|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 June, 2011

கனிமொழிக்கு ஜூலை 4 வரை சிறைவாசம் !

ஜூன் 4: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை என்பதால், 2ஜி ஊழல் வழக்கில்  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒரு மாதம் தாமதமாகும் என தெரிகிறது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. திகார் ஜெயிலில் உள்ளார்.   கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ. கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாதாடினார். சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தார்.

கனிமொழி ஜாமீன் மனுமீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.   ஆனால் டெல்லி ஐகோர்ட்டில் இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படவில்லை. தீர்ப்பு தேதியும் அறிவிக்கப்படவில்லை. டெல்லி ஐகோர்ட்டுக்கு இன்று (4-ம் தேதி) முதல் ஒருமாத காலம் கோடை விடுமுறை. எனவே, கனிமொழி இன்னும் ஒருமாதம் (ஜூலை 4-ம் தேதி வரை) சிறையில் இருக்க வேண்டியது வரலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மூத்த வக்கீல் ஒருவர் கூறியதாவது: கனிமொழி ஜாமீன் மீதான தீர்ப்பை நீதிபதி இடையில் ஒருநாள் கோர்ட்டுக்கு வந்து அறிவிக்கலாம். அப்போது ஜாமீன் கிடைக்கலாம் அல்லது மறுக்கலாம். இதுதவிர தீர்ப்பை நீதிபதி ஐகோர்ட் ரிஜிஸ்தராருக்கு அனுப்பி வைத்து, திறந்தவெளி கோர்ட்டில் உத்தரவை வெளியிடவும் வாய்ப்பு உள்ளது என்றார்.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...