|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 March, 2011

ஏஓஎல்: இந்தியாவில் 700 பணியாளர்கள் நீக்கம்

ஏஓஎல் இந்தியா நிறுவனம் 700 பணியாளர்களைப் பணி நாக்கம் செய்துள்ளது.


விளம்பரம் மற்றும் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவே இந்தப் பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஓஎல்லுக்கு உலகம் முழுக்க 5000க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். இதில் இந்தியாவில் பெங்களூர் மற்றும் டெல்லியில் கணிசமான பணியாளர்களைக் கொண்டிருந்தது.

இப்போது பெங்களூர் கிளையிலிருந்து 400 பணியாளர்களையும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 300 பேரையும் நீக்குவதாக ஏஓஎல் அறிவித்துள்ளது.

இந்தப் பணி நீக்கம் மூலம், இந்தியாவில் ஏஓஎல் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை வெறும் 200 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல உலகம் முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகளிலிருந்து இதுவரை 2800 பேர் வேலை இழந்துள்ளனர்.

வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் ஏஓஎல்லின் செய்திப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் இந்த நிறுவனத்தை ஹஃபிங்டன் போஸ்ட் நிறுவனம் வாங்கியது. வாங்கிய கையோடு, பணியாளர்களை நீக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது ஹஃபிங்டன் போஸ்ட்.

விளம்பரம் மற்றும் விற்பனை மூலம் இந்நிறுவனத்துக்கு வந்த வருவாய் இந்த காலாண்டில் மட்டும் 26 சதவீதம் குறைந்துள்ளது. பணிநீக்கத்துக்கு இதுவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...