|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 September, 2011

இதே நாள்...


  •  சிங்கப்பூர் ஆசிரியர் தினம்
  •  லிபியா புரட்சி தினம்(1959)
  •  உஸ்பெகிஸ்தான் விடுதலை தினம்(1991)
  •  வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது(1897)
  •  ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம், பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1914)

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்!


லரின் மத்தியில் உரையாற்றும்போது(எழுதிவைத்து பேசினால்கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம். நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

*உங்களைவிட தகுதியில் குறைந்தவர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத்தை செய்ய முடியும்போது, அதை உங்களாலும் நிச்சயம் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும்.

* ஒரு அலுவலகத்தில் நீங்கள் உயரதிகாரியாக இருக்கலாம். ஒரு முக்கியமான கூட்டத்தில் நீங்கள் பேச வேண்டியிருக்கலாம். இந்த சமயத்தில் உங்களுக்கு எந்த பதட்டமும் வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு கீழான பதவியில் இருப்பவர்கள்(பதவி ரீதியாகவாவது) உங்களை மட்டம் தட்டும் நிலையில் இருக்க மாட்டார்கள். மேலும், தேவைப்பட்டால், அவர்கள் அனைவருமே முட்டாள்கள் என்றுகூட நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.


* நீங்கள் உங்களது அனுபவத்தில் கேட்ட பலவித உரைகளையும், பேச்சுக்களையும் நினைவுப்படுத்திப் பார்க்கவும். அவற்றில் ஏதாவது உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறதா? அல்லது உலகை வென்றிருக்கிறதா? அல்லது அந்த உரையை வழங்கிய நபரிடம் நீங்கள் புதிதாக எதையேனும் கண்டீர்களா? உலகில் எவருமே பேசாத ஒன்றை அவர் பேசி விட்டாரா? இத்தகைய கேள்விகளுக்கு, பொதுவாக, நீங்கள் தரும் விடை இல்லை என்பதே. இதே மாதிரிதான் உங்களின் நிலையும். உங்கள் பேச்சைக் கேட்பவர்கள், உங்களை நுணுகி கவனிக்கப் போவதில்லை. உங்களால் முடிந்ததை, பதட்டப்படாமல் பேசிவிட்டு வந்தாலே அது சிறந்த உரையாக இருக்கும்.

* எங்காவது பேசப்போகும்போது, படபடப்புடன் இருக்க வேண்டாம். உங்களின் பெயர் வாசிக்கப்படப்போகும் சூழல், மேடையின் பிரமாண்டம், கேட்பவர்களின் கண்கள் என்ற எதை நினைத்தும் பரபரப்படைய வேண்டாம். அந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை நினைத்து, ரிலாக்சாக இருக்கவும். முடிந்தளவு, கேட்பவர்களின் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கவும். அதன்மூலம் உங்களின் சூழ்நிலை இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பும்.

*ஒரு விஷயத்தின் மையக்கருவைப் பற்றி நேரடியாக பேச வேண்டிய அவசியம் இருக்காதவரை, வழக்கமான விமர்சனக் கருத்துக்கள் அல்லது சம்பவக் குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே பேசத் தொடங்கவும். ஏனெனில், சம்பவக்குறிப்பு முறையில் நாம் எதையும் எளிதாக மறக்க மாட்டோம்.

* நீங்கள் பேசத் தொடங்கும் முன்பாக, மதிப்பிற்குறிய தலைவர் அவர்களே/அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே/பெரியோர்களே, தாய்மார்களே/மாணவச் செல்வங்களே/அன்பார்ந்த ஊழியர்களே, என்ற வகையில் தொடங்கினால், மேடையில் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில நொடிகள் அவகாசம் கிடைக்கும். அதன்மூலம் பிறவற்றை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

கிடைக்குமா கேபிள் முன் பணம்?

தமிழகத்தில் அரசு கேபிள் "டிவி' நாளை முதல் இயங்க உள்ள நிலையில், உள்ளூரில் கேபிள் இணைப்பு வழங்க பொதுமக்களிடம் இருந்து, "அட்வான்ஸ்' பணம் வசூலித்த, "ஆப்ரேட்டர்கள்' அதை, திரும்ப கொடுக்காமல் ஏமாற்ற வாய்ப்புள்ளதால், அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, "கேபிள்' இணைப்புக்காக பெற்ற முன் பணத்தை மக்களுக்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், '89ம் ஆண்டு, "கேபிள்' இணைப்பு மூலம் காலை, மாலை இரண்டு படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. "கேபிள்' இணைப்பு தொழில்நுட்பம் படிபடியாக வளர்ச்சி அடைந்த நிலையில், "சேட்டிலைட்' சேனல்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிபரப்பாகின. ஒவ்வொரு பகுதியிலும், "கேபிள்' இணைப்புகள், "ஆப்ரேட்டர்கள்' மூலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில், 1.50 கோடி வீடுகளில், "கேபிள்' இணைப்பு பெற்று, மாதம் தோறும், 200 முதல், 300 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

வீடுகளுக்கு கேபிள் இணைப்பு பெறுபவர்கள், "ஒயருக்கான' கட்டணத்தை முன் பணமாக, 500 ரூபாய் வரை செலுத்தினால் மட்டுமே, "ஆப்ரேட்டர்கள்' கேபிள் இணைப்பு வழங்கினர். இதன்படி, ஒவ்வொரு வீடுகளிலும், "கேபிள்' இணைப்பு பெற, "அட்வான்ஸ்' தொகையை ஆப்ரேட்டர்கள் பெற்றுள்ளனர். "கேபிள்' இணைப்பு ரத்து செய்பவர்களுக்கு, ஒயருக்காக பெறும் முன் பணம், 500 ரூபாய் திரும்ப கொடுக்கப்படும் என்று, "ஆப்ரேட்டர்கள்' உறுதி அளித்தே, இணைப்புகளை வழங்கியுள்ளனர். "கேபிள்' இணைப்புகளை ஏகபோக உரிமை கொண்டாடி வந்த தனியார்களுக்கு, "செக்' வைக்கும் விதமாக, தமிழக அரசு கேபிள், "டிவி' ஒளிபரப்பை அரசுடமையாக்கியுள்ளது, பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதம், 1.45 கோடி வீடுகளுக்கு "கேபிள்' இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாதம் தோறும் பொதுமக்கள், 70 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமென்று அறிவித்துள்ளார். அரசு கேபிள் மூலம் மலிவு கட்டணத்தில், 90 சேனல்களை, பொதுமக்கள் பார்க்கும் வசதி பெற்றுள்ளது வரவேற்க கூடியதாக உள்ளது. நாளை முதல் அரசு கேபிள் ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், "கேபிள்' ஆப்ரேட்டர்கள், பொதுமக்களிடம், ஒவ்வொரு இணைப்புக்கும் பெற்ற, "அட்வான்ஸ்' தொகையை திரும்ப கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், 1.50 கோடி இணைப்புக்கு, ஒவ்வொரு இணைப்புக்கும் பெற்ற முன் பணம் 500 கோடி ரூபாய் வரை, "ஆப்ரேட்டர்கள்' வசம் உள்ளது.

அரசு கேபிள், "டிவி' தனியார் வசம் இருந்து பெற நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது கேபிள் இணைப்பு கொடுத்துள்ள ஆப்ரேட்டர்கள், பொதுமக்களிடம் பெற்ற முன் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிட வாய்ப்புள்ளது. இந்த முன் பணத்தை பொதுமக்களுக்கு அளித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், அரசு "கேபிள்' நிறுவனம் தனியார் ஆப்ரேட்டர்களிடம் இருந்து ஒயர் உள்ளிட்ட உபகரணங்களை கையகப்படுத்தி, இதன் மூலமாக பொதுமக்களுக்கு அரசு கேபிள் இணைப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் போது பொதுமக்களிடமிருந்து அட்வான்ஸ் தொகை வசூலிப்பதை தவிர்க்கலாம். அது முடியாது எனில், பொதுமக்களிடம் பெற்ற முன் பணத்தை, "ஆப்ரேட்டர்களிடம்' இருந்து அரசு வசூலித்து, அதன் மூலமாக அரசு கேபிள் இணைப்பை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணம் ரூ.5 கோடி வீண் !

கனிமொழி நடத்திய, "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணத்தைச் செலவழித்ததால், ஐந்து கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது,'' என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார்.

சட்டசபையில் சுற்றுலாத் துறைக்கான விவாதத்துக்கு, அமைச்சர் கோகுல இந்திரா அளித்த பதில்: "தமிழ் மையம்' ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, "சென்னை சங்கமம்' என்ற பெயரில் விழா நடத்த ஆதரவு தர வேண்டுமென, தமிழக அரசு 2007ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி, அரசு நிதியுதவி செய்ய உத்தரவிடப்பட்டது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் விளம்பரங்கள், விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் விளம்பரம், கலைஞர்களுக்கு உழைப்பூதியம் என, சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு லாபமாகக் கிடைத்த தொகை, கனிமொழியின் விளம்பரத்துக்கு செலவிடப்பட்டது. இவ்வாறு, 2007 முதல் 2011ம் ஆண்டு வரை, ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. "சங்கமம்' நிகழ்ச்சிக்காக, கிஷ்கிந்தா நிறுவனம் தொப்பிகளை வழங்கவும், ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு ஆடைகள், தொப்பிகள் போன்றவற்றை தயாரித்து வழங்கவும், திரைப்படத் துறையினர் திரையரங்குகளில் இலவச விளம்பரம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. மகளுக்காக அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் மேடையில், ஜெகத் கஸ்பார் அமர வைக்கப்பட்டார்.

சவுந்திரராஜன் - மார்க்சிஸ்ட்: கனிமொழியைத் தவிர்த்து, ஜெகத் கஸ்பாரை ஒதுக்கிவிட்டு, பாரம்பரிய கலைஞர்களை பயன்படுத்தி, அதே காலத்தில், அரசு சார்பில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுமா?

கோகுல இந்திரா: கடந்த 1994ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா, கிராமிய கலைஞர் நிதி ஒதுக்கினார். இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தளர்த்தி தான், கூடுதல் செலவு செய்ய தி.மு.க., அரசு அரசாணை பிறப்பித்தது. ஏற்கனவே உள்ள திட்டம் தொடரும்.

இந்தோனேசீய கரன்சி நோட்டில் விநாயகர்!


பா.ஜ.,வில் ஐக்கியமாகிறார் ஜெகன் மோகன் ரெட்டி!


ந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ., பக்கம் சாய்ந்து வருகிறார். சி.பி.ஐ., விசாரணைகளால் மனம் நொந்து போன அவர், ஆந்திராவில், காங்கிரசை வலுவிழக்கச் செய்யப் போவதாக சபதம் பூண்டு, இந்த முடிவுக்கு வந்ததாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். அவர், முதல்வராகப் பதவியில் இருந்தபோதே, ஹெலிகாப்டர் விபத்தில், அகால மரணமடைந்ததை அடுத்து, முதல்வர் பதவி தனக்குக் கிடைக்கும் என, ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார், அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், காங்., தலைமை, ரோசய்யாவை முதல்வராக நியமித்தது. கடுப்படைந்த ஜெகன், காங்., கட்சி, தன்னையும், தன் குடும்பத்தையும் ஓரம் கட்டுவதாகக் கருதி, எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டார்; போராட்டங்கள் நடத்தினார். இதையெல்லாம், எதிர்கொண்ட காங்., தலைமை, ஜெகனை முற்றிலும் ஒதுக்கத் துவங்கியது.

கோபமடைந்த ஜெகன், காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக் கட்சி துவக்கினார். தனக்கு ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாகக் காட்ட, பல பாத யாத்திரைகள் நடத்தினார். இதையடுத்து, ஜெகனுக்கு எதிராக, காங்கிரசின் நெருக்கடி தீவிரமடைந்தது.


சி.பி.ஐ.,யை ஏவி, ஜெகனின் சொத்துக்களை சோதனையிட்டது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இறந்து போன ராஜசேகர ரெட்டியை சேர்த்தது ஆகிய காங்கிரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இதை உணர்ந்த பா.ஜ., பார்லிமென்ட்டில் ஜெகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் துவங்கி உள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,"சி.பி.ஐ., என்பது காங்கிரஸ் ஆதரவு புலனாய்வு நிறுவனமாக மாறிவிட்டது. ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்த போது அவரைப் புகழ்ந்த காங்கிரஸ், இப்போது அவரைப் பலிகடாவாக ஆக்கி விட்டது' என்றார்.

ராஜ்யசபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, "வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.,) இறந்து போன ஒய்.எஸ்.ஆர்., பெயரை சி.பி.ஐ., சேர்த்துள்ளது ஏன்? அவர் உயிருடன் இருந்த போது அவரது ஆட்சியில் ஊழலைப் பற்றி ஒரு காங்கிரஸ் தலைவரும் வாய் திறக்கவில்லை. அவர் இறந்த உடன், அவரது மகனைக் குறிவைத்து அவரது புகழை காங்கிரஸ் குலைக்கிறது' என குற்றம்சாட்டினார்.

பா.ஜ.,வின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் ஜெகனுக்கு ஆதரவாகவே கருதப்படுகின்றன. ஆந்திராவில் தன் பலத்தை பா.ஜ., அதிகரிக்க வேண்டியுள்ளது. அதேபோல், சி.பி.ஐ., விசாரணையில் இருந்து வெளிவர, ஒரு தேசியக் கட்சியின் ஆதரவு ஜெகனுக்கு வேண்டியுள்ளது.


தற்போது கிருஷ்ணா மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், "என் தந்தை உயிருடன் இருந்த போது அவரைக் கடுமையாக விமர்சித்த பா.ஜ., தற்போது அவர் செய்துள்ள சேவைகளை பாராட்டுகிறது. ஆனால், என் தந்தையால் லாபம் அடைந்த காங்கிரசார், என் மீது புழுதி வாரித் தூற்றுகின்றனர். பா.ஜ.,வைப் பார்த்து காங்கிரஸ் வெட்கித் தலைகுனிய வேண்டும்' என, சாலையோரக் கூட்டங்களில் காட்டமாகக் கூறி வருகிறார்.

இதையடுத்து, பா.ஜ.,வில் ஜெகன் ஐக்கியமாவார், அல்லது, எதிர்வரும் தேர்தல்களில் பா.ஜ.,வுன் கூட்டணி வைத்து, ஆந்திராவில் காங்கிரசின் பலத்தைக் குறைப்பார் என, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை சரியில்லை என பொய் கூறி அலுவலகங்களில் லீவ் வாங்கும் ஊழியர்கள் அதிகம் உள்ள 2வது நாடு இந்தியா!


உடல்நிலை சரியில்லை என பொய் கூறி அலுவலகங்களில் லீவ் வாங்கும் ஊழியர்கள் அதிகம் உள்ள 2வது நாடு இந்தியா என சமீபத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஐரோப்பா, இந்தியா, மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில், அலுவலகங்களில் உடல்நிலை நன்றாக இருந்தும் சரியில்லை என பொய் கூறி லீவ் வாங்கும் ஊழியர்கள் அதிகம் உள்ள நாடு குறித்த சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே பட்டியலில் 71 சதவீதத்துடன் சீனா முதலிடத்திலும், 62 சதவீதத்துடன் இந்தியா 2வது இடத்திலும், 58 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. வேலைப்பளு காரணமாக அழுத்தமாக உணர்வதால் பணியாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 52 சதவீதம் பேரும், ஐரோப்பாவில் 43 சதவீதம் பேரும், மெக்சிகோவில் 38 சதவீதம் பேரும், பிரான்சில் 16 சதவீதம் பேரும் இவ்வாறு பொய்யான காரணங்கள் கூறி லீவ் எடுப்பதாக தெரியவந்துள்ளது.

நாசிக்கில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் அந்த சிறுமியின் உடலுக்கு தீவைத்த 3 சிறுவர்களை போலீசார் கைது!

நாசிக்கில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் அந்த சிறுமியின் உடலுக்கு தீவைத்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.



3 மாதங்களுக்கு முன்பும் இதே சிறுவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். எனினும் போலீசார் அதை உறுதிப்படுத்தவில்லை. இந்த சிறுவர்கள் மீது கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரையும் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்டபொம்மன் ஒரு வீரனுமல்ல, அவன் பாண்டியனுமல்ல... அவன் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன். கிருஷ்ணப்பரையனார்!


மக்களுக்கான நீதி” என்ற ஒரு சமூக மாத இதழில் கிருஷ்ணபரையனார் என்பவர் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகியா...? கொள்ளைக்காரனா...? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் மா.பெ.சிவஞான கிராமணியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி எழுதும் போது சரியான் வீரர்கள் யாரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அப்படி தமிழர்கள் யாரையும் பற்றி எழுதாமல் விட்டால் தமிழகத்துக்கு இழுக்கு ஏற்ப்பட்டுவிடுமே என்று எண்னத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்த ஒரே காரணத்துக்காக கட்டபொம்மன் வீரனாக்கி எழுதிவிட்டார்.இப்படி வெள்ளையனை எதிர்த்தவர்களை எல்லாம் வீரர் என்றால் எத்தனையோ திருடர்களையும், கொல்லையர்களையும் வெள்ளைக்காரர்கள்   தூக்கில் போட்டுள்ளார்கள். அவர்களையும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எழுதவேண்டியிருக்கும்.

கிராமணியார் கட்டபொம்மனை நாடகமாக தயாரித்தார், பின்னர் அதை பந்துலு அவர்கள் சினிமாவாக எடுத்தார். சினிமாவின் பிரமாண்டத்தாலும், நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாலும், ஒரு கோழை, வழிப்பறி கொள்ளைக்காரன் வீரனாகிவிட்டான்.

கட்டபொம்மன் ஒரு வீரனுமல்ல, அவன் பாண்டியனுமல்ல... அவன் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஆந்திராவை சேர்ந்த தெலுங்கன் என்று கட்ட பொம்மனை எட்டுப்பக்கத்திற்கு விமர்சனம் செய்து எழுதியுள்ளார் கிருஷ்ணப்பரையனார்.வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்ளைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார் கிருஸ்ணபரையனார் அவர்கள். இந்த கட்டுரைக்கு அவர் வருத்தம் தெறிவிக்கவேண்டும், இல்லையானால் தமிழகம் முழுவதும் அவரை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த்துவோம். சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தை இழுத்துபூட்டும் போராட்டம் நடத்துவோம் என்கிறார் தமிழ்நாடு நாயுடு, நாயக்கர் மகர்ரஜகள் சங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரனவ்குமார்.

உயிரோடு உள்ளவர்களால்..செத்துவிட்டவர்களுக்கும் பிரச்சனையப்பா....

தியாகச்சுடர் செங்கொடிக்கு பிரான்ஸ் தமிழர்கள் வீரவணக்கம் !


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...