|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 March, 2011

ஆல்பமாகிறது திருக்குறள்: பரத்வாஜின் மெகா திட்டம்

இசையமைப்பாளர் பரத்வாஜ் வித்தியாசமாக 1330 திருக்குறள்களையும் ஒன்று சேர்த்து ஒரு ஆல்பம் தயாரிக்க இருக்கிறார்.
காதல் மன்னன், அமர்க்களம், ஆட்டோகிராப், ஜே ஜே, வட்டாரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,  உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் ஒன்றாக சேர்த்து ஆல்பம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து பரத்வாஜ் கூறியதாவது, சமீபத்தில் தான் திருக்குறளை படிக்க ஆரம்பித்தேன். அதில் உள்ள ஒவ்வொரு குறளும் மிக அருமையாக உள்ளது. வாழ்க்கையின் அர்த்தத்தை மிக அழகாக விளக்கி இருக்கிறார் வள்ளுவர். அப்படிப்பட்ட குறளை ஒரு ஆல்பமாக தயாரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இது என்னுடைய கனவு திட்டம். ஒவ்வொரு குறளுக்கும் ஒரு பாடகர்கள் வீதம், 1330 பாடகர்களை இந்த ஆல்பத்தில் பாட இருக்கின்றனர். இந்த ஆல்பம் சுமார் 11மணி நேர பாடக்கூடியதாக இருக்கும்.  இந்தபணி தொடர்பாக விரைவில் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். என்றார்.

துபாயில் பெண்கள் தினம்

துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் தின விழா பிப்ரவரி 25ம் தேதி கொண்டாடப்பட்டது. ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் பெண்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது. பெண்கள் தின விழாவையொட்டி சமையல், ரங்கோலி, மருதாணி, கலைநயமிக்க பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்காக ஓவியப்போட்டி மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு

இன்று மதியம் ஜப்பான் நேரப்படி 3. 40 நிமி‌டம் அளவில் புகுஷிமாவில் உள்ள ஒன்றாம் நம்பர் பிளாண்டில் பெரும் சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சீர் செய்யும் பணியில் இருந்த 4 பேர் காயமுற்றதாக ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் கூறப்படுகிறது. இந்த வெடிப்பின் காரணமாக எந்த அளவிற்கு சேதம் இருக்கும் என நிர்மாணிக்க முடியவில்லை. முன்னதாக இங்கு குளிரூட்டும் சாதனங்கள் மூலம் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டதாக ஜப்பான் அரசு முடிவு செய்திருக்கிறது.

அணுமின் கசிவு அதிகாரிகள் விளக்கம்: புகுஷிமாவில் அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்; சுனாமி காரணமாக இங்குள்ள 5 அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

அவசர நிலை பிரகடனம்: இந்தப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிப்போர‌ை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை கூல் செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் புகார் கொடுக்கணுமா?-7598700298 எண்ணில் தொடர்பு கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுரை

சென்னை: தமிழகத்திற்கு வந்துள்ள தேர்தல் பார்வையாளர் வீடியோ காமிராவுடன் கண்காணிப்பில் ஈடுபடுவார். மேலும், அவரை பொது மக்களும், அரசியல் கட்சியினரும் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை சந்தித்து புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிமாநில ஐ.ஜி.க்கள் 4 பேர் நேற்று தமிழகம் வந்துள்ளனர். இதில் ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஜிதேந்தர் வட மாவட்டங்களின் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை சந்தித்து புகார் கொடுக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் 7598700298 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடு்க்கப்படும்.

ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு திருப்பதியில் புதிய சலுகை

திருப்பதியில் தற்போது ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கும், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் விடுதி போன்ற ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்கள் தங்களின் குடும்பத்தினர் ஐந்து பேர் வரை வாழ் நாள் முழுவதும் ஆண்டுக்கு மூன்று முறை வெங்கடேச பெருமாளை தரிசிக்க சிறப்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மூன்று நாட்களிலும் திருமலையில் 2 ஆயிரத்து 500க்கான தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். அதோடு ஒரு நாள் அதிகாலை சுப்ரபாத சேவை தரிசனத்துக்கான டிக்கெட் வழங்கப்படும். ஒரு கோடி ரூபாய் அளித்தவரின் குடும்பத்தினர் ஒருவரை ரங்கநாய மண்டபத்தில் அமரச் செய்து ஆசிர்வாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஏழுமலையான் உருவம் பொறித்த 5 கிராம் தங்க டாலர், 5 பெரிய லட்டுகள், மேல் வஸ்திரம், ரவிக்கை துணியுடன் மகா பிரசாதம் வழங்கப்படும். தேவஸ்தானம் செயல்படுத்தி வரும் வேத பரிரக்ஷண டிரஸ்ட்டிற்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களின் பெயரில் சீனிவாச மங்காபுரத்தில் சிறப்பு மகா யாகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பல்கலை.யாக ஹார்வேர்ட் பல்கலை. தேர்வு - 12-03-2011











முன்னதாக உலகளவில் கல்வித்துறையி்ல் சிறந்து விளங்கும் 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்ய கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து உளளிட்ட 131 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 388 கல்வி மையங்கள் ஆய்வு செயயப்பட்டு, பின்னர் அவற்றில் இருந்து 45 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து 10 பல்க‌லைக்கழகங்கள் தேர்வாகின.
 

தயாளு அம்மாள், கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான ஏலத்தில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அத்துறையின் மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.,வின் ராஜா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ராஜாவிடம் நடத்திய விசாரணையில், "டி.பி. ரியாலிட்டி' நிறுவனத்தின் உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வாவை கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக ஆளுங்கட்சி தி.மு.க.,வின், "கலைஞர் டிவி'யில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்த தகவல் கிடைத்தது. "கலைஞர் டிவி'யைப் பொறுத்தவரை, முதல்வரின் மனைவி தயாளுவுக்கு 60 சதவீத பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், அதன் மேலாண் இயக்குனரான சரத் ரெட்டிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. "கலைஞர் டிவி'க்கு எந்த வகையில் முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன.இந்நிலையில், அந்த தொகையை கடனாக பெற்றதாகவும், 30 கோடி ரூபாய் வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்தில் வந்து சோதனையிடலாம் என்றும், "டிவி' நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இம்மாதம் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தற்போது சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

"கலைஞர் டிவி' விவகாரத்தை தாண்டி, கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ., முடிவெடுத்து, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இதே சூழலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன.இப்பிரச்னை அடங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், "கலைஞர் டிவி' பங்குதாரர்களுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. அதில், நேற்று காலை "கலைஞர் டிவி' அலுவலகத்தில் விசாரணை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் நேர்காணல், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையில், நேற்று காலை 8.45 மணிக்கு திடீரென, டில்லி சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், சென்னை சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் உதவியுடன் நுழைந்தனர்.அப்போது, "டிவி'யின் மேலாண் இயக்குனர் சரத் ரெட்டி இருந்தார். கனிமொழி, தயாளு இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, 10.15 மணிக்கு கனிமொழியும், 10.30 மணிக்கு தயாளுவும், "டிவி' அலுவலகத்திற்குள் நுழைந்தனர். திட்டமிட்டபடி, காலை 11 மணிக்கு, தயாளுவிடம் விசாரணை துவங்கியது. ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், "டிவி'க்கு முதலீடு பெற்ற விதம், செலுத்தப்பட்ட வட்டித் தொகை எங்கிருந்து வந்தது என்பதற்கான விளக்கங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.15 மணிக்கு விசாரணை முடிந்து, தயாளு புறப்பட்டார். அடுத்ததாக, கனிமொழியிடமும், தொடர்ந்து சரத் ரெட்டியிடமும் விசாரணை நடந்தது. பகல் 2.10 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விசாரணையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் இன்னும் தி.மு.க., - காங்கிரஸ் இடையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், சி.பி.ஐ.,யின் இந்த விசாரணை நடவடிக்கை, தி.மு.க.,வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ.,யின் அடுத்த கட்ட, "மூவ்' என்ன என்பது, யாருக்கும் தெரியாத நிலையில், என்ன நடக்குமோ என அனைத்து தரப்பும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. சுனாமி போல் "2ஜி' விவ காரம் தி.மு.க.,வை தாக்குவதால், கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

ஜப்பானில் அணுசக்தி வாயு கசிவு: வீடுகளை காலி ; செய்ய உத்தரவு: இதுவரை ஆயிரத்து 300 பேர் பலி !

டோக்கியோ: ஜப்பானை புரட்டிப்போட்டு நிலைகுலைய செய்துள்ள நிலையில் இங்குள்ள அணு மின் மையத்தில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இது பெரும் அச்சம் தரும் விஷயமல்லை என்ற போதும் அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் வரை வசிப்போர் காலி செய்து மாற்று இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் சுனாமி தாக்கியதில் டோக்கியோவையொட்டி பல்வேறு தீவுப்பகுதிகள் மூழ்கின. கடலோரத்தில் இருந்த துறைமுகங்கள், வீடுகள் முற்றிலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருந்த புத்தம், புது கார்கள் ஆயிரக்கணக்கில் கடலில் குப்பைகள் போல சென்றன. 3 ரயில்கள் காணவில்லை. இதில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் , மற்றும் வாகனங்களில் சென்று ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 300 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும் ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

அணுமின் கசிவு அதிகாரிகள் விளக்கம்: புகுஷிமாவில் அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்; சுனாமி காரணமாக இங்குள்ள 5 அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

அவசர நிலை பிரகடனம்: இந்தப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிப்போர‌ை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை கூல் செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...