|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2011

இதே நாள் 21 மார்ச் 2011

  •  உலக வன நாள்
  •  சர்வதேச செய்யுள் நாள்
  •  நமீபியா விடுதலை தினம்(1990)
  •  தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் தினம்
  •  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சிறப்பு சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்(1905)

இந்தியா அபார வெற்றி

  வெஸ்ட் இண்டீஸ் அணி 43 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா "பி" பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தது. இதனால் காலிறுதியில் "ஏ" பிரிவில் மூன்றாம் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவுடன் மோ‌தவுள்ளது

மீண்டும் ஒரு சொதப்பல்-268 ர ன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா

அபாரமாக ரன் குவித்திருக்க வேண்டிய ஒரு போட்டியை இந்தியா மீ்ண்டும் சொதப்பலாக ஆடி குறைந்த ரன்களுக்குச் சுருண்டு போனது.
Yuvaraj Singh
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.இன்றைய போட்டியில் இந்தியத் தரப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வீரேந்திர ஷேவாக் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டார். அதேபோல முனாப் படேல் நீக்கப்பட்டு அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தனது 100வது சதத்தை இன்று சச்சின் எடுப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், அவர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து கம்பீரும் சொற்ப ரன்களில் வெளியேறினார். குறுகிய நேரத்திற்குள் 2 விக்கெட்களை இழந்ததால் இந்தியா தடுமாற்றமடைந்தது.

இருப்பினும் விராத் கோலியும், யுவராஜ் சிங்கும் இணைந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி ரன் குவிக்க முற்பட்டனர். விராத் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் யுவராஜ் சிங் உறுதியாக நின்று அடித்து ஆடினார். சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் சதம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இது யுவராஜ் சிங்குக்கு 14வது ஒரு நாள் சதமாகும். அதேசமயம், உலகக் கோப்பைப் போட்டிகளில் இது முதல் சதமாகும். 112 பந்துகளில் 100 ரன்களை எட்டினார் யுவராஜ்.

சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்குப் பின்னால் யாருமே நின்று ஆட முயற்சிக்கவில்லை. மாறாக டீயைக் குடித்து விட்டு பாதியில் வைத்து விட்டு வந்ததைப் போல அவசரம் அவசரமாக ஆடி பெவிலியனுக்குத் திரும்பவே எத்தனித்தது போல தெரிந்தது.

கேப்டன் டோணி 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பிரமாதமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 4 ரன்களே போதும் என்பது போல மோசமான முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

யூசுப் பதான் வழக்கம் போல இந்தப் போட்டியிலும் ஆடவில்லை. 11 ரன்களை எடுத்து விட்டுக் கிளம்பினார். பின்னர் வந்தவர்களில், அஸ்வின் மட்டுமே சற்று அடித்து ஆட எத்தனித்தார். அவர் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜாகிர் கான் 5, ஹர்பஜன் சிங் 3 என ஓடி விட்டனர்.

பேட்டிங் பவர் பிளேயை மீண்டும் ஒரு முறை சரியாகப் பயன்படுத்தத் தவறி குறைந்த ரன்களை எடுத்து விக்கெட்களை இழந்து ரசிகர்களை பெரும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது இந்தியா.

சிட்னி முருகன் ஆலயத்தில் வருடாந்திர மஹோத்சவ விழா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள முருகன் கோவிலில் வருடாந்திர மஹோத்சவ விழா தொடங்கியது.


நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி மாநகரத்தின் வைகாசிக்குன்றில் அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (11.03.2011) தொடங்கியது.

எட்டாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை சப்பறத் திருவிழா நடைபெற்றது. ஒன்பதாம் நாளான இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது. அடை மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Workers see some success at nuclear plant as cooling efforts continue

Workers began to see some success in their battle to cool down reactors at the quake-damaged Fukushima Daiichi nuclear plant Sunday, but Japanese officials said they may need to release additional radioactive gas into the air.
The plant's owner, Tokyo Electric Power Co., said electricity was being supplied to reactor No. 2 , Kyodo News reported. But officials said they were monitoring reactor No. 3 to determine whether to release gas to reduce mounting pressure in the containment vessel -- the steel and concrete shell that insulates radioactive material inside.
Power company officials said pressure was higher than previous readings -- but stable -- Sunday afternoon. And Chief Cabinet Secretary Yukio Edano said the pressure increase did not require "an immediate release of the air at this moment."
Workers have let out radioactive steam to release pressure inside affected reactors in previous operations.

எகிப்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டு போட்ட மக்கள்

 
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. எனவே, அவரது ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். 17 நாள் போராட்டத்துக்கு பிறகு முபாரக் பணிந்தார். பதவியில் இருந்து வெளியேறினார்.
 
தற்போது ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. அரசியல் சட்டத்தில் மாற்றம் வேண்டும். புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே, அதிபர் தேர்தலை விரைவில் நடத்த ராணுவ அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அதிபர் தேர்தல் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான மக்கள் கருத்து வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது.
 
இதை தொடர்ந்து எகிப்தில் உள்ள கெய்ரோ, ஷமாலேக், ஜிஷா, ஷாகாஷிப் உள்ளிட்ட பல நகரங்களில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.   அதற்கு முன்னதாகவே ஏராளமான மக்கள் வாக்குச் சாவடிகள் முன்பு நீண்ட “கியூ” வரிசையில் நின்று காத்திருந்தனர்.
 
வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டதும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்களித்ததன் மூலம் தாங்கள் ஜனநாயகத்தை ருசித்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதன் மூலம் புதிய எகிப்தை உருவாக்க இருப்பதாகவும் கூறினர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதியிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை வரும் 31-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ளது. அதனையொட்டி குற்றப்த்திரிக்கை தயாரிக்கும் பணியில்  பணியில் சி.பி.ஐ. இறங்கியுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க.தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் சேர்க்கப்படலாம் என்று சிஎன்என்-ஐபிஎன்னுக்கு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோர் சட்டப்பிரிவு 120பி(மோசடி மற்றும் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் சேர்க்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆர்.டி.ரியால்டி குரூப்பில் இருந்து ரூ. 200 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் யுனிடெக் நிறுவனத்திற்கு டாடா ரியாலிட்டி நிறுவனமானது ரூ.ஆயிரத்து 700 கோடிக்கு கடன் கொடுத்திருப்பது தொடர்பாகவும் சி.பி.ஐ. தீவரமாக விசாரணை நடத்தி வருகிறது. டாடா நிறுவனங்களின் துணை நிறுவனமான ஓல்டாஸ் நிறுவனமானது கனிமொழியின் உதவியாளருக்கு சென்னையில் நிலமாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலபரிமாற்றமானது ஆ.ராசாவிடம் இருந்து இரட்டை தொழில்நுட்ப லைசன்ஸ் பெற்றதற்காக இருக்கலாம் என்றும் தெரிகிறது. 
இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. ஆனால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி குற்றம்சாட்டப்பட்டவர் அல்ல. அல்லது சந்தேகப்படும்படியான நபரும் அல்ல. இருந்தபோதிலும் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு சாட்சி என்ற முறையில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்வோம். அதற்காக 15 முதல் 20 கேள்விகள் வரையுள்ள ஒரு கேள்வித்தாளை தயாரித்து வைத்திருக்கிறோம் என்று  ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விசாரித்து வரும் ஒரு மூத்த சி.பி.ஐ. அதிகாரி கூறினார். ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீட்டிற்காக தொலைதொடர்புத்துறை கொள்கையையே ஆ.ராசா மாற்றம் செய்தது உங்களுக்கு தெரியுமா என்ற கேள்வி கருணாநிதியிடம் முதலில் கேட்கப்படும் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வர் கருணாநிதியிடம் வருகின்ற 29-ம் தேதிக்குள் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. அதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை வருகின்ற 31-ம் தேதிதான் தாக்கலாகும் என்று தெரிகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மேலும் யார் யார் சேர்க்கப்படுகிறார்களோ தெரியவில்லை. தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்,தொலைதொடர்புதுறை விதிமுறைகளில் சில மாற்றத்தை செய்தார். அந்த மாற்றத்தை அதற்கு பின்னர் அமைச்சராக வந்த ராசா,தனக்கு சாதகமாக்கிக்கொண்டார். மேலும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விதிமுறைகளை மாற்றிக்கொண்டார். இதை ஆ.ராசா மறைத்துவிட்டாரா? அல்லது உங்களுக்கு தெரியுமா என்று கருணாநிதியிடம் கேட்கப்படும்.  அடுத்ததாக சில தகவல் தொடர்பு கம்பெனிகளுடன் ஆ.ராசாவுக்கு இருந்த தொடர்பு குறித்து தெரியுமா என்று கேட்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார். மேலும் கடந்த புதன்கிழமை நடந்த விசாரணையின்போது ராசா தொடர்பு வைத்திருந்த அந்த 2 கம்பெனிகளின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என்று சி.பி.ஐ. சார்பாக தெரிவிக்கப்பட்டது. எங்களுடைய விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு தொடர்ந்து கண்காணித்து வருவதால் நாங்கள் அனைத்து விஷயங்கள் குறித்தும் முழுமையாக விசாரிப்போம். தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி இருப்பதால் ராசாவின் நடவடிக்கைகள் குறித்து கருணாநிதிக்கு தெரியுமா அல்லது தெரியாதா என்பதற்கு விளக்கம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.   

இளமை துள்ளும் குறும் படம்

கார்த்திக் சுப்புராஜ்
எழுத்து, இயக்கம் .




அடுத்த 5 வருட கொல்லைக்கு அச்சாரம்


ரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.  இந்த முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் (மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட, நிதியமைச்சர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். இந்த த் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்:  வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளான, "அந்தியோதயா' குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதை இனி இலவசமாகவே வழங்குவோம். இதன்மூலம் தமிழகத்திலே உள்ள 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.  குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்.  விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளும், இலவச கலர் டி.வி.க்களும் வழங்கப்படும்.  இலவச லேப்டாப்: அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயிலவரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்புகளில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தருவோம்.  தமிழகத்தில் பல்கலைக்கழகங்களே இல்லாத மாவட்டங்கள் இல்லை என்ற உயர்ந்த நோக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்போம். அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் நோக்கத்துடன், புதிய அரசு பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவோம்.  அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடுகளில் வேலை தேடுவதற்கு வசதியாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், அரபி போன்ற மொழிகளைக் கற்றுத்தர ஏற்பாடு செய்வோம்.  மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்: 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.  நடக்க முடியாத முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.  முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை மாதம் ரூ.750 ஆக உயர்த்தப்படும்.  இலவச வீடு கட்ட நிதி ரூ.1 லட்சம்: கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்ட வழங்க இப்போது ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.  கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இந்த வீடுகளைப் பெற சிலருக்குத் தகுதியில்லை என்ற நிபந்தனையும் மறுபரிசீலனை செய்யப்படும்.  கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை, மதுரை போன்ற பெருநகரங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்டும். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரையில் நீட்டிக்க ஒரு பாதையும், ஸ்ரீபெரும்புதூர் வழியாக இருங்காட்டுக்கோட்டை வரை நீட்டிப்பதற்கான மற்றொரு பாதையையும் ஏற்படுத்துவோம்.  மினி பஸ்களின் எண்ணிக்கை அதிகமாக்க ஆவன செய்யப்படும்.  ஆன்-லைன் வர்த்தகத்துக்குத் தடை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துவோம்.  அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கும், தட்டுப்பாட்டிற்கும் முன்பேர ஊக வணிகம் (ஆன்-லைன் வர்த்தகம்) காரணமாக உள்ளது. எனவே, இதைத் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.  வெள்ளம், தீ போன்ற சீற்றங்களாலும், கலவரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகும் வணிகர்களுக்கு, வணிகர் நல வாரியத்தின் மூலம் நிவாரணம் அளித்திட தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். மருத்துவ உதவிகளும் வழங்க ஆவன செய்வோம்.  சென்னையில் துணை நகரம்:  சென்னை நகரின் நெரிசலைக் குறைக்க சென்னைக்கு அருகில் புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.  நகரங்களில் நடுத்தர, குறைந்த வருவாய்ப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பயனடையத்தக்க விதத்தில் அரசால் அறிவிக்கப்படும் கட்டடங்களில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு குறைந்த செலவிலான வாடகைக் குடியிருப்பு திட்டம் செயல்படுத்துவோம்.  மாற்றுத் திறனாளிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இனி கட்டப்படும் அனைத்துப் பொதுக்கட்டடங்கள், அரசு கட்டடங்கள் உரிய முறையில் வடிவமைக்கப்படுவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றுவோம்.  இலவச டயாலிசிஸ்: சிறுநீரக பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்க வசதிகளைச் செய்வோம். ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்ற வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த செலவிலும் இந்தச் சிகிச்சையை அளிக்க வசதிகளைச் செய்வோம்.  தனியார் மருத்துவமனைகளில் நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கு மருத்துவக் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைப்போம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தேவை தெளிந்த தீர்ப்பு : ஆர்.ராஜேஸ்வரி சிவா - சமூக ஆர்வலர்


தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தங்களும், அரசியல் கட்சிகளின் கோமாளி கூத்துக்களும் துவங்கிவிட்டன. பேரங்களுக்கும், அதையொட்டிய நாடகங்களுக்கும் குறையொன்றுமில்லை.

பேரம் படிவதற்கு முன், தன்மான சிங்கங்களாக கர்ஜித்தல்; பேரம் படிந்து உடன்பாடு ஆனவுடன், பூனையாக பதுங்குதல்; திடீர் திடீரென முளைக்கும் ஜாதிக் கட்சிகள்; அந்தக் கட்சிகளுடனும் பேரம் நடத்தி, தொகுதி வழங்குதல் என, சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறுகின்றன. ஒரு சில கட்சிகள் எந்தக் கூட்டணியில் உள்ளனர் என்பதில், அக்கட்சியின் பேச்சாளர்களுக்கே, சந்தேகம் வந்து விடுகிறது.கூட்டணி கட்சியினரையே பழக்க தோஷத்தில், மேடையில் சாட ஆரம்பித்துவிடுகின்றனர். பாவம்... அவர்கள் தான் என்ன செய்வர்... தேர்தல் தோறும் கூட்டணி மாறிக் கொண்டே இருந்தாலும், "நாக்கு' ஒரே நாக்கு தானே! தேர்தல் முடிவதற்குள், இன்னும் பல சுவாரஸ்யமான நாடகங்கள் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.விரல்விட்டு எண்ணக் கூடிய அரசியல் தலைவர்கள், கோடிக்கணக்கான மக்களை முட்டாள்களாக நினைத்து, அவர்களுடைய, "வியாபாரத்தை' சிறப்பாக நடத்துகின்றனர்.

மக்களாகிய நாம், இந்த கபட நாடகங்களையும், பேரங்களையும் மவுன சாட்சிகளாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
"வியாபாரமா?' என புருவத்தை உயர்த்துபவர்கள், கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கவும்...தி.மு.க.,வில், 15 ஆயிரம் பேர், அ.தி.மு.க.,வில், 12 ஆயிரம் பேர், தே.மு.தி.க., வில், 7,500 பேர் என, மூன்று கட்சிகளில் மட்டும், 34 ஆயிரத்து 500 பேர், டிக்கட் கேட்டு மனு செய்துள்ளனர். இது தவிர, காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில், "சீட்' பிடிக்க மோதுபவர்கள் கணக்கு தனி. ஒவ்வொருவரும் சீட்டுக்கும், 5,000, 10,000 ரூபாய் என, கட்சி தலைமைக்கு பணம் கட்டி உள்ளனர்; ஒவ்வொரு கட்சி தலைமைக்கும் இதன் மூலமே பல கோடிகள் வசூல் ஆகி இருக்கும்!இத்தனை பேர் டிக்கட் கேட்டாலும், பங்கிட்டு கொள்ளப் போவது, 234 தொகுதிகளைத் தான். நேர்காணலை சந்தித்து விட்ட கரை வேட்டிகள், "நமக்கு வேண்டிய கட்சிக்காரரு; 2 சி வரைக்கும் செலவு பண்ண தயாரா இருக்காரு. சரியான ரூட் இருந்தா சொல்லுங்க...' என, "சீட்' பிடிக்க தோதான ஆள் பிடிக்கும் வேலையில், தீவிரமாக இறங்குகின்றனர்.
ஆக, "2 சி' என்றால் என்ன என்று அறியாத அப்பாவி, நேர்மையாளர்களும் உள்ளனர். 2 சி என்றால் இரண்டு கோடி. அனைத்து கட்சிகளும் நேர்காணலில் தவறாமல் கேட்கும் கேள்வி, தேர்தல் பணிக்கு செலவு செய்ய தயாராகவுள்ள தொகையின் மதிப்பு என்ன?

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன், ஒரு கட்சி, ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டுமெனில், அவர் அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவராக இருக்க வேண்டும்; பல போராட்டங்களை சந்தித்தவராக இருக்க வேண்டும்; மக்களிடையே மதிப்பும், மரியாதையும் உள்ளவராக இருக்க வேண்டும்; வம்பு, வழக்குகள் இல்லாதவராக இருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட தொகுதி மக்களுக்கு, நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும்.ஆனால், இன்றோ, "டப்பு' மட்டும் இருந்தால் போதும். நேற்று வரை கட்சி உறுப்பினராக கூட இல்லாத ஒருவரை, தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை, பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை, வேட்பாளராக நிறுத்தி, அவரும் வெற்றி வாகை சூடி விடுகிறார். 2 சி, 3 சி என, பணத்தை வாரியிறைத்து, சட்டசபை உறுப்பினராக என்ன காரணம்? மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற அக்கறையிலா?

"டிவி' ஊடகங்களுக்கு அடிமைப்பட்டு மக்கள், நாட்டில் என்ன கொள்ளை போனாலும் கவலைப்படாமல், நம் வீட்டில் கொள்ளைப் போகாமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு தள்ளப்பட்டுவிட்டனர்.இந்த மனப்பாங்கிலிருந்து மக்கள் வெளி வர வேண்டும். சட்டசபை தேர்தல் என்பது தேர்திருவிழாப் போல, ஒரு நாள் கொண்டாடும் வேடிக்கை விழா அல்ல.நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர், தொகுதி பிரச்னைகளை தீர்த்து வைக்க பாடுபடுபவராக, சட்டசபையிலும், எடுத்துரைக்க தயங்காதவராக, மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக, மக்கள் தொண்டில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால், உங்கள் வீட்டு பெண்ணிற்கு மாப்பிள்ளை தேர்ந்தெடுக்க அலசி ஆராய்வது போல், சிரத்தையுடன் சிந்தித்து, வேட்பாளரை தேர்வு செய்து, ஓட்டளிக்க வேண்டும்.மக்களை மடையர்களாக நினைத்து நாடகமாடும் தலைவர்களுக்கு, தக்க பாடம் புகட்ட மக்களிடம் இருக்கும் ஒரே மார்க்கம், ஓட்டுச் சீட்டு தான். விலை மதிப்பில்லாத ஓட்டுகளை, விளையாட்டு போல் வீணடிக்காமல், மவுன சாட்சிகளின் சக்தியை, அரசியல் வியாபாரிகளுக்கு உணர்த்துதல் நம் கடமை.நாட்டின் எதிர்காலம் மட்டுமல்லாமல், நம் சந்ததிகளின் எதிர் காலமும், நம் ஓட்டுச்சீட்டில் தான் உள்ளது என்பதை உணர்ந்து, சிந்தித்து, சீர்தூக்கி பார்த்து, தவறாமல் எல்லாரும் ஓட்டளிக்க வேண்டும்.

US fires more than 100 missiles in attacks against Libya; 48 dead,


இதே நாள் 20 மார்ச் 2011

  •  சர்வதேச ஜோதிட தினம்
  •  உலக கதைசொல்வோர் தினம்
  •  பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது(1956)
  •  டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)
  •  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்(1916)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...