|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 March, 2011

அதிகாரிகள் மாற்றம் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது: தேர்தல் ஆணையம்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்தார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:
 இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்த முழு அதிகாரம் உள்ளது. அதை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தேர்தலுக்காக ஒரு குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்துவதும், குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்தாமல் இருப்பதும் தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.  நமது நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்துவதும், தனிநபர் அல்லது கட்சியின் பண பலத்தால், ஜனநாயக நடைமுறை தோல்வியுறாமல் பார்த்துக் கொள்வதும், தேர்தல் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தண்டிப்பது மட்டுமல்லாமல் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி தேர்தல் குற்றங்களைத் தடுப்பதும் ஆணையத்தின் கடமை.

எந்த டி.ஜி.பி.யிடம் தேர்தலை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் உள்ளது.  அதனால் டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனத்துக்கும் தேர்தல் நேரத்தில் யார் டி.ஜி.பி.யாக இருக்க வேண்டும் என்பதற்கும் தொடர்பு இல்லை. அவரது நியமனத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்பது இந்த வழக்குக்கு தொடர்புடையது அல்ல.  சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியே தேர்தல் ஆணையத்தின் முடிவு பற்றி கேள்வி கேட்கவில்லை. அதனால், அது தொடர்பான முதல்வரின் அறிக்கையை வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையற்றது.  தமிழ்நாட்டில் 2006 உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இந்த உயர் நீதிமன்றம் லத்திகா சரணை சாடியுள்ளது.  அத்தகைய சூழலில் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக வேறோர் அதிகாரியை தேர்தலை நடத்தும் பொறுப்புக்கு நியமிப்பது தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. எனவே, அத்தகைய நடவடிக்கையை பாரபட்சம் என்று கூற முடியாது.  தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம், வருமான வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறப்பு அதிகாரம் உள்ளது.  அவற்றின் கீழ் வாகனங்கள், வீடுகள் போன்றவற்றில் சோதனை செய்து, பொருள்களைப் பறிமுதல் செய்ய முடியும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.  எனவே, தேர்தல் நடவடிக்கைகளை எதிர்க்கும் எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.    "மாநில அரசையும் கலந்தாலோசிக்க வேண்டும்'  சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறியதாவது:  தேர்தல் ஆணையம், தேர்தலை நியாயமாக, நேர்மையாக, வெளிப்படையாக நடத்துவதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது.  தேர்தல் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு வெற்றி கிடைக்கிறதென்றால் அந்தப் பெருமை மாநில அரசையும் சாரும்.  எனினும், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது தேர்தல் ஆணையம் மாநில அரசையும் கொஞ்சம் கலந்தாலோசித்தால் நன்றாக இருக்கும்.  ஏனெனில், தமிழக டி.ஜி.பி. யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவரை டி.ஜி.பி. பணியில் இருந்து தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.  மேலும், மாற்றப்படும் அதிகாரிகளுக்குப் பொறுப்பு வழங்கப்படாதபோது அவர்களுடைய பணி பதிவேட்டில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. எனவே, அவ்வாறு மாற்றப்படுகிறவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதே நாள் 29 மார்ச் 2011

  • தைவான் இளைஞர் தினம்
  •  யாஹூ 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)
  •  துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது(1831)
  •  அயர்லாந்து, பொது இடங்களில் புகைபிடித்தலை தடை செய்த முதல் நாடானது(2004)
  •  கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் ஏபல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது(2007)      

உலக கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையை தோனி பெற வாய்ப்பு உள்ளது கபில்தேவ்

உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற வாய்ப்பு உள்ளது. இப்பட்டியலில் நான் மட்டும் 28 ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். என்னோடு தோனியும் சேர வேண்டும்,என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று, வரலாறு படைத்தது. தற்போது "தோனியின் படை சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இது குறித்து கபில் தேவ் கூறியது:

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வெல்லும் நேரம் நெருங்கி விட்டது. இதற்கான திறமை தோனி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையுடன், நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என்னோடு யாராவது சேர வேண்டும் என விரும்புகிறேன். இதற்கேற்ப, உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம். இம்முறை நல்லதே நடக்கும் என நம்புவோம். வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் ஒவ்வொருவரும் மைதானத்தில் களமிறங்குகிறோம். தற்போதைய இந்திய அணி சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

Narrow escape for two Karnataka Ministers

Karnataka Minister for Tourism Gali Janardhana Reddy and Health Minister B. Sriramulu had a miraculous escape when one of the tyres of their chartered flight burst while landing at Rajiv Gandhi International Airport here on Monday morning.
Air operations were disrupted for sometime. The chartered flight, Hawker-400XP, was on its way from Vidyanagar airport near Bellary in Karnataka to Delhi with the two Ministers, two crew members, and another person. The private plane was landing in Hyderabad for refuelling at 11 a.m.

விமான டயர் திடீரென வெடித்ததால் , அதில் பயணம் செய்யவிருந்து கர்நாடாக அமைச்சர்கள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆந்திர மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் மூலம் டில்லி செல்வதற்காக கர்நாடா மாநில அமைச்சர்கள் ( சுற்றுலாத்துறை )ஜனார்த்தனரெட்டி, ஸ்ரீராமுலு (சுகாதாரத்துறை) ஆகியோர் விமான நிலையம் வந்தனர். அமைச்சர்கள் விமானத்தில் ஏறியுடன் விமானம் புறப்பட ‌தயாராக இருந்த் போது விமானத்தின் ஒரு டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உடனே பயணிகள் பீதியடைந்தன. பின்னர் விமானம் நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த ஜனார்த்தனரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் இறக்கிவிடப்பட்டு வேறு விமானம் மூலம் டெல்லி சென்றனர்

Accidental explosion at Yemen arms factory kills 100


A powerful blast at an ammunition factory in southern Yemen left more than 100 people dead yesterday after forces loyal to the embattled President, Ali Abdullah Saleh, appeared to have been driven out of the area by Islamist militants.
The explosion came as talks to broker an end to the 32-year authoritarian rule of President Saleh stalled amid continued warnings that the country was sliding into armed conflict. After weeks of protests against his rule, President Saleh has claimed that if he left power al-Qa'ida in the Arabian Peninsula (AQAP) could begin to take hold throughout the country with Yemen a "time bomb" nearing civil war. 

 ஏமன் நாட்டில் அல்கொய்தாவினர் நடத்திய ‌தாக்குதலில் அரசுக்கு சொந்தமான ஆயுத ‌தொழிற்சாலை தீப்பிடித்தது.இதில் 100 பேர் உடல் கருகிபலியாயினர். ஏமனில் அதபிர் அலி அப்துல்லா சலே பதவி விலக்கோரி பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான அபிதினிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஜார் என்ற நகரில் துப்பாக்கி தோட்டக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி கொண்டிருந்தனர். சம்பவத்தன்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உடல்கருகி பலியானதாக கூறப்படுகிறது .

பேஸ்புக்குக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 'கலர்'!


உலகம் முழுக்க கிட்டத்தட்ட பேஸ்புக்குக்கு அடிமையாகிவிட்டதோ எனும் அளவு, அந்த நெட்வொர்க் பரந்து விரிந்துவிட்டது.

உலகின் முதல் நிலை இணையதள நிறுவனமான கூகுளே அஞ்சும் அளவுக்கு பேஸ்புக் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இப்போது இதற்குப் போட்டியாக புதிய சமூக நெட்வொர்க் தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார் பில் நிகுயென் என்பவர்.

இந்த தளம் ஸ்மார்ட்போன்களில் இயங்கக் கூடிய மொபைல் இணையதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன், ஆண்ட்ராய்ட் போன்களை வைத்திருப்போர், தங்களுக்குள் எளிதில் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளமுடியும்.

கணிப்பொறி யுகத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் மிக முக்கியமான வளர்ச்சியாக இந்த 'கலர்' சமூகத் தளம் பார்க்கப்படுகிறது

காங்கிரஸுக்கு ஓட்டுப் போடவே மாட்டோம் என சீமான் முன்னிலையில் உவரி மக்கள் அனைவரும் சத்தியம்!

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் மட்டும்தான் அவர் இலக்கு. 'திமுக, பாமக, அதிமுக யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டு போகட்டும். ஆனால் நமது இன விரோதி காங்கிரஸுக்கு மட்டும் ஓட்டளிக்காதீர்கள்' என்று அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று உவரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். உவரி பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட சீமான், பின்னர் அப்பகுதி மக்களிடம் பேசினார்.

மீனவர்களின் இன்றைய பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியே என்றும், இந்தக் கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க விட்டால், இப்போதுள்ள மோசமான நிலைதான் தொடரும் என்றும் அவர் கூறினார்.

உடனே அப்பகுதி மக்கள், "நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். மீனவர்களின் ஒட்டுமொத்த வாக்கையும் உங்களுக்கே அளிக்கிறோம்," என்றனர் ஒருமித்த குரலில்.

அதற்கு பதிலளித்த சீமான், "இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அடுத்த தேர்தல் வரை பொறுத்திருங்கள். இப்போது உங்கள் வாக்கை காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வீழ்த்துங்கள். அது போதும்," என்றார்.

மீனவ சமுதாயத்துக்கு காங்கிரஸ் அரசால் நேர்ந்த கொடுமைகளை விளக்கினார். ஈழத்திலும் தமிழக கடலோர மாவட்டங்களிலும் தமிழர் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸ்தான் என்பதை அவர் சொன்னபோது, உவரி மக்கள் உரத்த குரலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றனர்.

சீமான் கிளம்புவதற்கு முன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனைவரும் விரும்பினர். அவர்களை தனித் தனி குழுவாகப் பிரித்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார் சீமான்.

எக்காரணம் கொண்டும் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடவே மாட்டோம் என சீமான் முன்னிலையில் உவரி மக்கள் அனைவரும் சத்தியமடித்து கூறிச்சென்றனர்.

அதிமுக கூட்டணி தேர்தலில் வெல்லும்-144 சீட் கிடைக்கும்-கருத்துக் கணிப்பு

லென்ஸ்ஆன்நியூஸ் இணையதளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

160இடங்களில் போட்டியிடும் அதிமுகவுக்கு 100 இடங்கள் வரை வெற்றி கிடைக்கலாம். அதிமுக கூட்டணிக்கு 144 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு 88 இடங்கள் வரை கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம்.

தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. எனவே அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தில்தான் அது ஆட்சி அமைக்க முடியும். எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும். மிக மிக குறுகிய இடைவெளியில் வாக்கு சதவீதம் இருந்தாலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், விஜயகாந்த்தின் தேமுதிக இக்கூட்டணியில் இணைந்திருப்பதால்தான்.

அதேசமயம், திமுக கூட்டணியில் பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாச அளவில்தான் தோல்வி இருக்கும். இதற்கு கூட்டணிக் கட்சியினரிடையே காணப்படும் ஒத்துழையாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலன் அடைந்துள்ளனர் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் இலவச கலர் டிவியைப் பெற்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு 92 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வழங்கிய இலவச டிவியைப் பெற்று பயன் அடைந்துள்ளது.

எந்தக் கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற கேள்விக்கு திமுக என்று 46 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிமுகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 42 சதவீதம் பேர் மட்டுமே.

தமிழக வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவராக கருணாநிதி விளங்குகிறார். முதல்வர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று 43 சதவீதம் பேரும், ஜெயலலிதா என்று 42 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 61 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதாம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன். நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த்


தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.  நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த்

ஆளும் கட்சியினர் பாலாற்றில் மணல் கொள்ளையும், ஆட்சியில் பகல் கொள்ளையும் அடித்தனர். பாலாற்றில் 100 லாரிகளில் மணல் அள்ள லைசென்ஸ் கொடுத்து விட்டு 5 ஆயிரம் லாரிகளில் மணலை கடத்துகின்றனர்.


தண்ணீருக்காக இவர்கள் போராடவில்லை. மணல் எடுப்பதற்காக போராடினார்கள்.   உங்களை (மக்கள்) ஏமாற்றி உங்கள் வரிபணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நாடு நாடாக இருக்கும். இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது.


மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய நான் பெரிதும் நேசித்த எம்.ஜி.ஆரின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். நான் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கவில்லை.


நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் கட்சியினர்கள் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க தி.மு.க.வினர் முயல்கின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.

பொதுமக்களாகிய நீங்கள் சமாளிப்பது கஷ்டம். எனவே அ.தி.மு.க. கூட்டணி
வெற்றி பெற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.  

54 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவம் பாதுகாப்பு; டி.ஜி.பி.போலாநாத் அறிவிப்பு

தமிழக தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பாரபட்சமின்றி தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் விவாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2626 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 57 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 17 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுவரை 200 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளனர். கூடுதலாக 85 கம்பெனி படையினர் வர உள்ளனர். இவர்களுக்காக 8250 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

worlds safest car





Train derailed in Canada

கனடாவில் எரிபொருள் ஏற்றி சென்ற ரயில் தடம் புரண்டது

கனடாவிலுள்ள  ஒன்ட்டாரியோவில்  எரிபொருட்களை 25 டேங்கர்களில்      ஏற்றி சென்ற ரயில் தடம் புரண்டது .  இதில் எரிபொருள் டேங்கர்கள் தீ பற்றி எரிந்தன அதனை தீயணைப்பு  துறையினர் உடனே அணைத்தனர் இவ் விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்

லிபியாவில் கடாபியின் சொந்த ஊரை கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர்

அதிபர் கடாபி பதவி விலகவேண்டும் என்று கோரி அந்த நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் நடத்திவரும் கிளர்ச்சிக்காரர்கள் மீது கடாபி ஆதரவு ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது.

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் லிபியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அஜ்டாபியா நகரத்தை அன்னிய நாடுகளின் போர் விமானங்களின் உதவியுடன் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினார்கள்.

Obama to Speak to Nation About Libya


இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தான் பந்துவீச்சுக்கும் போட்டி; ரமீஷ்ராஜா

 
இந்தியா பேட்டிங்கில் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் பவுலிங்கில் நன்றாக இருக்கிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களும், பாகிஸ்தான் பவுலர்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். எந்த அணி தோற்றாலும் கடுமையாக போராடித்தான் தோற்கும். இந்திய அணி உள்ளூரில் விளையாடுவதால் நெருக்கடி கூடுதலாக இருக்கும். அதிக எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விளையாட வேண்டிய நிலை இந்தியாவுக்கு உள்ளது.இவ்வாறு ரமீஷ்ராஜா கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

 
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு வக்கீல் கோபால் சுப்பிரமணியம் 14 பக்க விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதனை படித்த பின்னர் நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
அவர்கள் கூறுகையில், புதிதாக எந்த விவரமும் அறிக்கையில் இல்லை. கறுப்பு பணத்தால் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி எந்த அளவில் விசாரணை நடக்கிறது? கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? எங்கிருந்து போனது? எப்படி போனது? என்ற மூலாதாரங்கள் பற்றி விசாரணை நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர்

இலவச தேர்தல் குறும் படம்

மாணவனின் சமுதாய அக்கறை ! இப்படத்தை  பார்த்து ஒரு வாக்காலன் திருந்தினாலும்  இப்படத்துக்கு வெற்றியே ! 

32 வெளி மாநில அதிகாரிகள் ; அரண்டு போகும் கட்சிகள்


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.


தேர்தலை சுதந்திரமாகவும், பாரபட்சமின்றி நியாய மாகவும் நடத்த வேண்டும் என்பதில் தலைமை தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரண் உள்பட பெரும்பாலான உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

புதிய டி.ஜி.பி.யாக போலாநாத் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே வடமாநிலங்களில் இருந்து வந்த 5 உயர் போலீஸ் அதிகாரிகள் தமிழக தேர்தல் பார்வையாளர்களாக பொறுப்பு ஏற்றனர்.

சென்னை மண்டலத்துக்கு ஜிதேந்தர், சேலம் மண்டலத்துக்கு ஜார்ஜ்அகமது, மதுரை மண்டலத்துக்கு டி.கே.பாண்டே, திருச்சி மண்ட லத்துக்கு பி.ஆர்.கே.நாயுடு பார்வையாளராக பொறுப்பேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கவும், தீவிர சோதனைகளை துணை நிலை ராணுவத்தினர், மாநில போலீசார், மாநில வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 

கடந்த 3 வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் வாகன சோதனை மூலம் பல கோடி ரூபாய் சிக்கியது. ஜவுளிகள், ஆடு, மாடு, கோழிகள் கூட பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை சந்தித்த போதும், பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வாக்காளர்களைக் கவர பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டால் பொதுமக்கள் 18004256669 மற்றும் 1965 எண்களில் புகார் செய்யலாம். 044-2840064 என்ற எண்ணுக்கு பேக்சில் தகவல் அனுப்பலாம். இ.மெயிலில் புகார் அனுப்ப விரும்புபவர்கள்,
itcontrolroomchennai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கு தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

இதை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 14 நாட்களே உள்ளதால், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை வேட்பாளர்கள் ரகசியமாக தொடங்கி உள்ளனர்.

இது தேர்தல் கமிஷனுக்கு ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது. பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் அதிரடி வேட்டை நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே வந்துள்ள வடமாநில 5 உயர் போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்


இதை ஏற்றுக் கொண்ட தலைமை தேர்தல் கமிஷன் உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக வடமாநிலங்களில் இருந்து மேலும் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழ்நாட்டுக்கு வரஉள்ளனர்.

இந்த 32 அதிகாரிகளும் ஐ.ஜி. மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளாவார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் முறை கேடுகளை தடுக்க வட மாநிலங்களில் இருந்து சுமார் 40 உயர் போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 32 அதிகாரிகளும் தமிழ் நாட்டுக்கு வரத்தொடங்கி விட்டனர். அவர்களது தலைமையில் தனி அதிரடிப்படை செயல்படும்.

அந்த படையுடன் இந்த போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையை இவர்கள் மேற்கொள்வார்கள்.

இந்த அதிரடி படைக்கு மாவட்ட கலெக்டரும், வருவாய்துறை அதிகாரிகளும், உள்ளூர் போலீசாரும் உதவியாக இருப்பார்கள் என்று அறி விக்கப்பட்டுள்ளது. 32 வடமாநில போலீஸ் அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தும் போது அந்த நடவடிக்கை கட்சி சார்பு இல்லாமல் பாரபட்ச மற்ற முறையில் நேர்மையாக இருக்கும் என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது.

இது குறித்து தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட போது உள்ளூர் போலீசார் கண்டும் காணாததும் போல இருந்து விட்டனர். அவர்களால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க இயலவில்லை. எனவே தான் வடமாநில உயர் போலீஸ் அதிகாரிகளை கண்காணிப்பு களத்தில் இறக்கி விட்டுள்ளோம் என்றார்.

தேர்தல் கமிஷனின் புதிய கட்டுப்பாடுகளால் ஏற்கனவே அரசியல் கட்சியினர் அரண்டு போய் உள்ளனர். தற்போது வடக்கில் இருந்து மேலும் 32 உயர் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்து இருப்பது, பெரும்பாலான வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

TAMIL NADU ELECTION 2011 AWARENESS


கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா? கருணாநிதி

முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்‌கதை, வசனம் எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

படத்தின் பாடல் சி.டி.,யை முதல்வர் வெளியிட தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது, தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. இந்நேரம் நான் ஏதாவது ஒரு கூட்டத்தில் என்னுடைய கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய பெரும் பணி இருக்கிறது. அந்தப் பணியையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றால் இந்த பணியையும் நான் அந்தப்பணியை போல மதிப்பது தான் காரணம். 

சினிமா உலகத்தை விட்டு, திரைப்படத் துறையை விட்டு, எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான். நான் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல்வராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், எழுத வேண்டும், எழுத வேண்டும், எழுத வேண்டும் என்பதிலே தான். எழுத்தை மறந்து விட்டு, இந்தக் கலைத் துறையை விட்டு, இலக்கியத் துறையை விட்டு விட்டு, அரசியல் துறையில் மட்டும் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் முடியாத காரியம். எனவே தான் அரசியல் துறையில் ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

ஒரு பெரியவர் ஒருவர் சொல்லியிருக்கிறார், கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று!
சினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம் தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிறோம்? மன்னிக்க வேண்டும் ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.

சிலர் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன், அவர்களுடைய நன்மைக்காக, வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள், சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள், நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

தமிழ்த்துளி அமைப்பின் பேச்சுப் போட்டி


துபாயில் தமிழ்த் துளி அமைப்பின் சார்பில் மார்ச் 25ம் தேதியன்று காலை லேண்ட்மார்க் ஹோட்டலில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பேச்சுப் போட்டி பல்வேறு வயதுடைய மாணவ,மாணவியருக்காக பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. தாய்மொழி தமிழை பாடமாக படிக்க முடியாவிட்டாலும் பேச்சுப் போட்டி மூலம் தங்களது தமிழார்வத்தை 3 வயது முதல் 19 வயது வரையிலான மாணாக்கர்கள் பங்கேற்றது பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...