|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 May, 2011

மனித உரிமை மீறல், சுற்று சூழல் பாதிப்புக்கு எதிராக ஒரே நாளில் 703 மனு தாக்கல்: வழக்குரைஞர் சாதனை!

மனித உரிமை மீறல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுக்காக்கப்பட வேண்டியதை வலியுறுத்தி ஒரே நாளில் 703 மனுக்களை தாக்கல் செய்து 2011 ஆம் ஆண்டுக்கான லிம்கா சாதனைப் புத்தகத்தில் (லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்) வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான ராதாகாந்தா திரிபாதி (படம்) இடம் பிடித்துள்ளார்.


ஒரிசா மாநிலத்தில் பாத்ரக் மாவட்டத்தில் சன்ஸ்கார் என்ற கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்கள் விதிமுறைகளுக்கு மாறாக கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நிலங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை.

மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அந்த நிலங்களில் இருந்த மரங்கள் செடிகள் போன்றவைகள் அழிக்கப்பட்டு சுற்று சூழல்பாதிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தில் 409 மனுக்களையும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் 294 மனுக்களையும் வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான ராதாகாந்தா திரிபாதி தாக்கல் செய்தார்.

அனைத்து மனுக்களையும் இரண்டு தேசிய ஆணையங்களும் பரீசீலனை செய்து அவற்றின் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளன.

மனித உரிமை மீறல் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிராக ஒரே நாளில் 703 மனுக்களை தாக்கல் செய்து பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியதை வலியுறுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டி 2011-ம் ஆண்டுக்கான லிம்கா புக் ஆப் ரெகார்ட் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...