|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 June, 2011

இதே நாள்


  •  போர்ச்சுக்கல் தேசிய தினம்
  •  தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் பிறந்த தினம்(1925)
  •  கலிஃபோர்னியாக் குடியரசு மெக்சிகோவிலிருந்து விடுதலையை அறிவித்தது(1846)
  •  சாப் நிறுவனம் தனது முதலாவது ஆட்டோமொபைலை தயாரித்தது(1947)
  •  நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)

Decision tomorrow...?

M Karunanidhi is poised, according to some reports, to yank his six ministers from the UPA government. He has instructed members of his party's core committee to "participate without fail" in a meeting tomorrow - this could be the platform for him to announce his decision. 

Mr Karunanidhi has 18 Lok Sabha MPs. If his ministers do indeed quit, the party is likely to provide outside support to the UPA.The President of the DMK expressed his resentment over the arrest of his daughter, Kanimozhi, in connection with the 2G telecom scam. Earlier this week, he attributed her arrest publically to the "orders or complacency of the centre." On May 20, Kanimozhi was denied bail by a Delhi court that's trying the 2G scam. The judge said the Kanimozhi's political clout could influence the investigation into what's reported to be India's largest-ever scam. Kanimozhi is a Rajya Sabha MP. She's been accused of accepting a Rs. 214-crore bribe in conspiracy with A Raja, who is also from the DMK and served as Telecom Minister till late last year. Mr Raja was arrested in February - like Kanimozhi, he is in Tihar Jail.

A third DMK leader, Dayanidhi Maran who is currently Textiles Minister, is also being investigated by the CBI for his role in the same scam. Mr Maran is Mr Karunanidhi's nephew and served as Telecom Minister before Mr Raja.  He has been accused of coercing the former owner of Aircel to sell the company at a massive discount to another industrialist close to Mr Maran. The new owner of the company invested close to Rs. 800 crores soon after in Sun TV, a company owned by Maran's brother. The CBI is determining whether this was a kickback for Mr Maran.  

The DMK's alleged entanglement in the 2G scam is being spotlighted when the party has been battered in its home state. In the recent elections in Tamil Nadu, it delivered one of its worst-ever performances. The DMK had contested the elections with the Congress, which had pressured Mr Karunanidhi into ceding a considerable number of constituencies to Congress candidates. The disastrous results weighed heavily on the partnership.
 

ரஷ்யாவில் தமிழ் திரைப்பட விழா!


உலகெங்கிலும் தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கனடா, நார்வே உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே பங்கு பெறும் திரைப்பட விழா நடக்கிறது.

வரும் ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் ரஷ்யாவில் உள்ள உக்ளிச் நகரில் நடைபெற இருக்கும் இந்த தமிழ் திரைப்பட விழாவில், ‘எந்திரன்’, ‘சிங்கம்’, ‘அங்காடிதெரு’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘களவாணி’, ‘மதராச பட்டினம்’, ‘மைனா’, ‘நந்தலாலா’, ‘பையா’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ உள்ளிட்ட 11 தமிழ் படங்கள் ரஷ்ய மொழியில் சப்-டைட்டில் போடப்பட்டு அங்குள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன. இதில் ஏராளமான சினிமா கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான அருண் பாண்டியனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்."தமிழ் திரைப்படங்கள் தயாரிக்க தேவையான படப்பிடிப்பு இடங்களும், ஸ்டுடியோக்களும் ரஷ்யாவில் நிறைய உள்ளன. படப்பிடிப்பு தளங்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது, தங்கும் விடுதிகளில் 40 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. இந்த வசதியை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் அனைத்து தமிழ் படங்களும் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்ய ரஷ்ய கலாசார மையம் உதவியாக இருக்கும்," என்றார் அருண்பாண்டியன்.

Tamil cinema is truly going places this year, be it on the national front or internationally. To initiate and promote Tamil films in Russia and other CIS countries, various organizations in Russia have come together thus bringing about a Tamil Film Fest there.

In commemoration of the 64th anniversary of establishing diplomatic relations between Indian and Russia and also Indian Independence Day celebrations, there will be an Indian Film Festival that will be held in the Uglich Region in the southern part of Russia.

It is informed that the event will take place in August and for three dates although an official confirmation is yet to be received on the dates.Eleven movies have been selected, among those that released in 2010; these movies will be screened during the three days.
The movies are:
Angadi Theru
Boss Engira Baskaran
Enthiran
Kalavani
Madraspattinam
Mynaa
Nandalala
Paiyaa
Thenmerku Paruva Katru
Vinnaithandi Varuvaya
Not just that, these movies will be screened with Russian sub-titles! Awards will be given away to Indian delegates by the Russian Government at the end of the event.

Sexiest Women in the World 2011

ஓவியர் எம்.எஃப் ஹூசைன் மரணம்!

பிரபல ஓவியர் எம்.எஃப் ஹூசைன் (95)  காலமானார்.  கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லண்டனில் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி 2.30  மணியளவில்  மரணமடைந்தார்.

பாலிவுட் நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கி வந்த உசேன்,  சரஸ்வதி உட்பட இந்து கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் இந்து அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். பாரத மாதாவின் படத்தையும் நிர்வாணமாக வரைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் ஹூசைனுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தை திரும்பப் பெற்றார். பின்னர் மன்னிப்பும் கோரிaனார்.

இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளும், கொலைமிரட்டல்களும் அதிகரித்ததால் 2006-ல் நாட்டைவிட்டு வெளியேறினார். 2010-ம் ஆண்டு அவருக்கு கத்தார் குடியுரிமை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டார். இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக இப்போதும் கைது வாரண்டுகள் உள்ளன.1995-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1973-ல் பத்ம பூஷண் விருதும், 1991-ல் பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1986-ல் மாநிலங்களவை எம்பியாகவும் நியமிக்கப்பட்டார்.

ஓவியர் உசேன் காலமானது தேசத்திற்கு பேரிழப்பு என்று பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.உசேன் மறைந்தது ஓவிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல்  இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் உசேன் மறைவு ஓவிய உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்று சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

பான் இந்தியா அனுமதி பெற்ற இந்தியாவின் முதல் கூட்டுறவு வங்கி!

இந்தியாவின் எந்தபகுதியிலும் வங்கிச் சேவையை மேற்கொள்வதற்கான உரிமையை மகாராஷ்டிராவை த‌லைமையிடமாகக் கொண்டு இயங்கும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியான சரஸ்வத் பேங்க் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த சரஸ்வத் பேங்க் தலைவர் ஏக்நாத் தாகூர் கூறியதாவது, இந்த அனுமதியை பெற்றதன் மூலம் பான் இந்தியா அனுமதி பெற்ற இந்தியாவின் முதல் கூட்டுறவு வங்கி என்ற பெருமை‌யை தாங்கள் பெற்றுள்ள‌ோம். 93 ஆண்டுகள் ப‌ழமை வாழ்ந்த தங்கள் வங்கி, விரைவில் ‌நாட்டின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் கிளைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் தலைநகரான டில்லியிலும், அதனைத் தொடர்ந்து நாட்டின் மற்ற பகுதிகளிலும் கிளைகளை அமைக்க உள்ளோம். தற்போது தங்கள் வங்கி சார்பில் 216 க‌ிளைகள் செயல்பட்டு வருவதாகவும், 2016ம் ஆண்டிற்குள், இதனை 500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நாட்டில் உள்ள முன்னி கூட்டுறவு வங்கிகளுள் அதிகளவிலான வர்த்தகச் சேவையை தாங்கள் தான் புரிந்து வருகிறோம். தங்களது வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 28 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. எங்களுக்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் மொத்த வர்தத்கம் ரூ. 27,800 கோடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கோர் பேங்கிங் ‌சொல்யூசன் சேவைக்காக, சரஸ்வத் பேங்க், ரிலையன்ஸ் ஏடிஏஜியுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழருக்காக பல நாடகங்கள் நடத்தினார் கருணாநிதி: ஜெயலலிதா !

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய நேரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல வகையான நாடகங்களை நடத்தினார் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.  இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரையில் அந் நாட்டின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா இத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அதன் மீது உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த பிறகு முதல்வர் அளித்த பதில் உரை:  இலங்கைக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, சுயாட்சி அந்தஸ்து, தனி ஈழம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1980-களில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்ததை அனைவரும் அறிவீர்கள்.

தமிழகத்தில் அதிமுக உள்பட எல்லா அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சம உரிமை வழங்கப்பட வேண்டும் என விரும்பினர். தார்மிக ஆதரவும் அளித்தனர்.
 இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்டனர். இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம், கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.  1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது என் வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல், ராஜீவ் கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ல் இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக மஹிந்த ராஜபட்ச பொறுப்பேற்றார். 2006-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. அரசிற்கு மு. கருணாநிதி தலைமை வகித்தார்.

மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது.  இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.

 2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர்ப் பயிற்சி அளித்ததாகவும் இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உள்பட பல ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.
 இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம், 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும் இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன். ஆனால், கருணாநிதி அதைச் செய்யவில்லை.
 மாறாக, அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம் பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என பல்வேறு வகையான நாடகங்கள்தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நடத்தப்பட்டன.

இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று, "போர் நிறுத்தம் ஏற்படும்வரை உண்ணாவிரதம்' என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் கருணாநிதி. மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் உண்ணாவிரதம் என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர்.

பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு வெளியே வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பி வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும் தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், கனிமொழி உள்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிரித்துப் பேசி விருந்துண்டு பரிசுப் பொருள்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழினப் பாதுகாவலர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது "உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது' என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால்தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.  முந்தைய அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள், குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது, மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருள்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது, உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்,   மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 சில உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபட்சவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக கூறினார்கள். ஆனால் அப்படி அறிவிக்கவில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை. ராஜபட்சவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை.  அதனால்தான் இந்தத் தீர்மானத்தில், "இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும்' என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம் என முதல்வர் 

யாருக்கு நல்ல திட்டம் பழ.கருப்பையா!

புதிய அரசால் கைவிடப்பட்ட திட்டங்கள் நாட்டுக்கு நல்லத் திட்டங்களா, அல்லது ஒரு குடும்பத்துக்கு நன்மை பயக்கும் திட்டங்களா என்று துறைமுகம் தொகுதி அதி.மு.க. எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கேள்வி எழுப்பினார்.  பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியது:

தனியாருக்குச் சொந்தமான கேபிள் டி.வி. நிறுவனத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இது கடந்த ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டம்தான். அதை கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், தன்னுடைய குடும்ப நிறுவனம் என்பதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்தார்.  தனது குடும்ப நன்மைக்காக கருணாநிதி சட்டங்களை உருவாக்கியபோதும், ரத்து செய்தபோதும் தோழமைக் கட்சிகள் அதற்குத் துணையாக இருந்தன.
 இப்போது, ஜெயலலிதாவின் அரசு கேபிள் டி.வி.யை நாட்டுடைமையாக்கி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்க இருக்கிறது.

இலவச கலர் டி.வி. திட்டம்: கருணாநிதியின் குடும்பத்தினர் ஒரு கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.200 வசூல் செய்தார்கள். ஒன்றரை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை போவோர், வருவோருக்கெல்லாம் விரட்டி, விரட்டி கொடுத்தார்கள். இதற்கு அரசுப் பணம் பல ஆயிரம் கோடி விரயம் செய்யப்பட்டது.  ஒரு கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.200 என்றால், ஒன்றரை கோடி கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.300 கோடி வருவாய் கிடைக்கும். அப்படியானால், ஒரு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி கிடைக்கும்.

 நல்லத் திட்டங்களையெல்லாம் கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்களே, இது நாட்டுக்கு நல்ல திட்டமா, அல்லது அவர்களின் குடும்பத்துக்கு நல்லத் திட்டமா?  அடுத்த ஆட்சிக் காலத்துக்கும் சேர்த்து திட்டம்: எந்த ஒரு ஆட்சியும் தன் ஆட்சிக் காலத்துக்கு மட்டுமே திட்டமிடும். ஆனால், கடந்த தி.மு.க. அரசு, தன்னுடைய ஆட்சியில் எஞ்சியிருந்த ஓராண்டு காலத்துக்கு வீடு வழங்கும் திட்டத்தைப் போடாமல், அடுத்த ஆட்சிக் காலத்தையும் சேர்த்து 6 ஆண்டுகளுக்கு 21 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்பதாக விளம்பரம் செய்தனர்.
 ஓர் அரசாங்கம் அந்த ஆண்டில் கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு மட்டுமே அட்டைகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. அரசு 19 லட்சம் அட்டைகள் வழங்கியது.

அந்த அட்டைகளில் "த' (த என்பது தகுதி உடையவர்கள்) என்ற எழுத்து சில ஆயிரம் அட்டைகளிலும், "நி.த.' (நிபந்தனை தகுதி உடையவர்கள்) என்ற எழுத்து பல லட்சம் அட்டைகளிலும் பொறித்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
 "த' அரசு நிலங்களில் வசிப்பவர்கள். "நி.த.' தனியார் நிலங்களிலும், கோயில் நிலங்களிலும் வசிப்பவர்கள். தடையின்மைச் சான்றிதழை "நி.த.' அட்டையைப் பெற்றுள்ளவர்கள் அவர்களாகவே பெற்றுவர வேண்டும்.
 இது ஒரு காலத்திலும் நடைபெறாது. எந்தக் கோயிலும், தனியாரும் அவர்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கமாட்டார்கள். ஆனால், அவர்களை ஏமாற்றும் பொருட்டு "நி.த.' என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இப்படி மக்களை மோசடியாக நம்ப வைக்கின்ற வேலையை ஒரு அரசே செய்யுமானால், அந்த அரசின் திட்டம் எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள்! இத்தகைய மோசடி திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கைவிடுவது நியாயமா, நியாயமில்லையா?  ஆனால், இந்த அரசு மக்களைக் கடனாளியாக்காமல், அரசுப் பொறுப்பேற்று ரூ.1.8 லட்சம் செலவில் 300 சதுரஅடி அளவில் பசுமை வீடுகளைக் கட்டித்தர இருக்கிறது. இது வரவேற்கத்தக்கதா, இல்லையா? என்றார் பழ.கருப்பையா.

இலங்கை மீது பொருளாதாரத் தடை ஏன்? முதல்வர் விளக்கம்

யார் சொன்னாலும் கேட்காமல் இருக்கும் இலங்கையை வழிக்குக் கொண்டு வர ஒரே வழி பொருளாதாரத் தடைதான் என்பதால் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை புதன்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.  அப்போது பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஏ. சவுந்திரராஜன், பொருளாதாரத் தடையால், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, அப்பாவிப் பொது மக்கள்தான் இன்னலுக்கு ஆளாவார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

 முந்தைய அரசு இவ் விஷயத்தில் கடிதங்கள் எழுதுவது என்ற போக்கை கடைபிடித்து "அஞ்சல் வழி அரசாக' இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 உறுப்பினர்களின் கருத்துகளுக்குப் பதில் அளித்த முதல்வர் இதுதொடர்பாக கூறியதாவது: பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை செüந்தரராஜன் இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார்.

இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான முறைதான்.

 இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

மாறன் கூற்றைப் பொய்யாக்கும் பிஎஸ்என்எல் கடிதம்! - அடுத்த அதிரடி தினமணி!

என்னுடைய பெயரிலோ அல்லது 3/1 போட் கிளப் அவின்யு வீட்டிலோ 24371500 என்ற எண்ணுள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி மட்டுமே உள்ளது. 323 இணைப்புகள் உள்ளன என்று "தினமணி' நாளிதழில் வந்த செய்தி தவறானது. உண்மையை ஏன் அவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து கேட்டு பெற்றிருக்கக் கூடாது ?'' என்று ஜூன் மாதம் 2ம் தேதி தயாநிதி மாறன் ஏதோ தான் தவறே செய்யாதது போலவும் தம்மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

 பி.எஸ்.என்.எல். இணைய தளத்திலேயே தயாநிதி மாறன் வீட்டில், 24371500 என்ற இணைப்பு தலைமைப் பொது மேலாளர் பெயரிலும், 24371515 என்ற இணைப்பு தயாநிதி மாறன் பெயரிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.லின் 2009ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதியிட்ட கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அளிக்கப்பட்ட 24371500 என்ற தொலைபேசி இணைப்புதான் தயாநிதி மாறன் வீட்டில் உள்ளது என்பது பொய் என்பதை சுட்டிக் காட்டுகிறது.  பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து பெறப்பட்ட மேலும் சில புதிய தகவல்கள் தயாநிதி மாறனுக்கு எதிராக அமைந்துள்ளன. அரசு கணக்கில், 323 இணைப்புகளுடன் ரகசிய தொலைபேசி இணைப்பகம் அவரது வீட்டில் இயங்கியதற்கான மறுக்கமுடியாத பல புதிய ஆதாரங்கள் பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து கிடைத்துள்ளன. தயாநிதி மாறன் கூறுவது அனைத்தும் பொய் என்பதை பி.எஸ்.என்.எல் சென்னை சர்க்கிளின் 21-6-2007 தேதியிட்ட அலுவலக கடிதம் உறுதிப்படுத்துகிறது.

2007ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்தார். இரு வாரங்களுக்கு பிறகு, பி.எஸ்.என்.எல் லுக்கு மாறன் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 24371515 மற்றும் 24371616 இணைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதான், பி.எஸ்.என்.எல். உண்மையை வெளிப்படுத்த உதவியது. 323 இணைப்புகள் உள்ளது என்பதுடன், ரகசிய இணைப்பகம் செயல்பட்டதையும் அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

 முதலாவதாக: 24371515, 24371616 ஆகிய எண்கள் குறித்த தகவல்கள், பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இல்லை. இந்த எண்கள் குறித்த தகவல்களை மாம்பலம் இணைப்பகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும் '' என பி.எஸ்.என்.எல். அளித்த முதல் கடிதம் தெரிவித்தது.

ஏன் இந்த இரண்டு இணைப்புகளும் மாம்பலம் இணைப்பகத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் கிடையாது. பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இந்த எண்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பதே மோசடி என்பதை உணர்த்துகிறது. இணைப்பக முறையில் இருந்து அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது பொருளாகிறது. 2437 என்ற பொதுவான இணைப்பக கோடு கொண்ட அவை ரகசிய இணைப்பகத்தில் இடம் பெற்றன.

இதே போல, தொலைபேசி வாடிக்கையாளருக்குஏதாவது தகவல் தேவைப்பட்டால், அவர், ""1191'' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்வார். ஆனால், தயாநிதி மாறனின் இணைப்பகத்தில், 234711911க்கு வரும் அனைத்து அழைப்புகளும் 24311191 க்கு தானாகவே மாற்றப்பட்டு விடும். இது 2437 என்ற ரகசிய இணைப்பகம் செயல்படுவதை பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான் 
 இரண்டாவதாக : பி.எஸ்.என்.எல்லின் அந்தக் கடிதம், 300 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் உள்ளதை ஒத்துகொண்டு,மாறனின் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 24371515 மற்றும் 24371616 (அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டவை) ஆகிய இரண்டும், 300 எக்ஸ்டென்ஷன்கள் உள்ள 24371500 என்ற முக்கிய எண்ணின் துணை எண்கள் ஆகும் என்பது தெரிய வருவதாக அக்கடிதம் கூறுகிறது. அந்த முக்கிய எண் 24371500 இணைப்பு, 3/1 போட் கிளப் சாலையில், தலைமைப் பொது மேலாளர் என்ற பெயரில் உள்ளதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது. தயாநிதி மாறன், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி 5 வாரங்களுக்கு மேல் இந்த மோசடி தொடர்ந்துள்ளது என்றும் அக்கடிதம் உணர்த்துகிறது. இக்கடிதம் நான்கு முக்கிய உண்மைகளை உறுதிப்படுத்துகிறது.

ஒன்று, 24371500 என்ற எண்ணுக்குள் 300 இணைப்புகள் கொண்ட சட்ட விரோத இணைப்பகம் மறைக்கப்பட்டிருந்ததையும், அதில் 24371515, 24371616 எண்கள் சேர்ந்திருந்ததையும் அது உறுதிப்படுத்துகிறது. இரண்டாவது, அந்த மோசடி இணைப்பகம், தலைமைப் பொது மேலாளர் பெயரில் செயல்பட்டது. அது மாறனின் பெயரில் இல்லை. மூன்றாவது, அந்த மோசடி இணைப்பகம், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி வரை செயல்பட்டுள்ளது. நான்காவது, இந்த இணைப்பகத்திற்கான செலவுகளை அரசே ஏற்றுள்ளது - அதாவது ""டிடிஐஎஸ்டி (துறை) பிரிவில் '' என்ற கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றன. 

 323 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் திருட்டுத்தனமாக மாறன் வீட்டில் இருந்தன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 அந்த இரு எண்களையும், கேட்டு கொண்டபடி, இலவச இணைப்புகளிலிருந்து, கட்டண முறையிலான நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டுக்கு மாற்ற, "" 24371500 '' என்ற முக்கிய எண் மறைக்கப்பட்டு, 24341515, 24371616 சாதாரண இணைப்புகளாக, எஸ்டிடி வசதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டில் அளிக்கப்படும் என்று அக்கடிதம் தெரிவிக்கிறது. ஏன் 24371500 ஐ மறைக்க வேண்டும் ?  இது கூடவா தெரியவில்லை? 24371500 முதல் 24371799 வரை உள்ள 300 துணை இணைப்புகளைக் கொண்ட 24371500 முக்கிய எண் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.

இரண்டாவதாக அக்கடிதம் மாறனின் வீட்டில் மேலும் 23 இணைப்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மற்ற இணைப்புகள், தொழில்நுட்ப வார்த்தையில் கூறினால், "பிரா' இணைப்புகள் ஆகும். ""7 "பிரா' இணைப்புகளும், போட் கிளப்பில், சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் பெயரில் 2 சாதாரண இணைப்புகளும் இருந்ததை அந்தக் கடிதம் கூறுகிறது''.

 ஒவ்வொரு "பிரா' லைனும் ஒரே சமயத்தில், குரல், ஆவணங்கள்,விடியோவை அனுப்பும் திறன் கொண்டவை. எனவே, 7 "பிரா' இணைப்புகள் என்பது, 21 இணைப்புகள் ஆகும். 21 இணைப்புகளுடன், 2 சாதாரண இணைப்புகள், 24371500 எண்ணில் உள்ள 300 இணைப்புகள் ஆக மொத்தம் 323 இணைப்புகள் (ஐஎஸ்டிஎன்) திருட்டுத்தனமாக மாறனின் வீட்டில் செயல்பட்டுள்ளன. இதைதான், சிபிஐ தனது அறிக்கையில் வெளிக்கொணர்ந்துள்ளது. 323 இணைப்புகள் கொண்ட இணைப்பகத்தையே மாறன் மறைத்து விட்டார் என்பதை "தினமணி' நாளிதழ் அம்பலப்படுத்தியது. அவ்வளவே!
 பி.எஸ்.என்.எல்.லின் கடிதத்தின் மூலம்,மாறன் தவறு செய்துள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாகி விட்டதே, இனிமேலாவது தயாநிதி மாறன், தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தலைகுனிவை ஏற்றுக் கொள்வாரா? இல்லை, வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவமானங்களுக்குப் பிறகுதான் ஏற்றுக் கொள்வாரா?

உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும். அவரவர் பாவம் அவரவருக்குத்தான் என்றெல்லாம் தமிழில் பல பழமொழிகள் உண்டு. தயாநிதி மாறன் என்பதால் இவையெல்லாம் மாறிவிடுமா என்ன?

கச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்க்க பேரவையில் தீர்மானம்

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரை:

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன். தீர்மானம்:

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.  இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.

டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார்.  ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில்,  வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல்,  1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.
இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி,  முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் முதல்வராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன். இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

2006-ஆம்  ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை.  கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.1960-ஆம்  ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.  அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.  மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு வங்க முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

1974-ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர்  கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார்.

23.7.1974-ல் மாநிலங்களவையில் திரு கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும் போது, “… I would like to get a clarification in this regard from the Hon. Minister.  Just now I heard the views expressed by my Hon’ble friend,  
Mr. S.S. Mariswamy, D.M.K.,that on the agreement reached between the government of India and the Sri Lanka government the government of Tamil Nadu was not properly informed.
      … There are two news items which appeared in the Hindu.  One was on June 27.
    “When pressmen asked the Tamil Nadu Chief Minister  
    Mr. Karunanidhi, for his reaction to the agreement on Kachatheevu, he said he would prefer to wait until after the details had been announced. Mr. Karunanidhi said that Foreign Secretary,
    Mr. Kewal Singh, had met him last week during his visit to Madras and apprised him on the situation. Mr. Kewal Singh had told him that a favourable condition existed for agreement on Kachatheevu.” 
      On the 29th June, the Chief Minister stated the following to the Press:- 
    “It was regrettable that before signing the agreement, the Centre had not invited him or any representative of the State Government for consultation.  The Prime Minister had not even chosen to ascertain the views of the leaders of parliament on this vital question”, 
என்று தெரிவித்து, இதில் எது சரி என்று கேட்கிறார். 
இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள் we know it for a fact that the State was consulted என்று கூறி உள்ளார்.

இது குறித்து 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு குறித்து கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா?” என்று ஆலடி அருணா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை கேட்ட போது, கருணாநிதி, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் அவர்களை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது.  கச்சத்தீவு இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் அவர்கள் பேசியதை எடுத்து சொல்கிறார்.

      “… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today that very detailed consultations had been held with Chief Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the issue of Kachatheevu. The consultations were held at least twice”
      அதற்கு விளக்கம் அளித்து, மு. கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று குறிப்பிடும் போது, “May I say, because others might pick up –  
I would like to say categorically, that we had very detailed consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து, “Had he agreed?” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார். தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.

முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி.  சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான்  கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.

நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன்.

இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central and State Governments” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார்.

சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record--க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்து எண். 8-ன்படி, நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது.

கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி. 1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு முன், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கச்சத்தீவு குறித்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

தேசியவாத படை பாபா ராம்தேவ்...!


Will train nationalists, not Maoists: Baba Ramdev:

Defending his statement about building an army to tackle any future police crackdown, yoga guru Baba Ramdev on Thursday said his statement was taken in the wrong context and that he was not training Maoists, but nationalists.

"I am not training Naxals or Maoists but people who will fight for this country," Ramdev told reporters in Haridwar. "People should not take my statement in the wrong context." "Twenty youths from each region (of the country) will come forward for the fight against corruption," he said.

In a statement released in New Delhi, Ramdev clarified that a force of 11,000 people he intended to build would not be an armed force but a group of "non-violent nationalist youths" capable of defending themselves and people from corruption and the evil system. The yoga guru said that the media's description of his proposal had created confusion.

"We neither support nor intend to take law in our hand. We don't mean either training of guns, bombs or practice of killing someone or being violent at any point of time or situation. Our Constitution is supreme," he said. "But we have a right to self-defence. Only a strong person can do it. We will continue to defend ourselves, society and the nation in a peaceful and non-violent yet proven method used by Mahatma Gandhi in the freedom struggle," he said.

Ramdev's announcement on Wednesday that "dedicated young men and women will be imparted 'shaastra' (vedic education) and 'shastra' (arms training)" drew a sharp reaction from the government. Union home minister P Chidambaram said that Ramdev had "exposed his true colours and intentions". "Let him do so, and the law will deal with that," he said.

On Thursday, the yoga guru said that "we should refer to the word in the right context and as per our ancient vedic language". He said, "It has been our ancient tradition to worship both 'gyan' (knowledge) and 'shakti' (power). We have been advocating and propagating to build a strong nation through our strong physical, mental, intellectual and spiritual power by being 'yogi' and 'yoddha'."

Ramdev described 'shaastra' as knowledge and 'shastra' as power. 

ஊழலுக்கு எதிராக தேசியவாத படையை உருவாக்க விரும்புகிறேன் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.ஊழலுக்கு எதிராக 11 ஆயிரம் பேர் கொண்ட படையை உருவாக்கப் போவதாக நான் கூறிய கருத்தை வேறு கோணத்தில் பிரசாரம் செய்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

நான் தீவிரவாதிகளை உருவாக்கப் போவதாக கூறவில்லை. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை உருவாக்குவேன் என்றும் கூறவில்லை. நாட்டு நலனுக்காக தேசியவாதப் படையை அமைப்பேன் என்றுதான் தெரிவித்தேன். இதுகூட சுய பாதுகாப்புக்காகவே.

ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தடுக்க முயலும் போலீஸார் மற்றும் சமூகநலனுக்கு எதிரானவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு.

பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள துணிந்துவிட்டால், யாரும் அவர்களை துன்புறுத்த முடியாது. அதுபோல், ஆண்களும் தயாராகிவிட்டால், ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது போன்ற எந்த சம்பவத்தையும் எதிர்கொள்ள முடியும்.

இதுதொடர்பாக நான் தெரிவித்த கருத்துகளை மக்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். வேதம் என்றால் அறிவு. சஸ்திரம் என்றால் ஆயுதம், தற்காப்பு என்று பொருள். (வேதம், ஆயுதம் ஆகிய இரண்டிலும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று நேற்று அவர் கூறியிருந்தார்.)

நான் கூறிய கருத்தை திரித்துக் கூறி எனக்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர்.  ராம்தேவ்1

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...