|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 June, 2011

Chennai Rhinos Vs Telugu Warriors-04-06-11-CCL


இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம்!

சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி விழப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐ.நா., அமைப்பால் 1972ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி, சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'காடுகள்-இயற்கைகளில் உங்கள் பணிகள்' என்ற நோக்கத்தோடு இந்தாண்டு இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலான பிரச்சனையாக சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்ந்து, மழை குறைகிறது. அண்டார்டிகா, இமயமலை பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது.

பூமியின் நுரையீரல்: பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது. உலகளவில் 160கோடிபேர் வாழ்வாதாரங்களுக்கு, காடுகளை சார்ந்தே வழ்கின்றனர். மேலும் காடுகள் 30 கோடி பேருக்கு வீடாக பயன்படுகிறது. உலகில் 2005ம் ஆண்டு கணக்கின் படி 189 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு காடுகள் மூலம் வியாபாரம் நடந்துள்ளது. பூமியின் நுரையீரல் போல திகழ்கின்றன. உலகளவில் ஆண்டுதோறும் 1 கோடியே 30 லட்சம் எக்டேர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன. இது போர்ச்சுகல் நாட்டின் நிலப்பரப்புக்கு சமம். தண்ணீர் மழைப்பொழிவு, மண்வளம் மற்றும் மனிதர்களைப் போலவே உயிரினங்களின் வாழ்க்கைக்கும் காடுகள் பயனுள்ளதாக உள்ளன. காடுகளால் தான் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. இதன்மூலம் 50 சதவீத தண்ணீர், நகரங்களுக்கு கிடைக்கிறது. புயல், வெள்ளம் மற்றும் தீ ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு காடுகள் வளர்ப்பு அவசியம். காடுகள் வளர்பதின் மூலம் வேலை வாய்ப்பும் பெருகுகிறது.

இந்தாண்டு இந்தியா: ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடு, இத்தினத்தை பொறுப்பேற்று நடத்துகிறது. அதன் படி, முதன்முறையாக இந்தாண்டு இந்தியா இத்தினத்தை நடத்துகிறது. மக்கள் தொகையில் 2வது இடத்திலும், பரப்பளவில் 7வது இடத்திலும் நம்நாடு உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பால் இந்தியா சுற்றுச்சூழல் பாதிப்பு, பெரும் பிரச்சனையாக விளங்குகிறது. கோல்டன்லங்கார் குரங்கு, ராயல் பெங்கால் டைகர் உள்ளிட்ட உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் சில இந்தியாவில் உள்ளன. 39 ஏக்கர் பரப்பளவில் உள்ள புலிகளை காக்கவும் இந்தியா சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பதற்கு இந்நாளில் உறுதிஎடுத்துக்கொள்வோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, அதிகளவில் மரக்கன்று நடுதல், மறுசுழற்சி முறையை கையாளுதல் போண்றவற்றை அனைவரும் பின்பற்ற முன்வரவேண்டும்.



  • உலக சுற்றுச்சூழல் தினம்
  •  டென்மார்க் தந்தையர் தினம்
  •  டென்மார்க், அரசியல் நிர்ணய தினம்
  •  முதலாவது தனிக்கணினியான ஆப்பிள் 2 விற்பனைக்கு விடப்பட்டது(1977)
  •  செஷெல்சில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது(1977)

இதே நாள்


கனிமொழிக்கு ஜூலை 4 வரை சிறைவாசம் !

ஜூன் 4: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை என்பதால், 2ஜி ஊழல் வழக்கில்  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒரு மாதம் தாமதமாகும் என தெரிகிறது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. திகார் ஜெயிலில் உள்ளார்.   கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ. கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாதாடினார். சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தார்.

கனிமொழி ஜாமீன் மனுமீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.   ஆனால் டெல்லி ஐகோர்ட்டில் இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படவில்லை. தீர்ப்பு தேதியும் அறிவிக்கப்படவில்லை. டெல்லி ஐகோர்ட்டுக்கு இன்று (4-ம் தேதி) முதல் ஒருமாத காலம் கோடை விடுமுறை. எனவே, கனிமொழி இன்னும் ஒருமாதம் (ஜூலை 4-ம் தேதி வரை) சிறையில் இருக்க வேண்டியது வரலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மூத்த வக்கீல் ஒருவர் கூறியதாவது: கனிமொழி ஜாமீன் மீதான தீர்ப்பை நீதிபதி இடையில் ஒருநாள் கோர்ட்டுக்கு வந்து அறிவிக்கலாம். அப்போது ஜாமீன் கிடைக்கலாம் அல்லது மறுக்கலாம். இதுதவிர தீர்ப்பை நீதிபதி ஐகோர்ட் ரிஜிஸ்தராருக்கு அனுப்பி வைத்து, திறந்தவெளி கோர்ட்டில் உத்தரவை வெளியிடவும் வாய்ப்பு உள்ளது என்றார்.
 

சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு: மதுரை ஆதீனம்

சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாள்தான் தமிழ் ஆண்டின் தொடக்க நாள் ஆகும்.  இந்நாளில்தான் ஆதீனங்களிலும், திருமடாலயங்களிலும், பூஜைகள், வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். மேலும், இந்த இடங்களில் அன்றுதான் பஞ்சாங்கம் வாசித்துக் காட்டுவதும் மரபாக இருந்து வருகிறது. அதில் நாட்டின் நிலை குறித்த பல்வேறு செய்திகள், வானிலை, பூமி தொடர்பான தகவல்கள், மழை குறித்த முன்னறிவிப்பு, விவசாயம், அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் போன்றவை விரிவாக எடுத்துரைக்கப்படும்.  எனவே, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுக்கு பொருத்தமான நாள் ஆகும் என்றார் ஆதீனம்.

அகத்திக்கீரை!

அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். நமது அகத்தின் தீயை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக் கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப் படுகிறது. பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் வெற்றிலைக் கொடிக்குக் கொழு கொம்பாக உதவவும் பயிர் செய்கிறார்கள்.

முனி விருட்சம்: அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, காரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகிறது. வானத்தில் அகத்திய முனிவாரின் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் அகத்திமரம் பூக்கத் தொடங்குகின்ற காரணத்தினால் இதற்கு அகத்தியம் என்றும் முனிவிருட்சம் என்றும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.

அகத்தியில் அடங்கியுள்ள சத்துக்கள்: அகத்திக் கீரையில் 73 சதவிகிதம் நீரும் 8.4 சதவிகிதம் புரதமும் 1.4சதவிகிதம் கொழுப்பும் 2.1 சதவிகிதம் தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 சதவிகிதம் நார்ச்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 சதவிகிதம் இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரதமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லி கிராமும், ரைபோ· ஃப்ளோவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.

மருத்துவப் பயன்கள்: அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்.

தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும்.இது மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.

கர்மவினைகள் தீரும்: அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

cientific name

Synonyms

Aeschynomene grandiflora
Agati grandiflora
Robinia grandiflora .
Sesban grandiflorus 

Family/tribe

Family: Fabaceae (alt. Leguminosae) subfamily: Faboideae tribe: Robinieae. Also placed in: Papilionaceae.

Common names:agati, agusta, bagphal, bak, bake (Bengali);  pwa valet, pwa valye (Creole Patois);  agathi, agati sesbania, August flower, Australian corkwood tree, flamingo bill, grandiflora, sesban, swamp pea, tiger tongue, scarlet wistaria-tree, vegetable-hummingbird, West Indian pea, white dragon tree (English);  gauai-gauai, katuday, katurai, pan (Filipino);  colbri vegetal, fagotier, fleur papillon, papillon, pois valette, pois vallier, pois valliere (French);  agasti, bak, basma, basna, chogache, hatiya (Hindi);  toroy, turi, tuwi (Indonesian);  ângkiëdèi (Khmer); kh'ê: kha:w (Lao (Sino-Tibetan));  kacang turi, petai belalang, sesban, sesban getih (Malay);  agasti (Nepali);  agasti, agati, anari (Sanskrit);  kathuru, murunga (Sinhala);  baculo, cresta de gallo, gallito, paloma, pico de flamenco, zapaton blanco (Spanish);  agathi, agati, peragathi (Tamil);  kae-ban, khae, ton kae (Thai);  So dua (Vietnamese).

Morphological description:An open branching tree up to 15 m tall and 30 cm in diameter.  Roots are normally heavily nodulated with large nodules.  The tree can develop floating roots and aerenchyma tissue.  Stems tomentose, unarmed.  Leaf pinnately compound, up to 30 cm long including a petiole 7-15 mm long; the rachis slightly pubescent or glabrous;  leaflets 20-50, in pairs opposite to alternate on the same leaf, oblong to elliptical, 12-44 mm x 5-15 mm, rounded to obtuse to slightly emarginate at the apex, glabrous or sparsely pubescent on both surfaces.  Stipels filiform, 0.75-1 mm long, pubescent, persistent, stipules broadly lanceolate, 8 mm long, early deciduous .

Raceme axillary, 2-4 flowered, rachis up to 65 mm long; peduncle 15-35 mm long, tomentose;  pedicels 15-18 mm long, pubescent; bracts lanceolate, 3-6 mm long, early deciduous;  flowers white, yellowish, rose-pink or red;  calyx 15-22 mm long, closed in young buds, splitting or breaking at anthesis, the basal part persistent in the fruit;  standard up to 10.5 x 8 cm, no appendages at the claw;  wings up to 10.5 x 3 cm without a basal tooth, staminal tube 10-12 cm long, curved for most of its length;  ovary and style glabrous .
Pod linear to slightly falcate, 20-60 x 6-9 mm with broad sutures, 15-50 seeded, septa 7.5-10 mm apart, glabrous, hanging vertically, indehiscent .  Seed subreniform, 6.5 x 5 mm x 2.5-3 mm, dark brown.  Seed weight is 17,000-30,000 seeds/kg.

Distribution

Native to:
Tropical Asia including, India, Indonesia, Malaysia, Myanmar and Philippines, with possibly Indonesia as the centre of diversity.  Closely related to the Australian species, S. formosa.

Widespread exotic distribution: northern Australia (possibly native), Benin, Burkina Faso, Cameroon, Chad, Cote d'Ivoire, Cuba, Djibouti, Dominican Republic, Eritrea, Ethiopia, Gambia, Ghana, Guadeloupe, Guinea, Guinea-Bissau, Haiti, Kenya, Liberia, Mali, Martinique, Mauritania, Mauritius, Mexico, Nepal, Niger, Nigeria, Puerto Rico, Senegal, Sierra Leone, Somalia, South Africa, Tanzania, Togo, Uganda, United States of America.
Has been cultivated in West Africa for at least 140 years.

Uses/applications

Valued as a fodder throughout Indonesia, particularly for dry season feeding of cattle and goats.  Commonly grown on paddy bunds, and around gardens or cropping fields for its nitrogen contribution.  The sparse canopy of S. grandiflora casts relatively little shade, hence its suitability close to sun-loving crops and gardens.  S. grandiflora grows fast enough to be used as an annual green manure crop.  The leaves, seed pods and flowers are used as human food in southeast Asia.
The light density wood of S. grandiflora makes poor firewood and is not durable as a timber, however it can be used for low quality pulp.  Poles are used for light construction but have limited durability.  Used as a shade crop and as a support for climbing crops.  Also used as a component of windbreaks.




முதலில் பதவி விலகுங்கள்... தயாநிதிக்கு தினமணி சவால்!

சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்துகொண்டு தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு கூட்டம் வேறெங்குமே இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்து விட்டிருக்கிறது. குறிப்பாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் செல்வாக்குப் படைத்த கட்சித் தலைவர்களாக, அமைச்சர்களாகப் பொறுப்பான பதவி வகிப்பவர்கள், தங்களது குடும்பத்தையும், சுற்றத்தையும், நண்பர்களையும் வளப்படுத்துவதற்காகத்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்துப் பதவிக் கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துச் செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. இவர்களது செயல்பாடுகளால் நமக்கு மக்களாட்சித் தத்துவத்திலேயே நம்பிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் முறைகேடு, ராணுவ வீரர்களுக்காக அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிறோம் என்கிற சாக்கில் அரசியல்வாதிகளின் பினாமிகள் அரங்கேற்றி இருக்கும் அதிகார துஷ்பிரயோகங்கள் என்று இந்த வரிசையில் சேர்ந்து கொள்கிறது மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுப்பப்பட்டிருக்கும் தொலைபேசி இணைப்பு மோசடிக் குற்றச்சாட்டு.தங்களது நிறுவனத்தின் சார்பில் ஒரு சட்டப் பிரிவும், அதில் சில வழக்குரைஞர்கள் ஊழியர்களாகவும் இருப்பதால், எந்தப் பத்திரிகை தங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டாலும் உடனே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதும், மான நஷ்ட வழக்குப் போட்டு அந்தப் பத்திரிகையாளரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றுவதாகப் பயமுறுத்துவதும் சன் குழுமத்துக்கு வாடிக்கையாகிவிட்டது.சக பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சிச் சேனல்களையும் மிரட்டியும், பயமுறுத்தியும் பணிய வைக்கும் முயற்சியில், ஒரு அமைச்சரே ஈடுபடும்போது அதை வாய் பொத்திக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது என்பது பத்திரிகை தர்மத்துக்கே அடுக்காது என்பதால் தலையங்கம் தீட்டி பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அன்றைய மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இன்றைய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் இருந்தபோது, தனது சென்னை போட் ஹவுசிலுள்ள வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சித் தலைமையகத்தைத் தொலைபேசி மூலம் இணைத்து, அந்தத் தனியார் சேனலின் பயன்பாட்டுக்கு அமைச்சரின் பெயரிலான தொலைபேசி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குற்றச்சாட்டு. இதற்காக 3.4 கி.மீ. தூரத்துக்கு ரகசியமாக சாலைக்கடியில் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.ஏறத்தாழ 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் ஒரு குட்டி தொலைபேசி இணைப்பகம்போல, தனது குடும்பத் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையின் பயன்பாட்டுக்காக அன்றைய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனால் முறைகேடாக உபயோகப்படுத்தப்பட்டன என்கிற குற்றச்சாட்டு 2009 தேர்தலின்போதே எழுப்பப்பட்டது. அமைச்சர் அதிபுத்திசாலித்தனமாக, பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ஒருவரிடமிருந்து, அமைச்சரின் பெயரில் ஒரு தொலைபேசி மட்டுமே இயங்குவதாக ஒரு கடிதம் எழுதி வாங்கி வெளியிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டார்.அத்துடன் முடிந்தது என்று அமைச்சர் தயாநிதி மாறன் நினைத்த விஷயம் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 

இதற்குக் காரணம், "தினமணி'யோ, பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தியோ அல்ல. 2007-ம் ஆண்டு தயாநிதி மாறனின் தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு, அவரது இடத்தைப் பிடித்த ஆ. ராசாதான் இந்தப் பிரச்னை இப்போது பூதாகரமாக வடிவம் எடுத்திருப்பதற்குக் காரணம் என்பது தயாநிதி மாறனுக்கும் சன் குழுமத்துக்கும் தெரியாதா, இல்லை, அவர்களது தாத்தாவான திமுக தலைவர் கருணாநிதிக்குத்தான் தெரியாதா?தயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி ஏற்ற ஆ. ராசாவின் பரிந்துரையின் பேரில்தானே, ஜூன் 2004 முதல் ஜூன் 2007 வரையில் அமைச்சர் என்ற முறையில் தயாநிதி மாறனின் செயல்பாடுகளுக்குப் பயன்பட்ட தொலைபேசி இணைப்புகள் பற்றிய விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறையினர் (சி.பி.ஐ.) முடுக்கிவிட்டனர். 2007 செப்டம்பர் மாதம் 10-ம் தேதி சிபிஐயின் சிறப்பு ஆணையர் எம்.எஸ். சர்மாவின் கையொப்பத்துடன் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.323 தொலைபேசி இணைப்புகளைத் தனது குடும்ப நிறுவனமான சன் குழுமத்துக்காக அன்றைய அமைச்சர் தயாநிதி மாறன் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அறிக்கையின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாகவும் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இப்போதைய கேள்வி, தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தினாரா, இல்லையா என்பதல்ல. மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூங்குகிறதே அது ஏன் என்பதுதான்.தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்றும் தயாநிதி மாறன் கூறுவது உண்மையானால், முதலில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விசாரணைக்குத் தயாராகட்டுமே... பத்திரிகையாளர்களை நீதிமன்றத்தின் பெயராலும், மான நஷ்ட வழக்கு போடுவேன் என்றும் மிரட்டுவதை விட்டுவிட்டு, நீதி விசாரணைக்கு தயாநிதி மாறன் தயாராகத் துணியட்டுமே...அவர் தயாராகிறாரோ இல்லையோ, அவரை அமைச்சரவையில் இருந்து அகற்றி, சிபிஐயின் அறிக்கை மீது அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடர வேண்டிய கடமை பிரதமருக்கு உண்டு.

"சட்டம் தனது கடமையைச் செய்யும்' என்கிற பிரதமரின் கூற்று உண்மையானால், நான்கு ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருக்கும் சிபிஐயின் அறிக்கை தூசு தட்டப்பட்டு, நீதி நிலைநாட்டப்படட்டும்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...