|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 March, 2012

இதே நாள்...


  •  ஈரான் தேசிய மரம் நடுதினம்
  •  இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்தது(1964)
  •  ஐரோப்பாவின் முதல் விமானமான குலோஸ்டர் மெட்டர் பறக்க விடப்பட்டது(1943)
  •  பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்தது(1824)
தேர்வில் வெற்றிபெற...முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மாணவர்கள் மிகவும் பதட்டத்துடனும், ஒருவித பயத்துடனும் தேர்வை எதிர்நோக்குவார்கள். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ராசிக்குரிய தெய்வத்தை மனதார வழிபட்டால் பதட்டமும், பயமும் நீங்கி சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிகமதிப்பெண் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.  

மேஷம் : சரஸ்வதி படம் வைக்கவும்  இயற்கையாகவே எதிலும் அவசரமாக செயலாற்றும் அவசரப் புத்திக்காரர்களாகிய நீங்கள், நிதானமாக வினாக்களைப் படித்து புரிந்து கொண்டு விடையளிப்பது அவசியம். ராசிகிரகத்தில் செவ்வாய் மற்றும் குரு ஆகிய இருவரும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். புதனின் நிலையும் சாதகமாக இருப்பதால் வேகமாக எழுதும் திறனைப் பெற்று சிறப்பாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற சரஸ்வதியை வணங்கி கூற வேண்டிய ஸ்லோகம்:  ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மேஸதா 

ரிஷபம் : விநாயகர் படம் வைக்கவும் எந்த ஒரு செயலும் அழகாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் குணமுடைய நீங்கள் விடைத் தாளை அழகாக அலங்கரிப்பீர்கள். முக்கியமான விடைகளை பல வண்ணங்களில் அடிக்கோடிட்டு காட்டுவது உங்களின் சிறப்பு குணம். ராசிநாதன் சுக்ரன் 12ம் இடத்தில் குரு பகவானோடு இணைந்திருப்பதும், வித்யாஸ்தானத்தில் 12ம் அதிபதி செவ்வாய் அமர்வதால் தேர்வு நேரத்தில் சரியான விடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சற்று சிரமங்கள் ஏற்படும். தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற விநாயகப்பெருமானை வழிபட்டால் தெளிவான விடைகளை அளிப்பதில் வல்லவராக விளங்குவீர்கள் என்பது உறுதி. நீங்கள் கூறவேண்டிய ஸ்லோகம் :  வக்ர துண்ட மகாகாய சூர்யகோடி ஸமப்ரப அவிக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷுஸர்வதா 

மிதுனம் :  சரஸ்வதி படம் வைக்கவும் எதையும் மதிநுட்பமாக ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் குணமுடைய நீங்கள், தேர்வின்போது கேள்விக்குறிய விடைகளை வளவளவென்று நீண்ட பதிலாக எழுதாமல் தேவையானதை மட்டும் சரியான அளவில் எழுதுங்கள். உங்கள் ராசிக்குரிய கிரகநிலையால் தேர்வு சமயத்தில் நேரப்பற்றாக் குறையினால் சற்றே அவதிப்பட நேரிடலாம். தேர்விற்கு முன்னதாக நடைபெறும் மாதிரித்தேர்வுகளை எழுதி கால வரம்பினை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சரஸ்வதியை வணங்கி நீங்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :  ஸரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதி ஸ்திதாம் கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம்

 கடகம் : அனுமன் படம் வைக்கவும் வெளிப்படையாக தேர்வைப் பற்றிய பயம் இல்லை என்று காட்டிக் கொண்டாலும் உள்மனதில் ஒரு வித படபடப்பான உணர்வுடன் இருப்பீர்கள். எழுத்து வன்மையைத் தரும் புத பகவான் மார்ச் மாதத்தின் இறுதி வரை எட்டாம் இடத்தில் அமர்வது நன்மையைத் தராது. நான்காம் இடமாகிய வித்யா ஸ்தானத்தில் அர்த்தாஷ்ட சனியின் தொந்தரவும் இணைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க தன்னம்பிக்கையும், அயராத <உழைப்பும் அவசியம். ஆஞ்சநேயரை வணங்கி நீங்கள் கூற வேண்டிய ஸ்லோகம் :  மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் வாதாத்மஜம் வானரதூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி 

 சிம்மம் :  சூரியன் படம் வைக்கவும் குரு பகவானின் நேரடி பார்வையைப் பெற்றிருப்பதால் உங்களின் ஞாபக சக்தி மிக நன்றாக இருக்கும். ஒரு முறை படித்தாலே மனதில் ஆழமாக பதியும் அளவுக்கு ஞாபகசக்தி இருக்கும். மார்ச் 14ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும்படி வினாத்தாள் அமையாமல் போகலாம். மற்ற கிரகங்களின் துணையும் தளராத மனமும் கொண்டிருப்பதால் சிறப்பாகத் தேர்வெழுதி வெற்றி பெறுவீர்கள். சூரிய நாராயணனை வழிபட்டு அவருக்குரிய ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கி வாருங்கள்.  பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்ரங்முக: சத்ருர் பார்க்கவ ஸெளரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம் 

கன்னி :  ஆஞ்சநேயர் படம் வைக்கவும் சிரமமான கிரகநிலைகள் நிலவுவதால் எழுதும் வலிமையினைத் தருகின்ற மூன்றாம் இடத்தில் ராகுவும், அதிபதி செவ்வாய் 12லும் அமர்ந்திருப்பதால் சற்று நிதானமில்லாமல் செயல்படும் வாய்ப்பு உருவாகலாம். கேள்வி எண்ணைத் தவறாகக் குறிப்பிடுவது, தவறான விடைஎழுதுவது போன்ற அவசர புத்தியோடு செயல்படுகின்ற தவறுகள் நேரக்கூடும். இருப்பினும் ஆஞ்சநேயரை மனதார வணங்கி நவகிரகங்களின் ஆதரவோடு, தேர்வினில் சிறப்பான மதிப்பெண்களை அடைவீர்கள். நீங்கள் கூறவேண்டிய ஸ்லோகம்  ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ  

துலாம் :  சூரியன் படம் வைக்கவும் ஜென்மச்சனியின் ஆதிக்கம் பெற்றிருந்தாலும், நான்காம் இடமாகிய வித்யா ஸ்தானத்திற்கு அதிபதி சனி பகவானே என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. அவரது உச்சபலத்தால் கல்வி நிலையில் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம். குரு பகவானின் துணையுடன், ராசிநாதன் சுக்ரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவது நிச்சயம். முழுமனதுடன் சூரியபகவானை வணங்கி நீங்கள் சொல்லி வர வேண்டிய ஸ்லோகம் :  ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம் 

விருச்சிகம் :  புதன் படம் வைக்கவும் ஏழரை சனியின் ஆதிக்கத்தால் நீங்கள் தேர்வினில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். குரு பகவான் ஆறில் இருப்பது சாதகமற்ற நிலையாகினும், எழுத்து வலிமையைத் தரக்கூடிய புதபகவான் உங்களுக்குத் துணை நிற்கிறார். பாடங்களைப் பல முறை படித்து எழுதிப்பார்ப்பதன் மூலம் மனதில் நன்றாக பதியும். தேர்வு நேரத்தில் பெரும் உதவியாய் இருக்கும். புதபகவானை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தினமும் காலையில் 21 முறை படித்து வர வெற்றி உண்டாகும்.  ஸெளம்ய: பீத உதங்முகஸ்ஸமிதபாமார்கோ (அ)த்ரிகோத்ரோத்பவோ பாணோசாநகத: ஸூஹ்ருத் ரவிஸூதோ வைரீக்ருதாநுஷ்ணருக் கந்யாயுக்மபதிர் தசாஷ்டம சதுஷ் ஷண்ணேத்ரக: சோபநோ விஷ்ண்வாராதந தர்ப்பிதோ மகதப: குர்யாத் ஸதாமங்களம் 

 தனுசு : தட்சிணாமூர்த்தி படம் வைக்கவும் உங்கள் ராசிநாதன் குரு பகவானாக இருப்பதால் தேர்வு நேரத்தில் நிலவுகின்ற கிரகங்களின் சஞ்சார நிலை சிறப்பான பலன்களைத் தரும். நேரத்தை வீணாக்காமல் நன்றாகப் படித்தால் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவதோடு நினைத்தபடியே மேற்படிப்பும் கிடைக்கும் என்பது உறுதி. வாழ்வில் சிறந்து விளங்க தட்சிணாமூர்த்தியை வணங்கி நீங்கள் சொல்லி வர வேண்டிய ஸ்லோகம்:  மூலேவடஸ்ய முனிபுங்கவ ஸேவ்யமானம் முத்ராவிசேஷ முகுளீக்ருத பாணிபத்மம் மந்தஸ்மிதம் மதுரவேஷ முதாரமாத்யம் தேஜஸ்ததஸ்து ஹ்ருதிமே தருணேந்து சூடம் 

 மகரம் :  முருகன் படம் வைக்கவும் உங்கள் உயர்விற்குப் பெரிதும் பக்கபலமாக சனிபகவான், குருபகவான், புதபகவான் துணை நிற்கிறார்கள். தேர்வில் வேகமாக எழுதுவதுடன் கேள்விக்குரிய பதிலை சரியான வகையில் வெளிப்படுத்துவதில் தனி கவனம் செலுத்துவீர்கள். குறிப்பிட்ட கேள்விகளுக்குரிய விடைகளை மட்டும் படிக்காமல் எல்லாப் பாடங்களையும் படிப்பது நல்லது. சுப்ரமணிய சுவாமியை தினமும் வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைக் கூறுவதல் மூலம் நல்ல மதிப்பெண்களை அடைவீர்கள்.  திவ்யதுநீம கரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகி நஸ்தவம் ஸாமுத்ரோஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ நதாரங்க:  

கும்பம் புதன் படம் வைக்கவும் மாணவர்கள் தேர்வினில் சிறப்பான மதிப்பெண்களோடு தேர்ச்சி காண ராசிநாதன் சனி, புத்திகாரகன் புதன், நல்லறிவினைத் தரும் குரு ஆகியோர் சாதகமாக துணைபுரிவார்கள்.  எழுத்து வலிமையைக் குறிக்கும் மூன்றாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் உங்களுக்குக் கூடுதல் பலம் கிடைக்கும். கேள்விக்குரிய பதிலை சுருக்கமாக, அதே நேரத்தில் சரியாக விடையளிக்க வேண்டும். தேவையற்ற வகையில் அதிகமாக எழுதுவதால் நேரப்பற்றாக்குறை உண்டாகலாம். புதபகவானை வழிபட்டு கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை தினமும் 18 முறை சொல்லி வர தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெறுவது உறுதி.  ஸிம்மாரூடம் சதுர் பாஹும் கட்கசர்ம கதா தரம் ஸோமபுத்ரம் மஹா ஸெளம்யம் த்யாயேத் ஸர்வார்த்த ஸித்திதம் 

மீனம் :  தட்சிணாமூர்த்தி படம் வைக்கவும் அஷ்டமத்துச் சனியுடன் புத்திகாரகன் புதனின் சாதகமற்ற சஞ்சாரமும் உங்களுக்குச் சற்று சிரமத்தினைத் தோற்றுவிக்கலாம். ஞாபகமறதியும், கேள்விக்குரிய சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பதில் சிறு குழப்பமும் தோன்றக்கூடும். தேர்விற்கு முன்னதாக அதிக அளவில் எழுத்துப் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. உங்கள் நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் நீங்கள் கோட்டை விடும் வாய்ப்பும் உண்டு. தேர்வு நேரத்தில் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை தினமும் காலையில் 12 முறை படித்து வர தேர்வின் போது அதிக நன்மைகள் உண்டாகும்.  சின்முத்ராக்ருதி முக்தாபாணி நளினம் சித்தே ஸிவம குர்மஹே. கபர்தினம் சந்த்ரகளாவதம்ஸம் த்ரிணேத்ரமிந்துப்ரதிமானநோஜ்வலம் சதுர்புஜம் க்ஞானதமக்ஷüத்ர புஸ்தாக்னி ஹஸ்தம் ஹ்ருதிபாவயேச்சிவம்.

75 சதவீதம் பேருக்கு சட்ட விழிப்புணர்வே இல்லை...!

இந்தியாவில் 75 சதவீதம் பேருக்கு சட்ட விழிப்புணர்வு இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி வேதனை தெரிவித்தார். சென்னையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி,அரசு, கோர்ட்டு, போலீஸ் போன்ற அனைத்து துறைகளும் தங்களுக்காகத்தான் என்பது மேல்தட்டு வர்க்கத்தின் எண்ணம். இந்த மூன்று துறைகளின் செயல்பாடு சவுகரியமாக இருக்கிறது என்பது நடுத்தர வர்க்கத்தின் மேல்தர மக்களின் கருத்து. ஆனால் நடுத்தரத்துக்கும் கீழ்ப்பட்ட மக்களுக்கு அதிருப்திதான் உள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கும் கீழே ஒரு வர்க்கம் உள்ளது. அவர்கள் சமுதாயத்தால் கைவிடப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளவர்கள். சட்டத்தின் ஆட்சி முழுமையாக நடக்கிறது என்று கூறவேண்டுமானால், இந்த கீழ்த்தட்டு மக்கள் வரை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு சென்றடைந்திருக்க வேண்டும்.இந்தியா சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளில் எழுத்தறிவு 67 சதவீத மக்களுக்குத்தான் கிடைத்துள்ளது. இவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே. உயர் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம்தான். சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் எண்ணிக்கை, ஜனத்தொகையில் மூன்றில் 2 பங்கு உள்ளது. சுதந்திரம் கிடைத்து 75 சதவீத மக்களுக்கு சட்ட விழிப்புணர்வும், சட்டம் பற்றிய அறிவும் இல்லை.

சட்டம் பற்றி தெரிந்தால்தான் ஒவ்வொருவனும் தனக்குள்ள உரிமை பற்றி தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவனும் தனக்குள்ள உரிமை பற்றி தெரிந்துவிட்டால், நாட்டில் சமத்துவம் தலைதூக்கத் தொடங்கிவிடும். கருவாக உருவானதில் இருந்து வயதான பெற்றோராக மாறும்வரை ஒவ்வொருவருக்கும் சட்டத்தின் பாதுகாப்பும் தாக்கமும் உள்ளது. இதை எத்தனை பெற்றோர் தெரிந்துள்ளனர்? நீதி ஒருவேளை தாமதமாகலாமே தவிர, அது கிடைக்காமல் இருக்காது. தற்போது கோர்ட்டுக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்வதை பார்க்கும்போது, நீதியின் மேல் மக்களுக்குள்ள நம்பிக்கை வளர்வது தெரிகிறது. மக்களின் நம்பிக்கையை நீதிபதிகள் காப்பாற்றி வருகின்றனர். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...