|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 April, 2013

சன் கும்பலுக்கு பாடம் புகட்டலாம்..எங்கள் ஏரியா கேபிள்களில் புதிய தலைமுறை சேனல் தெரிவதில்லை. ``சரி செட் டாப் பாக்ஸ் 

இணைப்பு எடுத்தால் தெரியுமா..’’ என்று கேபிள்காரர்களிடம் கேட்டால், ``நாங்க SCV சார்.. புதிய 

தலைமுறை சேனலை காட்டக்கூடாதுங்குறது எங்களுக்கு போடப்பட்ட உத்தரவு சார்” என்றார்.

இது எப்படி இருக்கு.. பணம் கொடுக்குறது நாம.. ஆனா நாம எந்த சேனலை பார்க்கணும்னு சன் 

கும்பல் நமக்கு உத்தரவு போடுது.

புதிய தலைமுறை சேனலைக் கண்டு சன் டிவி கும்பல் எவ்வளவு ஆடிப்போயிருக்கிறது என்பது 

இதன் மூலம் தெரிகிறது. அவங்க சிறப்பா செய்தி கொடுக்குறாங்க.. அதனால் மக்கள் 

பெரும்பாலும் புதிய தலைமுறையை பார்க்கிறார்கள். அதற்கு போட்டியாக சன் டிவியும் 

தங்களது செய்தி தரத்தை உயர்த்தினால் மக்கள் பார்ப்பார்கள். மாறாக போட்டிச் சேனலை 

அதிகார பலத்தின் மூலம் இருட்டடிப்பு செய்வது அயோக்கியத்தனம். 

தாங்கள் கொடுப்பது தான் செய்தி என்று அகம்பாவம் பிடித்து நின்ற சன் கும்பல் இன்று எல்லா 

தரப்பு செய்திகளையும் காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதற்கு புதிய தலைமுறையின் 

வரவு தான் காரணம். அவர்களின் சில செய்திகள் விசயத்தில் நமக்கு மாற்றுக்கருத்து 

இருந்தாலும் கூட, சன் டிவியின் மீடியா ஏக போகத்தை ஆட்டம் காண வைத்தது என்ற 

வகையில் புதிய தலைமுறையை ஆதரிக்கலாம்.. SCV கனெக்‌ஷன் வைத்திருப்பவர்கள் 

அனைவரும் அந்த இணைப்பை துண்டித்துவிட்டு வேறு இணைப்புக்கு மாறுவதும், `சன் 

டைரக்ட்’ செட் டாப் பாக்ஸை வாங்காமல் புறக்கணிப்பதன் மூலம் சன் கும்பலுக்கு பாடம் 

புகட்டலாம்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...