|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 December, 2011

மொகரம்: குடும்பத்துக்காக செலவழியுங்கள் நபிகள் நாயகம்!

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். ஜனநாயகத்தின் சிறப்பை, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக, நபிகளாரின் பேரர் ஹலரத் ஹுசைன்(ரலி) அவர்கள், கர்பலா களத்தில், தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு இந்த மொகரம் பத்தாம் நாளில் தான் அரங்கேறியது.நபிகளார் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனித்த சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து, மூஸா(அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் அல்லாஹ் ஈடேற்றம் பெற வைத்த சிறப்பு இந்த மாதத்திற்கு இருக்கிறது. மொகரம் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களும் நோன்பு நோற்றார்கள்.

நபிகளாரின் வாக்கின்படி மொகரம் மாதத்தின் 9 மற்றும்10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும், இந்நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குஉரிய சிறிய பாவங்களைப் போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டும் எனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள். இந்தமாதத்தின் பத்தாம் நாளில், ஹலரத் ஹுசைன்(ரலி) அவர்களின் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்களைக் கொண்ட கூட்டங்களும், புத்தகங்கள் வெளியிடுவதுமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மொகரம் நாளில் பல்வேறு அற்புத நிகழ்வுகள் நடந்திருக்கிறது. ஆஷுரா(பத்தாம்) நாளில் தான், நபி இப்ராஹிம்(அலை) அவர்கள், நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலை பெற்றார். இப்ராஹிம்(அலை) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு "கலீல் எனும் பட்டம் அல்லாஹ்வினால் சூட்டப்பட்டதும் இந்நாளில் தான் நிகழ்ந்தது.

ஹலரத் அய்யூப்(அலை) அவர்கள் நோயிலிருந்து குணம் பெற்றதும் இந்த புனித நாளில் தான்! மூஸா(அலை) அவர்கள் மட்டுமல் லாது ஹாருன்(அலை) அவர்களின் இறைஞ்சுதலும் இந்நாளில் தான் ஏற்கப்பட்டது. இதே நாளில் தான் ஈஸா(அலை) அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டார்கள். உலகின் முதல் மனிதர்கள் எனப்படுகிற ஆதம்(அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் ப­டைக்கப்பட்டதும் இந்நாளிலே தான். நூஹ்(அலை) அவர்கள் கப்பலில் இருந்து கரையிறங்கியதும், யூனூஸ்(அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்தநாளில்தான் நடந்தது. தாவூத்(அலை) அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்கப்பட்டதும், சுலைமான்(அலை) அவர்கள் அரசாங்கம் மீண்டதும் இந்த நாளில் தான். இந்தநாளில் தான் உலகம் முடிவுறும் என நபிகளாரே அறிவித்து உள்ளது இந்நாளுக்கு உரிய பெரும் சிறப்பாகும்.

உலகின் சிறந்த ஆசிரியர் பட்டியலில் சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த் குமார்!


பீகார் மாநிலத்தில் ஐஐடி-ஜேஇஇ தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் வகையில் இயங்கி வரும் சூப்பர் 30 பயிற்சி மையத்தின் நிறுவனரான ஆனந்த் குமார், உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மோனாகல் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியான உலகின் சிறந்த 20 ஆசிரியர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஆனந்த் குமார் ஒருவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

ஏழை மாணவ சமுதாயத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக சேவையாற்றி வருபவர் என்று அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட் நடிகர்களை விட மிகவும் புகழ்பெற்றவராக ஆனந்த் குமார் உள்ளார் என்றும் பத்திரிகை கூறியுள்ளது.பீகாரில் உள்ள ஏழை மாணவர்கள் தற்போது ஐஐடியில் படிக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக ஆனந்த் குமார் உள்ளார். ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் பீகார் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முக்கிய இடம் பெறுவது சர்வதேச அளவில் மீடியாக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சூப்பர் 30 பயிற்சி மையம், ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு கொடுத்து பயிற்சி அளிக்கிறது. தற்போது சூப்பர் 30 மாணவர்கள் அனைவருமே ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.சர்வதேச அளவில் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் ஆனந்த் குமாரை பல்வேறு வெளிநாட்டு மீடியாக்கள் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் பற்றி கருத்துக்களை கேட்டு வருகின்றன.



இவர் தற்போது சர்வதேச அளவில் புகழ் அடையவில்லை. ஏற்கனவே பல வெளிநாட்டு பத்திரிகைகளில் இவரது புகழ் பாடப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், இவரது இலவசப் பயிற்சி மையத்தை அடிப்படை கதையாக வைத்து இரண்டு திரைப்படங்கள் கூட வெளியாகி விருதுகளை வென்றுள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் ஆனந்த் குமாரால், முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்த வழியில்லாமல் உயர் கல்விக் கனவு தகர்ந்து போனது. அந்த தோல்வியை மற்ற ஏழை மாணவர்களது வெற்றிப் படிகட்டுகளாக மாற்றினார். 2002ம் ஆண்டில் சூப்பர் 30 என்ற இலவச பயிற்சி மையத்தைத் துவக்கினார். 24 மணி நேரத்தில் 16 மணி நேரங்களை கல்விக்காகவே செலவிட்டார். இலவச பயிற்சி மையத்தைத் துவக்கி பல ஏழை மாணவர்களின் சாதனைக்கு துணையாக நிற்கின்றார்.

சென்னையில், 9வது சர்வதேச படவிழா வரும் 14ம்தேதி தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது!


சென்னையில், சர்வதேச படவிழா வரும் 14ம்தேதி தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. 9வது சர்வதேச படவிழா, சென்னையில் வருகிற 14ம்தேதி தொடங்கி, 22ம்தேதி வரை 9 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், சத்யம், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் சர்வதேச படங்கள் திரையிடப்பட உள்ளன.  பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, எகிப்து, ஈரான், இத்தாலி உள்பட 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 படங்கள், இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில், 9 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டவை. `கான் படவிழாவில் திரையிடப்பட்ட 8 படங்களும் பங்கேற்கின்றன. சர்வதேச படவிழாவையொட்டி நடைபெறும் தமிழ் படங்களுக்கான போட்டியில், அவன் இவன், அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், வெங்காயம், மைதானம், வாகை சூடவா, கோ, தெய்வத்திருமகள், வர்ணம், தூங்கா நகரம் உள்ளிட்ட 12 படங்கள் பங்கேற்கின்றன. போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த படத்துக்கு, முதல் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று சர்வதேச படவிழா இயக்குனர் ஈ.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதே நாள்...

  • ஸ்பெயின் அரசியலமைப்பு தினம்
  •  பின்லாந்து விடுதலை தினம்(1917)
  •  இந்திய அரசியலமைப்பை இயற்றிய பி.ஆர்.அம்பேத்கார் இறந்த தினம்(1956)
  •  அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)
  •  உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)

ஜீரோ பர்சன்ட் பர்சேஸ் பிளான்...

நாதெள்ளா சம்பத்து செட்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம், இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து, "ஜீரோ பர்சன்ட் பர்சேஸ் பிளான்' என்ற தங்க சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, நாதெள்ளா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனர் பிரபன்ன குமார் கூறியதாவது: இந்திய அஞ்சலகத்தின் சென்னை தெற்கு வட்டத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள 106 அஞ்சலகங்களில், குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல் சேமித்து வரலாம். 12 மாதங்களுக்கு பிறகு, சேமிப்பிற்கேற்ப தங்க நகைகளை, செய்கூலி, சேதாரம் மற்றும் மதிப்புக் கூட்டு வரியின்றி பெறலாம் என்பது, இத்திட்டத்தின் தனிச் சிறப்பாகும். சென்னையில் மேலும், பல அஞ்சலக கிளைகளில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். நிறுவனத்திற்கு சென்னையில் நான்கு கிளைகள் உள்ளன. வேலூர், ஓசூர் நகரங்களில், தலா ஒரு கிளை உள்ளது

மாணவி தொடர்ந்த வழக்கில் ஏமாற்றும் தமிழக அரசு!

மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வழங்க வேண்டிய லேப்டாப்பை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாங்களே நீதிமன்றம் மூலமாக அந்த லேப்டாப்பை வழங்கி விடுகிறோம் என நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த மாணவி தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் 2008-ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்தேன். பொதுத் தேர்வில் 474 மதிப்பெண் எடுத்தேன். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தேன். இதில் 5 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைத்தது. இதன் காரணமாக மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் கிடைத்தது. மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்த வகையில் லேப்டாப் கேட்டு விண்ணப்பித்தேன். முதல்வருக்கும் கடிதம் எழுதினேன். இதுவரை எனக்கு லேப்டாப் வழங்கவில்லை. லேப்டாப் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தீபா கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, தீபாவுக்கு லேப்டாப் வழங்க கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதுவரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதை தொடர்ந்து தமிழக கல்வித் துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தீபா தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி இன்று மீண்டும் விசாரித்தார். கல்வித் துறை செயலாளர் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, லேப்டாப் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. உடனே வழங்கி விடுகிறோம் என்றார். இதைக் கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தில் லேப்டாப்பை ஒப்படையுங்கள். நீதிமன்றம் மூலமாக மாணவிக்கு லேப்டாப்பை கொடுத்து விடுகிறோம் என உத்தரவிட்டார்.

Former sex worker helps others lead normal life


எட்டே நாளில் கணவனுக்கு கடிதம் காதலனுடன் எஸ்கேப்!

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் தனமணி. இவருடைய மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திவ்யாவை கடந்த 28.11.2011 அன்று மதுரை திருமங்கலத்தில் தன்னுடைய அக்காள் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் தனமணி.திருமணமான எட்டாவது நாளான 05.12.2011 அன்று மருந்து கடைக்கு சென்று வருதாக வெளியே கிளம்பிய திவ்யா மாலை வரை வீடு திரும்பவில்லை.திவ்யாவை பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய செய்தி கிடைக்கவில்லை. அவருடைய படுக்கை அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் 
 
என்னை மன்னித்துவிடுங்கள். என்னை எனது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டனர். அதனால் உங்களுடன் என்னால் சேர்ந்து வாழ முடியவில்லை. என் காதலன் பிரபுவுடன்  நான் செல்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். நீங்கள் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள். நான் என் காதலனை கணவனாக்கிவிடுறேன் என்று தாலி கட்டிய கணவனுக்கு திவ்யா கடிதம் எழுதி வைத்திருந்தார்.திவ்யாவை காணவில்லை என்று மதுரை திருமங்கலம் போலீசில் புகார் செய்திருந்தனர் அவரது பெற்றோர். போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது, இந்த கடிதம் அவர்கள் கையில் சிக்கியது. அப்போது இந்த தகவல் தெரியவந்தது. வேறொரு வாலிபருடன் திவ்யா சென்றுவிட்டதால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தாலி கட்டிய கணவன், காவல்நிலையத்தில் போலீசாரிடம் கூறிவிட்டு சோகத்துடன் வீடு திரும்பினார்.

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க நடவடிக்கை

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர், கூகுள் பிளஸ் என பல்வேறுபட்ட சமூக வலைதளங்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. இதில் சர்ச்சைக்குரிய வகையில் இந்திய தலைவர்கள் மற்றும் மத வழிபாடு குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இறையாண்மைக்கு மீறி பலவித கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. சில சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் இந்த சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை, இணையதள சமூக வலை தளங்களின் இந்திய பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த கபில்சிபல், சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், போட்டூன்கள் அனைத்தையும் நீக்க அரசு நடவடிக்கை எடுக்கும். வலைதளங்களில் உள்ள கருத்துக்களால் பலரின் மனது புண்பட்டுள்ளது.  மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்த நடவடிக்கையை அரசு எடுக்க இருக்கிறது என்றார். (இவனுங்க அடிக்கிற கொல்லைல இந்தியாவே நாறுது. )

ஆசிரியைக்கு சரமாரி அடி பஞ்சாப் மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவு

பஞ்சாப் மாநில துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதலின் மனைவியும், அகாலிதளம் கட்சி எம்.பி.யுமான ஹர்சிம்ரன் கவுரை சந்திக்க ஆசிரியை குழுவினர் 05.12.2011 அன்று சென்றனர்.அப்போது, அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அகாலிதளம் கட்சி பிரமுகர் பல்வீந்தர் சிங், ஆசிரியை வரிந்தர் கவுர் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தார். இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜகதீஷ் பல்லா மற்றும் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்கள், தானாக முன் வந்து 06.12.2011 அன்று வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.

எந்திரன் கதைத் திருட்டு வழக்கு கால அவகாசம் கேட்ட கலாநிதி மாறன்!

எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விறுவிறுப்பான திருப்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன? முதலில் வழக்கின் விபரத்தைப் பார்ப்போம். நக்கீரன் குழும வெளியீடான ’இனிய உதயம்’ இலக்கிய பத்திரிகையில் 96ல் வெளியான ஜூகிபா என்கிற ரொபாட் தொடர்பான தனது கதையை அப்பட்டமாகத் திருடி ரஜினியின் ’எந்திரன்’ படம் எடுக்கப்பட்டிருக்கிறது என புகார்க் குரல் கொடுத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரனிடம் எந்திரன் படத்தயாரிப்பாளர் சன் டி.வி.கலாநிதி மாறன் மீதும் படத்தின் இயக்குநர் சங்கர் மீதும் குற்றவியல் புகாரைக் கொடுத்தார். ஜூகிபா கதையையும் எந்திரன் படத்தையும் ஒப்பிட்டுப்பார்த்த காவல்துறை அதிகாரிகள், புகாரில் நம்பகத்தன்மை இருக்கிறது என்று தெரிவித்ததோடு ஆளும்கட்சியின் செல்வாக்குள்ள கலாநிதி மாறன் பெயரை மட்டும் புகாரில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று வலியுறுத்தினர். இதை தமிழ்நாடனும் அவரது வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொள்ளாததால் புகாரை ஏற்கமறுத்துவிட்டது அன்றைய காவல்துறை.

இதைத் தொடர்ந்து கதைத் திருட்டு மூலம் மோசடி செய்ததாகவும் இந்திய பதிப்புரிமை சட்டத்திற்கு முரணாக நடந்துகொண்டதாகவும் கலாநிதி மாறன், சங்கர் ஆகியோர் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, இவர்களிடம் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கையும் தமிழ்நாடன் தரப்பு தொடர்ந்தது. தமிழ்நாடன் சார்பாக சீனியர் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் மற்றும் எட்விக், சிவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். சாட்சிகளை விசாரித்து, ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகு எழும்பூர் 13வது நீதிமன்றம் கலாநிதி மாறனையும் சங்கரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிரடியாக சம்மனைப் பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய கலாநிதி மாறனும் சங்கரும், கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க இடைக்காலத் தடையை வாங்கினர். இந்த நிலையில் இவர்களது தடையை நீக்கும்படி தமிழ்நாடனின் வழக்கறிஞர்களான பி.டி.பெருமாள், எட்விக், சிவகுமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கலாநிதி மாறன் சார்பாக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ்.ராமன் ஆஜரானார். வழக்கை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்தார். 

அப்போது கலாநிதி தரப்பு, கால அவகாசம் கேட்க, நீதியரசரோ இதற்கு மேல் கால நீட்டிப்பு தரமுடியாது என்றபடி ஒரு வார காலம் மட்டும் அவகாசம் கொடுத்து வழக்கை டிசம்பர் 9ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். அன்று விசாரணை தொடங்குகிறது. வழக்கு எப்படி போகும் என்பதைத் தீர்மானிக்கும் நாள் அது என்பதால், இருதரப்பும் அந்த நாளை பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இணையதள நேயர்களான நாமும் பலத்த எதிர்பார்ப்போடு 

உல்லாசத்துக்கு மறுப்பு பெண்ணை எரித்து கொல்ல முயற்சி!


கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அருகே உள்ள நாராயணமங்கலத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அஞ்சலம் (வயது 45). மணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அஞ்சலத்திற்கு விஜய குமார் (25) என்ற மகனும், ரேவதி (22) என்ற மகளும் உள்ளனர். ரேவதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை. இவர் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து நேற்று முன்தினம் சென்றுள்ளார். இந்த நிலையில் அஞ்சலத்திற்கு தனது கணவர் இறந்தது முதலே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த காசி (54) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் கணவன்  மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது ரேவதியின் 3 பவுன் நகையை காசி விற்று செலவு செய்து விட்டதாக தெரிகிறது.
 
இது தொடர்பாக அஞ்சலத்திற்கும், காசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.   இதற்கிடையில் நேற்று முன்தினம் காசி, அஞ்சலத்தின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். அதற்கு அஞ்சலம், தனது மகன் சபரிமலைக்கு சென்று வந்தபிறகு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
 
 இதில் ஆத்திரம் அடைந்த காசி, வீட்டில் இருந்த மண் எண்ணையை, அஞ்சலத்தின் மீது ஊற்றி தீவைத்துள்ளார். வலி தாங்கமுடியாமல் அலறி துடித்த அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனை பார்த்ததும் காசி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அஞ்சலம் உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஞ்சலம் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப் இன்ஸ் பெக்டர் பிரபாவதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காசியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...