|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 April, 2011

First Step - குறும்படம்


இன்னாள் காதலனை தாக்கிய முன்னாள் காதலன் ! பாரிஸ் ஹில்ல்டன்


Chinna Kalavani - குரும்படம்


ஒரு படம் எடுக்கனும் - short film


மறைபொருள் --குரும்படம்


பூமி பந்தத்தை காப்பாற்றுங்கள். மன்சூர்அலிகான் !

இயற்கை வளங்களை காப்பாற்ற குவாரிகள் தோண்டுவதை நிறுத்தவேண்டும் என்று நடிகர் மன்சூர்அலிகான் பேட்டி அளித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பூமி பந்தத்தை காப்பாற்றுங்கள்.

 இந்த பூமி மலைகள், கடல், நதி அனைத்தும் இதில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சொந்தமானது. மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. ஜப்பானில் நிகழ்ந்த பூகம்ப பேரழிவு, நாளை இங்கும் நடக்கும். ஏனென்றால் ஜப்பான் வேறு கிரகத்தில் இல்லை. இந்த உலகம் காப்பற்றப்பட வேண்டுமானால், உடனடியாக உலக முழுமைக்கும், எங்கும் சுரங்கங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். இயற்கைதந்த அரும் பெரும் கொடுப்பினை ஆகிய மலைகளை குடைவதும், தகரப்பதும் உடனடியாக தடுக்கப்படவேண்டும். மேலும் இந்த பூமிக்குள் வெடிகுண்டு வெடிப்பது அணுகுண்டுகளை வெடித்து பரிசோதிப்பது, ஹைட்ரஜன், நைட்ரஜன், பாம் என்று சோதனை நடத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.

இல்லையேல்,சிறிது காலங்களிலேயே இந்த உலகம் ஒருபொறி உருண்டையை நாலா பக்கமும் ஆணியால் குத்தினால் எப்படி உதிருமோ அதுபோன்று இந்த பூமி உருண்டை பொழ, பொழ ரென்று உதிர்ந்து விடும் வெடிகுண்டு சோதனையை நிறுத்தாவிட்டால், குவாரிகள் என்று பூமியை கிலோமீட்டர் கணக்கில் தோண்டிக்கொண்டே போவதை நிறுத்தாவிடட்ஆல், பூமியின் புவி ஈர்ப்பு விசை செயலிழந்து நிச்சயமாக உலகம் அழிந்துவிடும்.

அது எப்படி ஆயிரமாயிரம் கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த பூமி தன்னைதானே 24 மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றிக்கொண்டு, வருடத்திற்கு ஒருமுறை சுற்றிவருகிற இந்த பூமி மன்சூரலிகான் சொல்வது போன்று திடீரென்று எப்படி அழியும் என்று நீங்கள் கேட்கலாம். கோடி கோடிக்கணக்கான ஆண்டுகளாய் இந்த பூமி இயற்கையோடு பாதுகாப்பாக இருந்தது.எனவே இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரனங்களுக்கும் இந்த பூமி சொந்தம். இந்த பூமித்தாயை காப்பாற்ற உலக அளவில் அனைத்து அறிஞர் பெருமக்களும் திரண்டு உடனடியாக மிகப்பெரிய இயக்கம் தோற்றுவிக்கப்படவேண்டும்.

அய்யா புயல் வேக வாழ்க்கையில் சொத்து சுகம், வசதி என பேராசை வாழ்க்கை வாழ்கிறோம். அரசியல்வாதிகள், பெரும் முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போட்டு ஆயிரம் கோடி, லட்சம் கோடி, என மேலே மேலே சம்பாதிக்க, இப்படியே போக லட்சக்கணக்கான டன்கள் மணல் ஆற்று படுகைகளில் அள்ள இந்த பூமி பேராபத்தை நெருங்குகிறது!

அமெரிக்காவில் வீசிய கடும் புயலுக்கு 173 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிய கடும் புயலுக்கு 173 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலபாமா, டெக்சாஸ், ஜார்ஜியா, மிசிசிப்பி ஆகிய 4 மாகாணங்களில் புயல் வீசி வருகிறது.

இதில் அலபாமா மாகாணத்தில் உள்ள டஸ்கலுசா நகரின் பெரும்பாலான பகுதிகள் அழிந்தன. பல வீடுகள் இடிந்து விழுந்தன.அந்த நகரில் மட்டும் 58 பேர் பலியானார்கள். 

India not against Endosulfan ban if interests protected


 India on Thursday told the sixth meeting of the Persistent Organic Pollutants Review Committee (POPRC) of the Stockholm Convention going on at Geneva it would not prevent an international consensus on banning of Endosulfan pesticide as long as the its interests were protected and concerns reflected in the final declaration.

“We have to appear constructive and sensitive even as we fight for our national interest,’’ Minister of State for Environment and Forests said here.While most of the governments represented at the Stockholm Convention are in favour of a global ban on Endosulfan, India is opposing it on the ground that it has no alternative available. And in case of a global ban, an alternative has to be provided.

All exemptions sought by the Indian delegation are being included in the final declaration. These are valid for 5 years, with provision for renewal for another 5 years. The listing takes one year to become effective. This effectively means a phase out over 11 years.

உலகம் முழுதும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்ஆளைக்கொல்லும் பூச்சிக்கொல்லி ரசாயனமான என்டோசல்பானை இந்தியா மட்டும் தடை செய்ய மறுக்கிறது. மரணங்கள், பாதிப்புகள் போதாதாம் நம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, அழிவின் எண்ணிக்கை ஆயிரம், லட்சம் என்று ஆனால்தான் தடை செய்வாராம் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ்!

நம் பொருளாதார நிபுணர் (!) பிரதமருக்கோ என்டோசல்பானை தடை செய்தால் கார்ப்பரேட் நிறுவனம் நடுத்தெருவுக்கு வந்து விடுமோ என்ற அச்சம் (!)

ஐரோப்பிய யூனியன், ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, மற்ற ஆசிய நாடுகள், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் என்டோசல்பான் தடை செய்யப்பட்டதற்கான காரண காரியங்கள் நம் ஜெய்ராம் ரமேஷுக்குப் போதவில்லை போலும்.

என்டோசல்பானின் விஷத்தன்மையை கணக்கில் கொண்டு அதன் பயன்பாட்டை உலகம் முழுதும் தடை செய்ய ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அரசு நிறுவனமான இந்துஸ்தான் இன்செக்டிசைடு நிறுவனமே இதனை உற்பத்தி செய்து வருவது இந்த நாட்டில்தான் நடைபெறும்! இதன் மனித, விலங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவு எதிரானது என்று 2009ஆம் ஆண்டே ஸ்டாக்ஹோம் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குருதியில் நேரடியாகச் சுரந்து மனிதனின் பாலியல் செயல்பாடு முதல் பல்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாகும் 'என்டோகிரைன்' சுரப்பியை என்டோசல்பான் பாழடையச் செய்கிறது என்பது பல்வேறு சோதனைகளில் உறுதி செய்யப்பட்ட அறிவியல் உண்மை.

ஆனால் இங்கு கேரளாவில் ஏதோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானத்திலிருந்து உணவுப்பொட்டலம் வீசுவது போல் காசர்கோட் பகுதியில் வானத்திலிருந்து முந்திரித் தோட்டங்களின் மீது பாய்ச்சப்பட்டுள்ளது. விஷத்தை மேலேயிருந்து தூவியது கேரள அரசின் பிளாண்டேஷன் கார்ப்பரேஷன்! இது அரசின் கொலைவெறிச் செயல் இல்லாமல் வேறு என்னவாம்?

ஒரு மாநில முதல் அமைச்சரே இதனைத் தடை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருக்கையில், ஜெய்ராம் ரமேஷுக்கு என்னவோ மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அளவில் பெரிதாகத் தேவைப்படுகிறது!

மனித, விலங்கு மறு உற்பத்திக் குறைபாடுகளையும், வளர்ச்சியைப் பாதிக்கும் விளைவுகளையும் ஏற்படுத்துவது எண்டோசல்பான் என்பது உலகமறிந்த மருத்துவ உண்மை. மேலும் வேளாண்மையிலும் எண்டோசல்பான் பாதிப்புகளையே அதிகம் ஏற்படுத்துகிறது. பயிர்களை நாசம் செய்யும் சிறு புழு பூச்சிகளை உண்ணும் பூச்சிகளையும் சேர்த்து என்டோசல்பான் அழித்து விடுகிறது. இதனால் உயிரிப்பரவல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விவசாயமே பெரிய அளவில் முடங்கிப் போகிறது.

தற்போது கேரளாவில் சலீம் அலி அறக்கட்டளையைச் சேர்ந்த மருத்துவர் வி.எஸ்.விஜயன அரசே நடத்திய குற்றம (State Sponsored Crime) என்று என்டோசல்பான் வான்வழித் தூவலைக் கண்டித்துள்ளார்.

காசர்கோட் பகுதியில் பல குழந்தைகள் வளர்ச்சிக் குன்றி காணப்படுவதற்கு என்டோசல்பானே காரணம் என்பது நீக்கமற நிரூபிக்கப்பட்ட ஒன்று. 

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது? தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...?

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை


இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.



ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.


ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.



""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி..


இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.


இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...