|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2012

Oscars 2012: The Best and Worst Dressed


Best: Jessica Chastain: Jessica Chastain was our best-dressed actress of the evening with her stunning black-and-gold bespoke Alexander McQueen gown. The Help actress had been sticking to form-fitting, solid-color dresses this awards season, so the dramatic haute couture flair of this patterned gown was a welcome change.

Best: Rooney Mara

The Oscar-nominated actress picked her white Givenchy dress on Sunday morning, proof that procrastination can pay off, at least in fashion. We just love how the architectural cuts on the gown take inspiration from angular Lisbeth Salander, the badass character Rooney Mara played in The Girl with the Dragon Tattoo.

Best: Octavia Spencer

She wore Todashi Shoji to the Golden Globes and the Screen Actors Guild Awards, so we weren’t surprised to see Octavia Spencer choose the Japanese designer again for the Oscars. But we couldn’t have predicted how downright statuesque she would look in this sparkly silver number.

Best: Gwyneth Paltrow

Wearing a white Tom Ford dress under a long cape, Gwyneth Paltrow stood out from the other actresses (and stayed warm!) on the red carpet. The menswear-inspired outfit so flattered her figure, we were almost tempted to try a Goop cleanse.

Best: Michelle Williams

It seemed a bit boring for the Academy Awards, but Michelle Williams’ coral Louis Vuitton dress was nothing if not pretty. The super-feminine crepe layers were a nice detail and made it more than just another red dress on a red carpet.

Best: Jennifer Lopez

This neutral Zuhair Murad dress would be considered a daring pick for anyone but Jennifer Lopez. With sleeves and a relatively modest V neckline, it is one of her more conservative choices. The simplicity of the stripes lent sophistication to the shift, while Lopez’s big bun was surprisingly complimentary.

வறட்சிக்காலங்களில் மீன்களின் வினோத செயல்பாடு


முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய போர்க்குற்ற பதிவுகள்!




முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். 

தமிழருக்கு எதிராக கையெழுத்திட தமிழ் இளைஞர்களை தேடி அலைந்த அதிகாரிகள்!


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டிற்கு எதிராக கையேழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை வடக்கு கிழக்கில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினர் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். மக்கள் ஆவணம் என்ற பெயரில் தாய் நாட்டிற்கு எதிராக வெளிநாட்டு சக்திகளை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் இக்கையெழுத்து சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மன்னார் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் முஸ்லீம் பிரதேச இளைஞர்கள் ஆதரவளித்துள்ள போதிலும் தமிழ் பிரதேசங்களில் உள்ள இளைஞர்கள் இதற்கு கையொப்பம் இட மறுத்துள்ளனர். மட்டக்களப்பில் நடந்த ஆரம்ப வைபவத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் தவராசா கலந்து கொண்ட போதிலும் தமிழ் இளைஞர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்துள்ளனர்.

நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடரும் பெண்களின் போராட்டம் !


சர்வதேச மகளிர் தினம் இன்றைக்கு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் பெண்கள் அடைந்த முன்னேற்றங்களை குறிக்கும் முகமாகவும் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பெண் என்பவன் சக்தியின் அம்சம். தாயகவோ, மனைவியாகவோ அல்லது சகோதரியாகவோ அல்லது மகளாகவோ இருந்து ஆண்களுக்கு சக்தியை அளித்து அவர்களின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கின்றாள்.

இல்லற வாழ்க்கையில் ஆணைவிட பெண்ணுக்கு சற்று அதிகமான பொறுப்புகள் உண்டு. குழந்தை வளர்ப்பில் தொடங்கி, குடும்ப வாழ்க்கை தடுமாறாமல் ஓட தன் சக்தி முழுவதையுமே செல்வழிக்கிறாள் பெண். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இன்னமும் சரிநிகராய், சமத்துவமாய் செயல்பட இயலாமல் உள்ளனர். அதற்கு காரணம் ஆண்களுக்கு இடையே உருவான அச்சம். பெண் என்பவள் தலைமைப் பொறுப்பிற்கு தகுதியானவள் என்பதை அறிந்தும் அவளை அடக்கி வைத்துள்ளது ஆணாதிக்க சமுதாயம்.       

                                  
அடிமைப்படுத்திய சமுதாயம் தலைமைப் பதவி இல்லாவிட்டால் என்ன? பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் சாதனையை படைத்தனர். அறிவியல்துறையில் தொடங்கி விவசாயத்துறை வரையிலும் பெண்களின் சாதனை உலகத்தினரை வியக்க வைத்தது.ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர். அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர்.
உரிமைக்கு குரல் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, பெண்கள் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.

சர்வதேச மகளிர் தினம் 1908ம் ஆண்டு அமெரிக்க நாட்டில் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது. அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
உரிமைக்காக தொடர் போராட்டம் பெண்கள் தினம் கொண்டாடப் பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. 1911 ஆம் தொடங்கி 2012 ம் ஆண்டு வரை பெண்களின் உரிமைப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன என்று அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கிறது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடினாலும் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது இந்த புள்ளி விபரங்கள்.
                           
சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையான கருத்து / பொருளாதார / கல்விச் சுதந்திரம் இன்று வரையிலும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று பெண்கள் பல துறைகளில் நுழைந்துள்ள போதும் அவர்களின் திறமைக்கேற்ற வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. திறமையை வெளிப்படுத்தி வாய்ப்புகளைப் பெற்றாலும் அவற்றை இழித்துப் பேசுவதற்கான வாய்கள் எப்போதும் மூடுவதேயில்லை. அரசியல் துறையில் ஆணுக்கு சரிநிகராய் இட ஒதுக்கீடு கேட்கவில்லை. 33 சதவிகிதம் கேட்டும் கூட அதற்காக வழி இன்னமும் திறக்கப்படவேயில்லை என்பதுதான் வேதனை.
                                 

என்றைக்கு அனைத்து மகளிரும் மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதையோடு, சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று சம உரிமை பெறுகின்றனரோ அன்றைக்குத்தான் உண்மையான மகளிர் தினத்தின் கொண்டாடப்படுவதன் அர்த்தம் விளங்கும்.                             
                                        
                        

இலங்கை அரசு சிறப்பு பூஜை!


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் மனித உரிமை மீறல் தீர்மானம் பெரும் சதி என்றும், இதிலிருந்து காப்பாற்றுமாறும் இலங்கையில் உள்ள புத்தர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இறுதிப் போரில் இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை ராணுவம். போருக்குப் பின், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, இலங்கையின் மனித உரிமைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த செய்தி வெளியானதும் இலங்கை அரசும், அரசியல்வாதிகளும் பெரும் பதட்டத்துக்கு உள்ளாகிவிட்டனர். இலங்கையை இந்த பெரிய சதியிலிருந்து காப்பாற்றக் கோரி, புத்த மடாலயங்களில் பூஜைகள் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

நேற்று பல புத்த கோயில்களில் 'அதிஷ்டான பூஜை' நடத்தப்பட்டது. இதில் ராஜபக்சே சார்பிலும், அரசின் சார்பிலும் அதிகாரிகளும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இன்று நாடு முழுவதும் உள்ள புத்த ஆலயங்களிலும் பூஜைகள் நடக்கின்றன. இதில் துணை நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டியா கலந்து கொள்கிறார். இந்தப் பூஜையுடன் தங்களின் மாதாந்திர 'போயா நாள்' பூஜையையும் நடத்துகின்றனர். இந்த பூஜைகள் குறித்து அமைச்சர் ரஞ்சித் கூறுகையில், "இது இலங்கைக்கு எதிரான சர்வதேச சதி. புலி ஆதரவாளர்களின் வேலை. இந்த சதியிலிருந்து புத்த பெருமான் எங்களைக் காப்பார்," என்றார்.

இலங்கையின் போர்க்குற்றம் தனது தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமைச் சபையில் தனது தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா. இது இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தீர்மானம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. 2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டனர். சர்வதேச போர் விதிகளுக்குப் புறம்பாக படு பயங்கர ஆயுதங்களைப் பிரயோகித்த சிங்கள ராணுவம் தமிழர்களை அழித்தது. ஏராளமான விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். இலங்கையின் இந்தப் போர்க்குற்றத்துக்கு உரிய விசாரணை நடத்தி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாடுகளின் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு காரணமா தப்பித்து வந்தது இலங்கை. இந்த நிலையில், ஐநாவின் மனித உரிமை அமைப்பில், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா அதிரடியாக முடிவெடுத்தது. இதனால் இலங்கை பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளது. 

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா உதவும் என்பது இலங்கையின் நம்பிக்கை.இந்த மாத இறுதியில்தான் இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா அதிரடியாக இன்றே தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது. இந்த தீர்மானம் குறித்து துணை மாநாட்டினையும் இன்று ஜெனீவாவில் நடத்தவிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் தீர்மான நகல் மனித உரிமை சபையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. விவாதத்துக்குப் பின்னர் இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். 

தீர்மான விவரம்: இலங்கை போரின்போது சட்டத்திற்கு முரணாக குறிப்பிட்ட இனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடுநிலை நீதி விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், நிலப்பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நடுநிலையான அமைப்பினை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுதந்திரமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப் பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றில், 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்கிறோம்.

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றின் அடிப்படையில்...

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் இலங்கை அரசைக் கோருதல்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.அமெரிக்காவின் இந்த தீர்மானம் இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ரேவதியின் குறும்படத்திற்கு தேசியவிருது!

தமிழ் நடிகையாக இருந்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ரேவதியின் குறும்படம் 59வது தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. ரெட் பில்டிங் வேர் தி சன் செட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படம், திரைப்படம் அல்லாத பிரிவின் கீழ் சிறந்த படத்திற்கான விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இப்படம் குறித்து ரேவதியிடம் நேரடியாக பேசினோம். அப்போது, "இது ஒரு 17 நிமிடங்கள் ஓடும் குறும்படம். பெற்றோர், அவர்களது குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட இப்படம் தேசிய விருதினை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் இப்படத்தை தயாரிக்கும் போது பெற்றோர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன்தான் உருவாக்கினோம். எந்த விருதினையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எதிர்பாராத மகிழ்ச்சி" என்றார் அவருக்கே உரித்தான புன்னைகையுடன். நடிகை ரேவதி ஏற்கனவே தேவர் மகனில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினையும், ஆங்கில குறும்படத்திற்காக மற்றொரு தேசிய விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் ஆவதே லட்சியம்: 2 கண்களும் தெரியாத பிளஸ் 2 மாணவி !

ஆசிரியர் ஆவதே தனது லட்சியம் என திருக்கோவிலூர் டேனிஷ் மிஷன் பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதும் 2 கண்களும் தெரியாத மாணவி ரேவதி தெரிவித்தார். திருக்கோவிலூர் அருகே மேட்டுச்சேரியைச் சேர்ந்தவர் எம்.ரேவதி(17). இவரது தந்தை முனியப்பிள்ளை(40) இவர் இறந்துவிட்டார். ரேவதியின் தாயார் மல்லிகா(35). உடன்பிறந்த சகோதரி நிர்மலா (25) இவரது சகோதரர் டெம்போ டிரைவராக பணிபுரிகிறார். ரேவதி இன்று திருக்கோயிலூர் அங்கவை, சங்கவை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதினார். தேர்வு எழுதுவதற்கு முன்பாக நமது செய்தியாளரிடம் பேசிய ரேவதி, நன்கு படித்து ஆசிரியர் ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்தார்

ஒரு எம்எல்ஏ கூட இல்லை; எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள்!

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக பொதுச்செயலர் வைகோ அக்கட்சி வேட்பாளர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று மாலை களப்பாகுளம், சீவலராயனேந்தல், ராமநாதபுரம், நெடுங்குளம், திருமலைகொழுந்துபுரம், வேப்பங்குளம், ஆள்கொண்டார்குளம், செந்தட்டி ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கொடுங்கள் உங்களோடு இருந்து நாங்கள் பணியாற்ற தயாராக இருக்கிறோம் மதிமுக வேட்பாளர் நல்லவர், மக்களுக்காக போராடுவார் சட்டசபையில் உங்களுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதிமுக, தேமுதிக, திமுக வுக்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என அவர் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

40 லட்சம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் பயங்கர சூரிய புயல்!


சூரியனில் அடிக்கடி புயல் ஏற்பட்டு வருகிறது. இன்று(8.3. 2012) ஏற்படும் சூரிய புயல் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்று மாலையில் தொடங்கி நாளை காலைக்குள் இது பூமியை தாக்கலாம் என்று கணித்துள்ளனர். இது சக்தி வாய்ந்த புயலாக இருக்கும். எனவே இதன் தாக்குதலால் செயற்கை கோள்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தகவல் தொடர்புகள் போன்றவை பாதிக்கப்படலாம். விமாங்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். 1972-ம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியது. 

அப்போது அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்பட்டன. இந்த புயலும் அதே போல சக்தி வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மணிக்கு 40 லட்சம் மைல் வேகத்தில் சூரிய புயல் பூமியை நோக்கி வரும் என்று கணித்துள்ளனர். விமானங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் புயல் தாக்கும் வாய்ப்புள்ள பகுதி வழியாக செல்ல வேண்டாம் என விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நண்பரின் தாயாரை காதலித்த மாணவர்!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மாது என்கிற பாரத் (வயது 26). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். இவருக்கும் தீர்த்தமலையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 4 ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 27 ந் தேதி நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க கோவைக்கு செல்வதாக பாரத் கூறிவிட்டு, வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். அதன்பின் எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை. வீடு திரும்பவும் இல்லை. இதனால் பாரத்தை, அவருடைய பெற்றோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவருடைய பெற்றோர் கோவையில் உள்ள கல்லூரிக்கு நேரில் சென்று விசாரித்தனர். அப்போது பாரத் 10 நாட்களுக்கு முன்பிருந்தே கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த மணமகள் வீட்டாரும் செய்வதறியாமல் திகைத்தனர். இதனால் பாரத்தின் திருமணம் நின்றது. இந்த நிலையில் மாயமான பாரத்தை அவருடைய பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாரத்துடன் பிளஸ் 2 வில் ஒன்றாக படித்தவர் நவீன்குமார். இவருடைய வீடு பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரில் உள்ளது. நவீன்குமார், பாரத்துக்கு நெருங்கிய நண்பராக இருந்து வந்தார். நவீன்குமார் மற்றும் அவருடைய தந்தை செல்வராஜ் ஆகியோர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். பாப்பிரெட்டிபட்டியில் நவீன்குமாரின் தாயார் ஜோதி (வயது 43) மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இதற்கிடையே கோவையில் இருந்த நவீன்குமார், அவரது தந்தை ஆகியோர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தனர். வீட்டுக்கதவை தட்டியபோது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ஜோதியும், பாரத்தும் அருகருகே சேலையில் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது வெளியான தகவல்கள் வருமாறு: கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த பாரத், தனது நண்பர் என்ற முறையில் கோவையில் நவீன்குமாரை அடிக்கடி சந்திப்பார். இதனால் சொந்த ஊரான பாப்பிரெட்டிபட்டிக்கு பாரத் வரும்போது, நவீன்குமாரின் வீட்டுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.அப்போது வீட்டில் தனிமையில் வசித்து வந்த நண்பரின் தாயார் ஜோதிக்கும், பாரத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த நெருக்கம் இருவரையும் இணைபிரியா காதலுக்கு உட்படுத்தி விட்டது. பொருந்தாத வயது என்றாலும் தகாத உறவு இருவரையும் பிரிக்கமுடியாத நிலைக்கு தள்ளிவிட்டது. இந்த நிலையில் அரசல் புரசலாக இருவரது பழக்கம்பற்றி கேள்விப்பட்ட பாரத்தின் பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்தனர்.

இந்த திருமணத்தை பாரத் விரும்பாமல் ஊரைவிட்டு வெளியேறி இருக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பாரத் ஊருக்கு ரகசியமாக வந்து ஜோதியை சந்தித்து மனம் விட்டு பேசியிருக்கிறார். அப்போது இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சேலையில் தூக்கு போட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு!


இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர், "நோய் வரும் வரை நாம் யாரும் உடலை கண்டுகொள்வதில்லை. வந்த பிறகு தான் உடலை கவனிக்க தொடங்குகிறோம். நோய் வரும் முன்னே காப்பது தான் புத்திசாலிதனம். சரியான உணவு, நல்ல உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்'' என்றார். மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வி பேசியதாவது: இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

7 இளைஞர்களை காதலில் விழ வைத்த அழகி!

படத்துக்கும் தலைப்புக்கும் சத்தியமா சம்பத்தம் இல்லை
ஆன்லைன் காதல் மூலம் ஒரு நூதன முறையில் பண மோசடி செய்வது சென்னையில் அரங்கேறி வருகிறது. இது போல் ஆன்லைன் காதல் மோசடி மூலம் பணம் பறித்த பட்டதாரி பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார்.இப்போது அதே ஆன்லைன் காதல் மோசடியை ஆந்திர அழகி ஒருவர் சென்னையில் அரங்கேற்றி, பல கோடி பணத்தை சுருட்டி இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இந்த ஆன்லைன் அழகியிடம் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 7 பணக்கார இளைஞர்கள், தங்கள் மனதை பறிகொடுத்து, அவர் விரித்த காதல் வலையில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இவர்கள் 7 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். இந்த விபரீத மோசடி அழகி ஆந்திரமாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.

இந்த மோசடி அழகி ஆன்லைனில் காதல் வலை விரிப்பதே ஒரு சுவாரஸ்யமான கதை. இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். பி.எஸ்.சி. பட்டதாரி. கம்ப்யூட்டர் ஞானம் உள்ளவர். தனது புகைப்படத்தை இன்டர்நெட் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்து, இவரை தொடர்பு கொள்ளும் இளைஞர்களிடம் இனிக்க, இனிக்க பேசுவார். இளைஞர்களின் வசதியான பின்னணியை கேட்டுத் தெரிந்து கொள்வார். தான் பணம் கறப்பதற்கு வசதியான ஏமாறும் இளைஞர்களை பார்த்து தேர்வு செய்வார். அதன்பிறகு காதல் வலையை விரித்து இளைஞர்களை விழ வைப்பார். திருமணம் வரை கதையை கொண்டு செல்வார். பின்னர் திடீரென்று தனது பெற்றோருக்கு இருதய ஆபரேஷன் என்றும், லட்சக்கணக்கில் பணம் தேவை என்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் சோக கதையை சொல்வார். தனக்கு பணம் இல்லை என்றும் நாடகமாடுவார். இதில் ஏமாந்து இரக்கப்படும் இளைஞர்களிடம் நைசாக பேசி லட்சக்கணக்கில் பணத்தை பிடுங்கி விடுவார்.

பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கதை விடுவார். பின்னர் அந்த இளைஞர்களை நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து பணத்தை பிடுங்குவார். பணம் கைக்கு வந்ததும், ஏமாந்த இளைஞனை கழற்றி விட்டு, விடுவார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ளவே முடியாது. செல்போன் நம்பரையும் மாற்றி விடுவார். போலி முகவரியை கொடுத்துதான் இவர் செல்போன் கனெக்ஷனும் பெறுவார். தனது வீட்டு முகவரியை கூட போலியாகவே கொடுப்பார்.

இவரிடம் ஏமாந்த இளைஞர்கள் 7 பேரும் சென்னையில் பிரபலமாக உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்றுதான் பணத்தை கொடுத்துள்ளனர்.ஒரு இளைஞர் தனது 3 சொகுசு கார்களை விற்று ரூ.30 லட்சத்துக்கு மேல் இந்த ஆன்லைன் மோசடி அழகியிடம் மோசம் போய் விட்டதாகவும் சோகமாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த அழகிக்கு சங்கீதா, அபர்ணா என்று வித, விதமான பெயர்களும் உள்ளது. ஏமாந்த இளைஞர்களிடம் இந்த அழகி தன்னை ஒரு டாக்டர் என்றும், என்ஜினீயர் என்றும் கதை விட்டு ஏமாற்றி உள்ளார். இந்த அழகியை பொறி வைத்து பிடிக்க விசேஷ போலீஸ் படை ஒன்று களத்தில் இறக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு சென்று விசாரணை நடத்தி விட்டு வந்துள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் இந்த அழகியிடம் மேலும் இளைஞர்கள் ஏமாறாமல் இருக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அழகி யாரையாவது இதே ஸ்டைலில் காதல் வலை விரித்து, மோசடி விழூகம் வகுத்தால் உடனடியாக சென்னை போலீசை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மனைவியை கொன்ற போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை!

நாகை மாவட்டம், வாய்மேடு உடையதேவன்காட்டை சேர்ந்தவர் நாகராஜன்(39). நாகை ஆயுதப்படை காவலர். அதே பகுதியை சேர்ந்த உமாராணியை (23) காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு உமாராணியை நாகராஜன் கொடுமைப்படுத்தி வந்தார். இதுபற்றி அறிந்த உமாராணியின் பெற்றோர், அங்கு சென்று நாகராஜனை கண்டித்தனர். இதில், ஆத்திரமடைந்த நாகராஜன், உமாராணியை அவரது பெற்றோர் முன்பே தீவைத்து கொளுத்தினார். அதே இடத்தில் அவர் இறந்தார்.  இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். வழக்கை நேற்று விசாரித்த நாகை மாவட்ட நீதிபதி சதீஷ்குமார், கொலை குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...