|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 May, 2012

சாதியை குறிப்பிட சொல்லி வற்புறுத்தக் கூடாது.


சாதிவாரியான கணக்கெடுப்பில் சாதி என்ற கேள்விக்கு யாராவது மனித சாதி, ஆண் சாதி, பெண் சாதி, சாதி இல்லை என்று எதை கூறினாலும் அப்படியே ஏற்க வேண்டும் என்று இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்தக் கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்படும் விண்ணப்பத்தில் 17 கேள்விகள் உள்ளன, அவற்றில் பொருளாதார நிலை மற்றும் சாதி, மதம் குறித்த கேள்விகள் அடக்கம்.இந்தக் கேள்விகளுக்கு பதில் சேகரிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம்:

எந்த பதிலுக்கும் ஆதராமாக ஆவணங்களைக் கேட்கக் கூடாது.சாதி பற்றிய கேள்விக்கு பொதுமக்கள் என்ன பதிலை சொன்னாலும் அதை அப்படியே பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக, மனித சாதி, ஆண் சாதி, பெண் சாதி, சாதி இல்லை என்று கூறினாலும் அப்படியே எழுத வேண்டும்.சாதியை குறிப்பிட சொல்லி வற்புறுத்தக் கூடாது. தெரியாது என்று கூறினாலும் அதை பதிலாக ஏற்க வேண்டும். ஒருவரின் சாதி பற்றிய விவரத்தை மற்றவரிடம் வெளியிடக் கூடாது.உங்களது பொருளாதார நிலை பற்றிய தகவல்களை வெளியிடலாம் என்று ஆவணத்தில் கையெழுத்து பெற வேண்டும்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.சாதி பற்றிய தகவல் மிகவும் உணர்ச்சிகரமானது என்பதால் அதை சேகரிக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைத்தொழிலாளர்கள் கொத்தடிமையாக 50 ஆயிரம் பேர்


தமிழகத்தை சேர்ந்த 50 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள், வடமாநிலங்களில் கொத்தடிமையாக இருப்பதாக, மதுரையில் நடந்த குழந்தை உழைப்பு எதிர்ப்பு தின மாநில கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள்: வடமாநிலங்களில் உள்ள முறுக்கு, மிட்டாய், அப்பளம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு, தமிழக குழந்தைகளை அனுப்ப நிறைய ஏஜன்ட்கள் உள்ளனர். 7-15 வயது குழந்தைகள், தொழிலுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். குழந்தை ஒன்றுக்கு, ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. முன் பணமாக, ரூ.10 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தையை அழைத்துச்செல்லும் ஏஜன்ட்கள், அதன் பின் பேசியபடி பணம் தருவதில்லை. தென்மாவட்டத்திலிருந்து, 50 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் வடமாநிலத்தில் கொத்தடிமையாக உள்ளனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

ஆக்ராவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட உசிலம்பட்டி பாலமுருகன் கூறியதாவது: மிட்டாய் தயாரிக்கும் கம்பெனிக்கு 22 வயதில் வேலைக்கு சென்றேன். உடம்பில் தழும்பு இல்லாத இடமே இல்லை. அந்த அளவுக்கு அடி, உதை வாங்கினேன். இரு முறை வலது மார்பில் ஊசி போட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டேன். இன்னும் என் உடல்நிலை பழைய நிலைக்கு திரும்பவில்லை.பாலமுருகன் தாய் விஜயா: என் கணவர் கூலி வேலை பார்க்கிறார். வறுமையால் தான் மகனை வேலைக்கு அனுப்பினேன். ஒரு வருட ஒப்பந்தத்தில் அழைத்து சென்றனர். மூன்று ஆண்டுகள் கொடுமைப்படுத்தியுள்ளனர். எழுந்து நடக்கவே சிரமப்படுகிறான். என் மகனின் இந்த நிலைக்கு நான் தான் காரணம் என நினைக்கும் போது, இதயம் வலிக்கிறது, என்றார்.குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார தென்மண்டல அமைப்பாளர் வனராஜன் கூறியதாவது: சட்டத்தில் குழந்தைகளுக்கான வயதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக உள்ள, 1986ன் குழந்தை தொழிலாளர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மதுரை மாவட்டத்தில் மீட்கப்பட்ட 44 குழந்தைகளுக்கு, அரசின் விடுவிப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே உதவித்தொகை பெற
முடியும், 

மக்கள் போராட்டத்தை தொடங்குவேன் அன்னா ஹசாரே!


மராட்டியத்தில் வலிமையான லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று முதல் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தொடங்கினார்.75 வயதாகும் ஹசாரே, கோவில் நகரமான ஷீரடியில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர்,’’பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும், நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அப்போது டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெரும் மக்கள் போராட்டத்தை தொடங்குவேன்.

லூசுத்தனமானபேச்சு அப்துல்கலாம்!

லோக்பால் மசோதா நிறைவேறினால், சிறைகள்தான் நிரம்பும், லஞ்ச ஊழலை ஒழிப்பதில் சிறுவர், சிறுமியர் முக்கிய பங்காற்ற வேண்டும்' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அப்துல்கலாம், சிறுவர்களிடையே பேசியபோது,  ‘’லஞ்ச ஊழலில் சிக்கும் ஒருவர் குற்றவாளி என, நிரூபணமாகும் பட்சத்தில் அவரை சிறையில் அடைக்கத் தான் லோக்பால் சட்டம் உதவும். இதன் மூலம் பலரும் சிறையில் அடைக்கப்படுவர். இதற்குத்தான் லோக்பால் உதவும். ஆனால், நாம் வேண்டுவது அதுவல்ல, நல்ல மனிதர்களைத்தான்.லஞ்ச, ஊழலை, தங்களது வீடுகளிலிருந்தே சிறுவர்கள் களைய முற்பட வேண்டும். "எங்கள் குடும்பத்தில் எந்த வகையிலும் ஊழலுக்கு இடமே இல்லை' என்ற உறுதிமொழியை சிறுவர்கள் ஏற்க வேண்டும். லஞ்ச லாவண்யம் ஒழிய இது ஒன்றுதான் வழி. இளைஞர்கள்தான் இந்த நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கை’’ என்று தெரிவித்தார்.

ரயிலில் இன்டர்நெட்...

ரயிலில் பயணம் செய்யும் போது டேட்டா கார்டு இல்லாமல் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதியினை இந்தியன் ரயில்வே வழங்க உள்ளது. டேட்டா கார்டு வசதியுடன் பயணங்களில் கூட இன்டர்நெட் தொழில் நுட்பத்தினை பயன்படுத்த முடிகிறது. தற்போது இந்த டேட்டா கார்டு இணைக்காமலேயே ரயிலில் பயணிக்கும் போது, இன்டர்நெட் பயன்படுத்த ஐஎஸ்ஆர்ஓ அமைப்பிடம் இருந்து (இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்) ரயில்வே துறை அனுமதி பெற்றுள்ளது.செயற்கைகோள் மூலம் இந்த இன்டர்நெட் வசதியினை ரயில்வே கூடிய விரைவில் வழங்கும் என்று ரயில்வே துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இன்டர்நெட் வசதியை வழங்க, தற்பொழுது கவுரா ராஜ்தானி ரயிலில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரயிலில் இந்த இன்டர்நெட் வசதியை கொடுக்க, ரயில்வே துறை ரூ.6.30 கோடியை வழங்கி உள்ளது. இந்த ப்ராஜெக்ட் மும்பையை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டுவிட்டால் மற்ற ரயில்களிலும் இந்த இன்டர்நெட் வசதி வழங்கப்பட உள்ளது.

Naan EE


இதே நாள்...


  • போலந்து கொடி நாள்
  • ஈரான் ஆசிரியர் தினம்
  • இந்திய திரைப்பட இயக்குனர் சத்யஜித் ராய் பிறந்த தினம்(1921)
  • இத்தாலி ஓவியர் லியானர்டோ டா வின்சி இறந்த தினம்(1519)
  • உலகின் முதலாவது ஜெட் விமானம், லண்டன்-ஜோகன்னஸ்பர்க் இடையே பறந்தது(1952)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...