|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 September, 2013

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளருக்கு உண்டு!

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. தேர்தல்களில் யாருக்குமே வாக்களிக்காமல் இருப்பது தொடர்பாக பொதுநலன் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த பொதுநலன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின்படி, தேர்தலில் போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களையுமே நிராகரிக்கிற உரிமை வாக்காளுக்கு உண்டு. அத்துடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் "மேலே உள்ள வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை" என்பதை பதிவு செய்யக் கூடிய பட்டனையும் தேர்தல் ஆணையம் இணைக்க வேண்டும். மேலும் இப்படி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்கிற வாக்காளர் பற்றிய விவரத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படி நிராகரிப்பு வசதியை ஏற்படுத்தினால் தேர்தலில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். வேட்பாளர்கள் அனைவரும் நிராகரிக்கப்படுவார்கள் என்ற அச்ச உணர்வால் நேர்மையானவர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதியாக செயல்படும் திறன் கொண்டவர்களை மட்டுமே தேர்தலில் நிற்க வைக்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் கிரிமினல் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...