|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 November, 2011

சிவன் கிட்ட நெருங்க.சோமவார விரதம்!



கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும். அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து முன் இரவில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதியர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும். இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார். 

கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு சிவாலயத்தில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. 

ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். அம்மாதத்தில் செய்யப்படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். இப்பூஜையால் பாவங்கள், வறுமை விலகுவதுடன்; வளமான வாழ்வும் பெறலாம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் மகா விஷ்ணுவைவிட்டு, லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள். வில்வ இலையால் விஷ்ணுவையும், சிவனையும் பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும். ஆலயத்தில் சுவாமிக்குமுன் பூஜை நேரத்தில் ÷ஷாடச தீபாராதனை செய்வார்கள். இதனை வெறும் சடங்காக நினைக்கக்கூடாது. உலகின் தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபட வேண்டும். அதனால் சுகபோகமும் ஞானமும் கிட்டும்.


கார்த்திகைப் பொரி மிகவும் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கும். பொரியுடன் தேங்காயின் சரவலையை சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக வெல்லம் சேர்க்கிறோம். வெண்பொடி பூசிய, என்றென்றும் களங்கமற்ற தூயவனாகிய சிவபெருமானை நெல் பொரி குறிப்பிடுகிறது. வள்ளல் தன்மை படைத்த மாவலியை தேங்காயின் துருவல் உணர்த்துகிறது. கள்ளங்கபடமில்லாத தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பது தத்துவம்.



 எல்லா திருமணத்திலும் அருந்ததியை பார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால் தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவதும் உத்தமம். நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்து சிவனின் அன்புக்கு உரியவர்களாகி அவனது பொற்பாதத்தில் சரணடைவோம்.

இதே நாள்...


  • சர்வதேச ஆண்கள் தினம்
  •  பிரேசில் கொடிநாள்
  •  இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
  •  இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
  •  வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

சொந்தமண்ணில் நூறாவது சதம்? சச்சினுக்கு நெருக்கடி!


கோல்கட்டா டெஸ்ட் போட்டியில், தவறவிட்ட "நூறாவது சதம்' என்ற சாதனையை, சச்சின் தனது சொந்த மண்ணான மும்பையில் எட்டுவார் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே சச்சினுக்கு கூடுதல் நெருக்கடியை தந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். இதற்குப் பின் "சதத்தில் சதம்' என்ற சாதனையை படைக்க, இவர் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிகிறது. 



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டில்லி அல்லது கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் சச்சின் இந்த இலக்கை எட்டுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த போட்டிகளில் சச்சின் 7, 76 மற்றும் 38 ரன்களில் அவுட்டானார். இதனால், வரும் 22ம் தேதி துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், எப்படியும் சாதிப்பார் எனத் தெரிகிறது. ஏனெனில் இம்முறை ஒரு விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மூன்றாவது டெஸ்ட் நடக்கவுள்ள, வான்கடே மைதானம் சச்சினின் சொந்த ஊரான மும்பையில் உள்ளது. இதனால் நூறாவது சதம் குறித்து வழக்கத்துக்கு மாறாக அதிக பர பரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.  அதேநேரம், இம்மைதானத்தில் சச்சின் பங்கேற்ற 8 டெஸ்ட் போட்டியில், ஒரு முறை (டிசம்பர் 1997, இலங்கை) மட்டுமே சதம் அடித்துள்ளார். இதனால், சச்சினுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  ஆனால், தனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை என்கிறார் சச்சின். இதுகுறித்து அவர் கூறியது: கிரிக்கெட் வாழ்க்கையில் 22 ஆண்டுகள் நிறைவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக எனது தேசத்துக்காக, முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதிக உற்சாகத்தை தந்துள்ளது. இதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. 



எனது நூறாவது சதம் குறித்து தான் எல்லோரும் பேசுகின்றார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாவதால் எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஏனெனில், இது குறித்தெல்லாம் நான் நினைத்துக் கொண்டு இருப்பதில்லை. நூறு என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு நம்பர் தான். சிறப்பான முறையிலான ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்துவது குறித்து தான் எப்போதும் நினைப்பேன். இதுபற்றிய எண்ணத்தில் இருந்து விடுபட்டு "ரிலாக்சாக' இருக்க விரும்புகிறேன். எதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு, அதற்காக அவசரம் காட்ட விரும்பவில்லை. எனது இயல்பான ஆட்டத்தில் மட்டுமே, கவனம் செலுத்த முயற்சிப்பேன். மற்றபடி, நடப்பவை தானாகவே நடக்கும்.  ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் 90 வது சதம் அடித்த போது, யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. 99வது சதம் அடித்த போதும், எவரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், 100வது சதம் குறித்து மட்டும், ஏன் இவ்வளவு பேசுகின்றனர் என்று, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  இவ்வாறு சச்சின் கூறினார்.

வணிக வரித்துறையில் உள்ள அமலாக்கப் பிரிவினர், எந்த விதமான சோதனையிலும் ஈடுபடக் கூடாது, என, உத்தரவு !


வணிக வரித்துறையில் உள்ள அமலாக்கப் பிரிவினர், எந்த விதமான சோதனையிலும் ஈடுபடக் கூடாது, என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவின் முடக்கத்தால், ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

அமலாக்கப் பிரிவு முடக்கம் : வணிக வரித் துறையில் உள்ள முக்கியமான பிரிவு, அமலாக்கம். இதில் சுற்றும் படையினர், ஆய்வுக் குழுவினர் என, இரண்டு வகையினர் உள்ளனர். சோதனைச் சாவடிகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கிடைக்கும் ரசீதுகள் மூலம், சம்பந்தப்பட்ட வணிகர், முறையாக வரி செலுத்துகிறாரா என சோதனை செய்வது, ஆய்வுக் குழுவினர் பணி.இவர்கள், ஆளுக்கொரு வணிகர் என்ற வகையில் பிரித்து, அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து, சரக்கு நடமாட்டத்தை கண்காணித்து, கோப்புகளைத் தயாரிப்பர். இவற்றை ஆய்வு செய்யும் இணை கமிஷனர், அவற்றில் குறிப்பிட்ட சில நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றில் திடீர் சோதனை நடத்த அனுமதி அளிப்பார். இவ்வாறு, தமிழகம் முழுவதும் உள்ள, நான்கு கோட்டங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளின் மூலம், மாதந்தோறும், 10 கோடி ரூபாய் வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்; ஆண்டுக்கு, சராசரியாக 120 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால், ஓராண்டாக எந்த ஆய்வும் இல்லாமல், அமலாக்கப் பிரிவின் குழு அலுவலர்கள், முடங்கிக் கிடக்கின்றனர்.

தொடரும் தடை உத்தரவு : தமிழகம் முழுவதும் இது போன்ற, 50 குழுக்கள் உள்ளன; சென்னையில் மட்டுமே, 25 குழுக்கள் உள்ளன. இவர்களை முடக்குவதற்கான முதல் உத்தரவு, கடந்த ஆட்சியின் போது வெளியிடப்பட்டது.சட்டசபைத் தேர்தல் வருவதை ஒட்டி, வணிகர்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம் என்பதற்காக, கடந்த ஆண்டு நவ., 12ம் தேதி, அனைத்து அதிரடி சோதனைகளையும் நிறுத்தும்படி, அப்போதைய ஆணையர் அலுவலகத்தில் இருந்து, வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து வந்த உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, அத்தடை அப்படியே நீடித்தது. ரூ.120 கோடி இழப்பு : கடந்த செப்., 20ம் தேதி, வணிக வரித் துறை ஆணையர், அதிகாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவுமே இத்தகைய திடீர் சோதனைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டுவிட்டார். ஆணையரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்காமல், எந்தச் சோதனையும் நடத்தப்படக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு மட்டும், வணிக வரித் துறைக்கு, 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு அதிகரிக்கும் : ஆணையரின் இந்த உத்தரவு குறித்து, தென் மாவட்டத்தைச் சேர்ந்த வணிக வரித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்துவது, இத்துறையின் சட்டப்பூர்வ அதிகாரம். ஒரு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் சோதனை நடத்தும்போது, எச்சரிக்கை அடையும் அந்த பகுதி வர்த்தகர்கள் அனைவருமே, முறைப்படி வரி செலுத்த முயற்சிப்பர். இதனால், இயல்பாகவே வரி வருவாய் கூடுகிறது.புதிய அரசு வந்த பிறகு, பல்வேறு இன பொருட்களுக்கு, 5 சதவீதமாக இருந்த வரி, 14 சதவீதமாக உயர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால், வரி ஏய்ப்புகள் அதிகரிக்கும். இதைத் தடுக்க, திடீர் சோதனைகள் அதிகம் தேவை. அதே சமயம், தடை தகவல், வணிகர்களுக்கும் தெரிந்துவிட்டதால், இதுவரை தவறு செய்யாதவர்கள் கூட, "பில்' இல்லாமல் சரக்கு அனுப்ப துணிந்து விடுகின்றனர். இரு அரசுகளும் இணைந்து, ஒரே முடிவெடுத்ததற்கு என்ன காரணம் என்பதே தெரியவில்லை. சோதனையின் பெயரால், சில அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பது, காரணமாக இருக்க முடியாது. முறைகேடு நடக்காத துறையே கிடையாது.எங்கேனும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களை தான் தண்டிக்க வேண்டுமே தவிர, மொத்தத்தையும் தடை செய்து விடுவது, சரியான நடைமுறையாக இருக்காது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

ஆண்டுதோறும் ஏப்., 1க்குள் மின் கட்டணம் உயர்த்த வேண்டும்! மத்திய மின்சார தீர்ப்பாயம்!!


ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1ம் தேதிக்குள், மின் கட்டணங்களை கட்டாயம் மாற்ற வேண்டும். இதை பின்பற்றாத மாநிலங்கள் மீது, ஒழுங்கு முறை ஆணையங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மத்திய மின்சார தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள, அரசு மின் வாரியம் மற்றும் மின்சார அரசு நிறுவனங்கள், பல்வேறு நிதி நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. கடனில் தத்தளிக்கும் இந்நிறுவனங்கள், கடந்த பல ஆண்டுகளாக, மின் கட்டணத்தை உயர்த்தவும், ஆண்டு கணிப்பு வருவாய் அறிக்கையை சமர்ப்பிக்காமலும், காலம் தாழ்த்துகின்றன என, மின்சார தீர்ப்பாயத்திற்கு, மத்திய மின்துறை செயலர் கடிதம் அனுப்பியிருந்தார்.இக்கடிதத்தை மனுவாக பாவித்து, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தானாகவே வழக்கு பதிந்தது. இந்த வழக்கு, நீதியரசர் கற்பகவினாயகம் தலைமையிலான உறுப்பினர்கள் ராகேஷ்நாத் மற்றும் தல்வார் ஆகியோரது பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.

கட்டணம் உயர்த்தாததால், கடன் சுமை: இவ்வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:அறிக்கைகளை ஆராய்ந்ததில், பல மாநில ஆணையங்கள், இந்திய மின்சார சட்டத்தை சரியாக பின்பற்றாதது தெரிகிறது. மின் கட்டண மாற்றம் குறித்து, ஆணையங்கள் தானாக முன்வந்து, நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும், மின் கட்டணத்தை தாங்களாகவே நிர்ணயம் செய்ய முடியுமா என்றும் கேள்விகள் எழுப்பியுள்ளன.மின் கட்டண மாற்றம் கோரி விண்ணப்பிக்காத தமிழகம், திரிபுரா மற்றும் ராஜஸ்தான் மின்சார அரசு நிறுவனங்கள் மீது, மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள், தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க, தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை பின்பற்றாமல், ஆணையங்கள், சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன.பல மாநிலங்கள், மின் கட்டணத்தை சரியான நேரத்தில் உயர்த்தாமல், பெரும் கடனுக்கு ஆளாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக, தமிழகம் உட்பட 29 மாநிலங்களில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. உத்தரவு விவரம்:
கீழ்க்கண்ட உத்தரவுகள் மாநில மின் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு பிறப்பிக்கப்படுகின்றன:
* மாநில மின்சார நிறுவனங்கள், கட்டண உயர்வு கோரி மனு மற்றும் ஆண்டு சராசரி வருவாய் கணிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன்வந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தீர்ப்பாயமே முன்வந்து, ஆணையத்திற்கு <உத்தரவு பிறப்பிக்க அதிகாரமுள்ளது.
* ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 30க்குள், மாநில மின் நிறுவனங்கள், மொத்தமான நிதி அறிக்கையை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், கட்டண உயர்வுக்கான முடிவு நாளுக்கு, 120 நாட்களுக்கு முன், மின்சார நிறுவனங்கள் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், அந்தந்த மாநில, கடந்த நிதியாண்டு செலவுகள் அறிக்கை மற்றும் கடந்த கால செலவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
* ஆண்டு வருவாய் கணிப்பு அறிக்கையை, ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தாக்கல் செய்ய, மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1ம் தேதிக்குள், ஆண்டு வருவாய் அறிக்கையை சரிபார்த்தல் மற்றும் கட்டண உயர்வு குறித்து முடிவு செய்ய வேண்டும். இந்த கால நிர்ணயத்தை மனதில் கொண்டு, மின் வாரியங்கள் அறிக்கைகள் மற்றும் மனுவை, முன்கூட்டிய தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்.
* மின்சார நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் மனுக்கள் தாக்கல் செய்யாவிட்டால், ஒரு மாத காலக்கெடு முடிந்ததும், தேசிய மின்சார சட்ட கொள்கை அடிப்படையில், மின் கட்டணத்தை நிர்ணயிக்க, ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வரும் ஆண்டிலும், ஏப்ரல் 1ம் தேதிக்குள், மின்கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
* ஆண்டுதோறும், இந்த உத்தரவின்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் செயல்பட்டு, அதன் ஆண்டறிக்கைகளை, ஜூன் 1ம் தேதிக்குள், ஒழுங்குமுறையாளர் கூட்டமைப்பு செயலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவர், மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்.
* ஆண்டுதோறும் ஏற்படும் வருவாய் இழப்புகளை சேர்த்து, அடுத்த ஆண்டு கட்டணத்தை அமைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள், இந்த இழப்புகளை கட்டணம் வாயிலாக, மின்சார நிறுவனங்கள் மீட்டெடுக்கும் வகையில், செயல்பட வேண்டும். இதை, ஒழுங்குமுறை ஆணையங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
* மின் உற்பத்தி எரிபொருளுக்கான செலவு மற்றும் மின்சார கொள்முதல் தொகையையும் கணக்கிட்டு, மின் கட்டணங்களை நிர்ணயிக்க, ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை!


போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் ரத்து அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை ஆகிய கடுமையான தண்டனைகள் உண்டு. இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் காரணமாக, விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகின்றன. விபத்தில், நான்கு நிமிடங்களுக்கு ஒரு உயிர் பலியாகிறது. கடந்தாண்டில் மட்டும், விபத்துகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை கடுமையாக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும், புதிய சட்ட திருத்த மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிக வேகம், அபாயகரமான டிரைவிங், வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விதிமுறை மீறல்களுக்கு, தற்போது 100 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வரம்பை, குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். பதிவெண் இல்லாத வாகனத்தை ஓட்டுபவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு, சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சக ஒப்புதல் கிடைத்த பின், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அ.தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத அளவுக்கு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக,கருணாநிதி!


தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லையா? அதை எல்லாம் தமிழக அரசு தாங்கிக்கொண்டு, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா?கடந்த 2006ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, பஸ் கட்டணத்தை ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதையும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்திலேயே உயர்த்திவிட்டார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். முன்பெல்லாம் ரயில் கட்டணம் அதிகமாகவும், பஸ் கட்டணம் குறைவாகவும் இருக்கும். தற்போது, நெல்லைக்கு ரயில் கட்டணம், 132 ரூபாய். பஸ்சில் பயணம் செய்ய, அதே நெல்லைக்கு, 350 ரூபாய் கட்டணம்.

பால் விலையையும் ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். பால் கொள்முதல் விலையை, ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் அந்த பாலை, பொதுமக்களுக்கு விற்கும்போது எந்த அளவுக்கு விற்பனை விலையை உயர்த்தியுள்ளார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.மூன்றாவதாக, மின் கட்டணத்தையும் உயர்த்தக் கோரி, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அதையேற்று மின் கட்டணங்களை உயர்த்தும்போது, 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் வரக்கூடுமென எதிர்பார்க்கின்றனர். இந்தக் கட்டணங்களை எல்லாம் உயர்த்திவிட்டு, அதற்குக் காரணம் கருணாநிதி தான் என்றும், மத்திய அரசு தான் என்றும் பழியைத் தூக்கி மற்றவர்கள் மேல் போடுகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை, வரலாற்றிலே இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளில் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் கட்டணமில்லா ஃபோன் எண் 1077க்கு எந்த நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ!


திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் பேரபாய தொழிற்சாலைகளில் ஏற்படும் பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட அவசரகால ஆயத்த நிலை குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது:


சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவசர நிலை ஏற்படும் போது, எந்த நேரமும், ஆயத்தமாக இருக்கவேண்டும். மாவட்ட கலெக்டரகத்தில் அவசரகால நிலை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் கட்டணமில்லா ஃபோன் எண் 1077க்கு எந்த நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், தொழிற்சாலைகளில் பேரபாய விபத்துக்களை தடுக்கும் பொருட்டும், அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட புற வளாக அவசரகால ஆயத்த நிலை திட்டத்தினை தயாரிக்க, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையால் தகுதி வாய்ந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பிரகாஷ் பாட்டீல் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட துறை அலுவலர்களுக்கு அபாயகரமான தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை சமாளிப்பது குறித்தும், அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார்.

இந்தியா,"சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு சசி தரூர்!


இருபத்தோராம் நூற்றாண்டில் வல்லரசாக வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், வல்லரசில்லாத நிலையில் தான் சென்று கொண்டிருக்கிறோம். வல்லரசு என்றால் அரசியல், பொருளாதாரம், ராணுவத்தில் மேன்மை பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதியை அமெரிக்கா பெற்றுள்ளது. அமெரிக்காவால் கிழக்காசியா மட்டுமல்லாது, உலகில் எந்த இடத்திலும் நின்று போரிடும் வல்லமை உள்ளது. இந்த நிலையை சீனாவோ, இந்தியாவோ நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இந்தியாவில் இன்னும் பலர், மூன்று வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகின்றனர். ஒதுங்க இடம் கூட இல்லாமல், திறந்த வெளியில் பலர் படுத்துறங்கும் நிலை உள்ளது. பெற்றோர்கள் பலர், தங்கள் குழந்தைகளுக்கு உரிய கல்வி அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த அடிப்படை தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யாததால், நாம் வல்லரசு உரிமையைக் கொண்டாட முடியாது. இந்த விஷயத்தில் இந்தியா,"சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு தான். இந்தியாவை, சீனாவுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், சீனாவால் செய்ய முடிந்ததை, இந்தியாவால் செய்ய முடியாது. சீனா பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் இந்தியாவை மிஞ்சி நிற்கிறது. கலாசாரத்தை போற்றுவதில் வேண்டுமானால், இருநாடுகளுக்கும் ஒற்றுமை இருக்கலாம். மற்றபடி, இரு நாடுகளுக்கிடையே நிறைய முரண்பாடுகள் உள்ளன.இவ்வாறு சசி தரூர் கூறினார். விமானத்தில், "எகானமி' வகுப்பில் பயணிப்பது, மாட்டுக் கொட்டகையில் இருப்பது போன்றது எனக் கூறி, சர்ச்சைக்கு ஆளானவர் சசி தரூர். பின், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர்பான சர்ச்சையில் சிக்கி, மத்திய அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் இன்வெஸ்டிகேஷன் பீரோ...!


 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., இன்று நடத்தியிருக்கும் ரெய்டு மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காப்பாற்றும் செயல் என்றும் , காங்கிஸ் கட்சியால் ஏவப்படும் காங்கிரஸ் இன்வெஸ்டிகேஷன் பீரோ என்றும் சி.பி.ஐ.,யை பா.ஜ., கடுமையாக சாடியுள்ளது. இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேட்கர் கூறுகையில்: பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்த போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு காபினட் அமைச்சரவை எடுத்த முடிவின்படிதான் விற்கப்பட்டுள்ளது. எந்த கம்பெனிக்கும் கரிசணம் காட்டவில்‌லை. ராஜா குற்றம் புரிய துணையாக இருந்தவர் சிதம்பரம் ஆவார். இதனால் ராஜாவும், சிதம்பரமும் சம அளவில் குற்றம் புரிந்தவர்கள். இவர் மீது நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்கள் நாங்கள் கொடுத்துள்ளோம். இவரை காப்பாற்ற கடைசி முயற்சியாகவும், வழககை திசை திருப்பவும் காங்கிரஸ் முயற்சிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சி.பி.ஐ., தூண்டி விடப்பட்டுள்ளது. இது தரம தாழ்ந்த செயல் என்றும் கூறினார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு தொடர்பாக கடந்த பழைய குப்பைகளையும் தோண்டி துருவ ஆரம்பித்து இருக்கிறது சி.பி.ஐ., . பல கோடி ஊழல் நடந்த விவகாரம் காங்கிரஸ் அரசில் மட்டுமல்ல, கடந்த கால ஆட்சியாளர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற கூற்றின்படி பா.ஜ., ஆட்சி செய்த (2001 முதல்) காலம் முதல் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ, அறிவித்திருந்தது. இதன்படி இன்று புதிய எப்.ஐ,ஆரை பதிவு செய்தது.இந்த காலக்கட்டத்தில் பா.ஜ.வை சேர்ந்த பிரமோத் மகாஜன், அருண்‌ஷோரி ஆகியோர் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்து வந்தனர். மகாஜன் காலமாகி விட்டார். இப்போது இவர் இல்லை. 


இவர்கள் காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலை வரிசையை விலைக்கு வாங்கிய வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் இன்றைய எப்.ஐ.ஆ.,ரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன்படி மும்பை, மற்றும் குர்கானில் உள்ள அலுவலகங்களில் சி.பி.ஐ.,ரெய்டு நடத்தி வருகிறது. தொலை தொடர்பு செயலர் மற்றும் பி.எஸ்.என்.எல்., முன்னாள் இயக்குநர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்னும் கைது படலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் - வோட போன் விளக்கம்: இன்று நடந்து வரும் ரெய்டு குறித்து இரு நிறுவனங்கள் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் வாங்குதல் தொடர்பாக முறையான ஆவணங்கள் பராமரிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவின்படியே வியாபாரம் நடந்தது. இன்றைய ரெய்டின்போது சி.பி.ஐ.,க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...