|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 May, 2011

இதே நாள்


  • ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐரோப்பிய தினம்

  •  ஆர்மேனியா வெற்றி தினம்

  •  ரஷ்யா வெற்றி நாள்(1945)

  •  காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)

  •  கான்பெராவில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது(1927)

  • மனித உரிமை மீறல், சுற்று சூழல் பாதிப்புக்கு எதிராக ஒரே நாளில் 703 மனு தாக்கல்: வழக்குரைஞர் சாதனை!

    மனித உரிமை மீறல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுக்காக்கப்பட வேண்டியதை வலியுறுத்தி ஒரே நாளில் 703 மனுக்களை தாக்கல் செய்து 2011 ஆம் ஆண்டுக்கான லிம்கா சாதனைப் புத்தகத்தில் (லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்) வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான ராதாகாந்தா திரிபாதி (படம்) இடம் பிடித்துள்ளார்.


    ஒரிசா மாநிலத்தில் பாத்ரக் மாவட்டத்தில் சன்ஸ்கார் என்ற கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்கள் விதிமுறைகளுக்கு மாறாக கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நிலங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை.

    மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அந்த நிலங்களில் இருந்த மரங்கள் செடிகள் போன்றவைகள் அழிக்கப்பட்டு சுற்று சூழல்பாதிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தில் 409 மனுக்களையும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் 294 மனுக்களையும் வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான ராதாகாந்தா திரிபாதி தாக்கல் செய்தார்.

    அனைத்து மனுக்களையும் இரண்டு தேசிய ஆணையங்களும் பரீசீலனை செய்து அவற்றின் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளன.

    மனித உரிமை மீறல் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிராக ஒரே நாளில் 703 மனுக்களை தாக்கல் செய்து பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியதை வலியுறுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டி 2011-ம் ஆண்டுக்கான லிம்கா புக் ஆப் ரெகார்ட் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள் போராட்டம்: சிகிச்சைக்கு வந்த 8 குழந்தைகள் சாவு

    Junior doctors at government hospitals in Hyderabad and Warangal, including at Hyderabad's Gandhi Hospital and Niloufer Hospital, are in the second day of their boycott. The medicos, under the Telangana Junior Doctors Association (TJDA), are protesting against the withdrawal of the Special Protection Force, that is supposed to protect the doctors from relatives of patients.

    The junior doctors refused to attend to emergency services last night, and as a result, patients have been in distress. There are reports of 8 children having died at Niloufer Hospital, and a few others being in the ICU. However, striking doctors say that such deaths occur even otherwise, since kids are brought to the hospital from faraway places at critical stages. The hospitals affected are Osmania, Gandhi, Niloufer and Government maternity hospitals at Pitlaburz and Sultan Bazar in Hyderabad, and MGM Warangal hospital.

    Protesting doctors gheraoed the Director Of Medical Education Dr. T Raviraj, at Niloufer. He has now announced that a committee has been formed on the issue, and that after the committee submits its report the government will decide on its next course of action. Protesting doctors, however, are cynical of the reponse to their strike, and have said they will continue their boycott.

    சிறப்பு பாதுகாப்பு வேண்டி வேலைநிறுத்த போராட்டத்தில் இளநிலை மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதால், ஹைதராபாத் நிலோபர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த 8 குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளனர்.



    கடந்த 10 நாள்களாக இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கூறிகையில், குழந்தைகள் இறந்து போனதற்கும், தங்கள் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை.



    பல்வேறு மருத்துவ காரணங்களால் தினமும் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இம்மருத்துவமனையில் இறப்பது வாடிக்கைதான் என்று தெரிவித்தனர்.

    குடியரசுத் தலைவரிடம் செம்மொழி விருது பெற்றார் முனைவர் மு.இளங்கோவன்

    பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் டெல்லியில் 06.05.2011 காலை 11 .30 மணிக்கு நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றார் முனைவர் மு.இளங்கோவன்.

    தமிழின் பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆய்வுசெய்துள்ளமையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகின்றது.

    மு.இளங்கோவன் மலைபடுகடாம் என்ற நூலில் புகழப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னன் என்ற அரசனின் கோட்டையைக் கண்டுபிடித்துத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்தவர். தமிழ் ஆய்வுகளை இணையதளத்திற்கு எடுத்துச்சென்றவர்.

    வாய்மொழிப்பாடல்கள், இலக்கியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகின்றது.

    பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி முதல் இடம்


    பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ராங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.இத்தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரமும் இத்துடன் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்.மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.

    மதுபானம் குறித்த விழிப்புணர்வு சீமான்!



    மே 18 – தமிழீழ தேசிய துக்க நாளில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரள்வோம் !

    ஐநா நிபுணர் குழு பரிந்துரைத்தவாறு சிறிலங்கா அரசினால் தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட போர்குற்றங்கள் – இனப்படுகொலை – மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல்- இராணுவ தலைவர்கள் மீது சர்வதேச விசாரணைய நடத்த உத்தரவிடுமாறு கோரியும் அனைத்துலக ஆணையம் ஒன்றினை நிறுவுமாறு நியூ யோர்க்கிலும்-ஜெனீவாவிலும் உள்ள ஐநா பீடத்தின் முனனால்; அனைவரையும் அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

    இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு கட்டவிழ்த்த அரச பயங்கரவாத்த்தின் ஒரு சட்டபூர்வ சாட்சியமாக ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அமைந்திருக்கின்றது.

    அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை மற்றும் அனைத்துலக ஆணையம் ஆகியனவற்றை நிறுவ செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் உத்தரவிடவேண்டுமென சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களும் – நாடுகளும் – தலைவர்வளும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்சமூகமும் அணிதிரளவேண்டியது காலத்தின் கடமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழீழ தேசிய துக்க நாளான மே-18 வியாழக்கிழமை நியூ யோர்க் – ஜெனீவாவில் அமைந்துள்ள ஐநாவின் முன்னால் மாபெரும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    தமிழ்மக்களின் காத்திரமான அழுத்தத்தை ஐநாவுக்கு கொடுப்பதற்கு அனைத்து தமிழ் அமைப்புக்களும் இந்த ஒன்றுகூடல் சிறப்புற அமைய உறுதுணை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. நியூ யோர்க் – ஜெனீவா ஒன்றுகூடல்களுக்கான பயண ஒழுங்குகள் நாடுவாரியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது:

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...