|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 December, 2011

2011- தமிழ் சினிமாவின் சூப்பர்...


2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. 2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது. இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!

ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம். 



சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா! 3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.



எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது. அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. கோ


ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள். படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா. 



விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள். விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா. 



இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது. படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.


தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல். 



இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது! விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்!



விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன். சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் 'நடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது!


தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்!!). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!

அறிவியலை நம்புங்கள் மூடநம்பிக்கையை அல்ல...


மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது,” என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, ஐரோப்பாவில், 1600ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை. முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள், சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்து அறிவித்தனர். அறிவியல் பல்வேறு காலக்கட்டங்களை கடந்து, காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை தானே சரி செய்து கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக்கைகள், சிந்தனைகளே அறிவியல். இவை, உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்படுபவை.
அறிவியலில் கூட ஒரு காலக்கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம்; மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல அறிவியல் முடிவுகள், நம்பிக்கைகள் தவறானவை என, அறிவியல் பரிசோதனைகள் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. லிமஸ் பாலிங் என்ற விஞ்ஞானி, வைட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்; புற்றுநோயை குணப்படுத்தும் என நம்பினார். ஆனால், வைட்டமின் சி புற்றுநோயை குணப்படுத்தாது என, பின்னர் நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பல அறிவியல் முடிவுகள் பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்க கூடியவை அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான், மனிதனின் சராசரி ஆயுள் காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவியல் பூர்வமான விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது.
சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். பலமுறை பரிசோதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையிலான மருத்துவ முறைகளை ஏற்றுக் கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இதே நாள்...

  • விக்டோரியா மகாராணி, கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்(1857)
  •  வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமல் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
  •  மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
  •  பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...