|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2013

தாயை விலை பேசும் பாதகன்!

நம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழருக்கும் தமிழ் மண்ணுக்கும் துரோகம் இளைக்கும் இந்த நய வஞ்சக நாயை என்  இனமே   இன்னும் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறாயே? அரசியல் சாக்கடையில் நானும் இருக்கிறேன் என்பதற்காக ஏதாவது பித்துக்குளித்தனம் செய்துகொண்டிருக்கும் இந்த கலியுக சகுனி இன்று ஆட்டை கடித்து மாட்டையும் கடித்து... இன்று நம்மை கூறுபோட்ட நய வஞ்சக நாயுடன் கூட்டணியாய் என்ன? என்ன? செய்ய போகிறது? என்று என்  மனம் அலைபாய்கிறது என்  தமிழ் இனமே இன்னும் இந்த நாசகாரனை நம் மண்ணில் அனுமதிக்கலாம?
ராஜபக்சே மீது தீவிர பாசம் கொண்டவர் சுப்பிரமணியம் சாமி. இந்த நிலையில் நேற்று கொழும்பு சென்று ராஜபக்சேவையும் அவரது தம்பி கோத்தபயாவையும் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்கள் அனைவரும் கூடி என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. நேற்று ராஜபக்சேவின் அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஒரு தீவிரவாதி, அவரது மகன் பாலச்சந்திரனும் தீவிரவாதி என்று சொல்லி வருபவர் இந்த சாமி. மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசி வருபவர். ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளது. இதிலிருந்து தப்பும் வழி என்ன என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது இலங்கை. எனவே சாமியைக் கூப்பிட்டு அவர்கள் ஆலோசனை கேட்டிருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

டன் கணக்கா லட்டு தின்னும் பவர்!


கொடுக்கிற கடவுள் கூரைய பிச்சுக்கிட்டு கொடுப்பார்னு சொல்வாங்க. இப்போ கடவுள் கொடுத்துக்கிட்டு இருக்கிறது பவர் ஸ்டாருக்கு. கண்ணா லட்டு தின்ன ஆசையான்னு எல்லாரையும் பார்த்த கேட்டுபுட்டு டன் கணக்குல லட்டு திங்குறது பவர் ஸ்டார்தான். நிறைய படங்கள்ல குத்துப்பாட்டு, மூன்று படங்கள் காமெடின்னு மனுஷன் காட்டுல இப்போ லட்டு மழை இல்லீங்க துட்டு மழை. தான் தயாரித்த, இயக்கிய, நடித்த படங்களை அப்படியே தூக்கி பரன்ல போட்டுவிட்டு ராத்திரி பகலா நடிச்சிக்கிட்டிருக்காரு. ஒரு நாளைக்கு மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு ரிச் கேர்ளோடு ஆட்டம் போடுகிறார். இதன் உச்சகட்டமாக ஒரு கட்டிட கம்பெனி விளம்பரத்துல நமீதாவுக்கு ஜோடியாக நடிச்சிருக்காரு. பல கட்டிட வேலைகள்ல தில்லுமுல்லு பண்ணினதா பவர்மேல ஏகப்பட்ட வழக்கு இருந்தாலும் நாம் கட்டிடம் கட்ட இந்த விளம்பரத்துல ஆலோசனை சொல்றார். காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டிருக்கிறார் மனுஷன். 


எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்

தமிழ் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்(1910)

பாம்பை தேடி பயணம்!



மேகமலையில், உலகிலேயே இல்லாத அபூர்வ இனத்தைச் சேர்ந்த பாம்பு இனங்களை தேடி, பத்து பேர் கொண்ட நிபுணர் குழு வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில், அதிக வளங்களை கொண்ட வனப்பகுதியாக, தேனி மாவட்டம், மேகமலை உள்ளது. ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் வனங்கள் உள்ளன. இங்கு யானை, புலி உட்பட பல்வேறு வகை பறவைகள், அபூர்வ வகை பாம்புகள் உட்பட, உலகின் மற்ற வனங்களில் இல்லாத அபூர்வ விலங்கினங்கள், உயிரினங்கள் வாழ்கின்றன. வன உயிரின ஆர்வலர்கள் அவ்வப்போது, இந்த வனங்களில் ஆய்வு நடத்துகின்றனர். தற்போது, பாம்புகளை பற்றி ஆய்வு நடத்த, கர்நாடகாவை சேர்ந்த பாம்பு நிபுணர் சைதன்யா தலைமையில், 10 பேர் குழுவினர் மேகமலைக்கு வருகின்றனர். இவர்கள் வருகையின் முக்கிய நோக்கம், உலகில் வேறு எங்கும் இல்லாத அபூர்வ இனத்தை சேர்ந்த ""ஹட்டன் பிட் வைப்பர்'' என்ற பாம்பு இனத்தை தேடி வருகின்றனர். இந்த பாம்பை 100 ஆண்டுகளுக்கு முன், ஹட்டன் என்ற ஆங்கிலேய வன ஆர்வலர் மேகமலையில் பார்த்துள்ளார். 

அப்போது இந்த வகை பாம்புகளை பிடித்து லண்டன் மியூசியத்திலும், மும்பையில் உள்ள மியூசியத்திலும் வைத்துள்ளனர். இன்னும், இந்த பாம்பின் உடற்கூறுகளை இங்கு பாதுகாத்து வருகின்றனர். அதன் பிறகு, யாருமே இந்த பாம்புகளை பார்க்கவில்லை. இந்த வகை பாம்பு இனமே அழிந்து விட்டதாக, வனத்துறை கருதுகிறது. ஆனால், பாம்பு நிபுணர் சைதன்யா தலைமையிலான குழுவினர், இன்னும் இந்த இனம் மேகமலையில் வாழ்வதாக, உறுதியாக நம்புகின்றனர். எனவே தான், இந்த இனத்தை ஒரு மாதத்திற்கு மேல் வனத்திற்குள் தங்கி,தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஹட்டன் பிட் வைப்பர்'' பாம்புகளை மேகமலையில் கண்டறிந்தால் அது உலக சாதனையாகவே கருதப்படும். அழிந்து விட்ட பாம்பு இனங்களின் பட்டியலில் உள்ள இந்த ரகம் இன்னும் வனத்தில் வாழ்கிறது, என்ற நம்பிக்கையில் நாங்கள் தேடுகிறோம். இந்த வனத்தை தவிர, உலகின் வேறு எங்கும் இவ்வகை பாம்பு இனங்கள் இல்லை, என்பதே உண்மை. இந்த பாம்புகளை தேடும் பணியில் ஈடுபடும் போது, மேலும் பல அபூர்வ வன உயிரினங்கள் பற்றிய சுவாராஸ்யமான தகவல்களும் வெளிவரும் என நம்புகிறோம்,  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...