|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 December, 2011

Mayakkam Enna MOVIE ONLINE


ஜெ - அழகிரி - நேருக்கு நேர்...


தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் !

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல்வெளியானது. அந்த விழாவில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார். இதுகுறித்து ஜீவா, அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில், நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன்’’ என்று  கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா -கிரிஷ் ஜோடி,   யார் என்ன சொன்னாலும் சுவிஸ் போவோம்.கலைஞர்களை கட்டுப்படுத்தாதீர்கள்,   அரசியலாக்காதீர்கள், மிரட்டாதீர்கள், எனக்கு தைரியம் இருக்கிறது, யார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி என்று திமிர் பேட்டி அளித்தார்கள்.  பிரபல பின்னணிப்பாடகர் மனோ உட்பட ஏராளமான பிரபல கலைஞர்கள்,  தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை செல்வதையோ,  ராஜபக்சே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்திருக்கிறார்கள். தமிழர்களிடையே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள்.    ஆனால் சங்கீதா - கிரிஷ் என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

தேசிய கீதத்திற்கு வயது 100...


ஜன..கன..மன என்று இந்திய தேசீய கீதம் நம்நாட்டில் முதன் முதலாக முழங்கியதன் 100ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசிய கீதம் முக்கியத்துவம் பெறுகிறது. 

நூற்றாண்டு கண்ட தேசிய கீதம், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி இந்திய தேசிய கீதமாக, நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன.கன.மன கீதம் அங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னரே இந்திய தேசிய கீதம், ஓங்கி ஒலிக்கப்பட்டுவிட்டது. முதன்முதலாக கடந்த 1911 ம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போதே ஜன.கன .மன ஹதி. நாயக. ஜேயஹே... என துவங்கும் தேசிய கீதம் பாடப்பட்டது. மொழி, இனத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையில் நாம் இந்தியர் அதனை இப்பாடல் வலியுறுத்துகிறது. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையால் இந்தியர்கள் என அடை‌‌யாளம் காண, நாட்டில் எந்த அரசு மற்றும் தனியார் விழாக்களில் இந்திய தேசிய கீதம் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது.

இந்திய பிரதமர் - ஜப்பான் பிரதமர் கொலைவெறிப்பாட்டு தனுஷூக்கு விருந்துக்கு அழைப்பு!


கொலைவெறிப்பாடல் பிரபலமாகியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு வருகின்றதாம். மும்பை, டெல்லி, கொல்கத்தா என சுற்றி வருகிறார். பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தனுசை அழைத்து அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் கொலை வெறி பாடல் பிரதமர் மன்மோகன் சிங்கையும் எட்டியுள்ளது. இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்,    ஜப்பானிய பிரதமர் யோசிகியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் நாளை விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்பதற்கு நடிகர் தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது.
 

ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் ரஜினி!

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி மும்பையில் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.     அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள  மெயிலில்,  ‘’ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி  நோய்.   அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம்.  ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று  இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.   அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர். நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால்  மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.   சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா.  இங்கு மட்டுமே இதுபோன்றஅமைதியான போராட்டங்கள் சாத்தியமானது.   ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார்.  அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித் துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...