|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 April, 2012

பாரதிதாசன் பிறந்த நாள்...


தமிழ் மக்களுக்குப் பாடல்கள் வழியாக உணர்ச்சியூட்டித் தமிழ் உணர்வுபெறச் செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.பாவேந்தர் பிறந்த புதுவை மண்ணில் ஒவ்வொரு ஆண்டும் புதுவை அரசின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்று(29.04.2012) காலை பதினொரு மணியளவில் புதுவை சட்டப்பேரவையின் எதிரில் உள்ள பாவேந்தர் சிலைக்குப் புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி, சட்டப்பேரவைத்தலைவர் சபாபதி, அமைச்சர்கள் இராசவேலு, தியாகராசன், அரசுகொறடா நேரு ஆகியோர் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். பிற தமிழமைப்புகளைச் சார்ந்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.புதுவையில் உள்ள பாவேந்தர் இல்லத்துக்கு நான் காலை 10 மணிக்குச் சென்றேன். மன்னர் மன்னன் ஐயா எங்களுக்கு முன்னதாக நினைவில்லத்தில் குடும்பத்தினருடன் இருந்தார்கள். பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் இடத்துக்குப் புறப்படுவோம் என்றார்.

பாவேந்தர் பெயரன் கோ.பாரதியின் வண்டியில் மன்னர்மன்னன் அவர்கள் அமர்ந்துகொண்டார். நான் என் வண்டியில் பாவேந்தர் சிலை அமைவிடத்திற்குச் சென்றேன். அங்குப் பொதுவுடைமை இயக்கத்தவர்களும், திராவிடர் கழகத்தினரும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவித்து உரையாடிக்கொண்டிருந்தனர். பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடினர்.புதுவை முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் ஆர்வமுடன் வந்து மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பாவேந்தரின் நினைவில்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய நிகழ்வுகளை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு வாழ்த்தினர்.பாவேந்தரின் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக ஒன்றுகூடித் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்குப் பாடல்வழி பாடுபட்ட மாபெரும் பாவலரை நினைவுகூர்ந்தனர்.

முதன்முறையாக முதலிடத்தை சாம்சங்!

அதிக செல்போன்களை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம். உலகம் முழுக்க செல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோக்கியா, சாம்சாங் போன்ற முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல புதுமைகளை புகுத்தி, புது ரக செல்போன்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான செல்போன் விற்பனையில் எந்த நிறுவனம் அதிக செல்போன்களை விற்பனை செய்துள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சாம்சங் நிறுவனம் 93.5 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் 82.7 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன்மூலம் கடந்த 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த நோக்கியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து இருக்கிறது சாம்சங்.சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது 36 சதவீதம் அதிகமாகும். இதன் மொத்த நிகரலாபம் ரூ23,400 கோடி ஆகும். இதுபோல் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது சாம்சங். சாம்சங்கின் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ‌மொபைல்கள் அதிகளவு விற்பனையானதே அந்த நிறுவனம் முதலிடம் வந்ததற்கான முக்கிய காரணம்.

இதே நாள்...


  • சர்வதேச நடன தினம்
  • ஜப்பான் தேசிய தினம்
  • புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)
  • இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)

சைபர் குற்றங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகம் முதலிடம்.

 2010-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவும், கர்நாடகமும் முன்னிலையில் உள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் 246 சைபர் குற்ற வழக்குகளும், கர்நாடகத்தில் 176 வழக்குகளும் 2010ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.சைபர் குற்றங்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் 14 குழந்தைகள் காணாமல்...?

தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் காணாமல் போகும் குழந்தைகளில் 8 சதவீதம் பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள் என்று அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர், வணிக மற்றும் பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகின்றன.நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ல் 5111 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் வரை 1146 குழந்தைகள் காணாமல் போயுள்ளன.

ஊழல் விபசாரத்தை விட மோசமானது.


போலி ஆயுத பேரத்தில் பங்காரு லட்சுமணனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்த டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி கன்வல் ஜீத் அரோரா, ஊழலுக்கு எதிரான தனது கருத்துக்களை ஆவேசமாக, ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.தீர்ப்பில் அவர், "ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது. விபசாரம் என்பது தனிமனித ஒழுக்கத்தைத்தான் பாதிக்கிறது. ஆனால் ஊழலானது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரே அளவில் சீரழித்து விடுகிறது. நாட்டுக்கு ஊழல் பகை. மனிதர்களை இது கோபத்துக்கு ஆளாக்குகிறது'' என கூறி உள்ளார்.மேலும் அவர் ஊழல் பற்றி குறிப்பிடுகையில், " பிரச்சினை என்னவென்றால், இந்தச் சமூகம் ஊழலுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுகிறது. எனவே உண்மையிலேயே ஊழலற்ற ஒரு சமூகத்தை காண நாம் விரும்புகிறோமா என்ற கேள்வியை நம்மை நாம் கேட்க வேண்டிய தேவை எழுந்து உள்ளது'' என்றும் தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...