|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 April, 2013

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)


புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப்  பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின்  நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.தந்தை பெரியாரின்  தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா  அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மூக்கை குடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்போம்!

 
நோய் எதிர்ப்புச் சக்தி நமது மூக்கில் உள்ள கழிவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்... ஆம் என நிரூபித்திருக்கிறார் சாஸ்க் விஞ்ஞானி. துணை பேராசிரியராக சாஸ்கட்ச்வன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்காட் நேப்பர் சொல்கிறார், நாம் கெட்டபழக்கம் என ஒதுக்கும் பல விஷயங்களில் நன்மை தருபவனவும் உள்ளன. மூக்கை விரல் விட்டு குடைவதும் அவற்றில் ஒன்று என்கிறார். மேலும் இப்பழக்கம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உருவாகக்கூடிய ஒரு குணம் என்றும், நோயெதிர்ப்புச் சக்தி ஊக்கி என்றும் கூறுகிறார்.மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே நல்லதாம்.மூக்கில் ஒளுகும் சளி அல்லது சளி போன்ற திரவத்தில் நுரையீரலைக் காக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம். அதனை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பெறுகிறதாம். 
 
இயற்கையான நோய்த்தடுப்பு மருந்தாக மூக்கில் உருவாகும் கழிவுகள் செயல்படுகின்றனவாம். எனவே, அவற்றை சாப்பிடுதல் மிகவும் நல்லது என ஸ்காட் நிரூபித்துள்ளாராம்.மூக்கை துடைத்த கர்ச்சீப் அல்லது டிஸ்யூவைக் கொண்டு உடலின் பாகங்களைத் தேய்க்கும் போது அல்லது துடைக்கும் போது கூட உடலில் நல்ல ஆண்டிபாடிஸ் பெருகச் செய்கிற ஆற்றல் அவற்றிற்கு உண்டாம்.ஸ்காட்டின் ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளனவாம். விரைவில் விரிவான ஆராய்ச்சி முடிவை வெளியிடுவாராம்.தற்போது மனிதர்களின் மூக்கில் இருந்து எந்த வகையான மூக்குக் கழிவுகள் மனிதனுக்கு உண்பதன் மூலம் வேறு வகையான நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்த ஆய்வில் இருக்கிறாராம் ஸ்காட்.

18 April, 2013

உலக பாரம்பரிய தினம்!


நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் (World Heritage Day, April 18 ) ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites )கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது.

 * பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது 

* கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது 

* இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது 

* பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது 

* பாரம்பரிய பெருமைகளை பறைசாற்ற்றும் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது 

* பாரம்பரியத்தை பேணி பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது 

* பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..! நிகழ்ச்சிகள் நடத்துவது அழிவின் விழிம்பில்... மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. விழிப்புணைர்வு தேவை... உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


16 April, 2013

சார்லி சாப்ளின் பிறந்ததினம்.


பாம்பு கடித்துவிட்டால்?


பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் 

மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன 

தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. 

எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு 


அழைத்துசெல்லவும். 




"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..
1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக 

பதிந்து காணப்படுகிறதா..? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...


2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து 

காணப்படுகிறதா..? கடித்த இடம் சற்றுதடித்து (வீங்கி) காணப்படுகிறதா? 

கடுமையான வலி இருக்கிறதா..? இந்த அறிகுறி விஷப்பாம்பு 

கடித்ததாகத்தான் இருக்கக்கூடும். 

முதலுதவி:- 1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் 

மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி 

அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போதும் 

ரத்தஓட்டம் அதிகரிக்கும். 


4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக 

நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள 

விஷம் விரைவில் நம் உடல்முழுவதும் பரவி உயிரிழப்பை 

விரைவுபடுத்துகிறது


5.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த 

அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, 

அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

6.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் 

கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும் .
7.பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் 

மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன 

தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. 

எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு 

அழைத்துசெல்லவும்.

8.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் 

அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க 

நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் 

தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற 

தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். 

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.

சன் கும்பலுக்கு பாடம் புகட்டலாம்..



எங்கள் ஏரியா கேபிள்களில் புதிய தலைமுறை சேனல் தெரிவதில்லை. ``சரி செட் டாப் பாக்ஸ் 

இணைப்பு எடுத்தால் தெரியுமா..’’ என்று கேபிள்காரர்களிடம் கேட்டால், ``நாங்க SCV சார்.. புதிய 

தலைமுறை சேனலை காட்டக்கூடாதுங்குறது எங்களுக்கு போடப்பட்ட உத்தரவு சார்” என்றார்.

இது எப்படி இருக்கு.. பணம் கொடுக்குறது நாம.. ஆனா நாம எந்த சேனலை பார்க்கணும்னு சன் 

கும்பல் நமக்கு உத்தரவு போடுது.

புதிய தலைமுறை சேனலைக் கண்டு சன் டிவி கும்பல் எவ்வளவு ஆடிப்போயிருக்கிறது என்பது 

இதன் மூலம் தெரிகிறது. அவங்க சிறப்பா செய்தி கொடுக்குறாங்க.. அதனால் மக்கள் 

பெரும்பாலும் புதிய தலைமுறையை பார்க்கிறார்கள். அதற்கு போட்டியாக சன் டிவியும் 

தங்களது செய்தி தரத்தை உயர்த்தினால் மக்கள் பார்ப்பார்கள். மாறாக போட்டிச் சேனலை 

அதிகார பலத்தின் மூலம் இருட்டடிப்பு செய்வது அயோக்கியத்தனம். 

தாங்கள் கொடுப்பது தான் செய்தி என்று அகம்பாவம் பிடித்து நின்ற சன் கும்பல் இன்று எல்லா 

தரப்பு செய்திகளையும் காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதற்கு புதிய தலைமுறையின் 

வரவு தான் காரணம். அவர்களின் சில செய்திகள் விசயத்தில் நமக்கு மாற்றுக்கருத்து 

இருந்தாலும் கூட, சன் டிவியின் மீடியா ஏக போகத்தை ஆட்டம் காண வைத்தது என்ற 

வகையில் புதிய தலைமுறையை ஆதரிக்கலாம்.. SCV கனெக்‌ஷன் வைத்திருப்பவர்கள் 

அனைவரும் அந்த இணைப்பை துண்டித்துவிட்டு வேறு இணைப்புக்கு மாறுவதும், `சன் 

டைரக்ட்’ செட் டாப் பாக்ஸை வாங்காமல் புறக்கணிப்பதன் மூலம் சன் கும்பலுக்கு பாடம் 

புகட்டலாம்..

15 April, 2013

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது?


 சகோதரி ஒருவருக்கு பங்காரு அடிகளாருடன் நடந்த ஒரு நிகழ்வு உங்கள் கவனத்திற்கு.. இது போன்ற போலி சாமியார்களையும் தானே கடவுள் பட்டம் கொடுத்து கொள்ளும் மூடர்களையும் நம்பி மக்கள் எத்தனை நாள் ஏமாற போகிறார்கள்.. தெரிந்து நடந்தால் மக்களுக்கு நல்லது... பிறரும் இது போன்றவர்களிடம் ஏமாறாமல் இருக்க பகிரவும் நண்பர்களே.. நான் ஒரு முறை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்திக்க எனது அம்மா, தங்கை மற்றும் ஒரு உறவினருடன் சென்று இருந்தேன் . நாங்கள் நால்வரும் ஆயிரத்து நூற்றி எட்டு ருபாய் வைத்து தட்டு எடுத்து கொண்டு வரிசையில் காவல் இருந்து சென்றோம். 

உள்ளே ஒரு அறையில் பெரியவர் அமர்ந்து இருந்தார்...எனக்கு போனவுடனேயே மனம் சோர்ந்து விட்டது காரணம் அவரது கால் ஒரு தட்டின் மேல் வைக்க பட்டு இருந்தது... ஒரு முதியவர் அவரது காலை கழுவி கொண்டு இருந்தார். தட்டில் நிறைய தாள் காசுகளும் இருந்தன. நான் அவர் அருகில் சென்றவுடனே "உனக்கு வெளிநாடு செல்ல பலன் இருக்கு என்று கூறினார்".... எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது .... நான் வெளிநாட்டிலிருந்து தான் வருகின்றேன் என்றேன்.. உடனே அவர் முகம் கறுத்து விட்டது... பின் உனக்கு திருமணம் நடக்கும் என்றார்.... ((நான் திருமணமானவள்)) .. உனக்கு மேலும் என் உதவிகள் தேவை என்றால்... நீ பணம் தரவேண்டும் என்று கையாலே சைகை காட்டினார்.

நாங்கள் வெளி நாட்டில் இருந்து வந்து இருப்பது தெரிந்தவுடனே .... நீங்கள் ஒவொருவரும் தனித்தனியாக ஆயிரத்து நூற்றி எட்டு ரூபா தட்டு எடுத்து கொண்டு தான் வர வேண்டும்.. இப்பொழுது ஒருவருக்கு மட்டும் தான் வாக்கு சொல்ல முடியும் என கூறி விட்டார்... அதற்கு பிறகு அவரை சந்திப்பதை நிறுத்தி விட்டோம்...... பணத்துக்காக கோவில் நடத்தி ஊரை ஏமாற்றுபவர்களில் அவரும் ஒருவர் என தெரிந்து கொண்டேன்...இது போன்ற போலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நியாப்படுத்தியும் இங்கு யாரும் கருத்திட வராதீர்கள்.. உங்களுக்கு இப்படிப்பட்ட மூடர்கள் மீது நம்பிக்கை இருப்பின் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.. மற்றவரை சேர்த்து ஏமாற வைக்க வேண்டாம்..

09 April, 2013

நல்ல விசியங்கல தெரிஞ்சிக்கோங்க!



கொசுங்கள விரட்ட நாம் என்னலா செய்வோம்? hit அல்லது beygon spray உபயோகிப்போம் இல்லனா allout liquid, goodknight liquid அப்படி எதாவ்து ஒரு இரசாயன பொருள உபயோகிப்போம், நம்ம கிட்ட இருக்குர இயற்கை பொருள வைச்சு எதாவது உபயோக படுத்தி இருக்கரோமானு? கேட்டா, பதில் வந்து இல்லை. ஏனா காசு இல்லாதவந்தா இயற்கையான் பொருள உபயோகிப்பா, காசு உல்லவங்க கஸ்ட்ட பட்ரதே இல்ல கடையிலேயே வாங்கிடலாம், 


இயற்கை பொருள உபயோகிசா கவுரவ குறைவுனு நிரைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க, அதுனாலத்த ந்ம்ம நாட்டுல இயற்கையோட மகதுவமே நிரையப்பேருக்கு தெரியாம போய்டுச்சி... கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரில M.Phil., படிக்கிர மாணவி கிருஷ்ணவேணி சில மாதங்களா கொசுவ விர்ட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆய்வு பனியில இடுப்பட்டிருந்தாங்க, ஈரோட்ல நடந்த இளைஞர் அறிவியல் விழாவ்ல, கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது, அதுக்கு அவங்களுக்கு முதல் பரிசும் கிடைச்சுது. இந்த விசியம் தமிழ்நாட்ல இருக்ர நமக்கு எத்தன பேருக்கு தெரியும்? நல்ல விசியங்கல தெரிஞ்சிக்கோங்க, புதுமைய கண்டுபிடிங்க, மத்தவங்களுக்கு உதவுங்க.

ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!



மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!! மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் . உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .

இராவணன் உபதேசித்தான் ........

1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.

2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .

3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .

4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .

5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .

கருணாநிதியை காட்டிகொடுத்த விக்கிலீக்ஸ்!



தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் என்று தமிழக சட்டசபையில் முதல்வராக இருந்தபோது கருணாநிதி அறிவித்தது ஆச்சரியமானது என்று அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்திருக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. 2007ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12 மீனவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீனவர்களை கடத்தியதும் படுகொலை செய்ததும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தான் என்று 2007ம் ஆண்டு சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி பேசியிருந்தார். இதை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதிவு செய்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, கொழும்பு அமெரிக்க தூதரகங்களுக்கும் வாஷிங்டனுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அமெரிக்க தூதரகம் அனுப்பி வைத்த அந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் தற்போது பகிரங்கப்படுத்தியிருக்கிறது. 

அமெரிக்க தூதராக ஆவணம் சொல்வது என்ன?: ''(2007ம் ஆண்டு) மார்ச் 29ம் தேதியன்று தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றனர் (இலங்கை கடற்படை அல்ல)_ என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வாயடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் இந்தக் குற்றச்சாட்டு உறுதியானால் தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு மீண்டும் குறைய வாய்ப்பிருக்கிறது. 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலையின் போது விடுதலைப் புலிகளின் ஆதரவு பாதிப்புக்குள்ளானது. மீனவர் படுகொலைக்கு புலிகளே பொறுப்பு என்று ஆளும் திமுக கூறியிருப்பதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை அக்கட்சி மேற்கொள்ளக் கூடும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான திமுக உறவு வலுப்படும். 

ஏப்ரல் 27ம் தேதியன்று தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தமது அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், தமிழ் புலிகளின் கடற்படை பிரிவான கடல் புலிகள் மார்ச் 29ம் தேதியன்று 5 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்திருந்தார். அவரது அறிக்கையில் ஏப்ரல் 11ம் தேதியன்று இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட 6 கடற்புலிகளும் மீனவர்களை படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு இலங்கைப் பகுதியில் புலிகளின் கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கும்போது மீனவர்களை கொன்றதாகவும் கடற்புலிகள் கூறியதாகவும் அந்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 12 மீனவர்கள் (11 தமிழக மீனவர்கள், ஒருவர் கேரளா மீனவர்) மார்ச் 4ம் தேதி முதல் காணாமல் போயினர். அவர்களும் புலிகளின் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முகர்ஜி கூறியுள்ளார். 

ஏப்ரல் 28ம் தேதி முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். 'மீனவர் படுகொலைக்கு இலங்கை கடற்படைதான் காரணம் என்று தொடக்கத்தில் நாம் கருதிக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்ற அதிர்ச்சியான தகவலை வருத்தத்தோடு தெரிவிக்கிறேன். மேலும் கடத்தப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு மூலமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். அதற்கு முந்தைய நாள் சட்டசபையில் பேசிய கருணாநிதி, தாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் அவர்களுக்கு இங்கே இடம் இல்லை என்றும் அவர்கள் இங்கே எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் அவர்களது குறிக்கோளும் நோக்கமும் வேறுபட்டதாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதனிடையே தமிழக காங்கிரஸ் கட்சியானது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்ய கோரியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மத்திய அரசுடன் ஆலோசிப்பார்''. (தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஜூலை 2002 முதல் பிப்ரவரி 2004 வரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மாநில அரசு பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டது) என்று விரிகிறது அந்த அமெரிக்க தூதரகத்தின் ஆவணம். மேலும் தி ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம் ஒன்றையும் அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையானது டெல்லியில்தான் முடிவெடுக்கப்பட வேண்டுமே தவிர சென்னையில் அல்ல என்பதை வலியுறுத்துகிறது அந்த தலையங்கம். அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் திமுக, இலங்கைக்கு "நேரடியாக" இந்திய அரசு ராணுவ உதவி அளிப்பதை ஆதரிக்காது என்றும் அமெரிக்க தூதரக ஆவணம் பதிவு செய்திருக்கிறது.


இணையத்தை கலக்கும் பாடல்!


இதுதான் தமிழ் சினிமா!


08 April, 2013

இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்!


தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. ஆனால் மத்திய அரசோ இதை கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இலங்கைப் பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழர் பண்பாட்டு நடுவம் முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் பல கடைகளில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஸ்கட், பழங்கங்கள், இறைச்சி, பருத்டி ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.


07 April, 2013

Settai Full Length Comedy Tamil Movie


Garuda Paarvai Tamil Movie (2013)


Sumaithangi Tamil Full Movie 1962


இன்று உலக சுகாதார தினம்!

 
உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். முன்னோரின் வாழ்க்கையில், அவர்களது உணவே, மருந்தாக இருந்தது. இன்றைய உலகில் எதற்கும் அவசரம். சரியான, சத்தான உணவை பெரும்பாலானோர் எடுத்துக்கொள்வதில்லை. உடல்நலம் பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பால் ஏப்.,7ம் தேதி, உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.."அதிக ரத்த அழுத்தம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி செயலிழத்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. ரத்த அழுதத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பார்வை குறைபாடு, இருதய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகளவில் மூன்று இளைஞர்களில் ஒருவர் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் நடுத்தர நாடுகளில் 40 சதவீத இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது கட்டுப்படுத்தக்கூடியது.
உப்பு பயன்படுத்துவதை குறைப்பது, சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது, ஆல்கஹால், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது, உடல் எடையை சீராக வைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் இதை கட்டுப்படுத்தலாம். ஜப்பானில் தொழில் வளர்ச்சியை போல, சுகாதார வசதியும் சிறப்பாக உள்ளது. இதற்கு, உலகிலேயே மக்களின் வாழ்நாள் அதிகம் உள்ள நாடு ஜப்பான் என்பதே சாட்சி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், சுகாதார வசதி குறைவு. என்னதான் அரசு சுகாதார திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அது அனைவரையும் சென்று சேர்வதில்லை. நகரங்களில், போதிய சுகாதார வசதிகள் உள்ளன. கிராமங்களின் நிலை பரிதாபம்.குழந்தை பிரசவம், தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல், அவசர சிகிச்சை போன்ற பிரச்னைகளுக்கு சுகாதார மையங்கள் தவிர்க்க முடியாதவை. 10 கி.மீ., தூரத்துக்கு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல், நீர், காற்று போன்றவற்றை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.முயற்சி செய்யலாம்

.யூடியூப்பை பதம்பார்த்த வீடியோ!

ஒருவித லூசுத்தனமாக ஆடப்படும் இந்த ஹார்லெம் ஷேக் நடனமும், இசையும் மிகவும் பிரபலமாகி வருவதால், சில சில குழுக்களாக இணைந்து அவரவர் ஸ்டைலில் ஆடி அதை இணையத்திலும் வெளியிடுகிறார்கள்.கக்ணம் ஸ்டைலுக்குப் பிறகு இதுவும் 40 நாட்களிலேயே 100கோடியை தொட்டிருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது.

06 April, 2013

காமராஜர் ஒரு சகாப்தம்!

தஞ்சை மருத்துவகல்லூரி உருவான கதை!
 ஒரு நாள் காமராஜரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க ரூ.20 லட்சம் தருவதாக கூறினார். அந்த திட்டத்திற்க்கு 1 கோடி செலவாகும் என்றும், மீதி 80 லட்சத்தை அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அந்தச் செல்வந்தர் கேட்டுக்கொண்டார். அந்த மருத்துவக்க் கல்லூரி, தனியார் நிர்வாகத்தில் இருகுமென்றும் கூறினார். இதற்குச் சம்பந்தப்பட்ட சுகாதரத்துறை அமைச்சரின் ஆதரவும் ஆமோதிப்பும் இருத்தது.


சிறிது காலத்திற்க்குப் பிறகு, இத்திட்டம் சம்பந்தமான கோப்பு அனுமத்க்காகக் காமராஜரின் பார்வைக்கு வந்தது. சம்பந்தபட்ட அமைச்சரைக் காமராஜர் அழைத்து, "80 லட்சம் ரூபாயை ஒரு தனியாரிடம் கொடுத்து மருத்துவக் கல்லூரி தொடங்குவதைவிட, இன்னும் 20 லட்சத்தைப் போட்டு அரசாங்கமே மருத்துவக் கல்லூரியை தொடங்களாமே? தனியாரை மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் தொழிலாக்கிவிடுவார்கள். லாபம் சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கும். சேவை மனப்பான்மை இருக்காது" என்றார். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிப் போனார்.

கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அனுமதி மறுத்த காமராஜ், தஞ்சாவூர் போர்டு, ரயில்வே செஸ் வரியாக வசூலித்த தொகையில் ரூ 1.30 கோடி இருப்பதை கேள்விப்பட்டு, அதை மருத்துவக் கல்லூரி தொடங்க செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டாலும் அரசு கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இவ்வாறு தஞ்சையில் 1 கோடிக்குமேல் செலவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திட ஆதரவும், ஊக்கமும் அளித்தார். இன்று தஞ்சையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி, காமராஜரின் முயற்சியினால் உருவானது என்கிற உண்மை பலருக்குத் தெரியாமல் போனதில் வியப்பில்லை."

 

இதுதான் இந்தியா?


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலமோசடியை அம்பலப்படுத்தி அரசியல் புயலை உருவாக்கிய ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா தற்போது வெற்றிகரமாக 44-வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஹரியானா மாநிலத்தில் ஏராளமான விளைநிலத்தை அடிமாட்டுக்கு வளைத்துப் போட்டு அதை டிஎல்ப் நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்று கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது. விவசாயிகளிடம் நிலம் பலவந்தமாக பறிக்கப்பட்டது என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார் இது தொடர்பான புகார்களை விசாரித்து வந்த அசோக் கேம்கா. இதனால் அவர் அப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஓராண்டுக்குள் 3 முறை வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக ஹரியானா விதை அபிவிருத்தி கழகத்தில் நிர்வாக மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். அங்கும் கேம்கா சும்மா இருக்கவில்லையே..விதை கொள்முதல் ஊழலை வெளிக்கொண்டு வந்து சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார். 
 
மேலும் இது தொடர்பான பொதுநலன் வழக்கு ஒன்றில் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. நிச்சயம் அரசுக்கு எதிராகத்தான் கேம்கா அறிக்கை தாக்கல் செய்வார் என்று எண்ணியதால் அவரை திடீரென தொல்லியல் துறைக்கு கேம்கா டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார். அவரது 20 வருட அரசுப் பணி காலத்தில் இது 44-வது பணியிட மாற்றம். அதுவும் பகல் 3.30 மணிக்கே அவரை அலுவலகத்தை விட்டு போகச் சொல்லிவிட்டு இரவு 7.30 மணிக்குத்தான் டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்திருக்கின்றனர் என்று குமுறியிருக்கிறார் கேம்கா. தொல்லியல்துறையில் என்ன அதிரடியைக் கிளப்புவாரோ கேம்கா?

வரைபடங்களில் மட்டுமே இனி...!

நமது  யானைககளை நாம்  கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறோம்! அதுவும் கொத்து கொத்தாய் அதன் அழிவை நம் கண்முன்னே காண்கிறோம். ரயிலில் தொடர்ச்சியாய், காட்டின் குடியிருப்பின் வளர்ச்சியாய்,இப்போது வறட்சியாய். முடியப்போகிறது ஒரு பிரம்மாண்டத்தின் வளர்ச்சி!
 
நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரின்றி வனவிலங்குகள் பலியாகிவருகின்றன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 8 யானைகள் பலியாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி வடக்கு, தெற்கு, சிங்காரா, கூடலூர் வனக்கோட்ட பகுதிகளில் கடும் வறட்சியினால் நீர் நிலைகள் வற்றிவிட்டன. வனப்பகுதிகளில் பசுந்தீவனம் கிடைக்காத காரணத்தால் தண்ணீரை தேடி யானைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது.இதனால் பசி களைப்பு காரணமாக வனவிலங்குகள் செத்து மடிகின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 குட்டிகள் உள்பட 8 யானைகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் இதேபோல யானைகள் இறந்துள்ளன. மலைவாழ் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் யானைகள் இறந்து கிடந்தால் மட்டுமே தகவல் தெரியவருகிறது. பிரேத பரிசோதனை தேவை வறட்சியால் உயிரிழக்கும் யானைகளை மின்சாரம் தாக்கி இறந்ததாக வனத்துறையினர் சந்தேகம் கிளப்புவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
 இறந்த யானையை மின்வாரியம், காவல்துறை, உள்ளூர் கமிட்டி, தொண்டு நிறுவன அதிகாரிகள் முன்பாக பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்ற விதிமுறையை வனத்துறையினர் மீறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்ணீர் குட்டைகள் அமைக்கலாம் தண்ணீர் இன்றி தவிக்கும் வன விலங்குகளை பாதுகாக்க நீலகிரி வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் குட்டைகளை அமைக்கவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைவதை தடுக்கமுடியும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

அசிங்கப்பட்டான் சுனா சாமி!

 
உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் வறுத்தெடுத்து விரட்டியடித்திருக்கிறார். கேரள கடற்பரப்பில் மீனவர்களை படுகொலை செய்த இத்தாலி மாலுமிகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை அல்டமாஸ் கபீர் பிறப்பித்துக் கொண்டிருந்த போது வழக்கறிஞர்கள் அமரும் இருக்கையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி எழுந்து நான் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கிறேன் என்றார். அவ்வளவுதான்... உஷ்ணமானார் அல்டமாஸ் கபீர்..." யார் நீங்கள்" என்று சுவாமியைப் பார்த்துக் கேட்டார் அவர். அதற்கு "நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்" என்றார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'நான் உங்களை யார்னு கேட்டேன்" என்றார் கடுப்பாக. மேலும் " நீங்கள் ஒன்றும் வழக்கறிஞர் இல்லை.. இந்த இடத்தில் இன்று பேசவும் வாதாடவும் உரிமை கிடையாது. ரோட்ல போகிறவர் எல்லாம் இங்க வந்து வாதாடனும்னா எப்படி? இதுக்கு முன்னாடி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.. ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று வெளுத்து வாங்கிவிட்டார். 
 
இதற்கு சுவாமி பதிலளிக்க முயன்றார். அப்போதும் அல்டமாஸ் கபீர் விடவில்லை.. நீங்கள் எதுக்காக முதல் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்.. இங்கே உட்கார உங்களுக்கு உரிமை கிடையாது. இந்த நாற்காலிகள் வழக்கறிஞர்களுக்குத்தான். வழக்கு போடுபவர்களுக்கு அல்ல. உங்களுக்கு இங்கே உட்கார உரிமை கிடையாது என்று அதிரடியாக வெளியேறச் சொன்னார். இதனால் முகம் சிறுத்துப் போன சுப்பிரமணியன் சுவாமி, நீதிமன்றம் நான் இங்கே இருக்கிறதை விரும்பலை எனில் நான் வெளியேறுகிறேன் என்றார். அதற்கும் அதிரடியைக் காட்டினார் அல்டமாஸ் கபீர்.. "உங்களை நீதிமன்றத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லை. இந்த நாற்காலியில் உட்கார உங்களுக்கு உரிமை இல்லை என்றுதான் சொல்கிறோம் என்றார். அதற்கும் அடங்காதவராக இங்கே ஒரு ரகசியக் கூட்டு இருக்கிறது என்று சுப்பிரமணியன் சுவாமி கொந்தளித்துப் போனார் தலைமை நீதிபதி. 'நீங்கள் என்ன பேசுகிறோம் என்று எச்சரிக்கையோடு பேசுங்கள்.. ரகசியக் கூட்டு என்றால் என்ன? என்று கடுப்படித்தார். இங்கே என்றால் இங்கே இல்லை. வெளியே... இத்தாலிய மாலுமிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று இத்தாலிக்கு மத்திய அரசு உறுதி மொழி அளித்துள்ளது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

05 April, 2013

*நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள்!



**இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

** சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

**3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

**கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

**இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.

**இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்

**அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.

**நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

**. நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

**எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்

**நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா ?? அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. 

IPL 6 Schedule.


DateISTDetailsVenue
03-Apr8:00 PMKolkata Knight Riders vs Delhi DaredevilsKolkata
04-Apr8:00 PMRoyal Challengers Bangalore vs Mumbai IndiansBangalore
05-Apr8:00 PMSunrisers Hyderabad vs Pune WarriorsHyderabad
06-Apr4:00 PMDelhi Daredevils vs Rajasthan RoyalsDelhi
06-Apr8:00 PMChennai Super Kings vs Mumbai IndiansChennai
07-Apr4:00 PMPune Warriors vs Kings XI PunjabPune
07-Apr8:00 PMSunrisers Hyderabad vs Royal Challengers BangaloreHyderabad
08-Apr8:00 PMRajasthan Royals vs Kolkata Knight RidersJaipur
09-Apr8:00 PMMumbai Indians vs Delhi DaredevilsMumbai
10-Apr8:00 PMKings XI Punjab vs Chennai Super KingsMohali
11-Apr4:00 PMRoyal Challengers Bangalore vs Kolkata Knight RidersBangalore
11-Apr8:00 PMPune Warriors vs Rajasthan RoyalsPune
12-Apr8:00 PMDelhi Daredevils vs Sunrisers HyderabadDelhi
13-Apr4:00 PMMumbai Indians vs Pune WarriorsMumbai
13-Apr8:00 PMChennai Super Kings vs Royal Challengers BangaloreChennai
14-Apr4:00 PMKolkata Knight Riders vs Pune WarriorsKolkata
14-Apr8:00 PMRajasthan Royals vs Kings XI PunjabJaipur
15-Apr8:00 PMChennai Super Kings vs Pune WarriorsChennai
16-Apr4:00 PMKings XI Punjab vs Kolkata Knight RidersMohali
16-Apr8:00 PMRoyal Challengers Bangalore vs Delhi DaredevilsBangalore
17-Apr4:00 PMPune Warriors vs Sunrisers HyderabadPune
17-Apr8:00 PMRajasthan Royals vs Mumbai IndiansJaipur
18-Apr8:00 PMDelhi Daredevils vs Chennai Super KingsDelhi
19-Apr8:00 PMSunrisers Hyderabad vs Kings XI PunjabHyderabad
20-Apr4:00 PMKolkata Knight Riders vs Chennai Super KingsKolkata
20-Apr8:00 PMRoyal Challengers Bangalore vs Rajasthan RoyalsBangalore
21-Apr4:00 PMDelhi Daredevils vs Mumbai IndiansDelhi
21-Apr8:00 PMKings XI Punjab vs Pune WarriorsMohali
22-Apr8:00 PMChennai Super Kings vs Rajasthan RoyalsChennai
23-Apr4:00 PMRoyal Challengers Bangalore vs Pune WarriorsBangalore
23-Apr8:00 PMKings XI Punjab vs Delhi DaredevilsMohali
24-Apr8:00 PMKolkata Knight Riders vs Mumbai IndiansKolkata
25-Apr8:00 PMChennai Super Kings vs Sunrisers HyderabadChennai
26-Apr8:00 PMKolkata Knight Riders vs Kings XI PunjabKolkata
27-Apr4:00 PMRajasthan Royals vs Sunrisers HyderabadJaipur
27-Apr8:00 PMMumbai Indians vs Royal Challengers BangaloreMumbai
28-Apr4:00 PMChennai Super Kings vs Kolkata Knight RidersChennai
28-Apr8:00 PMDelhi Daredevils vs Pune WarriorsDelhi
29-Apr4:00 PMRajasthan Royals vs Royal Challengers BangaloreJaipur
29-Apr8:00 PMMumbai Indians vs Kings XI PunjabMumbai
30-Apr8:00 PMPune Warriors vs Chennai Super KingsPune
01-May4:00 PMSunrisers Hyderabad vs Mumbai IndiansHyderabad
01-May8:00 PMDelhi Daredevils vs Kolkata Knight RidersDelhi
02-May4:00 PMChennai Super Kings vs Kings XI PunjabChennai
02-May8:00 PMPune Warriors vs Royal Challengers BangalorePune
03-May8:00 PMKolkata Knight Riders vs Rajasthan RoyalsKolkata
04-May4:00 PMSunrisers Hyderabad vs Delhi DaredevilsHyderabad
04-May8:00 PMRoyal Challengers Bangalore vs Kings XI PunjabBangalore
05-May4:00 PMMumbai Indians vs Chennai Super KingsMumbai
05-May8:00 PMRajasthan Royals vs Pune WarriorsJaipur
06-May8:00 PMRoyal Challengers Bangalore vs Sunrisers HyderabadBangalore
07-May4:00 PMRajasthan Royals vs Delhi DaredevilsJaipur
07-May8:00 PMMumbai Indians vs Kolkata Knight RidersMumbai
08-May8:00 PMSunrisers Hyderabad vs Chennai Super KingsHyderabad
09-May4:00 PMKings XI Punjab vs Rajasthan RoyalsMohali
09-May8:00 PMPune Warriors vs Kolkata Knight RidersPune
10-May8:00 PMDelhi Daredevils vs Royal Challengers BangaloreDelhi
11-May4:00 PMPune Warriors vs Mumbai IndiansPune
11-May8:00 PMKings XI Punjab vs Sunrisers HyderabadMohali
12-May4:00 PMKolkata Knight Riders vs Royal Challengers BangaloreRanchi
12-May8:00 PMRajasthan Royals vs Chennai Super KingsJaipur
13-May4:00 PMDelhi Daredevils vs Kings XI PunjabDelhi
13-May8:00 PMMumbai Indians vs Sunrisers HyderabadMumbai
14-May8:00 PMKolkata Knight Riders vs Pune WarriorsRanchi
15-May4:00 PMChennai Super Kings vs Delhi DaredevilsChennai
15-May8:00 PMMumbai Indians vs Rajasthan RoyalsMumbai
16-May8:00 PMKings XI Punjab vs Royal Challengers BangaloreDharmasala
17-May8:00 PMSunrisers Hyderabad vs Rajasthan RoyalsHyderabad
18-May4:00 PMKings XI Punjab vs Mumbai IndiansDharmasala
18-May8:00 PMPune Warriors vs Delhi DaredevilsPune
19-May4:00 PMRoyal Challengers Bangalore vs Chennai Super KingsBangalore
19-May8:00 PMSunrisers Hyderabad vs Kolkata Knight RidersHyderabad
21-May8:00 PMTBC vs TBCChennai
22-May8:00 PMTBC vs TBCChennai
24-May8:00 PMTBC vs TBCKolkata
26-May8:00 PMTBC vs TBCKolkata



கேடி பில்லா கில்லாடி ரங்கா

சரக்கும் இல்லை, சிரிப்பும் இல்லை!

கல் நெஞ்சக் காக்கிகளே!


கல் நெஞ்சக் காக்கிகளே!
மானத்தையும் மீறிய
வீரம் செறிந்த போராளியடா...
கால் இரண்டும் பின்னிக் கொள்ள
கை மட்டும்
அனிச்சையாக பெண்மை காக்கிறது...
அவள் கண்களில் தெறிக்கின்ற
போராட்ட வெறி
பொசுக்கத்தான் போகிறது
தொட்ட கைகளை...

தேசிய கடல்சார் தினம்!



இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான "எஸ்.எஸ்.லாயல்டி', 1919, ஏப்., 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் 1964 முதல், ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை, சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். கப்பல் துறையின் பணிகள்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கப்பல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில், கப்பல் போக்குவரத்து துறை முன்னோடியாக உள்ளது. கப்பல் துறையில் பணிபுரிவோர், பெரும்பாலும் கடல் பகுதியிலேயே இருக்க வேண்டும். இதனால் இவர்களது பணி, மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. கப்பல்துறை தொடர்பான கல்லூரிகளில் மாணவர்கள், இத்தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால், மாணவர்கள் தயங்காமல் இத்துறையை தேர்ந்தெடுக்கலாம்.

எவ்வழி போக்குவரத்து அதிகம்: உலகின் பெரிய தீபகற்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய கடற்கரையின் நீளம் 7516 கி.மீ.,. இந்தியாவிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில், 90 சதவீதம் துறைமுகங்கள் மூலமே நடக்கிறது. நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் (கோல்கட்டா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, மும்பை, ஜவஹர்லால் நேரு, கண்ட்லா ) உள்ளன. இது தவிர 182 நடுத்தர, சிறிய துறைமுகங்களும் செயல்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1919ல் சிந்தியா கப்பல் கம்பெனி சார்பில் எஸ்.எஸ்.லாயலிட்டி என்ற கப்பல், பிரிட்டனுக்கு முதல் பயணத்தைத் துவக்கி வரலாறு படைக்கப்பட்டது. 1964 ஏப்., 5ம் தேதி முதல் முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தை கடல் பரப்பு பெருமளவு சூழ்ந்துள்ளதால், சிந்து சமவெளி நாகரிக காலமான கி.மு.3000த்தில் இருந்தே, கடல்வழி பயணம் பிரபலமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின் இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை போர்க்காலத்தில் பாதுகாக்க வேண்டிய நமது கடற்படையும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக, இப்பகுதியில் சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கி வருகிறது.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் இந்தியாவில் உள்ளது. சுமார் 90 சதவீதம் வாணிப பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கடல்சார் பகுதிகளின் முக்கியத்துவம், கடல் வழிகள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உணர்த்தும் அற்புதமான தினம் கடல்சார் தினம். நாட்டின் மொத்த கடல்சார் வளர்ச்சியில் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்பகுதி பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை ஏப்.,5 உணர்த்துகிறது.

ஒரு வார காலம் கொண்டாடப்படும் இந்த கடல்சார் தினம், மும்பையிலிருந்து லண்டனுக்கு, முதல் இந்திய கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி பயணம் மேற்கொண்ட ஏப்., 5ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்து துறையின் பங்கு ஆகியவற்றை மக்களுக்கு தெரிய செய்வதே இந்த கடல்சார் தின கொண்டாட்டத்தின் நோக்கமாகும். கப்பல்துறையின் தேவை, கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த ஒருவார கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும், துறைமுகங்களிலும் நாட்டின் கடல் எல்லையிலும் அமைதியாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிபாதைக்கு எடுத்து செல்லும் இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் சேவைகளைக் மிகக் குறைவான மக்களே அறிந்துள்ளனர். கடல்சார் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் கப்பல் துறை மற்றும் கடற்படை குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் கடந்த 50 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மற்றும் சேவைகளைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மும்பை, கோல்கட்டா, சென்னை,கோவா,விசாகப்பட்டினம், கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களிலும் கண்ட்லா, ஜாம்நகர், பாரதீப், மங்களூர், தூத்துக்குடி, கார்வர் உள்ளிட்ட இதர துறைமுகங்களிலும் கடல்சார் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது உயிரிழந்த கடற்படை வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படும். டில்லியில் வணிக கடற்படை கொடி தினத்தின்போது, கப்பல்துறை அமைச்சகத்தால், பிரதமருக்கு வணிக கடற்படை கொடி வழங்கப்படும். இந்த நடைமுறை 2002 முதல் நடைமுறையில் உள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...