|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 March, 2013

கவனிப்பே அவசியம்


நமது குடும்பத்தினரோ, உறவினரோ, நண்பரோ நம்மிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதனை காது கொடுத்துக் கேட்க வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் அவரது பிரச்னை பற்றி கூறும் போது அதனை உதாசீனப்படுத்தக் கூடாது. குடும்பத்தில் தினமும் ஒரு வேளையாவது அனைவரும் அமர்ந்து ஒன்றாக பேசி சிரித்து உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பல மருத்துவக் கட்டுரைகளும், மன நல நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். இதற்குக் காரணம் இருக்கிறது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச நமக்கெல்லாம் இப்போது நேரம் கிடைப்பதில்லை. ஒரு வேளை உணவையாவது சேர்ந்து உண்ணும் போது, ஒருவரிடம் ஏற்பாடும் மாற்றங்களை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும்.எதிர்மறைச் சிந்தனைகள் எப்போதுமே உற்சாகத்தை அளிப்பதில்லை. அதுபோலத்தான் மனச்சோர்வு அடைந்தவர்களுக்கு எதிர்மறைச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும். சிலர் எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார்கள். அது இயல்பாக இருக்கலாம். ஆனால், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென எதிர்மறையாக பேச ஆரம்பித்தால் எங்கேயோ பிரச்னை இருக்கிறது என்பதை குடும்பத்தார் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தை சகோதரியோ, சகோதரனோ நம்மிடம் கூறி, இவ்வாறு எனக்கு ஒரு பிரச்னை உள்ளது. அதனை பெற்றோரிடம் கூறி விடாதே என்று சொன்னால்.. அங்கு ரகசியத்தைக் காப்பதா அல்லது சகோதரி அல்லது சகோதரனைக் காப்பதா என்ற கேள்வி எழும். இதற்கு பதில் சகோதரி அல்லது சகோதரனைக் காப்பதே முக்கியம் என்பதாகும். எனவே, உடனடியாக இதனை பெற்றோரிடம் தெரியப்படுத்தி, நமது சகோதரி அல்லது சகோதரியை பிரச்னையில் இருந்து விடுபட வைக்க வேண்டும். இதே விஷயம் நண்பர்களுக்கும் பொருந்தும், நமது நண்பனைப் பற்றி அவர்களது பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியது அவர்களது உரிமை. எனவே அதனை தாராளமாக பெற்றோரிடம் கூறி பிரச்னையில் இருந்து விடுபட பெற்றோரின் உதவியை நாடலாம்.

எதுவாக இருப்பினும், ஒரு பிரச்னை உங்களிடம் வரும் போது அதனை காது கொடுத்துக் கேளுங்கள். ஒருவர் சாதாரணமாகக் கூறும் செயலுக்குப் பின் மிகப் பெரிய விஷயம் நடந்திருக்கலாம். அவர்கள் கூறும் விதத்தை நீங்கள் கவனமாகக் கேட்டால் தான் அதன் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும்.எனவே குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னையை கவனமாகக் கேட்டு அதற்கேற்ற தீர்வினை உடனடியாகக் காண முயலுங்கள். பெரும்பாலும், ஒருவர் தனது பிரச்னைகளை கவனித்துக் கேட்கிறார் என்பதே, பிரச்னைக்குள்ளானவர்களுக்கு பலம் சேர்க்கிறது. மேலும், அதற்கான தீர்வினைக் காண நீங்கள் முயலுவது அவர்களை மேலும் நம்பிக்கைக் கொள்ள வைக்கும். எனவே, நம்முடன் இருப்பவர்களில் மனச்சோர்வடைந்தோருக்கு உதவுவோம்.. மனநலத்தைக் காப்போம்..

அழி(ந்/த்)த‌ தகவல்களை மீண்டும் பெற உதவும் மென்பொருள்!


நம்மிடம் 3G மற்றும் GSM போன்கள் இருந்தால் அவற்றின் சிம் கார்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக் கூடிய வசதிகள் செய்ய‍ப்பட்டி ருக்கும் அந்த சிம் கார்டில் சேமித்த‍, PHONE BOOK, SMS மட்டுமல்ல‍ CALLHISTORY போன்ற வற்றை நாம் தெரிந்தோ அல் ல‍து தெரியாமலோ அழித்(ந்)திருந்தா ல் இந்த Simcard Recovery 3.0 இந்த மென் பொருளை நாம் பயன்படுத்துவ தன் மூலம் மீண்டும் அவற்றை மீட்க முடியும். இவ்வ‍ளவு ஏன் இந்த மென் பொருளை பயன்படுத்தி நாம் கடைசி யாக அழித்த இரண்டு தகவல்களைக் கூட பெற முடியும். மேலும் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனை த்து தகவல்களையும் மீண்டும் பெறும் வசதியுண்டு.

ஆனால் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்காது, இது கட் ட‍ண‌ மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை தற்காலிகமாக பயன் படுத்தும் விதமாக Trail Version உள்ள‍து. இவற்றை பயன் படுத்தி, இதன் பயன்பாட்டை ஆராய்ந்து இந்த மென்பொருளை விலைக்கு வாங்கிக் கொள்ள‍லாம். நீங்கள் தரவிறக்கம் (Download) செய்ய‍வேண்டிய மென்பொருள் (இந்த வரியினை கிளிக்செய்க)  http://www.mediafire.com/?skyx0y79qamp65k

அவென்யூ படும்பாடு?


சின்ன சின்ன வார்த்தைக்கு கூட பெரிய அளவில் தடுமாறுவது நம்மாளுகளாகத்தான் இருக்கும்.,அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் எழுதப்பட்ட வழிகாட்டி பலகையில் தமிழும்,ஆங்கிலமும் தடுமாறுது..

2011-2012ம் ஆண்டில் 5.21 லட்சம் கள்ள நோட்டுகளை மத்திய வங்கி கண்டுபிடித்துள்ளது!

 
ஏடிஎம் மெஷின்களில் இருந்து கள்ள நோட்டு வந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் பொறுப்பேற்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவிருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது உள்ள சட்டப்படி யார் கையில் கள்ளநோட்டு உள்ளதோ அவர்கள் தான் அதற்கு பொறுப்பு ஆகும். இந்த சட்டத்தை மாற்ற அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஏடிஎம் மெஷின்களில் இருந்து கள்ளநோட்டுகள் வருவதாக வங்கிகளுக்கு புகார்கள் வந்து குவிகின்றன. ஏடிஎம் மெஷினில் இருந்து கள்ளநோட்டு வந்தாலும் அதை வங்கி பறிமுதல் செய்வதால் வாடிக்கையாளருக்கு தான் நஷ்டம். இது போன்ற சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் மீது கருணை காட்டுமாறு வங்கி மேனேஜர்களை கேட்டுக் கொண்டுள்ளோம். ஏடிஎம் மெஷினில் பணத்தை போடும் முன்பு அவை நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை வங்கிகள் கண்டறிய வேண்டும் என்றார். கடந்த 2011-2012ம் ஆண்டில் வெவ்வேறு மதிப்புள்ள 5.21 லட்சம் கள்ள நோட்டுகளை மத்திய வங்கி கண்டுபிடித்துள்ளது. தற்போதுள்ள சட்டப்படி கள்ளநோட்டு கண்டுபிடிக்கப்பட்டால் அது குறித்து உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இது போன்ற கள்ளநோட்டு விவகாரங்களை விசாரிக்க மாவட்டம் தோறும் ஒருங்கிணைந்த காவல் நிலையங்கள் அமைக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசின் துணையோடு ரிசர்வ் வங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வங்கி கிளைகள் அல்லது கருவூல அலுவலகங்களில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்

வாயிலிருந்து நோய்த் தொற்று!

 
பிறந்த குழந்தைக்கு வாயுடன் வாய் வைத்தும், முகத்திலும் முத்தமிட்டதால், அக்குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்து போனது. இதனால் அக்குழந்தையின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அக்குழந்தையின் பெயர் பேபி கெய்டன் மெக்கார்மிக். இக்குழந்தை 2 மாதங்களுக்கு முன்புதான் பிறந்தது. ஆனால் குழந்தையைக் கொஞ்சும் ஆர்வத்தில் அதன் வாயில் முத்தமிட்டுள்ளார் தந்தை கார்ல் மெக்கார்மிக். ஆனால் கார்லின் வாயிலிருந்து நோய்த் தொற்று குழந்தைக்குப் பரவி குழந்தையின் உயிரையே பறித்து விட்டது. இதனால் கார்லும், அவரது மனைவி மேரி கிளேரும் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்த குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததாகும். எனவே குழந்தைக்கு மூச்சு விடுவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்கனவே இருந்து வந்தன. இந்த நிலையில்தான் தந்தை முத்தம் கொடுக்கப் போக குழந்தை இறந்து விட்டது. கார் மெக்கார்மிக்கிடமிருந்து பரவிய ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் என்ற வைரஸ்தான் இந்த மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த வைரஸானது அனைவரிடமும் இருக்குமாம். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது முத்தம் உள்ளிட்டவை மூலம் இது பரவி விடுமாம். கடும் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ்தான், குழந்தையின் உயிர் பறிபோக காரணமாக அமைந்து விட்டது. தனது குழந்தையின் மரணத்திற்குத் தானே காரணமாகி விட்டதை நினைத்து வருத்தத்திலும், வேதனையிலும் உள்ளாராம் கார்ல்.

மரியா கேரி டிரஸ் சிக்கலில்


அட்லாண்டாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல பாடகி மரியா கேரி, அவர் கைகளை மேலே தூக்கியபோது டிரஸ் மேலே தூக்கி மார்புகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டது. முக்கியப் பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் அணியும் டிரஸ் சில நேரங்களில் எக்குத்தப்பாக கழன்று அல்லது லூஸாகி பொது இடத்தில் அவர்களை சங்கோஜப்படுத்துவது வழக்கம். இது இப்போது பரவலாகியும் வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க பாடகி மரியா கேரியும் இப்படிப்பட்ட டிரஸ் சிக்கலில் மாட்டித் தவித்தார். ஆனால் அவர் பெரிதாக கவலைப்படவில்லை. அட்லாண்டாவில் பிப்ரவரி 28ம் தேதி அவர் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது அவர் போட்டிருந்த ஆடை சற்றே நெகிழ்ந்து அவரது மார்பு காம்புப் பகுதி லேசாக வெளியே தெரிந்து விட்டது. அது லைவ் ஷோ என்பதால் பலரும் இதைப் பார்க்க நேரிட்டது

காமெடி போராட்டம்!

 
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பின் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடப் போகாமலேயே வள்ளுவர் கோட்டம் முன்பாகவே போலீஸார் கைது செய்தே ஆக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக் பிடித்து கோரிக்கை விடுத்தார். பொதுவாக இலங்கை தூதரகரத்தை முற்றுகையிடுவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் போது கட்சித் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று முழக்கமிடுவர். பின்பு தொண்டர்கள் இலங்கை தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்துவர். பினன்ர் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் செல்வார்கள். ஆனால் தமிழ் அமைப்புகள், இயக்கங்கள் போராட்டம் நடத்தினால் போலீசார் தடுப்பையும் மீறி இலங்கை தூதரகம் நோக்கி முற்றுகையிட்டே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்னேற முயற்சிப்பார்கள்.. தள்ளு முள்ளு.. மல்லுக் கட்டு நடைபெறும்..சில நேரங்களில் ரத்த களறியும் ஏற்படும். ஆனால் திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பு இன்று நடத்திய 'இலங்கை தூதரக' முற்றுகைப் போராட்டத்தில் நடந்தது என்ன தெரியுமா?. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டத்துக்காக பல்லாயிரம் பேர் கூடி இருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம்தான்! குறைந்தது பத்தாயிரம் பேர் என்பது மிகையல்ல.. அப்படி ஒரு கூட்டம்! . திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
 
ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த முழக்கங்கள் ஒரு 10 நிமிடம் நீடித்தன. பின்னர் 'மைக்' பிடித்த திமுக நிர்வாகி ஒருவர், "முக்கிய அறிவிப்பு... இங்கு கூடியிருக்கும் பத்தாயிரம் பேரில் தென் சென்னை மாவட்ட கழகத்தினர் (திமுக) முதலில் போலீஸ் வாகனத்தில் ஏற வேண்டும். அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றப்பட்ட பின்னரே வடசென்னை மாவட்ட கழகத்தினரும் மற்றவர்களும் போலீசார் வாகனத்தில் ஏற வேண்டும்'' என்று அறிவித்தார். மீண்டும் முழக்கம் ஆரம்பித்தது. அப்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக்கை பிடித்து ஒரு 'முக்கிய' அறிவிப்பை வெளியிட்டார். ''நண்பர்களே! இங்கு கூடியிருக்கும் நம்மை கைது செய்ய காவல்துறையிடம் போதுமான வாகனங்கள் இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்... (பலத்த கைதட்டல்)... இங்கே நிற்கும் எங்களை நீங்கள் கைது செய்யாவிட்டால் நாங்கள் அப்படியே இலங்கை தூதரகத்தை நோக்கி நடக்க வேண்டியதிருக்கும்" என்று திடீர் என அறிவித்தது பத்திரிகையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக முற்றுகைப் போராட்டம் நடத்துவர்கள் ஆகக் குறைந்தபட்சம் இலங்கை தூதரகம் நோக்கி சில அடிகளாவது நகர்வது வழக்கம். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான டெசோ அமைப்பினரோ வள்ளுவர் கோட்டம் அருகேதான் நாங்கள் நிற்போம். எங்களை இங்கேயே கைது செய்துவிடுங்கள்.. இல்லையெனில்தான் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக 'நகர்ந்து' செல்வோம் என்று கூறியது பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடைசியாக நடந்தது என்னவெனில் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று போலீசார் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரையும் 'வள்ளுவர் கோட்டத்திலேயே' இருக்க சொல்லிவிட்டது. 
 
 வழக்கம் போல ஊடகங்களும் இலங்கை தூதரகத்தை மு.க. ஸ்டாலின் தலைமையில் முற்றுகையிட "சென்ற" (நின்ற இடத்தைவிட்டு நகரவே இல்லை!) பல்லாயிரக்கணக்கானோர் போலீசாரால் 'தடுத்து' (!) நிறுத்தி கைது செய்யப்பட்டு "திருமண மண்டபங்களில்" (வள்ளுவர் கோட்டம் எப்ப கல்யாணம் மண்ட்பமானது?) தங்க வைக்கப்பட்டனர் என்று செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் அல்ல.. "வள்ளுவர் கோட்ட முற்றுகை" போராட்டம் என்று மூத்த செய்தியாளர் ஒருவர் கமெண்ட் அடித்தது இன்னமும் காதில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்திரா காந்தி கொள்கை.. ஸ்டாலின் கோரிக்கை: "முற்றுகைப் போராட்டம் நடத்தி கைது"(!) செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் போராட்டம் போலீசாரே கைது செய்து வாகனங்களில் ஏற்ற முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன. 1971-ல் லண்டன் நகரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட அன்னை இந்திராகாந்தி, அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது அதே கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கவேண்டும் என்றார் அவர்,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...