|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 December, 2011

ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் ரஜினி!

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி மும்பையில் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.     அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள  மெயிலில்,  ‘’ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி  நோய்.   அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம்.  ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று  இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.   அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர். நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால்  மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.   சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா.  இங்கு மட்டுமே இதுபோன்றஅமைதியான போராட்டங்கள் சாத்தியமானது.   ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார்.  அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...