|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 August, 2011

ராம்லீலா மைதானத்தில் நாளை முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார் அன்னா!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது காவல்துறை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மதிப்பதாக 2 பக்கத்தில் உறுதிமொழி அளித்துள்ளது அன்னா ஹஸாரே குழு. இதையடுத்து நாளை முதல் ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸாரிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவாத கடிதத்தில் அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண் பேடி, சாந்தி பூஷன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.மேலும், இந்த உறுதிமொழிக்குப் புறம்பாக யாரேனும் நடந்தால், தாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கையை சந்திக்கத் தயார் என்றும் அன்னா குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

இந்த உடன்பாட்டின்படி ராம்லீலா மைதானத்தில் செப்டம்பர் 2ம் தேதி வரை போராட்டம் நடத்திக் கொள்ளலாம். உச்சநீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். மைதானத்தில் 25,000 பேருக்கு மேல் கூடக் கூடாது. யாரையும் தூண்டும் வகையில் பேசக் கூடாது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. சாலைகளில், சாலையோரம் யாரும் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. போக்குவரத்தை சீரமைப்பதில் போலீஸாருடன் போராட்டக்காரர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கக் கூடாது, மத துவேஷ் கருத்துக்கள் முழங்கக் கூடாது, குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும், மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும், டாய்லெட்டுகள் அமைக்கப்பட வேண்டும், லத்தி, ஆயுதம் உள்ளிட்டவற்றுடன் வரக் கூடாது, ஒளிவிளக்கு வசதி செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.

மேலும் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஸாரேவை ஒரு நாளைக்கு மூன்று முறை அரசு டாக்டர்கள் பரிசோதிப்பார்கள். இந்த உறுதிமொழிகளை ஏற்பதாக கையெழுத்திட்டுள்ள அன்னா குழுவினர் இந்த உத்தரவாதக் கடிதத்தை மத்திய டெல்லி மாவட்ட துணை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மைதானம் தயாராகவில்லை: இதையடுத்து ராம்லீலா மைதானத்தை செம்மைப்படுத்தும் வேலைகள் தொடங்கிநடந்து வருகின்றன. தற்போது மைதானம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவது நாளை வரை தள்ளிப் போயுள்ளது. இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், ராம்லீலா மைதானம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. எனவே அன்னா ஹஸாரே நாளை அங்கு சென்று தனது போராட்டத்தைத் தொடங்குவார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மைதானம் முழுவதும் குப்பையாகவும், செம்மையில்லாமலும் இருப்பதால் அன்னாவால் தற்போது அங்கு போக முடியாத நிலை உள்ளது. டெல்லி மாநகராட்சி கமிஷனர் மேஹ்ராவுடன் பேசியுள்ளேன். அவர்விரைவில் மைதானத்தை சரி செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். எனவே இன்று போராட்டத்தைத் தொடங்க முடியாத நிலை உள்ளது. இதனால்தான் நாளை வரை அன்னா அங்கு செல்வது தள்ளிப் போயுள்ளது என்றார்.

அரசு, அன்னா இடையிலான ஒப்பந்தத்திற்கு வரவேற்பு: இதற்கிடையே உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக அன்னா ஹஸாரேவுக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்து கொள்ளுதல் பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது என்று அன்னா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அன்னா குழுவைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷன் கூறுகையில், 15 நாட்களுக்கு அன்னா உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்திருப்பதும், பல தேவையற்ற நிபந்தனைகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது. அதேபோல அன்னாவுடன் ஆலோசனை நடத்தி ஜன் லோக்பால் மசோதாவைக் கொண்டு வரவும் அரசு முயல வேண்டும் என்றார்.

சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், ஹஸாரேவுக்கு ராம்லீலா மைதானத்தில் இடம் அளித்ததை வரவேற்கிறோம். இது மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார். அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், போர் இனிதான் தொடங்கவுள்ளது. மக்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

சர்க்கரை நோயை வெல்லும் மூலிகை!


இந்தியாவில் பெரும்பாலோனோர் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மூலிகைகள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக உள்ளன. நம் கண் முன்னே கிடைக்கும் மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

பொன்குறண்டி: பொன் குறண்டி என வழங்கப்படும் மூலிகை சமீபகாலமாக சர்க்கரை நோய்க்கான ஆய்வுகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இம் மூலிகை ரத்த சர்க்கரை அளவை 29 சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாம் உண்ணும் உணவு குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைப்பதாகவும் அதனால் நோயளிகளுக்கு இன்சுலின் தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் அதன் பிற அறிகுறிகளான உடல்வலி, தசைவலி ஆகியவற்றுக்காக "கடலழிஞ்சில்" நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆவாரை: ஆவாரையின் இலை, பூ, பட்டை, வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில் பயன்படுகின்றன. அதிக அளவில், அடிக்கடி சிறுநீர் போவதைக் குறைப்பதால், காவிரி நீரையும், கடல் நீரையும் வற்றச் செய்யும் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுகளில் ஆவாரை சர்க்கரை, அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால் இதயத்தை பாதுகாப்பதாகவும், ஹீமோ குளோபின் அளவு, தரம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவும் நிரூபித்துள்ளனர்.

சிறுகுறிஞ்சான்: "சர்க்கரைக் கொல்லி"யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்துக்கு மறுவாழ்வு அளிக்கிறது. ஆம் - இது கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குவதாக தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான H.D.L. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும் ரத்தக் குழாய் கொழுப்புப் படிவைத் தடுக்கிறது.

சீந்தில்: நலவாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான "இம்யூனோகுளோபுலின் - ஜி" - ன் அளவை, அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிராலைக் குறைக்கிறது. சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவைத் தடுக்கிறது.

பாகல்: பாகல் இலை, காய், விதைகளில் "தாவர இன்சுலின்" என்ற புரதச் சத்து உள்ளது. சோதனைகளில், இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைப்பதாகவும் தெரிகிறது.

வெந்தயம்: இதில் காணப்படும் "ட்ரைகோனெல்லின்" அதிகரித்த ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25% அளவு குறைக்கிறது. எனவே மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்கிறது.

வில்வம்: சிவனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வில்வம் அனைத்து நோய்களையும் தடுக்கும் மாமருந்தாக நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. வில்வ இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு, நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம் சோர்வடையாமல் காக்கிறது. சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய ரத்தக் குழாய் அடைப்பைத் தடுப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாவல்: நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக, கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது.

மஞ்சள்: தன்னிடம் இல்லாத மருத்துவக் குணமே இல்லை என்னும் அளவுக்கு, எண்ணற்ற சோதனைகள் மூலம் நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதாகவும், கிருமி நாசினியாகவும், உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சள் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக நெல்லிவற்றலுடன் சேர்ந்து வழங்கும்போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன், நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது.

மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி, ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல நிச்சயம் முடியும்

உரமேற்ற உதவும் கம்பங் கஞ்சி!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பு மிகவும் சத்து நிறைந்த உணவுபொருளாகும். வறட்சி காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு மருத்துவ குணம் கொண்டது. இதயநோயை கட்டுப்படுத்துவதில் கம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கம்பில் உள்ள கால்சியம், குரோமியம், இஎஃப்ஏ, நார்ச்சத்துகள், ஃப்ளேவனாயிட்ஸ், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த ஓட்ட சுழற்சி, ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் போன்ற இன்றியமையாத பணியையும் உடலில் செய்கின்றன.

உடல் சூடு தணிக்கும்: மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் காலை வேளையில் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவோடு சேர்த்து உண்டால் குடல்புண், வயிற்றுப்புண் வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய: உடல் வலுவடைய கம்பு மிகச்சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவைடையும். இது கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுக்கும். சிறுநீரை பெருக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். அதிகமாக கம்பங்கஞ்சி குடித்தால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

அடுத்தவர் பணத்தில் உதவி வழங்குவதற்காக வெட்கப்படுகிறேன் - சேரன் !

அடுத்தவர் பணத்தில் உதவி வழங்கும் அற்பத்தனத்தை சில நடிகர்கள் செய்கிறார்கள் என்று நடிகர் சிம்புவை காட்டமாக விமர்சித்துள்ளார் இயக்குநர் சேரன். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் - நடிகர் சேரன் கலந்து கொண்டார். ஏழைகளுக்கு ரூ 10 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்.

எம்எம்டிஏ காலனியில் உள்ள கார்ப்பொரேஷன் பள்ளிக்கு ரூ 1.48 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் புதுப்பித்துத் தரப்பட்டன. இவற்றை பள்ளியிடம் அவர் ஒப்படைத்தார். இந்தப் பள்ளிக்கு ரூ 13000 செலவில் கணிப்பொறி அச்சு எந்திரம் வழங்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கினார் சேரன்.

பின்னர் அவர் பேசுகையில், "இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம், இளைஞர்கள் இப்படி பட்ட செயல்களை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது எனக்கு மனதில் ஒரு கேள்வி எழும். நடிகனாக, இயக்குனராக நான் அறியப்படாலும்... இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது.

அதற்காக நான் வெட்கப்படுகிறேன்! இந்த உதவிகளில் எந்த ஈடுபாடும் எனக்கு இல்லை. அதில் 10பைசா கூட நான் உதவியாக கொடுக்கவில்லை. அப்படி எதுவுமே செய்யாமல் இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பது கூச்சமாக தான் இருக்கிறது. யார் இதற்காக உண்மையாக உழைத்தார்களோ, உதவி செய்தார்களோ அவர்களுக்குத்தான் அந்த புகழ் சென்றடைய வேண்டும். உலகில் தலை சிறந்த விஷயம் தர்மம் தான். மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள் இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அடுத்த வருட நிகழ்ச்சிக்கு நான் வருகிறேனோ இல்லையோ என் பங்கும் நிச்சயம் இதில் இருக்கும் என்றார்...

போர்ச்சுகல் நாட்டு குடிமக்களாக மாற கோவா மக்களிடையே போட்டா போட்டி!

போர்ச்சுகல் நாட்டு குடியுரிமை பெற கோவா மக்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். கோவா பகுதியை போர்ச்சுகீசியர்கள் நீண்ட காலம் ஆண்டனர். இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது கோவா போர்ச்சுகல் நாட்டினராலும் வசமும், புதுச்சேரி பிரான்ஸ் நாட்டினராலும் ஆளப்பட்டு வந்தன.

தங்களது ஆட்சி காலத்தில் பிறந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் 2 தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் போர்ச்சுகல் நாடு குடியுரிமையை வழங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இதற்கான விதிகளையும் அந்த நாடு தளர்த்தியது. இதையடுத்து அந் நாட்டுப் பிரஜைகளாகும் கோவா பகுதியினரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சமீப காலமாக இது மேலும் வேகம் பிடித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,855 பேர் போர்ச்சுகீசிய நாட்டு குடியுரிமையைப் பெற்று அந் நாட்டுப் பிரஜைகளாகியுள்ளனர். 2008ல் 312 பேரும், 2009ல் 432 பேரும், 2010ல் 807 பேர் அந்த நாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளனர். 2011ம் ஆண்டில் முதல் 3 மாதங்களிலேயே 304 பேர் தங்கள் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு போர்ச்சுகீசியர்களாகியுள்ளனர்.

இது குறித்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இயக்குனரகத்தின் தலைவர் யு.டி.காமத் கூறுகையில், போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்று அந் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுவிட்டால், ஐரோப்பாவுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கிறது. அத்தோடு, ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெறவும் வசதியாகிறது. இதனால் தான் அந் நாட்டுப் பிரஜைகளாக போட்டி போட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு அந் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்தியாவில் அரசு வேலையில் சேர முடியாது, இந்தியாவில் விவசாய நிலங்களை வாங்க முடியாது. இந்தியாவில் ஓட்டுரிமையையும் இழப்பர் என்றார். கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரி நாராயண் நவ்தி கூறுகையில், போர்ச்சுகீசியர்களாக மாறி வரும் மக்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என்றார்.

லஞ்சம் வாங்காத நாள் கடைப்பிடிக்க கோவா அமைச்சர்களுக்கு மக்கள் கோரிக்கை!

அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை மதித்து, லஞ்சம் வாங்காத நாளைக் கடைப்பிடிக்குமாறு கோவா அமைச்சர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்தது. ஊழல் புகாரில் சிக்காத கோவா அமைச்சரே இல்லை என்ற நிலையில் அந்த குட்டி மாநிலம் தவித்து வருகிறது. இதனால் வெறுத்துப் போயிருந்த கோவா மக்களுக்கு அன்னா ஹஸாரேவின் போராட்டம் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

இதையடுத்து கோவா கிராமக் குழுவினர் என்ற பல்வேறு சிவில் சொசைட்டி அமைப்புகள் இணைந்த ஒரு அமைப்பு கோவா அமைச்சர்களுக்கு வித்தியாசமான கோரிக்கையை வைத்தது. இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் பெரைரா கூறுகையில், வியாழக்கிழமையை, லஞ்சம் வாங்காத நாளாக கோவா அமைச்சர்கள் அனுசரிக்க வேண்டும். ஹஸாரேவின் போராட்டத்தைப் பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும்.

உங்களால் லஞ்சம் வாங்காமல் வாழவே முடியாது என்று நீங்கள் நினைத்தால் குறைந்தது ஒரு நாளாவது லஞ்சம் வாங்காமல் இருக்க முயலுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஹஸாரேவை ஆதரியுங்கள் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கோவாவி்ல், ஊழல், லஞ்சம்,நிதி முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. போதைப் பொருள் கடத்தல், போலி கரன்சி புழக்கம், வரி ஏய்ப்புகள், சட்டவிரோத சுரங்கம் என மோசடிகளும், முறைகேடுகளும் அதிகரித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கோவா சிவில் சொசைட்டியினரின் கோரிக்கையை ஏற்று கோவா அமைச்சர்கள் இன்று லஞ்சம் வாங்காமல் இருந்தார்களா என்பது தெரியவில்லை.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் சலுகை 10% தான்!

கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது, அவர்களுக்கான மதிப்பெண் சலுகை, பொதுப் பிரிவு மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் மதிப்பெண்ணைவிட 10 சதவீதம் மட்டுமே குறைவாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஐஐடியைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் இந்தரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பல்வேறு கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது குறைந்தபட்ச மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் வரம்பே இல்லை என்றும், அதில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாகவும், குறைந்தபட்ச மதிப்பெண் சலுகை 10 சதவீதமாக இருக்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச், பொதுப் பிரிவு மாணவர்களில் கடைசி மாணவர் எந்த மதிப்பெண்ணில் அடிப்படையில் சேர்க்கப்பட்டாரோ அதை, அடிப்படையாக வைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சலுகை தரக் கூடாது. ஒட்டுமொத்தத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்ணைவிட 10 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் குறைவாக இருக்கலாம். இதற்கு மேல் சலுகை தரக் கூடாது.

அதே நேரத்தில் இதற்கு முன் மாணவர் சேர்க்கை நடந்த கல்வி நிலையங்களுக்கு இந்தத் தீர்ப்புப் பொருந்தாது. எதிர்கால மாணவர்கள் சேர்க்கையில் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகை விஷயத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என்று தீர்ப்பளித்தனர். இதனால் இனிமேல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில், அதிகபட்ச சலுகைகளைக் காட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி கூடத்தை பூட்டிய தலைமை ஆசிரியர் நீக்கம்!


அரசு பள்ளிக் கூடங்களை பராமரிப்பது தனி பணி. அனைத்து வகுப்பறைகளையும் பூட்டி சாவி ஆயாவிடம் இருக்கும். பள்ளி திறப்பதற்கு முன்பே ஆயா வந்து வகுப்பறைகளை திறந்து சுத்தம் செய்து வைத்திருப்பார். தலைமை ஆசிரியர் அறை மட்டும் பூட்டி சாவியும், தலைமை ஆசிரியரிடமே பாதுகாப்பாக இருக்கும். ஏதோ அவசர வேலை காரணமாக வர இயலாவிட்டால் சாவியை வேறு யாரிடமாவது கொடுத்து பள்ளியை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.
 
ஆனால் திருவண்ணா மலை மாவட்டம் பெருங்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பராமரிப்பில் தலைமை ஆசிரியர் தலையீடு சற்று வித்தியாசமானது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியராக குப்புசாமி உள்ளார்.
 
தினமும் மாலையில் பள்ளிமுடிந்துதம் அனைத்து வகுப்பறைகளும் பூட்டப் பட்டு அதன் சாவிகள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படும். அதை வாங்கி தலைமை ஆசிரியர் தனது அறையில் வைத்து பூட்டி சாவியை எடுத்து சென்று விடுவார். காலையில் அவர் வந்த பிறகு தான் வகுப்பறைகள் திறக்க முடியும்.
 
நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் அனைத்து வகுப்பறைகளும் பூட்டப்பட்டு சாவி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தனது அறையில் வைத்து பூட்டி விட்டு தலைமை ஆசிரியர் அறை சாவியை எடுத்து சென்று விட்டார்.
 
நேற்று காலை வழக்கம் போல அனைத்து மாணவ-மாணவிகளும் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளி திறக்கப்படவில்லை. தலைமை ஆசிரியர் வந்தால் தான் பள்ளியை திறக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தலைமை ஆசிரியர் வருகையை அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஏதோ காரணத்தால் பகல் 11 மணி ஆகியும் அவர் வரவில்லை, போனிலும் அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.
 
இதனால் அனைத்து மாணவ-மாணவிகளும் பள்ளிக்கு வெளியே நிற்று கொண்டிருந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் அங்கு குவிந்தனர். வெகு நேரமாகியும் தலைமை ஆசிரியர் வரததாலும், பள்ளி திறக்கப் படாததாலும் ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் பள்ளியை முற்றுகையிட்டனர்.மறியல் செய்யப் போவதாகவும் கூறினர்.
 
இது பற்றிய தகவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கெங்கைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சமாதானம் செய்தனர். அதற்கு கல்வி அதிகாரி வந்தால்தான் கலைந்து செல்வோம் என்று கூறிவிட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ.சுகன்யா விரைந்து சென்றார். அவர் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து வகுப்பறை சாவிகளை எடுத்து வகுப்பறைகளை திறக்க உத்தர விட்டார். அதன்படி தலைமை ஆசிரியரின் அறை பூட்டு உடைக்கப்பட்டு மற்ற அறைகள் திறக்கப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.எந்தவித தகவலும் தெரிவிக்காமலும், விடுமுறை எடுக்காமலும், பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா தெரிவித்தார். மாலையில் தலைமை ஆசிரியர் குப்புசாமியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

போர்க்குற்றம் பற்றி பேசக்கூடாதாம் ஜெயலலிதாவிற்கு கோத்தபய அறிவுரை!

ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால், அவர்களின் மறுவாழ்வு பற்றி பேசுங்கள், அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் பேசுவது பயன்றறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய அறிவுரை கூறியுள்ளார்.ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய இவ்வாறு கூறியுள்ளார். அதில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோத்தபய, அது அரசியல் ஆதரவு பெறுவதற்கான முயற்சி என்று கூறியுள்ளார்.


தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இலங்கை நிலவரம் தொடர்பான விஷயங்களை நாங்கள் ஜெயலலிதாவிற்கு அளிக்க வேண்டும். தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது.

அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் பேசுவது எந்தப் பயனையும் தராது. அந்த மக்கள் குடியேற உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம் பற்றிப் பேசுவது, பன்னாட்டு விசாரணை கோருவது என்பதெல்லாம் வீணானது என்று மற்றொரு கேள்விக்கு கோத்தபய பதிலளித்துள்ளார்.
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படம் போலியானது, அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையற்றது என்று கூறிய கோத்தபய, இலங்கை ஒரு சர்வாதிகார நாடல்ல, ஜனநாயக நாடுதான் என்றும், அங்கு சட்டத்தி்ன் ஆட்சிதான் நடக்கிறது என்றும் கூறிவிட்டு, பன்னாட்டு விசாரணைக்கு எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.


நாங்கள் ஒரு இறையாண்மை உள்ள நாடு, நாங்கள் கூறுவதை பன்னாட்டுச் சமூகம் நம்ப வேண்டும். எந்த ஒரு இறையாண்மை உள்ள நாடும் பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுமதிக்காது என கோத்தபய கூறியுள்ளார்.

பாய்ந்து தாக்கும் அதிசய பாம்பு!


நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வனப்பகுதியில் அரிய வகை பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரேஞ்சர் தேவசாகயம் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.    அவர்கள் அடர்ந்த வனப்பதியான தேக்காடு பகுதியில் சென்றபோது 6 அடி நீளம் கொண்ட அதிசயமான பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


ஒரு சில மணி நேர தீவிர தேடுதலுக்கு பின்னர் அதனை உயிருடன் பிடித்தனர்.  இதனை ஆய்வு செய்தபோது அந்த பாம்பு மவுண்டேன் பிரிங்கட் ரகத்தை சேர்ந்தது இவை எதிரிகளை தாக்கும்போது உடம்பை சுறுட்டி வைத்துக்கொள்ளும்.    திடீரென 3 அடி உரயத்திற்கு சரேளென பாய்ந்து தாக்கும் திறன் கொண்டவை. இவை மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சிப்பகுதியில் தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமே வசிக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Top 10 craziest things made of gold...!

The Akshaya Tritiya festival is one of the two most auspicious days of the year to buy gold, as Hindus believe they can get lasting prosperity by buying precious metals on the day. The other festival is Dhanteras in November.
A man films a gold-plated Infiniti G37 at a jewelry store in Nanjing, Jiangsu province, March 31, 2011. It took five artisans over four months to complete the task which aims to promote the store

Vienna Philharmonics gold coins are arranged in the shape of a cake at a jewellery shop in Tokyo February 28, 2006. The 250 million yen ($ 2.16 million) Vienna Coin cake was on display from March 1 to commemorate the 250th anniversary of Wolfgang Amadeus Mozart's birthday.
Filipino chef, Angelito Araneta Jr, displays a 24-carat gold covered mooncake garnished with .10-carat artificial diamonds at Polytechnic University of the Philippines in Manila September 22, 2010. The mooncake,a traditional Chinese treat eaten during the Mid-Autumn Festival, is worth 80,500 pesos ($ 1,830). REUTERS/Cheryl Ravelo
 An artwork of rabbits pounding "mochi" or rice-cakes, decorated with 20g of 24K gold, is displayed during an unveiling in Tokyo November 25, 2010. Ginza Tanaka unveiled the artwork, sized at 3.2cm (1.2 inches) in height and 5cm (1.9 inches) in width ahead of next year, which is the year of the rabbit.
A 475,000 euros gold watch is displayed before the opening of the Grand Luxe exhibition in Brussels, October 30, 2008. The exhibition gathers high luxury items including cars and jewellery and focuses on gastronomy, art and fashion.
Estee Lauder has teamed with shoe designer Manolo Blahnik to create a 24K carat gold nail lacquer in honor of the 58th Annual Golden Globe Awards, according to spokesman Aerin Lauder on January 10, 2001. The nail lacquer, in a bottle designed to look like an inverted stiletto heel.
 Estee Lauder has teamed with shoe designer Manolo Blahnik to create a 24K carat gold nail lacquer in honor of the 58th Annual Golden Globe Awards, according to spokesman Aerin Lauder on January 10, 2001. The nail lacquer, in a bottle designed to look like an inverted stiletto heel.
The Frrrozen Haute Chocolate is unveiled at the Serendipity-3 restaurant in New York November 7, 2007 after Guinness World Records researchers determined the $25,000 frozen hot chocolate was the most expensive dessert in the world.
A toy Barbie Doll clothed in a genuine gold dress valued at 30,000 marks is the most expensive item at an fashion exhibition using Barbie Dolls as models in Frankfurt on December 7. The dress was created by Bernhard Meister, chief designer for German jeweller Christ, and includes 35 diamonds and white gold.

 A tiny 18-karat gold Hello Kitty doll is displayed at Tanaka Kikinzoku Jewellery KK in Tokyo's posh Ginza shopping district June 16, 2003. The three-centimetre-tall (1.2-inch), 70-gram kitty character, is studded with a diamond and crystal decoration, is priced at 400,000 yen (about $3,400), and 50 limited edition dolls are available by mail order.
 A gold plated rifle is shown to the media in Guadalajara in this May 2, 2010 photo. The Mexican army raided the house of a family member of Oscar Nava Orlando Valencia, the leader of a drug trafficking gang who is currently in prison, and seized dozens of weapons, some of the plated in gold or silver and encrusted with precious stones, according to local media.

RAJNIKANTH SUPPORTS ANNA HAZARE FIGHT AGAINST CORRUPTION !


மரணதண்டனையை ஒழிப்போம் !! மனிதநேயம் காப்போம் சீமான் உரை!


World Most Experience Driver!


இளவயது டிரம்ஸ் கலைஞன்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...