|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 February, 2012

Thiruvilayadal TAMIL MOVIE


Durga - Tamil Movie - Nizhalgal Ravi, Baby Shamili


வார பலன் 3-2-2012 முதல் 9-2-2012 வரை

மேஷம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். திறமை பளிச்சிடும். உடல் நலம் நன்றாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்கள் பேச்சை நம்ப வேண்டாம். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: உய்ர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் சில சலுகைகள் பெறக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பர். மனம் நிம்மதியாக இருக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பாராத பண வரவும் உண்டு.

மிதுனம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். வருமானம் இரட்டிப்பாகும். மனம் உற்சாகமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்க இது உகந்த வாரமன்று. உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.

கடகம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். நண்பர்களை அனுசரித்துச் செல்வீர்கள். தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ளக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். அலுவலகத்தில் சில சலுகைகள் பெறக்கூடும். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு.

சிம்மம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் பெரியவர்கள் உதவுவார்கள். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். எதிலும் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

கன்னி பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். புதிய முதலீடு எதுவும் செய்ய வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களிடம் பேசும்போது கவனமாக இருக்கவும்.

துலாம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. மகான்களின் ஆசி கிடைக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். மனதில் ஏதோ பயம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரக்கூடும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும்.

விருச்சிகம் பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். எதிலும் நிதானமாகச் செயல்படுவீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் போட இது உகந்த வாரம் அன்று.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். அலுவலகத்தில் பல சலுகைகள் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

தனுசு பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். பண வரவுக்கு குறைவிருக்காது. உடல் நலனில் கவனம் தேவை. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.

மகரம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆச்சர்யமான விஷயங்களைக் கேட்பீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். இல்லத்தில் சுப நிகழ்சசிகள் நடத்தி மகிழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.

கும்பம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திறமை மேம்படும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். உடல் நலன் பாதிக்கப்படலாம். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

மீனம் பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து மகிழ்விக்கம். பொருளாதாரம் மேம்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். இந்த வாரம் வீடு மாற்ற வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். எதிலும் நிதானம் தேவை.

இரவு நேர கார் பயணம்...


இரவு நேரத்தில் காரில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்வதற்கும், விரும்பதகாத சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் புதிய யுக்தி ஒன்றை சமூக விரோதிகள் கையாள்வது குறித்து செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இரவு நேரங்களில் செல்லும் கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) மீது முட்டையை வீசி எறிந்து காரை நிறுத்தி அவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. எனவே, இரவில் காரில் செல்லும்போது காரின் முன்பக்க கண்ணாடி மீது முட்டை வீசினால் உடனடியாக காரை விட்டு இறங்கி சோதனை செய்ய வேண்டாம். 

மேலும், காரின் கண்ணாடியை துடைப்பதற்காக நீரை பீய்ச்சியடித்து, வைப்பரை ஆன் செய்து சுத்தம் செய்ய முற்பட வேண்டாம். ஏனெனில், முட்டையுடன் நீர் சேரும்போது பிசின் போன்று ஆகிவிடும். அப்போது வைப்பரை ஆன் செய்தால் கார் கண்ணாடி முழுவதும் பனிப்படர்ந்தது போன்று முட்டை படிந்து விடும். இதனால், சாலை பார்த்து தொடர்ந்து காரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த சந்தர்ப்பத்தைத்தான் சமூக விரோதிகள் பயன்படுத்தி வழிப்பறி மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே, இரவு நேரத்தில் காரில் செல்லும்போது மர்மநபர்கள் கார் கண்ணாடி மீது முட்டையை வீசி எறிந்தால், உஷாரடைந்து அங்கிருந்து பாதுகாப்பானை இடத்துக்கு காரை ஓட்டி செல்வதுதான் சிறந்தது.

வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடு! இங்கிலாந்தில்!!


ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்ற பிறகு அங்கேயே பணிபுரிவதற்கான விசாவை ரத்து செய்வதாக ஏற்கெனவே அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதில் இந்தியர்களே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாயினர்.இந்நிலையில் இங்கிலாந்தில் பணி புரியும் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டு வருமானம் 31 ஆயிரம் பவுண்டுகளுக்கு குறைவாக இருந்தால் அவர்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிவிட வேண்டும் என்ற புதிய விதியை குடியேற்ற அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

ஆண்டு வருமானம் அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியர் போன்ற வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்கிற இங்கிலாந்து நாட்டவர், தங்களது மனைவிக்கு ஆண்டு வருமானம் 25 ஆயிரம் பவுண்ட்ஸ் என்று குறிப்பிட்டு விசா பெறுகின்றனர். இத்தகையோர் இங்கிலாந்து அரசிடமிருந்து நிதி உதவி பெறுவதை தடுக்கும் வகையில் இப்புதிய விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.புதிய குடியேற்ற விதிகள் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் டாமின் க்ரீன் இதனை சுட்டிக்காட்டடுள்ளார்.

இங்கிலாந்து நாட்டவரை திருமணம் செய்யக் கூடியவர் சுயமாக செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று குடியேற்ற விதிகளில் கட்டாயமாக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.மேலும் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்வோருக்கு ஆண்டு வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க உள்ளதாகவும் அமைச்சர் க்ரீன் தெரிவித்தார்.இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கு ஆண்டு வருமானம் 31 ஆயிரம் பவுண்ட்ஸில் இருந்து 49 ஆயிரம் பவுண்ட்ஸ் வரை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டவர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதே நாள்...

  • தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை இறந்த தினம்(1969)
  •  அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம், மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது(1690)
  •  வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1930)
  •  அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது(1783)

தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி பாண்டிமாதேவி


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியை பாண்டிமாதேவிக்கு தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறையின் உதவி பேராசிரியாக பணியாற்றி வருபவர் முனைவர் கே.பாண்டிமாதேவி. அவர் பல்வேறு ஆராய்ச்சி இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். மேலும் பல்வேறு தேசிய நிதி நிறுவனங்களிடம் நிதியுதவி பெற்று ஆய்வு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசின் உயர் கல்வித்துறையால் வழங்கப்படும் தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது- 2010க்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருது வழங்கும் விழா சென்னையில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.பாண்டிமாதேவி அந்த விழாவில் பங்கேற்று அமைச்சரிடம் இருந்து தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருதினையும், ரூ. 20,000 ரொக்கப் பரிசினையும் பெற்றார். உயிரி தொழில்நுட்பவியல் துறையில் அவர் ஆற்றி வரும் பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இளம்பெண் விஞ்ஞானி விருது பெற்ற 7 பெண்களில் பாண்டிமாதேவியும் ஒருவர்.

நாட்டின் 5 சதவீத செல்போன் சேவைகள் விரைவில்...?


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 122 லைசென்ஸ்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' எனப்படும் தொலைபேசி எண்ணை மாற்றாமல் விரும்பிய நிறுவனத்தின் சேவைக்கு மாறும் திட்டத்துக்கு பெரும் சிக்கல் உருவாகும் என்று தெரிகிறது.மேலும் லைசென்ஸ் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை டிராய் வகுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மீண்டும் லைசென்ஸ் விற்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் லைசென்ஸ்கள் பெரும் கட்டணத்துக்கு ஏலம் போகப் போவது நிச்சயமாகிவிட்டது.அதிக விலை கொடுத்து லைசென்ஸ்களை வாங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அந்த விலையை நிச்சயமாக வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்தும். இதனால் தொலைபேசிக் கட்டணங்களும் நிச்சயம் விண்ணை நோக்கி செல்லப் போகின்றன.

இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள 122 லைசென்ஸ்கள் விவரம்:டாடா டெலிகாம் (அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள்) 3 லைசென்ஸ்கள், வீடியோகான் (பஞ்சாப் தவிர்த்த அனைத்து மாநிலங்கள்) 21 லைசென்ஸ்கள், ஐடியா செல்லுலார் (மேற்கு வங்கம், கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்கள், ஒடிஸ்ஸா, பஞ்சாப், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்கள்) 9 லைசென்ஸ்கள், யூனிடெக் (இந்தியா முழுவதும்) 22 லைசென்ஸ்கள், லூப் டெலிகாம் (மும்பை தவிர்த்த அனைத்து நகரங்கள்) 21 லைசென்ஸ்கள், சிஸ்டெமா (ராஜஸ்தான் தவிர்த்த பிற மாநிலங்கள்) 21 லைசென்ஸ்கள் ஸ்பைஸ் டெலிகாம் (ஆந்திரப் பிரதேசம், டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள்) 4 லைசென்ஸ்கள் எடிசலாட் டிபி (பிகார், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் கிழக்கு, உத்தரப் பிரதேசம் மேற்கு, டெல்லி, குஜராத், ஹரியாணா, கர்நாடகம், கேரளம், ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்டிரம்) 15 லைசென்ஸ்கள்

எஸ்-டெல் (ஒடிஸ்ஸா, இமாசலப் பிரதேசம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள், பிகார், ஜம்மு காஷ்மீர்) 6 லைசென்ஸ்கள் இவ்வாறு ரத்தான 122 லைசென்ஸ்கள் மூலமாக இப்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி சேவை நாட்டின் ஒட்டுமொத்த செல்போன் தொலைபேசி சேவையில் 5 சதவீதமாகும். அதாவது நாட்டின் 5 சதவீத செல்போன் சேவைகள் விரைவில் பாதிக்கப்படப் போகின்றன.டிராய் விதிகளின்படி, இந்த 5 சதவீத வாடிக்கையாளர்களில் யார் யார் அந்த சேவையைப் பெற்று 90 நாட்களைக் கடந்துவிட்டார்களோ அவர்கள் 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' மூலம் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறிவிட முடியும்.ஆனால், சேவையைப் பெற்று 90 நாட்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' வசதியை பயன்படுத்த முடியாது.

மேலும் எந்தெந்த வாடிக்கையாளர்கள் பாதிக்ப்படுவர் என்பதை தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் செல்போன் எண், ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ் அலைவரிசைக்குள் வருகிறதா இல்லையா என்பதை நாம் கண்டறிய முடியாது. இதை நமக்குச் சொல்ல வேண்டியது தொலைபேசி நிறுவனங்கள் தான். அதை அவர்கள் உரிய நேரத்தில் சொன்னால் தான் நாம் 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' மூலம் தப்ப முடியுமா என்பதை அறிய முடியும். இல்லாவிட்டால், நமது செல்போன் ஒருநாள் வேலை செய்யாமல் போகும். இனி, இந்த சேவை கிடையாது 'ஸாரி' என்ற ஆட்டோமேடிக் சிஸ்டம் மூலம் பதில் வரும். இதையடுத்து அந்த செல்போன் நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் நம்பருக்கு போன் செய்து சண்டை போட்டுவிட்டு, நாம் வேறு நிறுவனத்தின் சிம் கார்டை போட்டுக் கொண்டு, புதிய நம்பருடன் அலைய வேண்டிய நிலை வரலாம்.
  
உடனடியாக பணம் பார்க்க ஆசைப்பட்டு தொலைபேசி சேவையே தெரியாத பல நிறுவனங்கள் ராசாவை 'கவனித்து' ஸ்பெக்ட்ரத்தை வாங்கின. இதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், காய்கறி விற்கும் நிறுவனங்களும் அடக்கம். இவர்களது லைசென்ஸ்கள் எல்லாம் ரத்தாகிவிட்ட நிலையில், விட்டால் போதும் என்று ஓடப் போவது நிச்சயம். இதனால், இந்தத் துறையில் 'மூழ்கி முத்தெடுத்த' டாடா டோகோமோ, ஐடியா செல்லுார், யூனிநார் போன்ற பெரிய நிறுவனங்கள் தான் மீண்டும் லைசென்ஸ்கள் வாங்கும் போட்டியில் இறங்கும். இவர்களும் பாரதி ஏர்டெல், வோடபோன் போன்ற லைசென்ஸ் ரத்தால் பாதிக்கப்படாத பெரு நிறுவனங்களும் தான் மிஞ்சியிருப்பர். லூப் டெலிகாம், வீடியோகான், எஸ்-டெல் போன்ற தொலைத் தொடர்புத்துறையில் சிறிய நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இருந்தே 'ஜகா' வாங்கலாம் என்று கருதப்படும் நிலையில், போட்டியும் குறையும் என்பதால், இந்த பெரிய நிறுவனங்கள் கட்டணத்தை நினைத்த நேரத்தில் ஏற்றுவார்கள் என்பதும் நிச்சயம்.

கச்சத்தீவு உரிமையை மீட்க வேண்டும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும், கச்சத்தீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை திமுக பொதுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.


இதுகுறித்து திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கச்சத்தீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது 21.8.1974 அன்று தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி, ‘‘இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்னையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில், இலங்கை அரசோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.’’ என்னும் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியும்; 1974 ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியபோது, தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி ‘‘கச்சத்தீவின் மீது இலங்கை கொண்டாடிவரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்வதோடு, நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள இந்தத் தீர்மானத்தைக் கருத்திலே எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.’’ என்று கடிதம் அனுப்பியும்; திமுக ஆட்சியில் இருந்தபோதே 1974ஆம் ஆண்டு கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும்
இருக்கிறோம். மேலும், 14-7-1974 அன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில், கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்; மத்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் கேவல் சிங், 1974-ல் கருணாநிதியை சென்னையில் சந்தித்த போதும், வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங்கிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தார். கட்சி வேறுபாடுகளுக்கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம்தராமல் கருணாநிதி நடவடிக்கை எடுத்தும்கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கப்பட்ட காரணத்தால்; கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று, 1974ஆம் ஆண்டு முதலே திமுக, இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
2011 தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலின்போது, திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும்,1974ஆம் ஆண்டு இருந்த நம் நாட்டின் உரிமைகள் 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் “திரும்பப் பெறப்பட்டதன் காரணமாக, அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால், கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.


1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த மீன் பிடித்தல், மீன் வலை உலர்த்துதல் மற்றும் தேவாலயத்தில் வழிபாட்டுரிமை ஆகிய அம்சங்கள், 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் மீண்டும் பறிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில்; கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடையேதுமின்றிச் செல்வதற்கும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையைக் கைக் கொள்வதற்கும் மீட்டெடுப்பதற்கும், கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு திமுக பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் மீது ஊழல் புகார் கனடா ஊடகங்கள்!


An Indian cabinet minister who says he has been unfairly implicated in a foreign bribery case in Ottawa has called on his Prime Minister to intervene with Canada to ensure that he and the Indian government aren’t caused more “embarrassment.” Praful Patel, India’s Minister of Heavy Industries and a former aviation minister, also called on Prime Minister Manmohan Singh to open up the books of Air India to clear up any suggestion of his involvement in what the Royal Canadian Mounted Police has called a bribery and bid-rigging scheme at the state-run airline. 
In a Globe and Mail report Wednesday, the newspaper detailed the allegations against Nazir Karigar, a 64-year-old Indian-born Canadian citizen and the first individual to be charged under Canada’s foreign-bribery law – the Corruption of Foreign Public Officials Act. As part of their case against Mr. Karigar, authorities allege that he divulged to others that he had channelled a $250,000 bribe to Mr. Patel through a political ally in 2007. Mr. Karigar has also been accused of bribing two Air India managers and conspiring with a friend, former Air India director of security Hasan Gafoor, to ensure that his employer was shortlisted for a $100-million contract. Mr. Karigar’s employer was a multinational hi-tech security company called CryptoMetrics.
In a letter to India’s Prime Minister, Mr. Patel alleged that the proposed contract, which was for a facial-recognition security system, was killed “at inception” and never made its way to his office. “I earnestly request you that the factual position can be conveyed to authorities in Canada in order to avoid any embarrassment to the government of India and to me personally,” Mr. Patel wrote, according to a report in the Times of India.
Mr. Gafoor, the former Air India security director who went on to oversee the Mumbai police, has acknowledged that he is friends with Mr. Karigar, but denied that he conspired with him to ensure CryptoMetrics qualified for the contract. Meanwhile in Canada, experts on the seldom-enforced extraterritorial law said the outcome of Mr. Karigar’s case will have serious implications for the country’s reputation. In April, Mr. Karigar is scheduled to argue that the charge against him should be thrown out because there is no “real and substantial link” to Canada – a requirement for a judge or jury to find him guilty.
 விமான நிலையங்களில் பையோமெட்ரிக் திட்டம் குறித்து கனடாவுடன் செய்த ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக மத்திய அமச்சர் பிரபுல்பட்டேல் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கனடாவிலிருந்த வெளிவரும் குளோபல், மெயில் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் சிவில்விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பிரபுல்பட்டேல், அப்போது, விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகவை எளிதல் அடையாளம் முகத்தினை அடையாளம் காண்பதற்காக கம்ப்யூட்டர் வாயிலாக பையோமெட்ரிக் முறையில் திட்டம் கொண்டுவரப்பட்டது.இதற்காக ஏர்இந்தியா நிறுவனம் , கனடாவைச் சேர்ந்த க்ரைப்டோமெட்ரிக்ஸ் நிறுவனத்துடன் 100 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதில் கனடா வாழ் இந்தியர் நஸீர்காரிகார் என்பவர் இடைத்தரகாக இருந்தள்ளார்.ஒப்பந்தத்தை நிறைவேற்ற அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த பிரபுல்பட்டேல்,( தற்போது கனரக தொழில்துறை அமைச்சராக உள்ளார்) மற்றும் மும்பையைச் சேர்‌ந்த லட்சுமண் தோபல், உயர்போலீஸ் அதிகாரி ஆகியோரை சந்தித்து, 250,000 டாலர் கமிஷனாக கொடுத்துள்ளார்.இவ்வாறு அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பிரபுல்பட்டேல் மறுப்பு தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவை மீட்கும்வரை ஓயமாட்டேன் ஜெயலலிதா!

 இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்கும் வரை தன் தலைமையிலான அரசு ஓயப்போவதில்லை என்றும் கச்சத்தீவை மீட்பதன் மூலம் மட்டுமே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆறுமுகம் தொடுத்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஜெயலலிதா இவ்வாறு தெரிவித்தார்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது - பாராட்டு விழாவில் ரஜினி பேச்சு!


ஓரினச்சேர்க்கை தோழிகள் தற்கொலை!

சேலம் நகரில் உள்ள கருங்கல்பட்டி, கலைஞர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் பக்கத்தில் உள்ள ஒரு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (வயது 33). இவர்களுக்கு சத்தியா (வயது 15) என்ற மகளும், சதீஸ் (வயது 13) நடேசன் (வயது 8) என்ற இரண்டு மகனும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஈஸ்வரி சேலம் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவர்களின் ஒரே மகள் சிந்து (வயது 24) பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பக்கத்து பக்கத்து வீடுகளில் உள்ள சுந்தரியும் சிந்துவும் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். எதை வாங்கினாலும் இருவரும் ஒன்று போலவே வாங்குவார்கள். இரவு தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எல்லாம் நீங்க என்ன புருசன் பொண்டாட்டியா...? என்று கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.இந்த வார்த்தைகளை கேட்ட சிந்துவின் பெற்றோர்கள் தங்களின் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார் சிந்து.

உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது எங்களின் கடமை... என்று கூறிய பெற்றோர்கள்.. திருமணத்தின் அவசியத்தை எடுத்து சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக மகளின் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர்.நேற்றும் காலையில் மகளுக்கு திருமண செய்யலாம் என்று பேச்சு எழுந்துள்ளது, அப்போது தனக்கு தலைவலிப்பதாக கூறிய சிந்து தனது அறைக்கு சென்றுவிட்டார்.இப்போது போய் படுத்து தூங்கு... நான் மதியம் வேலையை முடித்து கொண்டு வந்து உன்னை மருத்துவ மனைக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் சிந்துவின் தாயார் ஈஸ்வரி.

மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. கதவை பலமாக தட்டியும் சிந்து வந்து கதவை திறக்காததால் சந்தேகம் கொண்ட ஈஸ்வரி அக்கம் பாக்கம் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் மீது ஏறி வீட்டை பிரித்து உள்ளே சென்று பார்த்துள்ளார். உள்ளே சித்துவும், சுந்தரியும் ஒரே சேலையின் முந்தானையால் ஆளுக்கு ஒரு பக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.தன்னுடைய விருப்பத்தையும் மீறி, தனக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று பயந்த சிந்து தனது நெருங்கிய தோழியை விட்டுபிரிய மனமில்லாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமண வயதுடைய ஒரு பெண் இன்னொரு ஆணுடன் பழகுவதை காட்டிலும், மற்றொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவது எவ்வளவு பெரிய தவறு என்பதற்கு சிந்து சுந்தரி நல்ல உதாரணம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...