|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 December, 2012

தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை!

தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை! துபை: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை. இங்கிலாந்துடனான தொடரில் மொத்தமே 112 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சச்சின் 19-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதேபோல் சேவாக், புஜாரா ஆகியோர் 25,26 -ஆவது இடங்களுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். கோஹ்லி 41-வது இடத்திலிருந்து 37-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். டோணி அதே 38-வது இடத்தில் இருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஓஜா 9-வது இடத்திலும் அஸ்வின் 20-வது இடத்திலும் இருக்கின்றனர். ஜாகீர் கான் 15-வது இடத்திலும் இஷாந்த் சர்மா 32-வது இடத்திலும்

டெல்லி மட்டுமே முழு இந்தியா அல்ல?

டெல்லியில் நடைபெற்ற பலாத்கார சம்பவம் மிகவும் கொடூரமான குற்றம். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதியில் குறிப்பாக கிராமப் புறங்களில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் இப்படியான குரல்கள் எழுந்திருக்குமா? ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் அது பேசப்பட்டிருக்குமா? என்பதையும் அறிய விரும்புகிறேன்..நிச்சயமாக அப்படி ஒரு குரல் எழாது. டெல்லி மட்டுமே அல்ல முழு இந்தியா அல்ல... விதர்பா மற்றும் ஆந்திராவில் கடந்த 10- 15 ஆண்டுகளில் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். விவசாயிகள் தற்கொலையில் உலக சாதனை இது. ஆனால் இதற்கெல்லாம் இத்தகைய கூப்பாடுகளும் குரல்களும் எழவில்லையே... பலாத்காரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் டெல்லி விவகாரத்தில் குரல் எழுப்புகிற அனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவெனில் இது ஒன்றுதான் ஒட்டுமொத்த இந்தியாவின் முக்கிய பிரச்சனை என்று நினைக்காமல் அனைத்து பிரச்சனைகளிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதுதான். ஐபிசி 376-ன் கீழ் பலாத்கார குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்க வழி இருக்கிறது. அப்படி இருக்கும்போது டெல்லி பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையோருக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்க கோருகின்றனர் என்பதற்கான காரணம் தெரியவில்லை. நாடு முழுவது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்ட விலைவாசி, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, குழந்தைகளுக்கான சத்து குறைபாடு, கல்வி பிரச்சனைகள் போன்றவற்றுக்கும் டெல்லி பலாத்கார சம்பவத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.

மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் முதலிடம்!

அமெரிக்காவில் உள்ள பேவ் (பி.இ.டபிள்யூ) பேரவை அமைப்பு உலக அளவில் மதரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அவர்களில் கிறிஸ்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் 220 கோடி பேர் உள்ளனர். இது மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். இவர்களை தொடர்ந்து 2-வது இடத்தில் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 160 கோடி. 3-வது இடத்தில் இந்துக்கள் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 100 கோடி. இது உலக மக்கள் தொகையில் 15 சதவீதமாகும்.

இவர்களையடுத்து 50 கோடி புத்த மதத்தினரும், 1 கோடியே 40 லட்சம் யூதர்களும் உள்ளனர். இந்த கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு 230 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டது. அவர்களில் 10-க்கு 8 பேர் மத அடிப்படையில் வாழ்கின்றனர். மொத்தம் 580 கோடி பேர் பல்வேறு மதங்களை கடைபிடித்து வருகின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...