|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 July, 2011

மகன்களை மாடாக்கிய தந்தை!


அமராவதி: நாட்டில் ஊழல், ஆட்சி அதிகாரம் என்று தான் பேசி வருகின்றோமே, வறுமையை ஒழிக்கவும் ஏழைகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும் யாரும் முழு யோசனை கூற முன்வருவதில்லை. அடிப்படை விஷயங்கள் ஆராய்ந்தும், ஏழ்மையில் வாழும் நபர்கள் குறித்து கணக்கெடுத்து அதற்கேற்ப அரசு செயல்பட்டால் நாட்டில் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது. இருப்பினும் இந்திய நாடு வறுமையில் இருந்து மீளவில்லை என்பதை காட்டும் வகையில் மகன்களை மாடாக மாற்றிய கொடிய சம்பவம் நடந்திருக்கிறது மகாராஷ்ட்டிராவில்.

அமராவதி மாவட்டத்தில் சீர்கேட் என்ற கிராமத்தில் வசிப்பவர் கிஷன்ராவ் தபூர்கர். இவர் ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் வைத்திருக்கிறார். ஆனால் சமீப கால இயற்கை பொய்த்த காரணமாக கடும் வறுமையில் வாடியிருக்கிறார். சமீபத்தில் மழை பெய்ததை அடுத்து அவரது நிலத்தை பதம் செய்ய துவங்கினார். முதல் கட்டமாக நிலத்தை உழுவதற்கு காளை மாடுகள் இல்லை. என்ன செய்வது தனது 2 மகன்களையும் ஏரில் பூட்டி நிலத்தில் களம் இறக்கி உழவுப்பணியை துவக்கியுள்ளார்.

இந்த விஷயம் லோக்கல் பத்திரிகைகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியுற செய்துள்ளது. காளை மாடுகள் வாங்கும் அளவிற்கு எங்களுக்கு போதிய பணம் இல்லை, இதனால் எங்களுக்கு வேறு வழிதெரியவில்லை என்கின்றனர் மகன்கள் சோகத்துடன். நாள் ஒன்றுக்கு 2 காளைகளுக்கு ஆயிரம் ரூபாய் வாடகை கேட்கின்றனர், விலைக்கு வாங்க வேண்டுமென்றால் ரூ 20 ஆயிரம் தேவைப்படும் என்ன செய்வது நாங்கள் மாடாக உழைக்கிறோம் என்று முடித்துக்கொண்டனர்.

8 ஏக்கர் நிலம் இருந்தாலும் இந்த குடும்பம் இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழ் தான் வாழுகிறது. இந்த செய்தி வெளியானதை அடுத்து இவருக்கு தேவையான வசதி செய்து கொடுக்க உள்ளூர் நிர்வாகம் முன்வந்திருக்கிறது. ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்தாலும் சாதி அடிப்படையில் இவர்களுக்கு காளை மாடுகள் அரசு சார்பில் வழங்க முடியாது என்று கைவிரித்து விட்டனர்.

தலைவகிடில் பொட்டு வைப்பது ஏன்?

குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. பெண்கள் தலைவகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

இலங்கைக்கான நிதியுதவி ரத்து அமெரிக்கா முடிவு!

இலங்கையில் 2009ல் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால், அந்நாட்டிற்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது. இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரில், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாகவும், போர்க் குற்றங்களில் சிங்கள ராணுவம் ஈடுபட்டதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. போர்க் குற்றங்கள் தொடர்பாக, பிரிட்டனின் "சேனல் 4' செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகள், இக்குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுவளித்தன. இந்நிலையில், 2010ம் நிதியாண்டில் இலங்கைக்கு 13 மில்லியன் நிதியுதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டது. அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகம் வந்த போது, முதல்வர் ஜெயலலிதா இலங்கை விவகாரம் குறித்த, தனது கவலையைத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அமெரிக்கா உதவும் என, ஹிலாரி உறுதியளித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி, மனித உரிமை மீறல் விவகாரத்தின் அடிப்படையில், இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான ஓட்டெடுப்பு நடந்த போது, "சேனல் 4' வெளியிட்ட வீடியோ காட்சிகள் எம்.பி.,களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

இந்தத் தடையை வரவேற்றுள்ள பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி, 2009 போர் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு தான் பொறுப்பு என, திட்டவட்டமாகத் தெரிவித்தது. இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்; பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்; காணாமல் போன பத்திரிகையாளர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும். இவற்றில் இலங்கை அரசின் நேர்மையான செயல்பாடுகளை ஒபாமா அரசு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், அமெரிக்கா தனது நிதியுதவியை மீண்டும் வழங்கும். போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்பட மாட்டாது.

இதே நாள்...


  • எகிப்து புரட்சி தினம்
  •  லிபியா புரட்சி தினம்
  •  இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)
  •  இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)
  •  வில்லியம் ஆஸ்டின் பேர்ட், முதலாவது தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1829)
  • இதே நாள்...


  • ஜாம்பியா மறுமலர்ச்சி தினம்
  •  முதன் முதலாக மோட்டர் சைக்கிள் பந்தயம் பிரான்சில் நடைபெற்றது(1894)
  •  விண்டோஸ் லைவ் மெசன்ஜர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது(1999)
  •  வைலி போஸ்ட், உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்(1933)
  • இந்த வார ராசி பலன் (22-7-2011 முதல் 28-7-2011 வரை)


    மேஷம்:

    பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பிரச்சனைகள் தீரும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். பண வரவு அதிகரிக்கும். மங்கலகரமான பொருட்கள் வீடு தேடி வந்து மகிழ்விக்கும். தாய் வழி உறவில் நல்ல செய்தி வரக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன்தொகை கிடைத்து மகிழக்கூடும். சிலர் வேறு வேலைக்கு மாறலாம். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு.

    ரிஷபம்:

    பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவு சீராக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வீண் செலவுகளைக் குறைக்கவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கோரிக்கைகள் நிறைவேறலாம்.

    மிதுனம்:

    பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனம் உற்சாகமாக இருக்கும்.

    பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மனம் நிம்மதியாக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும்.

    கடகம் :

    பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவு சீராக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் மேம்படும்.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். தாய் வழி உறவுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் செல்ல நேரலாம். மனதில் அமைதி இருக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு இடமாற்றம் கிடைக்கக்கூடும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

    சிம்மம்:

    பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். மனதில் புது தெம்பு பிறக்கும். செயற்கரிய சாதனைகள் புரிவீர்கள். மனம் மகிழும் செய்தி ஒன்று வீடு தேடி வரும்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். சேமிப்பு பெருகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் முடிப்பது நல்லது. உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

    கன்னி:

    பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் உள்ளவர்களைக் கண்டு விலகிவிடுவீர்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். பிரிந்த உறவுகள் சேரக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை.
    வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி மாற்றம் கிடைக்கலாம். பண வரவுக்கு குறைவிருக்காது.

    துலாம்:

    பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். எதிலும் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.

    விருச்சிகம்:

    பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு சீராக இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கன்னிப் பெண்கள் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பாராட்டக்கூடும். கோரிக்கைகள் நிறைவேறும்.

    தனுசு:

    பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொலைபேசி மூலம் நல்ல தகவல் வந்து சேரலாம். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வீண் பயணங்களைத் தவிர்க்கவும்.

    பெண்களுக்கு: கணவரை அனுரித்துச் செல்லவும். சிறு சிறு கடன் தொல்லைகள் ஏற்பட்டாலும், அவற்றால் பாதிப்பு இருக்காது. கோபத்தைக் குறைக்கவும். எதிலும் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். வீண் பேச்சைக் குறைக்கவும்.

    மகரம்:

    பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். வரவுக்கேற்ற செலவும் உண்டு. குல தெய்வ வழிபாடு செய்ய குடும்பத்தோடு வெளியூர் செல்லக்கூடும்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். சேமிப்பு பெருகும். உடல் நலம் மேம்படும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பண வரவு சீராக இருக்கும்.

    கும்பம்: 


    பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நீண்ட கால எண்ணம் ஒன்று நிறைவேறும். யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். சேமிப்பில் கவனம் தேவை.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். நீண்ட காலமாக வராத உறவினர் வருகையால் மனம் மகிழும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வேலை பளு அதிகரித்தாலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

    மீனம்: 

    பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையன பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். பணி நிமித்த பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

    ஊட்டியில் இலங்கை படையினருக்குப் பயிற்சி– நாம் தமிழர் எதிர்ப்பு!

    நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி ராணுவத்தைச் சேர்ந்த 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்தும், அதனை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகே வெலிங்டனில் அமைந்துள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் சிங்கள இனவெறி ராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சியளிப்பதாக உறுதியான செய்திகள் வந்துள்ளது. இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழர்களை அவமதிப்பதாகும்.

    இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்திக் குண்டுகள் வீசியும், விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியும் பல பத்தாயிரக்கணக்கான மக்களை சிறிலங்கா ராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.

    அதன் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிவரும் நிலையில், அந்நாட்டுப் படையினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கிறது என்றால், சிறிலங்காப் படைகள் அப்படி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்று இந்திய அரசு கூறுகிறதா?  தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 543 மீனவர்களைக் கொன்ற சிறிலங்க அரசின் படைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய ராணுவம் முற்பட்டுள்ளது என்றால், அதற்குப் பொருள் என்ன?

    மீனவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த தேசத்திற்கும், இறையாண்மைக்கும் விடப்பட்ட சவால் அல்லவா? அந்நாட்டு கடற்படையின் நடவடிக்கைகளை நியாயமானது என்று இந்திய அரசும், ராணுவமும் கருதுகின்றனவா? இல்லை, இதுவரை சுட்டது சரியில்லை, எங்களிடம் பயிற்சிப் பெற்றுச் சென்று, ஈழத் தமிழினத்தை அழித்ததுபோல், தமிழக மீனவர்களையும் கொத்துக் கொத்தாக கொன்று குவியுங்கள் என்று பயிற்சியளிக்கிறதா?

    இப்படி கூப்பிட்டுப் பயிற்சி கொடுப்பது ஏன்? தமிழக மீனவனை சிங்கள கடற்படை அழிப்பதை கண்டுகொள்ளாமல் ராணுவ உறவு பேணும் இந்திய அரசு, இதேபோல் இந்தியாவின் நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் வருவதற்கு காரணமாக அது கருதும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்குமா?

    சிங்கள இனவெறி ராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அவர்களுக்கு அண்டை நாடாக இருக்கக் கூடியது இந்தியா மட்டும்தான். அப்படியிருக்க அந்நாட்டு ராணுவத்திற்கு ஒப்பந்தம் போட்டு பயிற்சியளிக்க என்ன அவசியம் உள்ளது? ஈழத் தமிழினத்தை கொன்று குவித்தது போதாது, எதிர்காலத்திலும் அதற்கு அவசியம் ஏற்படும், அப்போதும் கொன்று குவிக்கத் தயாராகுங்கள் என்பதற்காக இந்திய ராணுவம் பயிற்சியளிக்கிறதா?  ஈழத் தமிழினத்தை அழிப்பதற்குத் துணைபோன இந்திய அரசும், ராணுவமும், எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்பதற்கான அத்தாட்சியா இந்தப் பயிற்சித் திட்டம்?

    இலங்கை அரசின் மீதான போர்க் குற்றச்சாற்று மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ் மண்ணிலேயே சிங்கள இனவெறி ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பது என்றால், இது தமிழனை சீண்டிப் பார்க்கும் செயலல்லவா?  இதனை உடனடியாக இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும்.

    ஈழத் தமிழினப் படுகொலைப் போரைத் தூண்டி விட்டதே மத்திய காங்கிரஸ் அரசுதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமான அந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதுபோல் அந்நாட்டுடன் நட்புறவு கொண்டாடுகிறது இந்திய அரசு. இது தமிழ்நாட்டில் வாழும் 7 கோடித் தமிழர்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை நாம் தமிழர் கட்சி நேரடியாக எதிர்கொள்ளும்.

    இன்று மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதையும் தாண்டி பயிற்சி நீடித்தால், இந்திய அரசு கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

    இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 12ம் தேதி நாடாளுமன்றத்திற்கு எதிரே வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்!

    இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவைத் திரட்ட டெல்லியில் ஆகஸ்ட் 12ம் தேதி நாடாளுமன்றத்திற்கு எதிரே மதிமுக தலைவர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

    மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் சமச்சீர் கல்வி முறையை உடனே அமலாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை கண்டனத்துக்கு உரியது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க அரசு, தன் போக்கை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்தும், தமிழகத்தின் உரிமையை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும், மதுரையில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சிங்கள ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டெம்பர் 15ம் தேதியன்று திருநெல்வேலியில் திறந்தவெளி மாநாடு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...