|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 November, 2011

தொழிற்சாலைகளில் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் கட்டணமில்லா ஃபோன் எண் 1077க்கு எந்த நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ!


திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் பேரபாய தொழிற்சாலைகளில் ஏற்படும் பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட அவசரகால ஆயத்த நிலை குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது:


சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவசர நிலை ஏற்படும் போது, எந்த நேரமும், ஆயத்தமாக இருக்கவேண்டும். மாவட்ட கலெக்டரகத்தில் அவசரகால நிலை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் கட்டணமில்லா ஃபோன் எண் 1077க்கு எந்த நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், தொழிற்சாலைகளில் பேரபாய விபத்துக்களை தடுக்கும் பொருட்டும், அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட புற வளாக அவசரகால ஆயத்த நிலை திட்டத்தினை தயாரிக்க, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையால் தகுதி வாய்ந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பிரகாஷ் பாட்டீல் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட துறை அலுவலர்களுக்கு அபாயகரமான தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை சமாளிப்பது குறித்தும், அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...