|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 March, 2011

இதே நாள் 12 மார்ச் 2011

  •  மொரீசியஸ் தேசிய தினம்
  •  சாகித்ய அகாடமி, இந்திய அரசால் தொடங்கப்பட்டது(1954)
  •  மொரீசியஸ், பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது(1992)
  •  முதல் முறையாக கொக்ககோலா மென்பானம், கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்கப்பட்டது(1894)

கேபிள் சங்கர்


சங்கர் நாராயண் Cable Sankar

சுனாமி


எவன்டி உன்னைப் பெத்தான்... சிம்புவுக்கு மகளிர் அமைப்பு கண்டனம்

'எவனடி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்...', என்று துவங்கும் இப்பாடல் மட்டும் ஒரு சிடியில் வெளியிடப்பட்டது. பெரிய ஹிட் பாடலாக இது மாறியுள்ளது.

இந்த நிலையில், இந்த பாடலுக்கு மகளிர் அமைப்புகளிடம் இப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அனைத்திந்திய பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி சாந்தி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் சிம்பு எழுதிய பாடல் வரிகள், பெண்கள் மனதை காயப்படுத்துவது போல் உள்ளது.

எவன்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்பவை தரமற்ற வரிகள், பாடல் எழுத வரைமுறைகள் உள்ளது. இழிவான வரிகளை பாடலுக்கு பயன்படுத்துவது இளைய சமுதாயத்தினரின் மனப்போக்கில் மாசு ஏற்படுத்தும்.

ராகிங் செய்பவர்களுக்கு ஏதுவாக இந்தப் பாட்டு அமைந்துவிட்டது. சினிமா ொரு சக்தி வாய்ந்த ஊடகம். அதில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை எளிதில் சென்று அடைகின்றனர். எனவே சிம்பு போன்ற வர்கள் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். அந்த பாடலில் உன் மானம் காக்கிற மேல் ஆட நான்தான் என்றும் எழுதி இருக்கிறார்.

இது ஆபாசமானது. பொதுவாகவே சிம்பு படங்களில் பெண்ணினத்துக்கு எதிரான வன்மங்கள் தூக்கலாக உள்ளன. பெண்களுக்கு மரியாதை செய்வது போன்ற காட்சிகள் வைப்பதில்லை. முன்பு அவரது ஒரு படத்துக்காக சென்னையில் ஒட்டப்பட்டிருந்த முத்தக் காட்சி போஸ்டர்களே இதற்கு சான்று. சிம்பு தனது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்...", என்று கூறியுள்ளார்.

ஏஓஎல்: இந்தியாவில் 700 பணியாளர்கள் நீக்கம்

ஏஓஎல் இந்தியா நிறுவனம் 700 பணியாளர்களைப் பணி நாக்கம் செய்துள்ளது.


விளம்பரம் மற்றும் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவே இந்தப் பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஓஎல்லுக்கு உலகம் முழுக்க 5000க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். இதில் இந்தியாவில் பெங்களூர் மற்றும் டெல்லியில் கணிசமான பணியாளர்களைக் கொண்டிருந்தது.

இப்போது பெங்களூர் கிளையிலிருந்து 400 பணியாளர்களையும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 300 பேரையும் நீக்குவதாக ஏஓஎல் அறிவித்துள்ளது.

இந்தப் பணி நீக்கம் மூலம், இந்தியாவில் ஏஓஎல் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை வெறும் 200 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல உலகம் முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகளிலிருந்து இதுவரை 2800 பேர் வேலை இழந்துள்ளனர்.

வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் ஏஓஎல்லின் செய்திப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் இந்த நிறுவனத்தை ஹஃபிங்டன் போஸ்ட் நிறுவனம் வாங்கியது. வாங்கிய கையோடு, பணியாளர்களை நீக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது ஹஃபிங்டன் போஸ்ட்.

விளம்பரம் மற்றும் விற்பனை மூலம் இந்நிறுவனத்துக்கு வந்த வருவாய் இந்த காலாண்டில் மட்டும் 26 சதவீதம் குறைந்துள்ளது. பணிநீக்கத்துக்கு இதுவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் புலிகள் முகாம் இருப்பதாக கோத்தபயாதான் சொன்னார்-இலங்கை பிரதமர் பல்டி

கொழும்பு:தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக நான் சொல்லவில்லை, கோத்தபயா ராஜபக்சேதான் கூறினார் என்று 'எல்கேஜி' பிள்ளைகள் 'மிஸ்'ஸிடம் பேசுவது போல பேசியுள்ளார் இலங்கைப் பிரதமர் ஜெயரத்னே.


தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக ஜெயரத்னே கூறியிருந்தார். இதை உடனடியாக தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் மறுத்துப் பதிலளித்தார். ஜெயரத்னே சொல்வது அடிப்படை ஆதாரமற்ற பேச்சு என்றும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து ஜெயரத்னே பல்டி அடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளரான புகழேந்திரன் என்பவர் தலைமையில் தமிழகத்தில் மூன்று பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்த தகவலையே நான் வெளியிட்டேன் என்று கூறி கோத்தபயா மீது பழியைப் போட்டு விட்டு தான் நழுவியுள்ளார் ஜெயரத்னே.

வாயில் வந்ததையெல்லாம் பேசுவது, பின்னர் மறுப்பது. இதுவே இலங்கையின் சமீபத்திய வேலையாகியுள்ளது.

படமாகும் வாஸ்கோடகாமா வரலாறு

மலையாளத்தில் உருமி, தமிழில் 15ம் நூற்றாண்டு உறைவாள், ஆங்கிலத்தில் வாஸ்கோடாகாமா எனும் பெயர்களில் புதிய படமொன்று உருவாகி வருகிறது. டைரக்டர் சந்தோஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாஸ்கோடாகாமாவின் வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கதை இருக்குமாம். ப்ருத்வி ராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் உள்ளிட்ட தமிழ், மலையாளம், இந்தி நட்சத்திரங்களுடன் இங்கிலாந்து நடிகர்ள் அலெக்ஸ், ராபின் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.
இதில் வித்யாபாலன் ஒத்தைப் பாட்டு ஆடுவது போன்று, இளவரசியாக நடிக்கும் ஜெனிலியா ‌‌போடும் தாசியாட்டமும் பேசப்படுமாம். சந்தோஷ் சிவனுடன் இணைந்து நடிகர் ப்ருத்விராஜூம் தயாரிக்கும் 15ம் நூற்றாண்டு உறைவாள், மலையாளத்தில் எடுக்கப்பட்டதிலேயே மிகவும் பெரிய பட்ஜெட்டாம்

ஜப்பானில் சுனாமி : பங்குவர்த்தகத்திலும் பாதிப்பு மார்ச்

ஹாங்காங் : ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் விளைவு, ஆசிய பங்குச்சந்தைகளிலும் ‌எதிரொலித்தது. ஜப்பானில் ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், பசிபிக் கடலில் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி உருவானது. இந்த சுனாமியின் பீதியிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், இந்த சுனாமியின் பாதிப்பு, ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. கடந்த சிலநாட்களாகவே, எண்ணெய் வளமிக்க லிபியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சுனாமியும் பாதித்துள்ளது பங்கு முதலீட்டாளர்களை பெரிதும் கலக்கமடைய வைத்துள்ளது. டோக்கியோ பங்குச்சந்தையில், 1.7 சதவீத சரிவும், ஹாங்காங் பங்குச்சந்தையில் 1.8 சதவீதம் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது

இந்தியர்களின் சம்பளம் இந்தாண்டில் 12.9 சதவீதம் உயருகிறது

புதுடில்லி : இந்தியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு, இந்தாண்டில் 12.9 சதவீதம் அதிக சம்பளம் பெற இருப்பதாக ஏஆன் ஹெவிட் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், ஹெச்ஆர் கன்சல்டன்சி சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள ஏஆன் ஹெவிட் நிறுவனம், 2011ம் ஆண்டில் அதிக சதவீத சம்பளம் பெறும் நாடுகள் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியா முதலிடத்திலும் (12.9 சதவீதம்), சீனா இரண்டாம் இடத்திலும் ( 9 சதவீதம்) மற்றும் பிலிப்பைன்ஸ் (7 சதவீதம் ) மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஏஆன் ஹெவிட் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி நிதின் சேத்தி கூறியதாவது, சர்வதேச அளவில், இந்த பட்டியலில் , இந்தியா முதலிடம் பிடித்ததற்கு காரணம் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாலும், இதன்காரணமாகவே, அனைத்து முன்னணி நிறுவனங்களும், இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.

துபாயில் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய இலக்கியம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா பிப்ரவரி 25ம் தேதியன்று துபாய், தேராவில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் இரவு 6.30 மணிமுதல் 11. 30 மணிவரை சிறப்பாக நடந்தது.
விழாவின் ஆரம்பமாக துணைத்தலைவர் கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் கிராஅத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தாவூத் மற்றும் குழுவினரின் நபிவாழ்த்தைத் தொடர்ந்து துணைச்செயலாளர் அதிரை ஷர்புத்தீன் வரவேற்புரையாற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கவுரவித்தர் மு.மேத்தா, டாக்டர் சே.மு.மு.முகம்மதலி, டாக்டர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன், கலாபூஷணம் மானா மக்கீன், இலங்கைப்பிரபல பாடகி நூர்ஜஹான், ஈடிஏ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சையதுசலாஹுதீன் மற்றும் சீனாதானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கவிஞர் அத்தாவுல்லா வாழ்த்துக் கவிதையை பாட, தொடர்ந்து தேரிழந்தூர் தாஜுதீன் தன் காந்தக் குரலால் பாடல் பாடி கூட்டத்தைக் கவர்ந்தார். பின் விருந்தினர்கள் மேடைக்கழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணைச்செயலாளர் கிளியனூர் இஸ்மத் (அமீரக) இவ்அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப்பேசினார்.
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய ' தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு ' என்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசான சென்னை செல்வதற்கான விமானப் பயணச் சீட்டு அத்தாவுல்லாக்கும், இரண்டாவது பரிசான மடிக்கணினி அம்ஜத்கானுக்கும், மூன்றாவது பரிசான கைபேசி முகம்மது கமாலுதீனுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களுடன் வழங்கப் பட, பத்து ஆறுதல் பரிசுகளை அப்துல் காதர் ஜெய்லானி, தஞ்சாவூரான் பாரூக், ஜகுபர் நிஸா ஜகுபர், காஜா முஹியத்தீன், பெனாசீர் பாத்திமா, ஹமீது இப்ராகிம், செய்யது சாஹிப், சரவணன் (குசும்பன்), ஜஸீலா நவ்பல் மற்றும் அஹமது நிஷாம் ஆகியோர் தட்டிச்சென்றனர்.
நிகழ்வின் அடுத்த கட்டமாக, கீழை சீனா தானா அவர்களின் “நான் நேசிக்கும் திருக் குரான்” என்ற குறுந்தகடு வெளியிடப் பட அதை சையது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் “ திப்புசுல்தான்” காவிய நூல் டாக்டர் சேமுமு முகம்மதலி அவர்களால் வெளியிடப்பட அதன் பிரதியை சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இன்று சென்னையில் அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி பதில் பெற்று செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், கனிமொழியும் இன்று காலையில் அறிவாலயத்திற்கு வந்தனர். வரும் 31 ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டிற்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருப்பதால் விசாரணை சூடு பிடிக்கிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சராக இருந்த போது, சுவான் டெலிகாம் நிறுவனத்திற்கு ராஜா சலுகை காட்டியதாகவும், அதற்கு பிரதிபலனாக கலைஞர் "டிவி'க்கு குறிப்பிட்ட தொகையை சுவான் நிறுவனத்தின் தலைவர் பல்வா வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, வரும் 31ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், அதற்கு முன்பாக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜ்யசபா எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி. ஆகியோரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.

இது தொடர்பாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் விசாரணை நடத்துவது தவிர்க்க முடியாதது. அவரிடம் மார்ச் 31ம் தேதிக்குள் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக கனிமொழிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும். சுவான் டெலிகாம் நிறுவன புரமோட்டர் ஷாகித் பல்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கலைஞர் "டிவி'யில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு உள்ளது. குறிப்பாக கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது' என்றார். இருந்தாலும், அதே கலைஞர் "டிவி'யின் மற்றொரு பங்குதாரராக உள்ள கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவர் அதில், "சிலீப்பிங் பார்ட்னர்' என்ற வகையில் அவரை விசாரிக்க வாய்ப்பில்லை என்று சி.பி.ஐ., தரப்பில் கூறப்படுகிறது.

கனிமொழியிடம் விசாரிப்பதற்கு முன்னதாக கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 8ம் தேதியே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், பல்வாவிடம் இருந்து பணம் ஏதும் பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரிப்பதால், விசாரணைத் தகவல்கள், அது குறித்த டைரிக் குறிப்புகளை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் - தி.மு.க., இடையே நடந்த "சீட்' ஒதுக்கீடு பிரச்னையின் போது, தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா முதலில் காங்கிரசை வியப்படைய வைத்தது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நடத்தப்படும் விசாரணை சற்று மெதுவாகச் செல்ல வேண்டும் என்ற கருத்தை தி.மு.க., தரப்பில் முன்வைத்ததாகவும், இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கோபமடைந்து முதலில் இவர்களுடைய குழுவுடன் பேச முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்றும், சுப்ரீம் கோர்ட்டிற்கு பதிலளிக்கும் நிலை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜே.பி.சி., விசாரணைக்கு அனுமதி, மறுபக்கம் பி.ஏ.சி., எனப்படும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆகியவை தீவிரமாக இருப்பதால், சி.பி.ஐ., மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தலையிட முடியாத நிலை அரசுக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

24ம் தேதி ஆலோசனை: "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகவலை, குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார். இந்த கூட்டத்தில் குழுவினர் செய்ய வேண்டியது என்ன, யார் யாரிடம் விசாரணை நடத்துவது, என்னென்ன ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். 30 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு, பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

யு.ஏ.இ.,யில் விளையாட்டு போட்டி

யு.ஏ.இ : யு.ஏ.இ., யில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கென அமைக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் அல் நூர். இந்நிறுவனம் கடந்த மாதம் 25ம் தேதியன்று துபாய் அல் பர்ஷாவில் வேடிக்கை வினோத நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஹனிப் ஹசன் அல் காசிம், யு.ஏ.ஐ., சுகாதார அமைச்சர் நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். கண்காட்சியின் அரங்குகளையும் பார்வையிட்டு, பாராட்டி தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். 10 மணிக்கு தொடங்கிய விழா இரவு 10 வரை நீண்டிருந்தது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது

பயங்கர நிலநடுக்கம் - சுனாமி தாக்கியது : ஜப்பானில் பெரும் நாசம் ; பல வீடுகள‌ை கடல் விழுங்கியது

ஜப்பானில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜப்பானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவை (250 கி.மீட்டர் தொலைவில் ) ஒட்டிய பகுதிகளில் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன்று ஜப்பானின் வட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ( ஜப்பான் நேரப்படி மதியம் 2. 48 மணி அளவில்) 8. 8 ரிக்டர் அளவாக பதிவாகியிருக்கிறது. இந்த நடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் குலுங்கி தரைமட்டமாகின. சில இடங்களில் இடிந்த கட்டடங்கள் தீப்பற்றியும் எரிகிறது. எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிந்தன. மியாகி தீவு பகுதியில் ராட்சத அலை ( 13 அடி உயரத்தில் ) காரணமாக தண்ணீர் வீடுகளில் புகுந்து மூழ்கின. இதனால் விமான நிலையங்கள் மூடப்பட்டடன.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உயர்ந்த பட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுமார் 6 மீட்டர் ( 20 அடி உயரத்திற்கு) ராட்சத அலை இருக்கும் என்றும் இதன் காரணமாக ஜப்பானில் மியாகி தீவின் கடலோர பகுதிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்றும் முன்னதாக விடப்பட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இந்த ஒரு வார காலத்திற்குள் இது 2 வது பெரிய நிலநடுக்கம் ஆகும். இன்றைய நடுக்கம் - சுனாமியால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வரப்படவில்லை. உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக போன், மின்சாரம் அனைத்தும் தடை பட்டு விட்டன. கடலோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான கார்கள் , வீடுகள் மிததந்து சென்ற வண்ணம் உள்ளது. 1923 டோக்கியோ அருகே காண்டோ பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் . கடந்த 13 ஆண்டு காலத்தில் இன்று நடந்த ‌பூகம்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜப்பான் பார்லி., யில்இருந்து அனைவரும் வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்பட்டு அபறபுறப்படுத்தப்பட்டனர். அணு உலைகள் எவ்வித பாதிப்பும் ஏற்படவி்ல்‌லை.

அழிவை சந்திக்க அனைத்து மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும் என ஜப்பான் பிரதமர் நாட்டுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பூகம்பத்தை அடுத்து இந்தோனேசியா , தைவான், மெக்சிகோ, பெரு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்பட 10 நாடுகளில் , கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை                                 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...