|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 March, 2011

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

 
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு வக்கீல் கோபால் சுப்பிரமணியம் 14 பக்க விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதனை படித்த பின்னர் நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
அவர்கள் கூறுகையில், புதிதாக எந்த விவரமும் அறிக்கையில் இல்லை. கறுப்பு பணத்தால் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி எந்த அளவில் விசாரணை நடக்கிறது? கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? எங்கிருந்து போனது? எப்படி போனது? என்ற மூலாதாரங்கள் பற்றி விசாரணை நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...