|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 January, 2012

King Fisher Calender Hunt 2012










அறிவியலில் இந்தியாவை மிஞ்சியது சீனா பிரதமர்!

அறிவியல் துறையில் இந்தியாவை சீனா மிஞ்சிவிட்டது என பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரிசாவில் அறிவியல் மாநாட்டில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார். சீனாவுடன் போட்டிபோட வேண்டுமானால் அறிவியில் துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வது அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) ஒதுக்கீடு  விகிதம் மிகவும் குறைவாகவும், மந்தமாகவும் உள்ளது என அவர் கூறினார். கடந்த பல ஆண்டுகளாக அறிவியல் துறையில் இந்தியாவின் நிலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. சீனா போன்ற நாடுகள் நம்மை முந்தி வருகின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியம் என்றார் அவர். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக செலவிடப்படும் 1 சதவீத ஜிடிபி 12-வது திட்டத்தின் முடிவுக்குள் 2 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம் என மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

டாப் 10 கோவில்கள்...


அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
எண் கோவில் ரூ/கோடி
1 தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2 மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3 சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4 சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5 அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6 அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8 ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9 தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10 தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.

பத்தாம் வகுப்புதேர்வுக்கான அட்டவணை...


சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக நடைபெறும் பத்தாம் வகுப்புதேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி துவங்கி ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் பத்து லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 
ஏப்ரல்4ம் தேதி தமிழ் முதல் தாள் தேர்வு
ஏப்ரல்9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வு
ஏப்ரல்11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள் தேர்வு
ஏப்ரல்12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு
ஏப்ரல்16ம் தேதி கணிதம்
ஏப்ரல்19ம் தேதி அறிவியல்
ஏப்ரல்23ம் தேதி சமூக அறிவியல் 

மெட்ரிக் பள்ளி தேர்வுகளுக்கான அட்டவணை அறிவிப்பு: பழைய பாடதிட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான மெட்ரிக் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளும் ஏப்ரல் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல்4ம் தேதி மொழி முதல் தாள்
ஏப்ரல்9ம் தேதி மொழி இரண்டாம் தாள்ஏப்ரல்10ம் தேதி ஆங்கிலம் முதல் தாள் 
ஏப்ரல்11ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள் 
ஏப்ரல்12ம் தேதி கணிதம் முதல் தாள்
ஏப்ரல்16ம் தேதி கணிதம் இரண்டாம் தாள் 
ஏப்ரல்17ம் தேதி அறிவியல் முதல் தாள்
ஏப்ரல்19ம் தேதி அறிவியல் இரண்டாம்தாள் 
ஏப்ரல்19ம் தேதிவரலாறு,குடிமையியல்
ஏப்ரல்23ம் தேதி புவியியல்,பொருளாதாரம்
ஓ.எஸ்.எல்.சி., தேர்வு: ஓ. எஸ்.எல்.சி., தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. பழைய பாடதிட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் தனித்தேர்வுகளுக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளும் ஏப்ரல் 4ம் தேதி துவங்கி 23ம் தேதி முடிவடைகிறது. 
ஏப்ரல்4ம் தேதி தமிழ்ஏப்ரல்9ம் தேதி முதன்மை மொழி முதல் தாள்
( சமஸ்கிருதம்,அரபி)
ஏப்ரல்10ம் தேதி முதன்மைமொழி இரண்டாம் தாள்( சமஸ்கிருதம்,அரபி)
ஏப்ரல்11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல்12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல்16ம் தேதி கணிதம்
ஏப்ரல்17ம் தேதி மொழி மூன்றாம் தாள்( சமஸ்கிருதம்,அரபி)
ஏப்ரல்19 ம் தேதி அறிவியல்
ஏப்ரல்23ம் தேதி சமூக அறிவியல்
ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள்:ஆங்கிலோஇந்தியன் தேர்வுகளுக்கான தேதியும்அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய பாடதிட்டத்தின் கீழ் தனிதேர்வுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளத. தேர்வு ஏப்ரல் 4ம் தேதி துவங்கி ஏப்ரல் 23ம் தேதி முடிகிறது. 
ஏப்ரல்4ம் தேதி மொழி 
ஏப்ரல்9ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல்10ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல்11ம் தேதி கணிதம் முதல் தாள்
ஏப்ரல்12ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல்16ம் தேதி அறிவியல் முதல் தாள்
ஏப்ரல்17ம் தேதி அறிவியல் இரண்டாம் தாள்
ஏப்ரல்18ம் தேதி சமூக அறவியல், குடிமையியல்
ஏப்ரல்23ம் தேதி புவியியல் 

இந்தியாவின் முதல் சூப்பர் கார் ரூ.30 லட்சத்தில்...


இந்தியாவின் பிரபல கார் வடிவமைப்பாளர் திலிப் சாப்ரியா வடிவமைத்த இந்தியாவின் முதல் சூப்பர் கார் வருகிற 5ம் தேதி டில்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சூப்பர் காரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முதல் பார்முலா ஒன் பந்தயம் நடந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டை போற்றும் வகையில் இந்த காருக்கு புத் என்று திலிப் பெயரிட்டுள்ளார். ஆனால், இந்த பெயரை விரைவில் மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.பல கோடி மதிப்புடைய லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு இணையான வடிவமைப்பு மற்றும் வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும். ஆனால், எஞ்சின் திறன் மட்டும் லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு இணையாக இருக்காது. இந்த சூப்பர் காரில் ஹோண்டா நிறுவனத்தின் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சம் 400 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மேலும், இந்த கார் ரூ.30 லட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வடிவமைத்த திலிப் சாப்ரியாவின் பெயர் இந்திய ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் வெகு பிரபலம். இவர் நீண்ட காலமாக கார் வடிவமைப்பு துறையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் வாகன வடிவமைப்பு துறையில் பாண்டித்தியம் பெற்ற திலிப் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் வடிவமைப்பு ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் டிசி என்ற பெயரில் புதிய கார் வடிவமைப்பு மற்றும் ஆக்சஸெரீஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். டிசி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் இந்த புதிய சூப்பர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் கேட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...


காஷ்மீர் மாநிலத்தில் மின்சாரரம் கேட்டு வீதிக்கு வந்து போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலைகளில் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள போனியார் பகுதியில் மின்சாரம் சரிவர கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் இங்குள்ள மின்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து இங்குள்ள முக்கிய வாயில் வழியாக <உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனையடுத்து இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் (சி.ஐ.எஸ்.எப்.,) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுக்கு இலக்கான அல்தாப் அகம்மது (25 ) இறந்தார். அப்துல் மஜீத்கான் மற்றும் பர்வேஸ் அகம்மது படுகாயமுற்றனர். இந்த சம்பத்தினால் இங்கு பதட்டம் நிலவுகிறது. துப்பாக்கியால் சுட்டு சாவுக்கு காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் போராட்டம் வலுத்துள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் பற்றாக்குறை இருந்து வந்ததால் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த போராட்டம் இன்னும் மாநிலம் முழுவதும் பரவி விடுமோ என சம்பவம் நடந்த பகுதிக்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.


இதே நாள்...


  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது(1958)
  •  ஆப்பிள் கணினி நிறுவன மயப்படுத்தப்பட்டது(1977)
  •  ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போரிட்ட தமிழக மன்னன் கட்டபொம்மன் பிறந்த தினம்(1740)
  •  முதலாவது மின் கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பெனி அறிமுகப்படுத்தியது(1957)
  •  அலாஸ்கா, அமெரிக்காவின் 49வது மாநிலமானது(1959)

முப்பரிமாண தொலைக்காட்சி (3டி) ஒளிபரப்பு சீனாவில் தொடங்கியது...

சீனா தனது முதல் முப்பரிமாண தொலைக்காட்சி(3 டி) ஒளிபரப்பைத் தொடங்கியது. புத்தாண்டை முன்னிட்டு சோதனை முயற்சியில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் புத்தாண்டாகக் கருதப்படும் வரும் ஜனவரி 23 ம் தேதி நிகழ்ச்சிகளுடன் கூடிய ஒளிபரப்பு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில், கலை சார்ந்த நிகழ்ச்சிகள், விளையாட்டு, திரைப்படம், கார்ட்டூன் குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முப்பரிமாண ஒளிபரப்பு, சீனாவின் மாகாண தொலைக்காட்சி மற்றும் 5 தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புடன் இணைந்து இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முப்பரிமாண வசதி கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய செட் ஆஃப் பாக்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் முப்பரிமாணங்களில் நிகழ்ச்சிகளைக் காணலாம். "முப்பரிமாண தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது சீன தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது" என மாகாண தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் தலைவர் கய்புஃகாவ் தெரிவித்தார். உதாரணத்துக்கு, 50 கோடி மக்கள் இந்த சேவைகளைப் பார்க்க, தங்களிடமுள்ள தொலைக்காட்சிப் பெட்டியை மாற்றம் செய்வதற்கு மட்டும் சுமார் ரூ.80,000 கோடி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பானிலும், தென் கொரியாவிலும் இந்த சேவை தொடங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

நிவாரணம் வேண்டாம்; வாழ்வாதாரம் வேண்டும் தங்கர் பச்சான்

திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,   ‘’தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை, நேரடியாக சென்று மக்களை சந்தித்து வந்ததையும், அதன் தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு காணவும் பத்திரிகையாளர்களான உங்களை சந்திக்க ஒரு விவசாயின் மகனாக வந்திருக்கிறேன். ஏற்கனவே பின்தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் இனி மீண்டும் பழைய வாழ்கைக்கு எழவே வாய்ப்பில்லாத அளவுக்கு தானே புயலால் சேதம் அடைந்துள்ளது. உயிர்ச்சேதம் அதிகம் இல்லை என்பதால் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். உயிர்ச்சேதம் என்பதை விட இரு மாவட்டங்களின் வாழ்வாதாரமான பயிர்ச்சேதம், பொருள் சேதம், வாழ்வாதார சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 5 நாட்கள் ஆகியும், இன்றும் அங்குள்ள மக்கள் குடிக்க நீரீன்றி, உண்ண உணவின்றி, படுக்க இடமின்றி கேட்பாரற்று கிடக்கிறார்கள்.
 
அவர்களுடைய எல்ல வளங்களும் பறிபோய் விட்டன.  அம்மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் புயல் தாக்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார்கள். அப்பகுதி மக்களின் குரலாக தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் சில கோரிக்கைகளை வைக்கிறேன். அழிந்து போன பயிர்கள் எல்லாம் நெல், கரும்பு போன்ற குறுகியகாலப் பயிர்கள் இல்லை. நட்டு வைத்த பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஆயுள் வரை பலன் தரக்கூடிய மரப்பயிர்களான முந்திரி, பலா, மா போன்றவைகளெல்லாம் அழிந்து போய்விட்டன. தமிழக முதல்வர் அவர்கள் ஒருமுறை நேரில் சென்று அம்மாவட்டங்களை சுற்றிப்பார்க்க வேண்டுகிறேன். இப்பகுதி மக்கள் உங்களைத்தான் நம்பியிருகிறார்கள். மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டு பெற்று இம்மாவட்டத்தை வளப்படுத்த வேண்டும். அவர்களிடம் இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறேதும் இல்லை. நிவாரணம் என்ற பெயரில் அம்மக்களுக்கு பண உதவி கொடுக்கவேண்டாம். அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை உடனே செய்து தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். புயல் பாதித்த அன்றே 150 கோடி ஒதுக்கியது நமது மாநில அரசு. ஆனால் அதன் பலன் இன்றுவரை அப்பகுதி மக்களுக்குப் போய் சேரவில்லை. மத்திய அரசோ துளியும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
 
வெறும் நிவாரணம், மானியம், கடன் தள்ளுபடியால் மட்டும் விவசாயிகளின் வாழ்வு உயர்ந்து விடாது.  நமது அரசு விவசாயம் குறித்து நன்கு அறிந்த முதல் நிலை அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நியமித்து துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஐந்து நாட்களாகியும் அடிப்படைத் தேவைகளில் 5 சதவீதம் கூட தீர்க்க முடியாத அம்மாவட்ட ஆட்சியரை மாற்றி செயலில் இறங்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பையும் மற்றும் மாற்றுப் பயிர் திட்டத்தையும், விவசாய உற்பத்திக்கான அனைத்து இடுபொருட்களையும் தந்து வருமானம் பெறும்படி அரசு செயல்படுத்துமானால் தற்கொலைகளும், வறுமையும், பஞ்சமும் காணாமல் போய்விடும்.
 
அப்பகுதி விவசாய மக்களுக்கு தண்ணீர் வசதியை அரசு செலவில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விவசாயத்திற்கான பொருட்களை அரசே குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களின் பிள்ளைகளுக்கு, வரும் பத்தாண்டுகளுக்கான அரசு மற்றும் தனியார் பள்ளி,  கல்லூரிகளின் படிப்பு செலவுகள் முழுவதையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அத்துடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும். பள்ளிகளில் காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் உணவு தரவேண்டும். மேலும் மேலும் மக்களை சிந்திக்க விடாத, சோம்பேறிகளாக, ஏழைகளாக, உயிர்கொல்லிகளாக மாற்றும் மதுக்கடைகளை உடனே அகற்றிட வேண்டும். அம்மாவட்ட மக்களின் மனதில் உள்ள வேதனைகளைத் தீர்க்க முதலமைச்சர் அவர்கள் உடனடியாக, மத்திய அரசிடம் நிதியைக் கேட்டு பெற்று அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்’’’என்று வேண்டுகோள் விடுத்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...