுமின்றி டேசோ அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்துவிட்ட போதிலும், தமிழீழம் அமைப்பதற்கான அதன் செயல்திட்டம் என்ன என்பது அறிவிக்கபடவில்லை. மாறாக தனித் தமிழீழம் அமைக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஐ.நா. மூலம் பொது வாக்கெடுபு நடத்த முயற்சி மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்று கூறியிருப்பதால் எந்த பயனும் ஏற்ப்பட போவதில்லை. அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு கருணாநிதி சாதாரண மனிதர் அல்ல. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மிக மூத்த தலைவர் கருணாநிதி தான்.
இவ்வளவு செல்வாக்கு உள்ளமத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதை விட்டுவிட்டு, தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி காங்கிரஸ் தலைமைக்கு நிர்பந்திக்க வேண்டும். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் வரும் மே 22ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. அப்போது தனி தமிழீழம் அமைப்பதற்காக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை கருணாநிதி முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டும்.மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதேப்போன்ற தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளை  உடனடியாக தொடங்கவேண்டும். டேசோ அமைப்பின் குறிக்கோளை நிறைவேற்றும் நோக்குடன் இலங்கை இனச்சிக்கலுக்கு தனிதமிழீழம் அமைப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற உண்மை நிலையை வடஇந்திய தலைவர்களுக்கும், உலக நாடுகளின் தலைவர்களுக்கும் உணர்த்தவும், அவர்களின் ஆதரவை திரட்டவும் தேவையான நடவடிக்கைகளையும் உடனே தொடங்கும்படி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறேன் என்று ராமதாஸ் 

கூத்தாண்டவர் கோவிலில் விடிய, விடிய கும்மியடித்து கொண்டாட்டம்!












சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டும் நிகழ்ச்சி கடந்த 01.05.2012 அன்று இரவு நடைபெற்றது. விழாவில் ஏராளமான அரவாணிகள் கலந்து கொண்டு அரவாணை தங்களது கணவனாக எண்ணி பூசாரியின் கையால் தாலிக் கட்டிக்கொண்டனர். இதற்காக அரவாணிகள் புதுமணப்பெண் போல் ஆடை அணிகலன்களால் அலங்கரித்து இருந்தனர். தலை நிறைய பூச்சூடி, நெற்றியில் பொட்டு இட்டு, கை நிறைய வளையல் அணிந்திருந்தனர். அவர்கள் இரவு முழுவதும் பாட்டுப்பாடி கும்மாளமிட்டனர். குவியல் குவியலாக கற்பூரமேற்றி அதனை சுற்றி அரவாணிகள் கும்மியடித்து மகிழ்ந்தனர். இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர். விடிய விடிய அவர்கள் சளைக்காமல் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 

அதிகாலை அரவாண் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின் போது அரவாணிகள் பூப்பந்துகளாலும், பூ மாலைகளால் தேரின் மீது வீசினார்கள். மேலும் குவியல் குவியலாக கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். வேண்டுதலுக்காக 108, 1008 தேங்காய் என உடைத்தனர். இதுதவிர விவசாயிகளும், தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள், தானிய வகைகளை தேரின் மீது வீசி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். தேர் அழிகளம் எனப்படும் பூநத்தம் தெய்வநாயக செட்டியார் தோப்பை அடைந்ததும் அரவாணிகள் சோகம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையடுத்து அரவாணிகள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எரிந்தனர். மேலும் கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்து எரிந்தனர். இதைத் தொடர்ந்து பூசாரியின் கையால் தாலியை அறுத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுதனர். இந்த காட்சி உண்மையிலேயே கணவரை இழந்த பெண்கள் எப்படி கதறி அழுவார்களோ அதனையே மிஞ்சும் வகையில் இருந்தது. பின்னர் அரவாணிகள் அங்குள்ள கிணறுகளில் குளித்து முடித்து விதவைக்கோலம் போல் வெள்ளாடை அணிந்து சோகமயத்துடன் அவர்கள் தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். 

ஒழுக்கம் என்பது தேடவேண்டி வருமோ!

கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி திடீரென குழந்தையுடன் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் மனைவியைகண்டுபிடிக்க முடியாததால் கார்த்திக் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தனலட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. 2 பேரும் வீட்டை விட்டு ஓடி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.  
 
அப்போது தனலட்சுமியும், மதனும் திருவள்ளூரில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.தனலட்சுமியிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். கணவருடன் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். எனது கணவருடன் செல்வதற்கு நான் விரும்பவில்லை என்று உறுதியாக கூறி விட்டார்.இதையடுத்து தனலட்சுமியை மயிலாப்பூரில் உள்ள காப்பகத்துக்கு கைக்குழந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். காதலன் மதன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

அமெரிக்க ராணுவ தலைமைய நிர்வாக அதிகாரியாக, விக்ரம் ஜெ.சிங் சிங்!

அமெரிக்க ராணுவ தலைமையகத்தின், மூத்த நிர்வாக அதிகாரியாக, விக்ரம் ஜெ.சிங் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரான விக்ரம் சிங், ராணுவ துணை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வந்தார். ஆப்கன் மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால் ப்ருக்குக்கு நெருக்கமானவர் விக்ரம் சிங். பென்ட கனின் மூத்த நிர்வாக அதிகாரியாக இருந்த ராபர்ட் ஸ்கெர், தற்போது ராணுவ திட்டத்துறை துணை அமைச் சராகியுள்ளார்.இதையடுத்து, இந்த பதவிக்கு விக்ரம் சிங் நியமிக்கப் பட்டுள்ளார்.

இதே நாள்...



  • சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்
  • போலந்து அரசியலமைப்பு தினம்
  • ஜப்பான் அரசியலமைப்பு தினம்
  • வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது(1802)
  • முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன(1959)

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்!


பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டிக்காப்பது பற்றி அரசுக்கு உணர்த்தும் விதமாக மே 3ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக மாற்றத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம் என்பது இம்முறை மையக்கருத்தாக உள்ளது.சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சட்ட விதி 19ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஐ.நா., சபை ஏற்படுத்தியது.

மிகுந்த ஆபத்து காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு "யுனெஸ்கோ' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 1997ல் நிறுவப்பட்ட இவ்விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய 14 நடுவர்கள் உள்ளனர். விருதுக்கு போட்டியிடுவோரின் பட்டியலை, ஒவ்வொரு நாட்டில் இருந்தும், பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு அரசுகள், பட்டியலை அனுப்பும். அதில் இருந்து, விருதுக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார்.

இவ்விருது, "குல்லர்மோ கானோ இசாசா' என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. "எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை "யுனெஸ்கோ' ஆராய்கிறது. "நல்ல ஆட்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான செய்தி சேகரிப்பு, போருக்கு பிந்தைய வாழ்க்கை போன்றவற்றை தலைப்பாகக் கொண்டு, "யுவெஸ்கோ' விவாதம் நடத்துகிறது. பத்திரிகை சுதந்திரம் என்பதன் அளவுகோல், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது

தமிழ் பேசும் அனைவரும் தமிழினம் என்றிருக்க,எப்படி வந்தது ஜாதி?

ஜாதியை கையில் பிடித்து திரியும் வருங்களா வாலிபர்களே பழைய 


வரலாறை மட்டும் வைத்து கொண்டு நாம் வாழ முடியாது என்பதுதான் 


உண்மை காலத்தின் கட்டாயம் ,,இதை நாம் முதலில் புரிந்து உணர வேண்டும் 


வரலாறையும் தெரிந்து வைத்துருக்க வேண்டும் அதில் நம்மை அந்த 


வரலாறை நாம் தெரிந்து பெருமை பேசிக்கொண்டு இருபதனால் பெரிய 


மாற்றம் உண்டு பண்ணுவதில்லை அந்த வரலாறை நாம் கருத்தில் கொண்டு 


அதன் அடிபடையில் போராட வேண்டும் ,,




அதை விடுத்து வரலாறை மட்டும் பேசி ஒரு பயனும் அல்ல , அன்று நம் 


முப்பாட்டன் செய்த சாதனையை நாம் செய்ய இயலவில்லையே என்று நாம் 


நொந்து கொண்டு , தலைகுனிந்து வாழ்கிறோம் என்பதுதான் உண்மை அப்படி 


நம் ஒரு கேடுகட்ட வாழ்கை வாழும் போது ,,நம் முப்பாட்டன் பெருமை 


பேசுவது நம் இயலாமை மட்டும் அல்ல அவர்கள் பெருமையும் நாம் 


கெடுக்கிறோம் என்பதுதான் சரி {எடுத்துகாட்டு நல்ல தகப்பனார் தன் 


தறுதலை மகனை பார்த்து என் மகன் என்று சொல்லி எனது நல்ல பெயரை 


கெடுக்காதை என்று சொல்லும் பல தகப்பனார் போல நம் முப்பாட்டன்கள் 


இருந்தாலும் அவர்கள் இதை தான் சொல்லுவார்கள் } அப்படியே என் 


ஜாதியை விட்டு கொடுக்க முடியாது ஆனால் தமிழ் மொழி , தமிழ் மக்கள் 


இவர்களுக்காக போராடுவோம் என்று சொல்வது பாம்பு என்னிடம் விஷம் 


இல்லை என்று சொல்வது போல் ஆகிவிடும் , அப்படியே ஜாதி விடவே 


மாட்டோம் ஆனால் தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் 




போராடுவோம் என்று சொல்லும் நண்பர்களே , உன் ஜாதியில் 1 கோடி மக்கள் 


தொகை இருக்கிறார்கள் என்றால் அதில் 60 % மக்களை போராட்டத்தில் 


ஈடுபட்டால் நன்றாக இருக்கும் ,,ஒருநாள் அரசியல் அல்லாத ஜாதி மக்கள் 


சாலைக்கு வருவார்களா ,,,ஒருநாள் தலித் மக்கள் , ஒருநாள் வன்னியர் , 


ஒருநாள் ,தேவர் , ஒருநாள் பிள்ளை , ஒருநாள் செட்டியார் , இது போன்று பல 


ஜாதிகள் பல கோடிகளாக இருக்கும் போது ,,,ஒருநாளும் அது நடக்க வில்லை 


ஒவ்வொரு ஜாதிலும் அடிதட்ட மக்கள் தான் போரடுகிறாக்கள் ,,என்பதை 


மறக்க வேண்டாம் ,,ஒவ்வொரு ஜாதி பணகார வர்க்கம் போராட்டத்தில் 


ஈடுபட என்ன வழி என்று பாருங்கள் , மேலே சொன்ன அத்தனை ஜாதியும் 


என்று சிலை உடைக்கும் பழக்கத்தை விடுகிறார்களோ அன்று தமிழ் 


சமுதாயதிற்கு ஒரு நல் வழி வரும் என்பதை நான் அறிவேன் , ஒரே ஜாதி ,,


அதே ஜாதி பற்றி தவறாக பேசினால் அது தவறு இல்லை ,,ஆனால் வேற 


ஜாதி காரன் வேறு ஜாதி பற்றி பேசக்கூடாது என்று சொன்னால் நாம் இன்றும் 


தெளிவு அடையவில்லை என்றுதான் நினைக்கவேண்டியுள்ளது ,,,( ப . 




சிதம்ரம் , நாராயண சாமி ) இவர்கள் தமிழனுக்கு எதிராக செயல் படுகிறார்கள் 


ன்பது அனைவருக்கும் தெரியும் அது போன்ற சில ஆட்களை நாம் ஒதுக்க 


வேண்டும் என்று சொன்னால் , அதை அவர்கள் ஜாதி சேர்ந்த நண்பர்களும் 


ஏற்று கொள்கிறார்கள் , என் ஜாதி சேர்த்தவனை நீ எப்படி ஒதுக்க வேண்டும் 


என்று சொன்னாய் என்று கேக்க வரும் போது அது தான் தமிழ் தேசியத்தை 


மண்ணில் போட்டு புதைத்து விடும் அது போன்ற சில நபர்களால் ) குரங்கில் 


இருந்து நாம் வந்தோம் என்று ஒப்பு கொள்கிறோம் ஆனால் அந்த குரங்கை 


நாம் என்றாவது ஏற்று கொண்டுவிட்டமா , அப்படி என்றால் இன்று நாம் 


வசிக்கும் இடம் பல வருடத்திற்கு முன்பு அரசர் வருவதற்கு முன்பு இந்த 


இடத்தில என் முப்பாட்டன் இருந்தான் என்று சொல்லிக்கொண்டு இன்று 


காட்டில் வாழும் காட்டு வாசி தோழர்கள் வந்து கேட்டால் நம் விட்டு விட்டு 


போய்விடுவமா ? நம் வரலாறை வைத்து கொண்டு இன்று இப்படி 


பேசிகிறோம் காட்டு வாசிக்கு சரியான வரலாறு இல்லாதனாலும் தோற்று 


போனதாலும் இன்று நம் வரலாறு சொல்லி பெருமை பட்டு கொள்கிறோம் 


எப்படியோ நம் மக்கள் ஜாதியை நோக்கி மட்டும் சென்று கொண்டு 


இருகிறாக்கள் என்று நினைக்கும் போது ,,வேதனையில் வெந்து 


போகவேண்டியுள்ளது ,,,,,, பிழை இருக்கும் பிழையோடு படித்தால் பிழை 


ஆகிவிடும்.வாழ்வின் மகத்துவத்தை உணராதவர்கள், கண்ணிருந்தும் 


குருடர்கள்,உணர்விருந்தும் உணராதவர்கள்...நான் என்னை மதிப்பதைபோல் 


என் சகமனிதனையும் மதிக்கவேண்டும்.தமிழ் பேசும் அனைவரும் தமிழினம் 


என்றிருக்க,எப்படி வந்தது மேல்ஜாதி என்றும் கீழ்ஜாதி என்றும்?ஜாதி 


இல்லாமல்போனாலே நாம் ஒற்றுமையாய் வாழ்வோம்.இந்த காலகட்டத்தில் 


தமிழினத்திற்குள் ஒற்றுமை மிக மிக அவசியம். ஒற்றுமையாய் வாழ்வதாலே 


விளையும் நன்மையே..

பார்த்ததில் பிடித்தது!

அம்மாவால் மட்டுமே குழந்தைகளின் தேவையை தீர்க்க முடிகிறது..

உலகில் 3% மக்கள் மட்டுமே நாத்திகர்கள்!

சாமி கும்பிட ரூ.500 / 1000னு டிக்கெட் போட்டு வசூலிக்கிற தைரியம் எப்படி   வந்துச்சுன்னு இப்ப புரியுது! கடவுள் நம்பிக்கை இருகிறவன் தான் கோவில   இடிக்கிறான் , மசூதிய இடிக்கிறான் , பொண்ணுங்கள தோஷம் களிகிறன்னு சொல்லி கர்ப்ப சூரையடுறான் ... அப்பாவி மக்களை ஏமாத்தி பணம் வசூல் பண்ணுறன்... இந்த நல்ல காரியங்கள பகுத்துதறிவு வாதி ஒன்னு கூட பண்ணினது இல்லை எந்த கோவிலுக்கு வெளியே பிச்சை காரர்கள்   இல்லையோ அந்த கோவிலுக்குள் கடவுள் இருக்கிறார்.

இன்று இந்திய சினிமாவின் பிறந்த நாள்! மே 3-1913ல் இதே நாளில், முதல் முழுநீள படமான ராஜா ஹரிச்சந்திரா வெளியானது!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...