|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 November, 2011

அ.தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத அளவுக்கு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக,கருணாநிதி!


தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லையா? அதை எல்லாம் தமிழக அரசு தாங்கிக்கொண்டு, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா?கடந்த 2006ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, பஸ் கட்டணத்தை ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதையும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்திலேயே உயர்த்திவிட்டார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். முன்பெல்லாம் ரயில் கட்டணம் அதிகமாகவும், பஸ் கட்டணம் குறைவாகவும் இருக்கும். தற்போது, நெல்லைக்கு ரயில் கட்டணம், 132 ரூபாய். பஸ்சில் பயணம் செய்ய, அதே நெல்லைக்கு, 350 ரூபாய் கட்டணம்.

பால் விலையையும் ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். பால் கொள்முதல் விலையை, ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் அந்த பாலை, பொதுமக்களுக்கு விற்கும்போது எந்த அளவுக்கு விற்பனை விலையை உயர்த்தியுள்ளார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.மூன்றாவதாக, மின் கட்டணத்தையும் உயர்த்தக் கோரி, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அதையேற்று மின் கட்டணங்களை உயர்த்தும்போது, 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் வரக்கூடுமென எதிர்பார்க்கின்றனர். இந்தக் கட்டணங்களை எல்லாம் உயர்த்திவிட்டு, அதற்குக் காரணம் கருணாநிதி தான் என்றும், மத்திய அரசு தான் என்றும் பழியைத் தூக்கி மற்றவர்கள் மேல் போடுகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை, வரலாற்றிலே இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...