|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 January, 2012

இந்தியாவின் முதல் சூப்பர் கார் ரூ.30 லட்சத்தில்...


இந்தியாவின் பிரபல கார் வடிவமைப்பாளர் திலிப் சாப்ரியா வடிவமைத்த இந்தியாவின் முதல் சூப்பர் கார் வருகிற 5ம் தேதி டில்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சூப்பர் காரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முதல் பார்முலா ஒன் பந்தயம் நடந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டை போற்றும் வகையில் இந்த காருக்கு புத் என்று திலிப் பெயரிட்டுள்ளார். ஆனால், இந்த பெயரை விரைவில் மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.பல கோடி மதிப்புடைய லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு இணையான வடிவமைப்பு மற்றும் வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும். ஆனால், எஞ்சின் திறன் மட்டும் லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு இணையாக இருக்காது. இந்த சூப்பர் காரில் ஹோண்டா நிறுவனத்தின் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சம் 400 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மேலும், இந்த கார் ரூ.30 லட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வடிவமைத்த திலிப் சாப்ரியாவின் பெயர் இந்திய ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் வெகு பிரபலம். இவர் நீண்ட காலமாக கார் வடிவமைப்பு துறையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் வாகன வடிவமைப்பு துறையில் பாண்டித்தியம் பெற்ற திலிப் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் வடிவமைப்பு ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் டிசி என்ற பெயரில் புதிய கார் வடிவமைப்பு மற்றும் ஆக்சஸெரீஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். டிசி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் இந்த புதிய சூப்பர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...