|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 August, 2011

அடுத்தவர் பணத்தில் உதவி வழங்குவதற்காக வெட்கப்படுகிறேன் - சேரன் !

அடுத்தவர் பணத்தில் உதவி வழங்கும் அற்பத்தனத்தை சில நடிகர்கள் செய்கிறார்கள் என்று நடிகர் சிம்புவை காட்டமாக விமர்சித்துள்ளார் இயக்குநர் சேரன். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் - நடிகர் சேரன் கலந்து கொண்டார். ஏழைகளுக்கு ரூ 10 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்.

எம்எம்டிஏ காலனியில் உள்ள கார்ப்பொரேஷன் பள்ளிக்கு ரூ 1.48 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் புதுப்பித்துத் தரப்பட்டன. இவற்றை பள்ளியிடம் அவர் ஒப்படைத்தார். இந்தப் பள்ளிக்கு ரூ 13000 செலவில் கணிப்பொறி அச்சு எந்திரம் வழங்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கினார் சேரன்.

பின்னர் அவர் பேசுகையில், "இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம், இளைஞர்கள் இப்படி பட்ட செயல்களை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது எனக்கு மனதில் ஒரு கேள்வி எழும். நடிகனாக, இயக்குனராக நான் அறியப்படாலும்... இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது.

அதற்காக நான் வெட்கப்படுகிறேன்! இந்த உதவிகளில் எந்த ஈடுபாடும் எனக்கு இல்லை. அதில் 10பைசா கூட நான் உதவியாக கொடுக்கவில்லை. அப்படி எதுவுமே செய்யாமல் இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பது கூச்சமாக தான் இருக்கிறது. யார் இதற்காக உண்மையாக உழைத்தார்களோ, உதவி செய்தார்களோ அவர்களுக்குத்தான் அந்த புகழ் சென்றடைய வேண்டும். உலகில் தலை சிறந்த விஷயம் தர்மம் தான். மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள் இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அடுத்த வருட நிகழ்ச்சிக்கு நான் வருகிறேனோ இல்லையோ என் பங்கும் நிச்சயம் இதில் இருக்கும் என்றார்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...