|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 June, 2013

உலக தந்தையர் தினம்!


வயிறோடு விளையாடும் கருவுடன், மனதோடு உறவாடி மகிழ்வாள் அன்னை. தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாது தான். ஆனால் தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது. மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி மகிழும் தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும். மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்... தந்தையன்றி வேறு யாருக்கு வரும்? "விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம். ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்... ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.இன்று தந்தையர் தினம். வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான். மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம். முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம்.

பார்த்ததில் பிடித்தது!


விழவேண்டும்...கொஞ்சம் அழவேண்டும்...:
ஏற்கனவே கருணாநிதி சொன்னது போல கனிவாக மொழி பேசும் தன் மகள் கனிமொழியை ராஜ்ய சபா எம்.பி.,பதவிக்கு களமிறக்கிவிட்டுள்ளார், (இந்த நேரத்தில்திருச்சி சிவா போன்ற பொது வேட்பாளரை ஏன் களமாடவிடவில்லை என பொறுப்பில்லாமல் கேட்கக்கூடாது),86 ம் ஆண்டில் 22 பேரை வைத்தே எம்பி பதவி பெற்றவர் எங்கள் தலைவர்(அப்பாதானுங்க),இப்போது 23 எம்எல்ஏவை வைத்து எப்படி எம்.பி பதவி பெறுகிறார் என்று பாருங்கள் என வேட்புமனு தாக்கல் செய்த கையோடு கனிமொழி பேட்டியளித்துள்ளார்கள். தே.மு.தி.க.,காங், பாமக, கம்யூனிஸ்ட்,கட்சிகளிடம் சாஷ்டாங்கமாக விழ வேண்டும், கொஞ்சம் ஓவென்று அழவேண்டும்(அவ்வளவுதானே).....ஜெயித்ததும் பாருங்கள் இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகபெரிய மாற்றத்தினை கொண்டு வருகிறாரா இல்லையா என்று... அரசியலில் ஊழல் என்ற பேச்சே இல்லாமல் போய் விடும். இவரது முழக்கம் கேட்டு கர்நாடக முதல்வர் காவிரியில் தனக்கு கூட வைத்து கொள்ளாமல் அம்புட்டு தண்ணியையும் தமிழகத்துக்கு திறந்து விட்டுவிட்டு தமிழ்நாடு அரசு முன் கைகட்டி வாய் புதைத்து நிற்பார்... இலங்கை தமிழர்கள் தனி ஈழம் பெற்றுவிடுவர்.மேலும் தமிழர்கள் அனைவர் வீட்டிலும் மறுநாளிலிருந்து செல்வமும், சுபிஷமும் கூரையை பொத்துக்கொண்டு கொட்டும்.,இவ்வளவு நல்லது நடக்க இருக்கிறது,ஜீன் 27 ந்தேதி வரை பொறுத்திருங்களேன் வாழ்த்து சொல்ல..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...