|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 March, 2011

இதே நாள் 24 மார்ச் 2011

  • சர்வதேச காச நோய் தினம்
  •  இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த தினம்(1776)
  •  கர்நாடக இசைப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் இறந்த தினம்(1988)
  •  கிறீஸ் குடியரசாக்கப்பட்டது(1923)
  •  மவுண்ட்பேட்டன் பிரபு இந்திய கவர்னர் ஜெனரலானார்(1947)

ஆப்பிரிக்க சர்வாதிகார நாடுகளுக்கு பான்-கீ-மூன் எச்சரிக்கை

பியாவுக்கும் அந்த நாட்டு அதிபர் கடாபிக்கும் ஏற்பட்டுள்ள கதிதான் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க சர்வாதிகார நாடுகளுக்கு ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார். எகிப்தில் அதிபர் முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மக்கள் வெற்றிபெற்றனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் முபாரக், தானாகவே முன்வந்து பதவி விலகினார். இதனால் அந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து தப்பியது. எகிப்தை தொடர்ந்து பஹ்ரைன், ஏமன், ஓமன் மற்றும் லிபியா துனிசியா ஆகிய நாடுகளில் அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லிபியாவில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்த அதிபர் கடாபி உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க கூட்டுப்படைகள் லிபியா மீது கடும் தாக்குதலை தொடங்கியுள்ள. இதே நிலைதான் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க வடக்குப்பகுதியில் உள்ள சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளுக்கு ஏற்படும் என்று பான் கீன் மூன் கடுமையாக எச்சரித்துள்ளார். பஹ்ரைன், சிரியா ஏமன் ஆகிய நாடுகளில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது அடக்குமுறையை கையாளுவதற்கு பான் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டம் நடந்து வரும் நாடுகளில் நிலைமை முற்றிலும் விரைவில் மாறுபடும் என்று கெய்ரோவில் அளித்த பேட்டியின் போது பான் கூறினார். இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சர்வதேச சமுதாயம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு உதவ வேண்டிய கடமை இந்த சர்வதேச சமுதாயத்திற்கு உண்டு என்றும் பான் கூறியுள்ளார்.

வீரமரணம் அடையத் தயார்: கடாஃபி

லிபியாவின் வெற்றிக்காக வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன் என்று அந்நாட்டு அதிபர் கடாஃபி (68) கூறியுள்ளார்.பொதுமக்களிடையே கடாஃபி உரையாற்றுவதை லிபியாவின் அரசுத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியது. அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்."மேற்கத்திய நாடுகளின் செயல் நியாயமற்றதாகும். எங்களுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கு வெற்றி நிச்சயம். லிபியாவுக்காக நான் வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன்." என்றார் கடாஃபி.லிபியாவுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடங்கிய பின்னர், முதன்முதலாக அவர் மக்களிடையே நேரில் தோன்றி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 41 ஆண்டுகளாக லிபியாவின் அதிபராக கடாஃபி இருந்து வருகிறார்

எலிசபெத் டெய்லர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் இன்று காலமானார். அவருக்கு வயது 79.சில ஆண்டுகளாக இருதயக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் காலமானார்.உலகெங்கும் ரசிகர்களை கொண்டுள்ள எலிசபெத் டெய்லர், இருமுறை ஆஸ்கர் விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது."நேஷனல் வெல்வெட், கிளியோபாட்ரா, ஹுஸ் அஃப்ரெய்ட் ஆப் விர்ஜினியா உல்ஃப்" உள்ளிட்ட படங்கள் அவர் நடித்தவற்றில் மிகவும் பிரபலமானவை.நடிகர் ரிச்சர்டு பர்டன் உட்பட 7 பேரை எலிசபெத் டெய்லர் திருணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். ரிச்சர்டு பர்டனுடன் மட்டும் அவர் 12 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெருசலேமில் குண்டுவெடிப்பு: 25 பேர் காயம்

இஸ்ரேலில் புகழ்பெற்ற ஜெருசலேம் நகரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர்.இத்தகவலை அந்நாட்டின் தேசிய மீட்பு பணிகள் துறை தெரிவித்துள்ளது.ஜெருசலேம் நகரப் பேருந்து நிலையத்தில் இன்று திடீரென குண்டுவெடித்தது. இதில், 2 பேருந்துகளின் ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன."பேருந்து நிலையத்தில் திடீரென பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து பேருந்தை உடனடியாக நிறுத்திவிட்டேன். பயணிகள் அனைவரும் அவசரமாக கீழ இறங்கினர்." என்று மெய்ர் ஹகித் என்னும் ஓட்டுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.2004-ம் ஆண்டுக்குப் பிறகு, ஜெருசலேம் நகரில் இத்தகைய குண்டுவெடிப்பு நிகழ்வது இதுவே முதல்முறை.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஜெருசலேம் நகரில் குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதிர்வீச்சு அபாயம்: டோக்யோவில் 25 தூதரகங்கள் மூடல்

japan today.

Embassies from more than two dozen countries have either closed down or moved operations to cities south of Tokyo since the March 11 earthquake and the resulting nuclear crisis in northern Japan, the country's Foreign Ministry said Wednesday.
"There are 25 embassies which either temporary shut down or moved its function outside of Tokyo," Foreign Ministry spokesman Hidenori Sobashima told CNN. Seven of those 25 have moved to cities such as Osaka, Hiroshima and Kobe, Sobashima said.
Those closing or moving included embassies from five European countries, including Germany and Switzerland; 14 African countries, including Kenya, Nigeria and Ghana; and four from Latin America.

ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததால் கதிர்வீச்சு பரவிவரும் நிலையில், தலைநகர் டோக்யோவில் உள்ள தங்கள் தூதரகங்களை மூட 25 வெளிநாடுகள் முடிவு செய்துள்ளன.இத்தகவலை ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டேககி மட்சுமோடோ இன்று தெரிவித்துள்ளார்.ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பின்லாந்து உட்பட 25 நாடுகள் டோக்யோவில் உள்ள தூதரகங்களை மூட முடிவு செய்துள்ளன என்றும், சில தூதரகங்கள் மட்டும் ஜப்பானின் மற்ற நகரங்களுக்கு இடம் மாறியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள் பலர் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டாலும், இடம் மாறினாலும் அதன் அதிகாரிகளுடன் ஜப்பான் வெளியுறவுத்துறை தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான தகவல்கள் வழக்கம்போல் வழங்கப்பட்டு வருவதாகவும் ஜப்பான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எப்போதும் நாக் அவுட்' போட்டியில் அசத்தும் இந்தியா ! புள்ளிவிவரம்.


ஐ.சி.சி., நடத்தும் முக்கிய தொடர்களில், "நாக் அவுட்' போட்டிகளில் மற்ற அனைத்து அணிகளையும் விட, இந்திய அணி அதிகமுறை வெற்றி பெற்று "கிங்' ஆக வலம் வருகிறது.
உலக கோப்பை தொடரின் இன்றைய காலிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி குறித்த புள்ளி விபரங்கள், ரசிகர்களை திகைக்க வைக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் தொடர்களின் "நாக் அவுட்' அளவிலான போட்டிகளில் இந்திய அணி எப்போதுமே அதிக ஆதிக்கம் செலுத்தியது இப்போது தெரிய வந்துள்ளது.
இந்தவகை போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 68.75%. இது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை (64.5%) விட, 4% அதிகம். இதுவரை "டுவென்டி-20', உலக கோப்பை என மொத்தம் பங்கேற்றுள்ள 18 "நாக் அவுட்' போட்டிகளில் இந்திய அணி 11ல் வென்றுள்ளது. ஆனால் 24 போட்டிகளில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி 15ல் தான் வெற்றி பெற்றது.
மற்ற அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் 17ல் 11, இலங்கை 16ல் 8, இங்கிலாந்து 17ல் 7, பாகிஸ்தான் 18ல் 7, தென் ஆப்ரிக்கா 12ல் 4, நியூசிலாந்து 15ல் 5 முறை வெற்றி பெற்றுள்ளன. 


பெண்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காத பா.ம.க.50 சதவீத இட ஒதுக்கீடு கேட்போம் என்கிறது


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடந்த 21ம் தேதி, கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க, வலியுறுத்துவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேடைகளில் ராமதாஸ் பேசும்போதும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்தத் தலைமுறையே கல்வி கற்றதற்கு சமம். பெண்கள் வரதட்சணை கொடுக்கக் கூடாது. படித்து வேலைக்கு செல்ல வேண்டும். பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும். அவர்களை சமமாக நடத்த வேண்டும். பெண்கள் சொல்வதை கேட்டு ஆண்கள் நடக்க வேண்டும் என அறிவுரை வழங்குவார். அவை அனைத்தும் பேச்சளவே என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வின் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மேடைதோறும் பேசி வந்த ராமதாஸ், தன் கட்சியில் ஒரு சீட் கூட பெண்களுக்கு ஒதுக்க முன் வராதது, அவரது கட்சியில் உள்ள பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், இட ஒதுக்கீட்டிற்காக போராடுவதாகக் கூறிக் கொண்டு, இரண்டு தனித் தொகுதிகளை மட்டும் கூட்டணியில் பெற்றுள்ளார். அதில் மட்டுமே ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளில் தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே களம் இறக்கியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க., மட்டுமின்றி, அனைத்து கட்சிகளுமே குறைந்த அளவிலேயே பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள், தங்கள் கட்சியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடை அமல்படுத்த முன் வரவில்லை. பா.ம.க., ஒரு பெண் வேட்பாளரை கூட நிறுத்தாததன் மூலம், ஊருக்குதான் உபதேசம் எனத் தெரிவித்துள்ளது.

நம் அறிநம் அறியாமையே அவர்களின் ஆனந்தம்.


சிலருக்கு சில பொருட்கள் இலவசம் என்ற நிலையிலிருந்து, இப்போது, பலருக்கு பல பொருட்கள் இலவசம் என்றபடி அரசியல்வாதிகளின் தேர்தல் பொருளாதாரம் வளர்ந் திருக்கிறது. இதை, இனி எதுவரை நீட்டிக்க முடியும்? எல்லாருக்கும் தினமும் பஸ்சில், ரயிலில், விமானத்தில் இலவச பயணம். எந்த ஜவுளி கடைக்கும் போய், ஜவுளிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். மளிகைக் கடைகளில் செருப்பு உட்பட எல்லா பொருட்களும் இலவசம். யாரும், எதற்கும் பணம் கொடுக்க வேண்டாம். மின்சாரம், பால் எல்லாமே இலவசம்.

எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தால், மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்களே... அவர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப் பற்றவர்களாக வளர்ப்பார்களே, அது ஒரு சமுதாய அவலமாயிற்றே என்று சிந்திக்கத் தெரியாதவர்களா நம் அரசியல்வாதிகள்... எல்லாம் தெரிந்தவர்கள் தான். ஆனால், சமுதாயத்தின் பொருளா தாரத்தை இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் மூலம் குலைத்தால் தான் சுரண்ட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். எந்த முதல்வர், தான் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து அதைக் கொடுக்கப் போகிறார்... எல்லாம் வரி கொடுப் பவர்களின் பணம் தானே. ஆனால், இலவசங்கள், மக்கள் தரும் வரிப் பணத்திலிருந்து வருவதாக எந்தப் புண்ணிய வான் அரசியல்வாதியும் சொன்னதாகத் தெரியவில்லை. தங்கள் படத்தை, பெயரையும் போட்டுக் கொண்டு, இதையெல்லாம் தாங்களே தருவதாக பசப்புகின்றனர்.

அண்ணாதுரை தன் நிதிநிலைக் கொள்கை, Tap the rich; put the poor என்று சொன்னதாகச் சொல்வர். அவரது பெயரை அனுதினமும் சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்க அரசியல்வாதிகள், "ஏழை மக்களே! உங்களுக்கு உதவுவது, வசதியான உங்கள் சகோதரர்களே' என்று ஏன் எடுத்துச் சொல்வதில்லை? பணக்காரர்களுக்கு, பெரிய தொழிலதிபர்களுக்கு சலுகைகள் செய்யும் வழியில், தம் சொந்த கஜானாவை அரசியல்வாதிகள் வளப்படுத்திக் கொள்கின்றனர். நலத்திட்டங்கள் என்ற பெயரில் அரசு கஜானாவிலிருந்து வெளியேறும் பணமும் வெவ்வேறு சதவீதங்களில் அரசியல்வாதிகளையும், அதிகாரி களையும் திருப்திபடுத்தி விட்டே செல்கிறது. இதைவிட பெரிய தேசியத் திருட்டு வேறு எதுவும் இல்லை. இந்தத் திருட்டை செய்து கொண்டு ஆட்சியில் இருப்பவர்களுக்கு, ஒரு பிக்பாக்கெட்காரனை போலீஸ் மூலம் பிடித்து கோர்ட் மூலம் தண்டனை தரச் செய்வதற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.

அரசாங்கத்தின் பணம், ஆள்பவர்களின் பணம். திருட்டுத்தனமாக சேர்த்ததில் ஏதோ ஒரு சொற்ப சதவீதம், மக்களுக்கு, மறைமுகமாக ஓட்டுக்குப் பணம் என்ற பெயரில் தரப்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன், அரசாங்க செலவில் அடுத்த தேர்தல் வரை விசுவாசத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்க செலவில் சலுகைகள், மானியங்கள் தரப்படுகின்றன. இவை, அடித்தட்டு மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கி விடுகின்றன. "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்' என்ற வாசகத்தின் பொருள், ஏழைகள், ஏழைகளாகவே இருந்தால் தான் எங்கள் இலவசங்களைப் பெற்று, எங்களுக்கே ஓட்டளிப்பர் என்பது தான். சுயமரியாதை, இனமானம் என்றெல்லாம் பசப்பு வார்த்தைகளில் பேசுபவர்களே, அடித்தட்டு மக்களை ஏழை களாகவும், சோம்பேறிகளாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். இது, மக்களுக்கு தெரிந்திருக் கிறது; புரிந்திருக்கிறதா என தெரியவில்லை. "அறியாமை ஆனந்தம்' என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. பாமரர்களின் அறியாமை, அரசியல்வாதிகளின் ஆனந்தம். வரி செலுத்துபவர்களுக்கு வருவதில்லை ஆனந்தம்.

வீணடித்தால் அபராதம்: சலுகை விலை அரிசி போய், இலவச அரிசி வந்திருக்கிறது. அதை எல்லாரும் பயன்படுத்துவதில்லை. விற்றுவிடுகின்றனர். ஆனால், மட்டமான அரிசி விளைவதில்லை. நம் பராமரிப்பு அவலமானது. அரிசியை மட்டுமல்லாமல் பிற தானியங்களையும் வீணாக்குகிறோம். பொருளாதாரம் நமக்குப் புரிவதில்லை. இதோ ஒரு நிகழ்ச்சி: ஐந்தாறு இந்திய இளைஞர்கள், ஒரு ஜெர்மானிய உணவகத்தில் நுழைந்தனர். மேஜைகளில் உட்கார்ந்திருந்த ஜெர்மானியர், பண்டங்களை வீணாக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நம் இளைஞர்கள், ஒரே நேரத்தில் பல பண்டங்களை வரவழைத்தனர். மூன்றில் ஒரு பகுதியை வீணடித்தனர். "பில்' கொடுத்துவிட்டு எழுந்து போகும்போது, பக்கத்து மேஜையில் இருந்த ஒரு பெண்மணி, "ஏன் இப்படி உணவுப் பண்டங்களை வீணடிக்கிறீர்கள்' என்று கேட்க, அவர்களுக்குள் வாக்குவாதம் வந்தது. இந்திய இளைஞர்கள் சொன்னார்கள், "அதனால் உனக்கென்ன நஷ்டம்? நாங்கள் மொத்தத்திற்கு பணம் கொடுத்துவிட்டோமே...' உடனே அந்தப் பெண்மணி, மொபைல் போனில் யாரிடமோ பேச, அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த ஜெர்மானிய போலீஸ்காரர், "ஐம்பது மார்க் அபராதம் விதிக்கிறேன். உங்களிடம் பணம் இருக்கலாம். ஆனால், இங்கே வீணாகியிருப்பது ஜெர்மானியர்களின் உழைப்பு. உணவுக்கு தவிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்' என்றார். அபராதத்தைக் கட்டிய இந்திய இளைஞர், அதன் பிரதியை நண்பர்களிடம் கொடுக்க, அதை அவர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் ஒட்டிவைத்திருக்கின்றனர். சிக்கனத்தை நினைவுபடுத்த! இதேபோல், நம் பணத்தை வீணடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, அபராதம் விதிக்கலாமா? தாராளமாக. எவ்வளவு வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம். அவர்களும் அதைக் கட்டிவிடுவர், நம் பணத்திலிருந்து!

ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.

கத்ரீனா விளம்பரத்தில் ஸ்லம்டாக் மில்லியனேர் பாடல்... ஏ ஆர் ரஹ்மான் வழக்கு


ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் தான் இசையமைத்த பாடலை கத்ரீனா கைப் தோன்றும் விளம்பரத்தில் பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளார் ஏஆர் ரஹ்மான்.


பிரபல இந்திய நடிகை கத்ரினாகைப் நடித்த விளம்பர படமொன்று சமீபத்தில் ரிலீசானது. இதில் ஸ்லம்டாக் மில்லினர் பாடலை பயன்படுத்தி இருந்தனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்தார். காரணம், பாடலின் முழு உரிமையும் ரஹ்மானிடம்தான் உள்ளது.

இதை எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்றாலும் அவரது அனுமதி அவசியம். ஆனால் கத்ரீனா விளம்பரத்தை உருவாக்கியவர்கள் எந்த அனுமதியும் பெறவில்லை.

இதையடுத்து அந்த விளம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளார். இதுபற்றிய சட்ட விவகாரங்களை கவனிக்கும்படி தனது வக்கீல்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரஹ்மான் தரப்பில் இதுபற்றி கூறும்போது, "விளம்பர படத்தை தயாரித்தவர்களிடம் எனது வக்கீல்கள் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகிறார்கள். விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை கத்ரீனாவுக்கு எதிரானதல்ல. காபிரைட் உரிமையை மீறும் வகையில் இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் மீதுதான்.." என்றனர்.

ஓம் சக்தி மூலம் தமிழுக்கு வரும் ஜூனியர் என். டி.ஆர்.


தெலுங்கில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் ஜூனியர் என்டிஆர்.தமிழில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

அதை நிறைவேற்றி வைத்திருக்கிறார் பிரபல தமிழ் - தெலுங்கு தயாரிப்பாளரான அஸ்வினி தத். ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்த வைஜெயந்தி மூவீஸ், இப்போது ஜூனியர் என்டிஆரை வைத்து ஓம் சக்தி என்ற படத்தை எடுத்து வருகிறது.

18 சக்திகள் என புராணங்களில் கூறப்படும் விஷயத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனராம். ரமேஷ் மெஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், இலியானா நாயகியாக நடித்துள்ளார்.

ஓம் சக்தி படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பி வாசு, கே எஸ் ரவிக்குமார், நடிகர் பிரபு உள்பட பலரும் விழாவுக்கு வந்து வாழ்த்தினர்

இலவசங்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துமா?



வெட்கிரைண்டர், மிக்சி மட்டுமல்ல, வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றையும் இலவசமாகத் தருவார் கலைஞர். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் இலவசமாக வழங்குவார். அவர்தான் கலைஞர்” என்று சென்ன்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பரிதி இளம்வழுதியை ஆதரித்து நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முழங்கியுள்ளார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளோடு ‘பலமான வெற்றிக் கூட்டணி’ அமைத்தாலும், “ஐந்தாண்டுக் கால ஆட்சியில் செய்த சாதனைகள் தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது உறுதி” என்று முழங்கினாலும், இவை யாவும் தங்களை ஆட்சியில் அமர்த்துமா என்பதில் தி.மு.க. அணிக்கு உள்ள ஐயப்பாடே இந்த இலவச அறிவிப்புக்களுக்குக் காரணம் என்பதில் ஐயமேதுமில்லை.

2006ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2க்கு கிலோ அரிசி, நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி ஆகிய முக்கியமான மூன்றுத் திட்டங்களை தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அறிவித்தது. அது அந்தக் கட்சிக்கு வாக்காளர்களின் ஆதரவையும் தந்தது. தி.மு.க.வை ஆட்சியிலும் அமர்த்தியது

நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்ற ஒரு திட்டம் மட்டுமே பெருமளவிற்கு செயல்படுத்தவில்லை என்பதைத் தவிர, மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமின்றி, ரூ.2க்கு அளித்த அரிசியை ரூ.1 ஆக குறைத்தது தி.மு.க. ஆட்சி. இதுவும் ஏழை, எளிய மக்களை மகிழ்வுறச் செய்தது என்பதில் ஐயமில்லை.
ஆனால், அதே திட்டங்கள் தொடரும் என்று அறிவித்தால் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று தி.மு.க. தலைமை நினைத்த காரணத்தினால்தான், எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தனது அறிக்கையில் மேலும் ஏராளமான இலவச அறிவிப்புக்களை அள்ளி வீசியுள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு தற்போது ரூ.1 க்கு அளிக்கப்பட்டுவரும் 35 கிலோ அரிசி இதற்கு மேல் இலவசமாக அளிக்கப்படும் என்றும், இதானல் 18.65 இலட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும் அறிவித்துள்ளது மட்டுமின்றி, நடுத்தர மக்களின் வாக்குகளைக் கவரவும் திட்டமிட்டு, மாவு அரவை இயந்திரம் அல்லது அதன் சிறிய வடிவமான மிக்சி இலவசமாக அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிடும்போதே, “இலவச வண்ணத் தொலைக்காட்சி போல இதுவும் தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்படும்” என்று கூறியதோடு, இது தாய்மார்களுக்கான இலவசத் திட்டம் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்தது, அவர் எவ்வாறு நடுத்தர மக்களின் வாக்குகள் குறிவைக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டியது.

அதேபோல், சுய உதவுக் குழுக்களுக்கு அளிக்கப்படும் சுழல் நிதி உதவி ரூ.4 இலட்சமாக உயர்த்தப்படும் என்று கூறி, அதில் ரூ.2 இலட்சம் மானியமாக வழங்கப்படும் என்று கூறியது கிராமப் புற மகளிர் வாக்குகளை அள்ளுவதற்கு என்பதும், திருமண நிதியுதவி, கர்ப்பக் கால நிவாரணம் ஆகியவற்றை உயர்த்தியது முழுமையாக கீழ்தட்டு பெண் வாக்காளர்களை ‘கவர்ந்து’ இழுக்கவே என்பது பளிச்சிடுகிறது.

வயதானவர்கள், மிக வயதானவர்கள் என்று பிரித்து போக்குவரத்து, மருத்துவ சிகிச்சை சலுகைகளை அறிவித்துள்ளது, மத்திய அரசு இரயில்வே நிதி நிலை அறிக்கையிலும், பொது நிதி நிலை அறிக்கையிலும் மத்திய அரசு கடைபிடிக்கும் வித்தையை தமிழக முதல்வரும் கடைபிடித்து மரியாதையாக வாக்குகளை பெற முயற்சித்துள்ளார்.

எனவே, தனது 5 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகளையோ அல்லது தான் கண்டுள்ள வெற்றிக் கூட்டணியையோ நம்பவில்லை. மாறாக..இலவசத்தை மிகவும் நம்பியே தனது ஆட்சிக் கனவை நனவாக்க முயற்சிக்கிறது தி.மு.க.

இந்த இலவசத் திட்டங்களுக்கான செலவை டாஸ்மாககை வைத்து ஈடேற்றிவிடலாம் என்பதை அறிந்துதான் தி.மு.க.தலைமை இலவசங்களை அள்ளி வீசியுள்ளது என்பது வேறு கதை. ஆனால், இந்த இலவச அறிவிப்புகள் தி.மு.க.வின் ஆட்சிக் கனவை நனவாக்குமா?

2006ஆம் ஆண்டு முதலான தி.மு.க. ஆட்சியின் மீதும், கட்சியின் மீதும் இன்று படிந்துள்ள 2ஜி கரை, நடுத்தர, மேல் தட்டு, கிராம விவசாய, படித்த மக்களிடமிருந்து அதனை மிகவும் அந்நியப்படுத்திவிட்டது.

2ஜி அலைக்கற்றை ஊழலில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கு பெரும் பங்கு உண்டென்றாலும், மத்திய ஆட்சி அதனிடம் உள்ளதால், தி.மு.க.வை தனித்துக் காட்டி, தன்னை காங்கிரஸ் காப்பாற்றிக்கொள்ளும். இந்த ஊழல் வழக்கில் வரும் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கை தி.மு.க.வின் தேர்தல் ‘வெற்றி’க்கு வேட்டு வைப்பதாக இருக்கும்.

ஆற்காடு வீராசாமியே வில்லன்
வெட் கிரைண்டர் அல்லது மிக்சி எந்த அளவிற்கு விற்கும் என்பது ஐயத்திற்குரியதே. ஏனெனில் இந்த 5 ஆண்டுக் காலத்தில் மின் தடை என்பது தி.மு.க. ஆட்சிக்கு மிகப் பெரிய அவப்பெயரை பெற்றுத் தந்துவிட்டது. குடும்பப் பெண்களைக் குறிவைத்து அறிவிக்கப்பட்டாலும், பொதுவாக குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும், அதிலும் குறிப்பாக மாணவ, மாணவிகளை பெரிதும் பாதித்தது மின் தடையாகும். இது சென்னையை விட ஊரகப் பகுதிகளில் பெருமளவிற்கு மக்களை எரிச்சலூட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, சென்னையின் புறநகர் பகுதிகளில் இயங்கிவரும் ஹூண்டாய், ஃபோர்ட், நோக்கியா போன்ற பெரும்பான்மையான அயல் நாட்டு நிறுவனங்களுக்கு - புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டதற்கு இணங்க - தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால் சென்னை மக்களுக்கு தடையற்று மின்சாரம் கிடைக்கிறது என்பதும் மக்கள் அறிந்ததே. எனவே, மின்சாரத்தை நினைப்பார்களா? இலவசத்தை நினைத்து உதயசூரியனில் விரலை அழுத்துவார்களா?

மின் தடை பெருமளவிற்கு பாதித்தது விவசாயிகளைத்தான். அவர்களின் கோபத்திற்கு அரசிடமும் பதில் இல்லை, தேர்தல் அறிக்கையிலும் பதில் இல்லை. “தமிழ்நாட்டின் அதிகரித்து வரும் மின் தேவைக்கேற்ற அளவிற்கு மின் உற்பத்தியை பெருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவோம்” என்ற வாக்குறுதி தி.மு.க.வை கரை சேர்க்காது. விவசாயிகள் மட்டுமின்றி, விசைத்தறி போன்ற மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறு தொழில்கள் பலவும் - கோவையில் இருந்து கரூர் வரை - மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வெட் கிரைண்டர் எந்த அளவிற்கு ஓடும் என்று கூறுவதற்கில்லை.

ஆனால், வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மாதத்திற்கு 35 கி.கி. அரிசி இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது நிச்சயமாக அந்த மக்களின் வாக்குகளை தி.மு.க.விற்கு முழுமையாக கிடைக்கச் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. என்னதான் அத்வாசியப் பொருட்கள் விலையேற்றம் சமையலறையை பாதித்தாலும், அவர்களின் வாழ்நிலையில் இந்த இலவசம் பெரும் மதிப்பை பெற்றுள்ளது.

எனவே, வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் தமிழ்நாட்டின் 30 முதல் 35 விழுக்காடு மக்களின் (வாக்காளர் பங்கு 20 முதல் 25 விழுக்காடு) வாக்கு வங்கியில் தி.மு.க. பலம் வாய்ந்த கட்சியாகவே உள்ளது. அதன் கூட்டணிகளால் 8 முதல் 10 விழக்காடு வாக்குகள் அதற்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில் பொதுவாக நிலவிவரும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி 50 விழுக்காட்டிற்கும் அதிகமானது என்பது தேர்தல் மதிப்பாளர்களின் கருத்தாகும்.

எனவே, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசப்பட்ட இலவசங்கள் அதனை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா என்பது ஐயத்திற்குக்குரியதே.

என்எல்சி மற்றும் அதிகாரிகளின் அலுவலம், வீடுகளில் சிபிஐ அதிரடி ரெய்டு!!

நெய்வேலியில் உள்ள பொதுத் துறை நிறுவனமான என்எல்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்கள் மற்றும் ரொக்கத்தை கைப்பற்றினர்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்ததுடன், மத்திய தேர்தல் பார்வையாளர்களும் வந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்தநிலையில், சி.பி.ஐ. அதிகாரிகளின் வருகை அங்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை 10.30 மணிக்கு 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 22 நபர்களை கொண்ட சி.பி.ஐ. குழுவினர் ரகசிய தகவலின் பேரில் நெய்வேலிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் ஒரு செயல் இயக்குநர் மற்றும் ஒரு பொது மேலாளர் அலுவலகங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன காண்டிராக்டர் ஒருவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் பிற்பகலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை இரவு விடிய, விடிய நீடித்தது.

என்.எல்.சி. வரலாற்றில் அதிக நபர்களை கொண்ட சி.பி.ஐ.குழு விசாரணை நடத்தியது இதுவே முதல்முறையாகும். இந்த திடீர் சோதனையால் என்.எல்.சி. உயர்அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

என்.எல்.சி. அதிகாரிகள் மீதான புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சோதனை விடிய விடிய நடந்ததாகவும், இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

"மினி-பைனலில்' இந்தியா-ஆஸி., மோதல்! * காலிறுதியில் சாதிக்க அதிரடி திட்டம்


இம்முறை ஆஸ்திரேலிய அணியில் ஹைடன், கில்கிறிஸ்ட், மெக்ராத், வார்ன் போன்ண ஜாம்பவான்கள் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. நாளைய போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு ஐந்து உத்திகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
1. சேவக் அதிரடி:
வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் அசத்திய சேவக், அதன் பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஒரு நாள் போட்டிகளில் 50 ஓவர்கள் நின்று விளையாட வேண்டும் என்ற தனது ஆசையை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். குறைந்தது இவர் 25 ஓவர்கள் நின்று விட்டாலே, அணியின் வெற்றி உறுதி.
2. துவக்கத்தில் "சுழல்':
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் துவக்கத்தில் தமிழகத்தின் "சுழல்' அஷ்வினை பயன்படுத்திய தோனி, காலிறுதி போட்டியிலும் துவக்க ஓவரை வீசச் செய்யலாம். மறு முனையில் வழக்கம் போல ஜாகிர் கான் வேகப்பந்து வீச்சை தொடர வேண்டும்.
3. "மிடில்' ஓவரில் ஜாகிர்:
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வேகப்பந்து வீச்சு மோசமாக உள்ளது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், இந்தியா சார்பில் ஜாகிர் கான் தான் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரை, பழைய பந்தில் அதாவது 34 ஓவருக்கு முன்பும், 40 ஓவருக்குப் பின்பும் அதிகமாக பயன்படுத்தினால், "ரிவர்ஸ் சுவிங்கில்' அசத்தலாம்.
4. "பேட்டிங் பவர்பிளே' கவலை:
லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணி "பேட்டிங் பவர்பிளே' ஓவர்களில் பெரிதும் சொதப்பியது. இதுகுறித்து அதிகம் கவலைப்படாமல், மீதமுள்ள 45 ஓவர்களில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
5. நெருப்புக்கு நெருப்பு:
ஆஸ்திரேலிய வீரர்கள் பொதுவாக களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க சரியான நபர் ஸ்ரீசாந்த் தான். இவரது திறமையான பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலிய அணியை திணறடிக்கலாம்.

திரிணமுல் தேர்தல் அறிக்கை: மக்களை மயக்கும் இலவசங்கள் இல்லவே இல்லை

திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தொழில் மற்றும் விவசாயத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படியும், மாநிலத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், பயனுள்ள திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மக்களை மயக்கும் இலவச அறிவிப்புகள், கவர்ச்சி திட்டங்கள் எதுவும், தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.

சமீபகாலமாக, அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் இலவச மழை பொழிந்து கொண்டிருக்க, மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் எதிர்கால நலனை முன்னிறுத்தி, ஆரோக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். அதில், மாநிலத்தில் பசுமை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும், தொழில் துறையையும், விவசாயத் துறையையும் இரட்டை சகோதரிகளாக கருதி, அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த முதல் நூறு நாட்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவது, அடுத்த 1,000 நாட்களில் என்ன திட்டங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து, விளக்கமாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்: தொழில் துறையை மேம்படுத்தி, அதன் மூலம், வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள தொழில் துறை பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை, தற்போதுள்ள 51ல் இருந்து 300 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையம் அமைக்கப்படும். மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிய விமான நிலையங்கள் கட்டப்படும். தொழில் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆசிரியர்களின் பயிற்சி தரம் உயர்த்தப்படும். மாநிலத்தில் மேலும் 10 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும். ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களின் தரம் உயர்த்தப்படும்.

மாநிலம் முழுவதும், சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நகரத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும். விவசாயத் துறையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். டார்ஜிலிங் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைப்பதற்கான "மாஸ்டர் பிளான்' செயல்படுத்தப்படும். மாநிலத்தின் நிர்வாக பணிகளில் அரசியல் ஆதிக்கம் அகற்றப்படும். பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்கள் தீட்டப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் 'டிராபிக்' ராமசாமி போட்டி!

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் போட்டியிட பொதுநல சேவகர் டிராபிக் ராமசாமி நேற்று மனு தாக்கல் செய்தார்.


தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது.

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் கே.ஆர். ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ராமசாமி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே தனது அலுவல்களை எல்லாம் விட்டுவிட்டு தானே போக்குவரத்தை சீர்படுத்தத் தொடங்கிவிடுவார். அதனால் தான் டிராபிக் ராமசாமி என்று பெயர். 73 வயதிலும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து அவற்றில் தானே ஆஜராகி வாதாடியும் வருபவர் இவர்.

5 ஆண்டுகளில் 780 மடங்கு வீங்கிய அமைச்சர் வேலுவின் சொத்து

அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு அதிகரித்துள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.


தேர்தலின்போதுதான் ஒவ்வொருவரின் சொத்து விவரமும் மக்களுக்குத் தெரிய வரும். அவர்கள் தாக்கல் செய்யும் சொத்துக் கணக்குகளைப் பார்க்கும் மக்களுக்கு வியப்பு வியப்பாய் வரும். காரணம், அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள்.

வழக்கமாக சொகுசுக் கார்களில் வலம் வரும், சட்டை கசங்காமல் உலா வரும் பல தலைவர்களும், வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் சொத்துப் பட்டியலில் படு ஏழையாய் காட்சியளிப்பார்கள்.

கையில் காசு கூட இல்லை என்பார்கள், கார் இல்லை என்பார்கள், பைக் இல்லை என்பார்கள், நிலம் இல்லை என்பார்கள். அப்படியே இருப்பதாக கூறினாலும் மனைவி பெயரிலோ, அல்லது பிள்ளைகள் பெயரிலோ இருப்பதாக கணக்கு காட்டியிருப்பார்கள்.

இந்த நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலுவின் சொத்து மதிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அவரது சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு உயர்ந்து ஓங்கி நிற்பதுதான்.

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார் வேலு. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலின்போது தனது சொத்து மதிப்பு வெறும் ரூ. 1 லட்சம் என்று மட்டுமே காட்டியிருந்தார் வேலு. ஆனால் தற்போது இவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

இவரது பெயரில் வங்கி கணக்கில் மட்டும் ரூ. 17 லட்சம் உள்ளது. விவசாய நிலத்தின் மதிப்பு ரூ. 1.75 என்று காட்டியுள்ளார். வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களின் மதிப்பு ரூ. 1.25 கோடி என்று கூறியுள்ளார். மனைவியின் நகைகளின் மதிப்பு ரூ. 5.76 லட்சம் என்று காட்டியுள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...