|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 December, 2012

Pizza Tamil full Movie Online


Zero Kilometers Comedy Short Film


வேதனை!

ஆந்திர மாநிலம் . ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நார்வேயில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆஸ்லோ கோர்ட் மகனை கொடுமை படுத்தியதாக தந்தை சந்திரசேகருக்கு 18 மாத சிறையும் , தாயார் ணஅநுபமாவுக்கு 15 மாத சிறையும் விதித்து தீர்ப்பளித்தார்.நார்வே அரசின் சட்ட திட்டங்கள் விஷயத்தி்ல் மத்திய அரசு தலையிட முடியாது என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கை விரித்து விட்டது

தமிழ்ப்படுத்துவதாக நினைத்து தமிழை தப்பு, தப்பாய் படுத்தி!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அலமேலு மங்கை கோவிலுக்கும், திருமலையில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கும் தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ள இடங்களில் தமிழிலும் போர்டு எழுதி வைத்துள்ளனர். குளிர்ந்த குடிநீர் என்று எளிமையாக சொல்லியிருக்க வேண்டியவர்கள், ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழ்ப்படுத்துவதாக நினைத்து தமிழை தப்பு, தப்பாய் படுத்தி எடுத்துள்ளனர்.

ஊழல் கறை படிந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு தடை!

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) இன்று தடை விதித்தது.இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐ.ஒ.ஏ.,) நாளை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு முன், தலைவர், துணைத் தலைவர், பொருளாளராக அபய் சிங் சவுதாலா, வீரேந்திர நானாவதி, ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். பொதுச்செயலராக காமன்வெல்த் ஊழலில் சிக்கி, சிறை சென்ற லலித் பனோட் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஊழல் கறை படிந்த கல்மாடி, வி.கே.வர்மா, லலித் பனோட் ஆகியோர் ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) எச்சரித்தது. தேர்தலை ஐ.ஒ.சி., விதிப்படி நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில், ஐ.ஒ.ஏ.,யை தற்காலிகமாக "சஸ்பெண்ட்' செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் எச்சரித்தது.
இந்நிலையில் இன்று சுவிட்சர்லாந்தின் லாசனேயில் ஐ.ஒ.சி.,யின் தலைமை அதிகாரிகள் கூட்டம் துவங்கியது. இதில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் விதிகளை ஏற்காத, காரணத்தினாலும், அருசின் தலையீடு காரணமாகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக இந்திய வீரர்கள் இந்திய கொடியுடன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது தடை செய்யப்படும் எனவும், இந்தியாவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நிதியுதவி ஏதும் வழங்காது என கூறப்படுகிறது.இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் கலந்து கொள்ள முடியாது. ஏற்கனவே ஈராக், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

தடை எதிர்பாராதது: மத்திய அரசு : இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து , தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்த தடை, விளையாட்டுத்துறைக்கு எதிர்பாராதது என்றும், ஐ.ஓ.ஏ., தேர்தல் தொடர்பாக மத்திய அரசு ஐ.ஓ.சி.,க்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் இதற்கு பதில் கிடைக்கவில்லை

பார்த்ததில் பிடித்தது!

இல்லாதை இருப்பதாகவே சொல்வது தான் தினமலம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...