|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 June, 2014

ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம்! விஜய்சேதுபதி!!

விஜய்சேதுபதியின் முகத்தில் பாதி முகம் புலிமுகம் மாதிரி டிசைன் செய்யப்பட்ட ‘எடக்கு’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் எப்போது கமிட் ஆனார்? இது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லையே! என ரசிகர்களும் விஜய் சேதுபதிக்கு நெருக்கமானவர்களும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். 

’எடக்கு’ படம் பற்றி கேட்டபோது விஜய்சேதுபதி “ ’எடக்கு’ என்ற பெயரைக் கேட்டதும் எனக்கே முதலில் வியப்பாக இருந்தது. அந்தமாதிரி படத்தில் நான் நடித்ததாக நினைவே இல்லை. அதுபற்றி விசாரித்த பிறகு தான் தெரிந்தது, அது நான் 7 வருடங்களுக்கு முன்பு நடித்த கன்னடத் திரைப்படமான ’அக்கடா’ படத்தின் டப்பிங் என்று. அக்கடா படத்தில் நான் மெயின் ரோலில் நடிக்கவில்லை. படத்தில் மொத்தமே நான்கு காட்சிகளில் தான் வருவேன். என் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில் படம் பார்க்க வந்து, நான் நான்கே காட்சிகளில் வருவதைக் கண்டால் என் மீதான நம்பிக்கை குறைந்துவிடும். நான் அந்த படத்திற்கு தமிழில் டப்பிங் கூட பேசவில்லை. ஆனால் என்னை முன்னிலைப்படுத்தி படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

27 June, 2014

அவ்ளோ கிறுக்கு பயலும் நம்ம ஊர்ல தான்!


நாட்டுல உள்ள அவ்ளோ கிறுக்கு பயலும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க.
ஒரே ஒரு சந்தேகம் இவனுவ எல்லாம் பிறந்து கிறுக்கான மாறுறாங்களா?! 
இல்ல கிருக்கனாவே பிறக்கிறான்களா?!

பவர்ஸ்டார் பண்ணிய குசும்பு!


பவரிடம் உள்ள ப்ளிஸ் பாயிண்ட் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் கலாய்த்துக் கொள்ளுங்கள், நக்கலடியுங்கள் நான் கண்டுகொள்ளவே மாட்டேன். அதன் மூலம் எனக்கு பப்ளிசிட்டி கிடைத்தால் போதும் என்று இருக்கிறார் மனிதர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல், கமலினி முகர்ஜி ஜோடி போட்டோவையும், தானும், ரேகாவும் ஜோடியாக நிற்கும் போட்டோவையும் போட்டு இதில் யார் அழகான ஜோடி என்று கேட்டிருக்கிறார். போட்டோவில் கமல் ஜோடியை ஆப்ஷன் ஏ என்றும், தனது ஜோடியை ஆப்ஷன் பி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் அழகான ஜோடியை தேர்வு செய்யுமாறு கூறி இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார். விந்தை என்னவென்றால் இரண்டு ஆப்ஷனுமே பி தான். அப்படி என்றால் பவர், ரேகா ஜோடி தான் அழகு என்கிறார்.


நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


26 June, 2014

இவருக்கா அமைதிக்கான விருது...?


நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!கண்றாவி காதல்கள்?

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம். 
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்!
பள்ளிக்குச் சென்ற தனது மகளைக் காணவில்லை என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை ஒருவர் புகார் தந்தார். 'பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது, அவள் இன்று பள்ளிக்கு வரவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்’ என்று அவர் சொல்ல... உடனடியாக போலீஸார் விசாரணையில் இறங்கினர். அந்தப் பெண் படிக்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் என்று விசாரித்தும் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பெண் பயன்படுத்திய செல்போனில் அதிகமாகப் பேசிய ஒருவன், அந்தப் பெண் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் பின்தொடர்ந்த ஒருவன், அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவன் என மூன்று நபர்களை அள்ளிக்கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களும், அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் தந்தை, 'சார்... நம்ப வேண்டாம். இவனுகதான் என் மகளை எங்கோ கடத்தி வைத்துக்கொண்டு தெரியாது என்று சொல்கிறார்கள்’ என்று அழவே... போலீஸார் அவர்களை நையப் புடைத்தனர். அப்போது, மூவரில் ஒருவனுடைய செல்போன் ஒலித்தது. 'சார்... இது என் பொண்ணு நம்பர்’ என்று அலறுகிறார் அந்தப் பெண்ணின் தந்தை. அவனைப் பேசச் சொன்னார்கள் போலீஸார். அந்தப் பெண், 'எங்கடா இருக்க? உன்னை நம்பி வீட்டை விட்டு வந்துட்டேன். நீ உடனே சென்னை கிளம்பி வந்துடுடா. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழலாம். எனக்கு வீட்டில் நிம்மதி  இல்லை’ என்று சொன்னாள். 'இப்போ நீ எங்கே இருக்க?’ என்று இவன் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல், 'நீ உடனே கிளம்பி சென்னை வா!’ என்று சொல்லிவிட்டு கட் செய்துவிட்டாள்.
அடுத்தடுத்து மற்ற இரண்டு பையன்களுக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து போன் வர... போலீஸார் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமும் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் பேசியிருக்கிறாள் அந்தப் பெண். ஆனால் யாரிடமும், தான் இருக்கும் இடத்தைச் சொல்லவே இல்லை. இந்தப் பேச்சுக்களைக் கேட்ட அனைவரும் தலை கிறுகிறுத்துதான் போனார்கள். பிறகு, அந்தப் பெண் பேசிய செல்போன் டவரை கண்காணிப்பு செய்தபோது, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து அந்தப் பெண் பேசியது தெரிய வந்தது.
திருப்பூர் போலீஸாருக்கு அந்தப் பெண்ணின் புகைப்படத்தோடு தகவல் தரப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் அந்தப் பெண்ணை அலேக்காக தூக்கிவிட்டனர். தேனிக்கு கொண்டுவந்த பிறகு அந்தப் பெண்ணிடம், ''ஏன்மா ஒரே நேரத்துல மூணு பேர லவ் பண்ணிருக்க. அதுவும் ஒரே நேரத்துல வரச் சொல்லியிருக்க?'' என்று போலீஸார் கேட்க... ''லவ் ஃபெயிலியர்னா என்னால தாங்கிக்க முடியாது. ஒருத்தன் விட்டா இன்னொருத்தன் இருப்பான்ல. எப்படியும் மூணு பேரும் ஒழுங்கா வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும், யார் முதல்ல வர்றாங்களோ அவனோட கிளம்பியிருப்பேன்'' என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறாள். அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தது போலீஸ்.
எனக்கு 19... உனக்கு 22...
'கல்லூரியில் படிக்கும் என் மகளை கடந்த 10 நாட்களாகக் காணவில்லை!’ என்ற புகாரோடு வந்தார் 
ஒரு தந்தை. அந்தப் பெண்ணின் செல்போன் இன்கம்மிங் - அவுட்கோயிங் விவரங்களை அலசியதில், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குப் பேசியது தெரிய வந்தது. அந்த எண்ணுக்கு உரிய பையனோடு அந்தப் பெண் ஓடிவிட்டதும் தெரியவந்தது. லேட்டஸ்டாக அவர்கள் செல்போனில் தொடர்புகொண்ட ஆட்களை விசாரிக்க, கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு என்ற இடத்தில் ஒரு டீ எஸ்டேட்டில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது.  அவர்களைத் தூக்கி வந்து போலீஸார் விசாரித்தபோது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

''அந்தப் பெண்ணுக்கு 22 வயசு. அந்தப் பையனுக்கு 19 வயசு. அவன் முதலாம் ஆண்டு படிக்கும்போது, இந்தப் பெண் மூன்றாம் ஆண்டு. இருவரும் வேறு வேறு கல்லூரி. ஒரு வருடத்துக்கு முன் செல்போனில் ஆரம்பித்த காதல் ஃபேஸ்புக் மூலம் தொடர... இருவரும் ஊரைவிட்டு ஓடியிருக்கின்றனர். கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 'சினிமாக்களில் வருவதுபோல முதலிரவு வேண்டும்’ என்று அந்தப் பெண் ஆசையாகச் சொல்ல... கட்டிலில் பூ தூவி அலங்காரம் செய்து, பழம், பால் என்று நண்பர்களின் ஏற்பாட்டில் கொண்டாடி உள்ளனர். இப்படியே ஒரு வாரம் சந்தோஷமாகக் கழிந்தது'' என்று சொல்லியிருக்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் வந்த பிறகு, 'எங்கள் பெண் வந்தால் போதும்’ என்று பெண் வீட்டில் சொல்ல, 'பிரச்னை வராமல் என்ன செய்தாலும் ஓகே’ என்று பையன் வீட்டில் சொல்ல... குறுக்கே புகுந்திருக்கிறார் அந்தப் பெண். ''எனக்கு இவன் வேண்டாம். நான் என் அம்மா அப்பாவோட போறேன். என் செலவுக்குத் தேவையான பணத்தை இவனால சம்பாதிக்க முடியல. எல்லாத்தையும் நண்பர்கள்கிட்ட எதிர்பார்க்குறான். ஆனா, காதலிக்கும்போது அப்படி இல்ல. சினிமா, ஹோட்டல்னு நல்லா செலவு செய்வான்'' என்று சொல்லிவிட்டு, பெற்றோருடன் புறப்படத் தயாராகி இருக்கிறாள். அந்தப் பையன் போலீஸ் ஸ்டேஷனிலேயே, கீழே படுத்து உருண்டு புரண்டு அழ... 'விடுடா தம்பி’ எண்று அந்தப் பையனைத் தேற்றி ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.
இவள் வேற மாதிரி!
'9-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவியைக் காணவில்லை’ என்று அந்தப் பள்ளி நிர்வாகமே புகார் கொடுக்க... செல்போன் டவர் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கியது போலீஸ். திருப்பூர், கோவை 
ஏரியாக்களில் இருப்பதாக டவர் காட்டிக்கொடுக்க... அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த நபரையும் போலீஸார் தூக்கிக்கொண்டு வந்தனர். விசாரணையில்தான், அந்தப் பெண்ணோடு இருந்தது அவரது ஆசிரியர் என்று தெரிய வந்தது.

அவரை நையப் புடைத்து விசாரித்தபோது, ''அந்த மாணவிதான் என்னை மிரட்டி செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அவர் அழைக்கும்போது போகவில்லை என்றால், போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டுகிறார்'' என்று பரிதாபமாகச் சொல்ல... ஆடிப்போய்விட்டனர் போலீஸார். இதுபற்றி விசாரணையில் இறங்க... அந்தப் பெண் செல்போன் மூலம் 30-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பேசிவருவது தெரிய வந்துள்ளது. இவருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.
இந்தச் சம்பவங்களை எல்லாம் உற்று கவனிக்கும் சமூக ஆர்வலர்களோ, ''குழந்தை வளர்ப்பில் குறைபாடு உள்ளதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். என்ன செய்கிறோம் என்று தெரியாத இரண்டாங்கெட்ட வயசு பதின்ம வயது. அப்போது பெற்றோர் கண்காணிப்பில் குழந்தைகள் இல்லாவிட்டால், இதுபோன்று வழிதவறி போய்விட வாய்ப்பு உள்ளது. படிக்கும்போது பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும்போது, நல்ல விஷயங்களைவிட கெட்ட விஷயங்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். இப்போது நடைபெற்ற அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் செல்போன் இருப்பதைப் பார்த்தாலே இது புரியும்'' என்கிறார்கள்.
பாசத்தோடு கண்டிப்பும் தேவை!

25 June, 2014

நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


மேலாடை நழுவ சங்கடத்தில் ராகினி த்விவேதி!டான்ஸ் நிகழ்ச்சியின்போது கன்னட நடிகை ராகினி திவிவேதியின் ஜாக்கெட் கழன்று போய் விட அவரது மேலங்கம் பளிச்சென தெரிந்து அவருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. கடந்த வருடம் துபாயில் நடந்த சிமா விருது விழாவின் போது நிறைய பிரபலங்கள் மேடையில் நடனம் ஆடினார்கள். அப்போது ராகினி த்விவேதியும் நடனம் ஆடினார். அப்படி அவர் மேடையில் மிகவும் உற்சாகத்துடன் நடனம் ஆடும் போது, அவரது மேலாடையானது கழன்றுவிட்டது. ஆனால் அதை ராகினி உணரவில்லை. ஆடை அவிழ்ந்து போனது கூட தெரியாமல் அவர் ஆடிக் கொண்டிருந்தார். ராகினி த்விவேதி சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து, அதற்கு மேலே கருப்பு நிற ஷீர் டாப்ஸ் அணிந்திருந்தார். இது கழன்று போனதால் மேலங்கம் தெரிந்தது. ராகினி இதைப் பார்க்காமல் போனாலும், மேடையின் கீழிருந்த நடிகை லட்சுமி மஞ்சு பார்த்து பதறிப் போய், உடனடியாக மேடையில் உள்ள லைட்டுகளை அணைக்கச் சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் ராகினிக்கு விஷயமே தெரிந்து அதிர்ந்து போய் விட்டார்.23 June, 2014

தனியார் கையில்?

தனியார் செய்ய வேண்டிய சாராய வியாபாரம் முதல் இட்லி வியாபாரம் வரை இன்று அதிமுக அம்மா அரசின் கையில். ஆனால் அரசாங்கம் கொடுக்க வேண்டிய அத்தியாவசிய கல்வியோ இன்று தனியார் கையில்.

கூடிய விரைவில் பிசாசு முனையும், கச்சத்தீவும் இணைந்துவிடும்!

சமீப காலங்களில், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும், வளர்ந்து வரும் எல்லைப் பங்கீடுகள், மிகப்பெரிய பிரச்னைகளாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா - இலங்கை இடையே, வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவும், இரு நாடுகளுக்கும் இடையே, மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. சரித்திர மற்றும் ஆவணங்களின் ஆதாரப்படி, கச்சத்தீவு பண்டைய காலத்தில், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது. 1974ல், மத்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததால், இந்திய மீனவர்கள், தங்கள் மீன்பிடி படகு களை ஓய்விற்கு நிறுத்த முடியாமலும், வலைகளை உலர வைக்க முடியாமலும், ஏன் அதன் துாரத்து சுற்று வட்டாரங்களில் மீன் பிடிக்க இயலாமலும், பலவகையான உயிர் மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.எந்த அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், பூமியின் அமைப்பையும், நடைபெறும் புவியியல் மாறுதல்களையும் படம் எடுக்கும் செயற்கைக்கோள் படங்களையும், புவியின் தரைமட்டம் மற்றும் கடல் கீழ் தரைமட்டம் ஆகியவற்றையும் காண்பிக்கக் கூடிய வான் வெளிசார், 'ஈ டோப்போ' படங்களையும் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த, ஒரு நிலப்பரப்பு என்பது தெரிகிறது. 

கிட்டத்தட்ட, 7,000 கி.மீ.,க்களுக்கு மேலான நீளமுடைய, இந்திய கடலோரப் பகுதி, ஒரு நேர்கோடு போல் இல்லாமல், குவியமாகவும், குழியாகவும் மாறி மாறி அமைந்து வளைந்தும், நெளிந்தும், சில இடங்களில் முக்கோண வடிவமாகவும், கடலுக்குள் நீட்டியபடியும் அமைந்துள்ளது. இவ்வமைப்பு, இந்திய கிழக்கு கடற்கரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியக் கடற்கரையின், இதுபோன்ற அமைப்பிற்கு, இந்தியத் தட்டில் ஏற்பட்டபடி இருக்கும் வளைவுகள் மற்றும் வெடிப்புகளே காரணம்.
மேலும், கடற்கரை ஓரமாக இருக்கும் நீரோட்டங்களும், கடலோரப் பகுதிகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்திய கிழக்கு கடற்கரை ஓரத்தைப் பொருத்தவரை, இந்நீரோட்டமானது, பிப்ரவரி முதல் அக்டோபர் வரை, (ஒன்பது மாதங்களில்), தெற்கே கன்னியாகுமரியில் இருந்து இலங்கையைச் சுற்றி, வடக்காக கடற்கரை ஓரமாக ஓடி, மேற்கு வங்கத்தில் இருந்து தெற்காக, கடிகாரம் சுற்றுவது போல் திரும்பி, அந்தமான் வரை செல்கிறது.நவம்பர் முதல் ஜனவரி வரை (மூன்று மாதங்கள்) உள்ள வடகிழக்கு பருவமழை காலங்களில், அந்தமானில் இருந்து திரும்பி, இந்நீரோட்டம் கடிகார சுற்றிற்கு, எதிர்மறையாகச் சுற்றி வங்கதேசக் கடற்கரை ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்கரை வழியாக, தெற்காக ஓடி, தமிழக கடற்கரையை அடைகிறது.இதுபோன்று, ஒரு வருடப் பருவத்தில், இரு திசைகளிலும் சுற்றும் கடலோர நீரோட்டம், அலைகள் கொண்டு வரும் கடல் கீழ் மணலோடு, வங்கக் கடலில் கலக்கும் இந்திய நதிகளின் மணலையும் தன்பால் இழுத்துக் கொண்டு சுற்றும் போது, குவியான மற்றும் முக்கோண கடற்கரை ஓரங்களை அரித்தும், குழிவடிவக் கடலோரப் பகுதிகளில் மணல் துகள்களை கொட்டவும் செய்கிறது.
இவ்வாறு, இந்நீரோட்டத்தால் கொட்டப்பட்ட மணலே திருநெல்வேலி, ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் முயல்தீவு, உப்புத் தண்ணீர் தீவு, நல்லத் தண்ணீர் தீவு என்று பல தீவுகளாகவும், நதிகளின் முகத் துவாரங்களில் மணல் மேடுகளாகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் கடற்கரை மணல் மேடுகளாகவும் தென்படுகின்றன.இவ்வாறு தெற்காக, மூன்று மாதங்களில் ஓடும் கடல் நீரோட்டம், தமிழகத்தில் வேதாரண்யத்திற்கும், யாழ்ப்பாணப் பகுதிக்கும் இடையே நுழைந்து, கடிகாரச் சுற்றிற்கு எதிர்மறையாகச் சுற்றுகிறது.இவ்வாறு, கடல் நீரோட்டம் கடிகாரச் சுற்றிற்கு எதிர் சுற்றாக வடக்கிலும், கடிகாரம் சுற்றும் திசையில் தெற்கிலும், ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சுற்றுவதால், நீரோட்டச் சலனமற்ற, இவ்விரு நீரோட்டங்களுக்கும் இடைபட்ட ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம், ராமேஸ்வரம், பிசாசு முனை வரையிலும் நீரோட்டம் கொண்டு வந்த மணல் கொட்டப்பட்டு, நீளமான நிலப்பகுதியாக உருவாகி உள்ளது.இவை, ETOPO படத்தில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும் நன்கு தெரிகிறது. பிசாசு முனையில் இருந்து, வடக்கிழக்கே திரும்பும் இதே நீரோட்டம் ராமேஸ்வரம், பிசாசு முனையில் மணலைக் கொட்டிய பின், எஞ்சிய மணலை பிசாசு முனைக்கு வடகிழக்கே கொட்டி, கச்சத்தீவாக உருவாக்கி உள்ளது.ராமேஸ்வரம், பிசாசு முனையில் இருந்து கச்சத்தீவு வரை, இவ்விரு நிலப்பகுதிகளுக்கும் இடையேயுள்ள தொடர்ச்சி, கடல் மட்டத்திற்கு கொஞ்சம் கீழே மஞ்சள் நிறத்தில், ETOPO படத்தில் நன்கு தெரிகிறது. கடல் நீரோட்டம், இதே திசையில் சுற்றினால், கூடிய விரைவில் ராமேஸ்வரத்தில் உள்ள பிசாசு முனையும், கச்சத்தீவும் இணைந்துவிடும் என்றும் தெரிகிறது.மேற்கே ராமநாதபுரத்தில் இருந்து, கிழக்கே மண்டபம் வரை காணப்படும் மணல் மேடுகள், 3,500 ஆண்டுகள் வயது கொண்டவையாக, கார்பன் வயதுக் கணிப்பு கள் காண்பிப்பதால், ராமேஸ்வரம், பிசாசு முனை, கச்சத்தீவும், 3,500 மற்றும் 3,000 ஆண்டுகள் வயது கொண்டவையாக இருக்கும் என்று தெரிகிறது.ஆனால், யாழ்ப்பாணம் தீபகற்பத்தைச் சுற்றியுள்ள இந்தியாவை நோக்கி, வளைந்து காணப்படும் டேல்ப் தீவு உள்ளிட்ட தீவுகள், 4,000 ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட களிமண், மணல், மணற்பாறைகள் கொண்ட படுகைப் பாறைகளாகும். ஆகவே, இவ்வுண்மைகள் எல்லாம், கச்சத்தீவு நிலவியல் ரீதியாக, இந்தியாவின் ஒரு பாகமே என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

20 June, 2014

துவைச்சு காயப்போட்டாச்சு...!


ஒரே தேசிய மொழி தவறான நம்பிக்கை!

சமூக வலைதளங்கள் மற்றும் அரசு தொடர்புமொழியாக இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு,  மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்தியாவில் 25 சதவீதத்தினர் மட்டுமே இந்தியை தங்களது தாய்மொழி என தெரிவித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்குமத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை நாடு முழுவதும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திலிருந்து எதிர்பார்த்ததுபோன்றே திமுக தலைவர் கருணாநிதி முதல் எதிர்ப்பு குரலை உயர்த்த, அவரைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் இந்தி திணிப்பை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தமிழக பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, பாமக மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அளவில் நிலைமை இதுவென்றால், தேசிய அளவில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. மகராஷ்ட்ராவில் மராத்தியர்களுக்கும், மராத்தி மொழிக்கும் ஆதரவாக குரல் கொடுக்கும் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, மத்திய அரசின் இந்தி ஊக்குவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், இந்தி தேசியமொழி ( ராஷ்ட்ரா பாஷா) என்றும், பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி இந்தியை ஊக்குவிக்காவிட்டால் வேறுயார் ஊக்குவிப்பார்கள்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்று மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியை தொடங்கிய ராஜ் தாக்கரே இதுகுறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. மகராஷ்ட்ரா அரசு அலுவலகங்களில், குறிப்பாக காவல்நிலையங்களில் மராத்தி மொழிதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என சிவசேனாவை காட்டிலும் மிக அதிகமாக குரல் கொடுத்தவர் ராஜ் தாக்கரே. ஆனால் அவரும் தற்போது மவுனமாகத்தான் உள்ளார்.சமீபத்தில் பூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைவர்களுடன் பேசுகையிலும், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஆற்றிய உரையின்போதும் இந்தியில்தான் பேசினார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேற்கூறிய உத்தரவு, இந்தி மொழியை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்லும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக இருக்கலாம் என கூறுகின்றனர் இந்த உத்தரவை எதிர்ப்பவர்கள். 

இதில் இன்னொரு வேடிக்கை இந்தி மொழி பேசும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுதான். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தி மொழியை ஊக்குவிப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், அனைத்து பிராந்திய மொழிகளையும் மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும். நமது தேசம் பாரம்பரிய வளமிக்க பிராந்திய மொழிகளை கொண்டது. எனவே அந்த மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். அதே சமயம் மத்திய அரசு,  இந்தி திணிப்பு என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது. இந்தியை ஊக்குவிப்பதுஎன்பது மற்ற பிராந்திய மொழிகளை அழிப்பதாக அர்த்தமாகாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ள நிலையில், பா.ஜனதா செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வியோ, இந்தி பேசுபவர்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், ஆங்கிலத்தில் பேசுபவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் முன்னர் கருதப்பட்டதாக,  ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி,  புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார். 

" இந்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சி நாட்டில் இந்தி பேசும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.மேலும் நமது சமூகத்தில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற மாயைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே தக்க தருணம்" என்றும் அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.இந்நிலையில் மத்திய அரசின் இந்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், "இந்தி பேசும் மாநிலங்களில் வேண்டுமானால் மத்திய அரசு இந்தியை ஊக்குவிக்கட்டும். மேலும் அம்மாநிலத்தின் அரசு அலுவலகங்களின் தொடர்புமொழியை கூட ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என மாற்றட்டும். ஆனால் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இதே நடவடிக்கையை திணிக்கக்கூடாது" என்கின்றனர். 

மேலும் இந்தி திணிப்பு நடவடிக்கை, இந்தி மொழியா...ஆங்கிலாமா? என்று இருந்த விவாதம், தற்போது இந்தி மொழியா... மற்ற பிராந்திய மொழிகளா? என்ற விவாதத்தை தொடங்கி வைத்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் 'இந்தி நமது தேசிய மொழி' என உரிமை கொண்டாடுவதும் கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனப்படி நாட்டின் 15 முக்கிய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளும் அரசு அலுவலகங்களின் பிரதான தொடர்பு மொழிகளாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் 70 சதவீதம் பேர் இந்தியில் பேசுவதாக இந்தியை ஊக்குவிப்பவர்கள் கூறினாலும், உண்மை நிலை வேறாக உள்ளது. 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 45 சதவீதம் பேர் மட்டுமே இந்தியை பேசுபவர்களாகவோ அல்லது தெரிந்தவர்களாகவோ உள்ளனர். அதே சமயம் 25 சதவீதம் பேர் மட்டுமே இந்தியை தங்களது தாய்மொழி என தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் 25 கோடிக்கும் சிறிது கூடுதலானவர்களே இந்தியாவில் உண்மையான இந்தி பேசுகின்றனர். மற்றவர்கள்  பேசுவது உண்மையான இந்தி அல்ல. அவர்கள் வெவ்வேறான இந்தியை அதாவது போஜ்புரி, மகாதி, மைதிலி, கார்வாலி, தோக்ரி, ராஜஸ்தானி, மார்வாரி, ஹரியான்வி போன்ற கலப்பு இந்தியை பேசுகிறார்கள். இவர்கள் அனைவரையும் சேர்த்தால்தான் இந்தியாவில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் மீதமுள்ள 55 சதவீதத்தினர் இந்தி பேசாதவர்களாகவும், இந்தி மொழியே தெரியாதவர்களாகவும் உள்ளனர். 

அதே 2001 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 42 சதவீதம் பேர் இந்தியை பேசுகிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் 25 சதவீதத்தினர் மட்டுமே இந்தியை தங்களது தாய் மொழியாக அறிவித்துள்ளனர். 8.5 கோடி பேர் பெங்காலி பேசுவதாகவும், 7.5 கோடி பேர் தெலுங்கு பேசுவதாகவும், 7 கோடி பேர் மராத்தி பேசுவதாவும், 6 கோடி பேர் தமிழ் பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் உருது பேசுபவர்கள் 5 கோடி, குஜராத்தி 4.6 கோடி, கன்னடம் 4 கோடி, மலையாளம் 3.5 கோடி, ஒரியா 3.3 கோடி, பஞ்சாபி 3 கோடி, அஸ்ஸாமி 1.5 கோடி, சந்தாலி 64 லட்சம் பேர், 55 லட்சம் பேர் காஷ்மீரி மொழி பேசுவதாகவும் அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 

வடகிழக்கு மாநிலங்களிலோ 50 க்கும் அதிகமான வெவ்வேறு கிளைமொழிகளை பேசுகின்றனர். இந்திபேசாத மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அல்லாத மாநிலங்களில் உள்ள பழங்குடி இனத்தவர்களோ, வேறுவிதமான மொழியை பேசுகின்றனர். இந்த  பேச்சுக்கள் இந்தி அல்லது வேறு எந்த கிளை மொழியுடனும் தொடர்பு இல்லாதவைகளாக உள்ளன. மேலும் கர்நாடகா மாநிலங்களில் பேசப்படும் கொங்கணி, துளு, கொடாவா, பியாரி போன்றவை இந்தியுடன் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாதவை. எனவே இந்தியாவில் 70 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் எனக் கூறுவதற்கு முன்னர்,  மத்திய அரசு இந்த 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை கவனத்தில் எடுத்துக்கொண்டு பேசவேண்டும் என நிபுணர்களும், நவீன வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

" ஒரே தேசிய மொழி என்ற தவறான நம்பிக்கையை வலியுறுத்தியதால் பாகிஸ்தான் பிரிந்ததையும், இலங்கை உள்நாட்டு போரில் மூழ்கி, இன்னமும் அதன் பாதிப்புகள் மற்றும் விளைவுகளிலிருந்து வெளிவராமல் தவித்துக்கொண்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது" என எச்சரிக்கிறார் நவீன வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா. இந்நிலையில் இந்தி திணிப்புக்கு தமிழகத்திலிருந்து எழுந்துள்ள கடும் எதிர்ப்பு மற்றும் ஜூலையில் தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இவ்விவகாரம் கிளப்பப்படும் என்பதாலும், இந்தியை ஊக்குவிக்கும் தனது சுற்றறிக்கையில் மத்திய அரசு ஏதாவது திருத்தங்கள் செய்யும் என எதிர்பார்க்கலாம்.                                                                                                                        

நானே எலிமினேட் ஆகிறேன்!


19 June, 2014

Vadacurry Movie Kashayam with Bosskey


நிர்வாண” சன்பாத் .


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பலர் அந்த காட்சியை படம் எடுத்தும் சென்றனர்.

17 June, 2014

தொப்பை குறைய யோக முத்திரா!

India is poorest in South Asia after Afghanistan!


பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடந்திய உலக நாடுகளின் வறுமை கணிப்பு ஆய்வில் இந்தியாவிற்கு 2வது இடம் கிடைத்துள்ளது, இதில் சில திடுக்கிடும் உண்மைகளும் கிடைத்துள்ளது. இந்தியா வளரும் நாடுகளில் முதன்மையான ஒன்று என்பது நாம் அனைவரும் தெரியும். இந்நிலையில் ஏழை நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென் ஆசிய பகுதியில் இருக்கும் ஏழை நாடுகளை பற்றி நடத்திய ஆய்வில் இந்தியா 340 மில்லியன் ஆதரவற்ற மக்களை கொண்டு இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது, இதில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை படித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் கிடைத்த தகவலின் படி உலகின் 49 நாடுகளின் மொத்த ஏழை மக்கள்தொகையில் 40 சதவீத மக்கள் இந்தியாவில் உள்ளதாக ஆக்ஸ்போர்டின் பல பரிமாண வறுமை குறீயிடு (MPI) 2014 தெரிவிக்கிறது. தென் ஆசிய பகுதியில் ஆப்கானிஸ்தானில் 38 சதவீத ஆதரவற்ற மக்களும், இந்தியாவில் 28.5 சதவீதம் ஆதரவற்ற மக்கள் உள்ளதாக இந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதேபோல் இந்தியாவின் அண்டை நாடான பாங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில், 17.2 சதவீதம் மற்றும் 20.7 சதவீதம் ஆதரவற்ற மக்கள் உள்ளனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்பட்டியலில் டாப் 5 இடங்களை பிடித்த நாடுகளை இப்போது பார்போம். இதில் முதல் இடத்தை பிடித்தது ஆப்கானிஸ்தான், தனது மொத்த மக்கள் தொகையில் 66 சதவீத மக்கள் MPI கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீத மக்கள் MPI கோட்டிற்கு கீழ் உள்ளனர். இது இந்தியாவின் மோசமான பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது. இந்தியாவின் அண்டை நாடான வங்காளம் இதில் முன்றாவது இடத்திலும், பாக்கிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது. இவைகளை தொடந்து நேபால், பூட்டான், இலங்கை, மால்தீவுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறது. ஆய்வு நடத்தப்பட்ட 49 நாடுகளில் இந்தியாவின் பீகார் மாநிலம் மிகவும் வறுமையான பகுதியாக கருதப்படுகிறது

16 June, 2014

வீட்டிலே இருக்கிறார் வைத்தியர்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்து வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிவருபவர் சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ். நெல்லை, பாபநாசத்தில் பல ஏக்கர் நிலத்தில் வீரமாமுனிவர் மூலிகைப் பண்ணையை நடத்திவருகிறார். இந்தப் பண்ணையிலிருந்து மூலிகைச் செடிகளை ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொடுத்து வளர்க்கச் செய்கிறார். பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன வளாகங்களில் இவரே மூலிகைச் செடிகளை நடவு செய்வதுடன் அதன் மருத்துவக் குணங்களை விளக்கி, அதனை அங்குள்ள ஊழியர்கள் பராமரிக்கும் சூழலை உருவாக்குகிறார்.  
'உடல் ஆரோக்கியத்துக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு மூலிகைச் செடி கட்டாயம் வளர்க்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி விழிப்புஉணர்வு பிரசாரம் செய்து வருபவரிடம், 'வீட்டுத் தொட்டிகளில் எந்த வகையான மூலிகைகளை வளர்க்கலாம்? அந்த மூலிகைகளின் மருத்துவப் பயன் என்ன?’ எனக் கேட்டோம்.  
'அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும்  மூலிகைகள் இருக்கும். தற்போது, பெருநகரங்களில் குடியிருப்பதற்கே சிறிய வீடுதான். இடப்பற்றாக்குறை காரணமாக மூலிகை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், மக்கள் நினைப்பது போலச் செடிகளை வளர்ப்பதற்கு வீட்டின் முன்பாகவோ அல்லது பின்புறத்திலோ நிறைய இடவசதி தேவை இல்லை. சாதாரணப் பூந்தொட்டிகளில்கூடச் சில முக்கியமான மூலிகைகளை வளர்க்க முடியும். காய்ச்சல், தலைவலி, சிறிய காயம் போன்ற சின்னச் சின்ன உபாதைகளுக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் வீட்டுக்கு ஒரு மூலிகையாவது இருந்தால் நோய்களில் இருந்து தப்ப முடியும். அதனை வலியுறுத்தியே எனது பயணம் தொடர்கிறது. இப்போது மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பார்க்கையில், சீக்கிரத்தில் என் லட்சியத்தை எட்ட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் உற்சாகமாக.
மஞ்சள் கரிசலாங்கண்ணி
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மூலிகை இது. மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து. வாரத்துக்கு இரண்டு நாள் இந்தக் கீரையில் சட்னி அல்லது துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறந்த கிருமிநாசினியும்கூட. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். கல்லீரலைப் பலப்படுத்தும். குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், சளித்தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றையும் போக்கக்கூடியது.  கீரையை நன்றாகக் கழுவி, உலரவைத்து பொடி செய்து சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் பொன்நிறமாக மாறும். இலையைக் காய்ச்சி சாறு எடுத்துத் தலையில் தடவி வந்தால், இளநரை மறையும்.

வல்லாரைக் கீரை

வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயலைச் செய்யும் சக்தி இந்தக் கீரைக்கு இருப்பதால், ஞாபக சக்திக்கு முக்கியப் பங்காற்றுகிறது. உடல் புண்களைக் குணமாக்குவதுடன், மூளை சோர்வைப் போக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், இதயத்தைப் பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் நல்லது. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால், குடல் புண், குடல் நோய், வாய்ப்புண்கள், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக் கூடாது.
பிரம்மி
கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. நரம்பு மண்டலத்தைத் தூண்டி சோர்வை நீக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சாஃப்ட்வேர் தொழிலில் பணிபுரிபவர்கள் இந்த மூலிகையை நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனைச் சாறு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட்டுவந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். இலைகளைக் கசாயம் செய்து குடித்தால், மலச் சிக்கல் தீரும். இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டுவந்தால், குரல் வளம் பெருகும். வேரை அரைத்துக் கொதிக்கவைத்து நெஞ்சில் பூசினால், நாள்பட்ட சளி சரியாகும்.

நிலவேம்பு

சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலை சரிப்படுத்துவதிலும் மூலிகை முதல் பங்கு வகித்தது. கொடி போல் படரக்கூடிய மூலிகை. மூலிகையைப் பொடித்து, கசாயம் செய்து குடித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு. பசியைத் தூண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்துக் காய்ச்சல்களையும் குணமாக்ககூடியது. வருமுன் தடுக்கவும் செய்யும்.
பிரண்டை
தொட்டியில் வளர்த்தால் அழகாகப் படர்ந்து நிற்கும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.

திப்பிலிக்கொடி
திப்பிலி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம்
எடுத்து தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். இரைப்பை, கல்லீரல் வலுப்பெறும். தேமல் நோய் மறையும். திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடியை சம அளவில் கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டு வேளையாக மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.

ஓமவல்லி
கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது. இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி இருமல், சளி, ஜலதோஷத்துக்கு முக்கியமான மருந்து. இதன் இலையைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சீதள இருமல் நோய் தீரும். இலைச் சாறை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி நீங்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தி நீக்கும். கண் அழற்சிக்கும் உகந்தது. மனக் கோளாறை சரிசெய்யும் மருந்திலும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இலையைக்கொண்டு பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்.

துளசி
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் துளசி முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை
 நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. கிருமிநாசினி.

துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. குளிக்கும் நீரில் முந்தைய நாளே போட்டுக் குளித்தால், உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. மன இறுக்கம், ஞாபக சக்தி இன்மை, நரம்புக் கோளாறு, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.
தூதுவளை
இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வலுவை கூட்டும். இருமல், சளி நீங்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.

வாதப் பித்தத்தைச் சரிப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி பலப்படும். தூதுவளையை நன்றாக அரைத்துத் தோசை மாவுடன் கலந்து அடை போலச் செய்து சாப்பிட்டால், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். காது மந்தம், நமைச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து.
நொச்சி
கொசுக்கள் அருகில் வராது என்பதால், தமிழக அரசும் இதனை வீடுகளில் வளர்க்கும்படி
 பரிந்துரைக்கிறது. இலையைச் சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, கை கால் வலி நீங்கும். இரவில் தலையில் வைத்துப் படுத்தால், தலைவலி, தலை நீர், தலை பாரம், நரம்பு வலி, கழுத்து வீக்கம், மூக்கடைப்பு போன்றவை குணமாகும். இதன் சாறை உடலில் இருக்கும் கட்டிகளின் மீது இரவு நேரத்தில் பற்று போட்டுவந்தால், கட்டிகள் மறைந்துவிடும். நொச்சி சாறைத் தேய்த்தால் நரம்பு பிடிப்பு, இடுப்பு வலி நீங்கும். இலைகளை அரைத்து மூட்டுகளில் கட்டினால், நாள்பட்ட மூட்டுவலி தொல்லையில்  இருந்து விடுபடலாம்.

எனது தந்தை 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்


எனது தந்தை கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் -டெல்லி மேல்சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு  கருணாநிதி பிறந்தது ஜூன் 3, 1924. அவருக்கு 14 வயது என்றால் 1938. அப்போது இந்தியா சுதந்திர நாடே அல்ல. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது 1965ல்.... அப்போது கருணாநிதியின் வயது 36..

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

12 June, 2014

நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


கிடைத்துவிடுமா?

24மணி நேரமும் கோவில் வாசலிலே அமர்ந்து பிச்சை எடுப்பவனுக்கு

கிடைக்காத "நிம்மதியும், செல்வமும்"ஒரு நிமிடம் நீங்கள் வேண்டுவதால்

கிடைத்துவிடுமா?

தியாகத்துக்கு இவ்வளவுதான் மரியாதையா?செங்கோட்டையில் உள்ள எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் சங்கரன் ஆனால் வாஞ்சிநாதன் என்ற பெயருடன் வளர்ந்தார். செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு திருவனந்தபுரத்தில் மூலம் திருநாள் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து விட்டு பின் பரோடாவில் மேல்படிப்பு படித்தவருக்கு புனலூர் வனத்துறையில் அரசாங்க வேலை கிடைத்தது. வேலை கிடைக்கும் முன்பாக பொன்னம்மாள் என்பவருடன் திருமணமானது. அந்த நேரம் சுதந்திர தாகம் நாடு முழுவதும் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. கப்பலோட்டிய தமிழரான வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சால் வாஞ்சியும் ஈர்க்கப்பட்டார். இதன் காரணமாக ஆங்கிலய அரசு வழங்கிய வேலையை பார்க்க மனது விரும்பாததால் தூக்கி எறிந்து விட்டார்.
பின்னர் பாரத மாதா சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். வ.வே.சு அய்யர், பாரதியார் உள்ளிட்ட பல தேச தலைவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. சுதந்திர தாகம் முன்னிலும் அதிகப்பட்டது.இந்த நிலையில் திருநெல்வேலி கலெக்டராக பதவி ஏற்ற ஆஷ் துரை வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் செக்கிழுக்க வைத்து வ.உ.சியை பெரிதும் சிரமப்படுத்தினார்.தான் தெய்வமாக கருதும் தலைவர்களை கொடுமைப் படுத்தும் ஆஷ் துரையின் மீது வாஞ்சிக்கு கோபம் ஏற்பட்டது. வ.உ.சி மற்றும் சிவாவை விடுதலை செய்யச் சொல்லி நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆஷ் துரை நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல வாஞ்சியை இன்னும் சூடேற்றியது.


மரணத்தின் வலி என்ன என்பதை ஆஷ் துரைக்கு உணர்த்த வேண்டும் என்று உறுதி பூண்டார், இதற்காகவே காத்திருந்து மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.பின்னர் தன்னை பிடிக்க வந்த ஆங்கிலேயே அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பி ஓடியவர், ரயில் நிலைய கழிப்பறைக்குள் புகுந்து கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து கூட நிறையவில்லை.செய்தி தொடர்பு சாதனம் வளர்ந்திராத அந்த கால கட்டத்திலும் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆங்கிலேயே அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது என்பதால் பிரிட்டிஷ் அரசாங்கம் அலறியது. பயந்து நடுங்கியது. இனி இந்தியாவில் இருக்க முடியாது என்று மிரண்டு ஒடியது. அதுவரை அடிமைகளாக பார்த்த தமிழர்களை அச்சத்துடன் பார்த்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உணர்ந்தது. 
வட்டமேஜை மாநாடு,வேண்டுகோள், தீர்மானம், கடிதம் என்றெல்லாம் கெஞ்சிக் கேட்டவர்கள் தேவைப்பட்டால் துப்பாக்கி ஏந்தவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து உதிரம் உறைந்து போனார்கள், உறக்கம் கலைந்து போனார்கள்.


இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 102 வருடமாகிறது. நாளை காலை உனக்கான மரணதண்டனை நிகழப்போகிறது ஏதாவது ஆசை உண்டா? என பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கிடம் சிறை அதிகாரி கேட்டபோது, கையில் இருந்த கனமான புத்தகத்தை காட்டி 'ஆசை என்று இல்லை விருப்பம் என்று ஒன்று உள்ளது, அது இந்த புத்தகத்தை விடிவதற்குள் அதாவது என் கதை முடிவதற்குள் படித்து முடித்து விட வேண்டும் என்பதுதான். பார்ப்போம் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டொரு பக்கங்களை முடித்துவிடுவேன் ஆகவே 'எனக்கான' வேலைகள் உங்களுக்கு நிறைய இருக்கும் அதை பாருங்கள் நான் என் வேலையை பார்க்கிறேன்' என உயிரை துச்சமாக மதித்த பகத்சிங் போல, தென்நாட்டின் சிங்கம் வாஞ்சிநாதன் இன்னும் சில நிமிடத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறோம் என்பது தெரிந்தும் எந்தவித பதட்டமும், பயமும் இல்லாமல் நாட்டிற்காக, தலைவர்களுக்காக தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் திடமனதுடன் இருந்த தீரர்.இப்படிப்பட்ட சம்பவம் நடந்த மணியாச்சி ரயில் நிலையம் என்பது எவ்வளவு முக்கியமான இடம். இந்த தலைமுறைக்கு மட்டும் இல்லை இனி வரும் தலைமுறைகளுக்கும் சுதந்திர வரலாறை சொல்லும் இடமல்லவா அது.நினைத்த போதே மயிர்க்கால்களில் சுதந்திர வேட்கையையும், தோளில் தினவையும், மூச்சில் உஷ்ணத்தையும், நாடி நரம்புகளில் வீரத்தையும் ஏற்படுத்தும் நினைவாலயம் அல்லவா அது.


ஆனால் நிஜத்தில் மணியாச்சி ரயில் நிலையம் பெயரில் மட்டுமே வாஞ்சியை கொண்டுள்ளதே தவிர மற்றபடி வாஞ்சியை நினைவுகூறும் எந்த தடயமும் அங்கு இல்லை. டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்றுதான் டிக்கெட் கொடுக்கிறார்களே தவிர வாஞ்சி மணியாச்சி என்று டிக்கெட் வருவது இல்லை.வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த கழிப்பறை கூட தரைமட்டமாக இடித்து தள்ளப்பட்டுவிட்டது.ஆனாலும் வீரன் வாஞ்சிநாதனின் தியாகத்தை போற்றி பாராட்டும் விதத்தில் தியாகிகளும், தேசபக்தர்களும், வாஞ்சியின் அபிமானிகளும் அவரது நினைவு நாளான ஜூன் 17ம்தேதி அவர் இறந்த வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வீரவணக்கம் செலுத்துவார்கள்.

அதற்காக கடந்த வருடம் ரயில் நிலையத்தில் கூடியபோது அங்கு இருந்த ரயில்வே அதிகாரி அதற்கெல்லாம் ரயில் நிலையத்தில் இடம் இல்லை எனக்கு அதிகாரமும் இல்லை, வேண்டுமானால் நீங்கள் அனைவரும் பிளாட்பராம் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் கழிப்பறை இருந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றுவிட்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
கடைசியில் கடந்த வருடம் அப்படித்தான் நடந்தது.சுதந்திரபோராட்ட நாயகனுக்கு,பகத்சிங் போன்ற வடமாநில தியாக செல்வங்களுக்கு நிகரானவருக்கு, தமிழர்களின் மானம்காத்த மாவீரன் வாஞ்சிநாதனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதானா? நாம் செலுத்தும் வீரவணக்கம் என்பது இதுதானா? 
இதோ இந்த வருடமாவது வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒரு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் எஞ்சியிருக்கும் தியாகிகளும், தேசத்தின் மீதும் வாஞ்சிநாதனின் மீதும் பாசம் கொண்டவர்களும் வருகின்ற 17ம் தேதி செவ்வாய்கிழமை வாஞ்சிநாதனுக்கு 103வது நினைவு தினத்தில் வீரவணக்கம் செலுத்த கூடவிருக்கிறார்கள், இனியாவது ஏதாவது நடக்கும் என்று நம்பிக்கையுடன்..

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்

மரத்தை நேசிக்கனும்ன்னு சொன்னதை தப்பா புரிசுகிட்டாங்க போல!


Snake Bites and Dies itself


நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


07 June, 2014

ஏமாற்றம்!


அலெக்ஸாண்டரின் கடைசி ஆசை!

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,"என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார். அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர். முதல் விருப்பமாக,

"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
 
இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
 
மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்." வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள். அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால்எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது. மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்..! மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர், சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.. ஆம்.  நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம். நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான். சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம். நம் கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.
அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார். "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ, என்று..உண்மைதானே.?

06 June, 2014

நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


இயற்க்கையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும்...


பார்த்ததில் பிடித்தது!


முண்டேவை கூட அடையாளம் தெரியாத முண்டங்கள்!சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.


இந்த போஸ்டர் தமிழ் நாட்டில் ஒட்ட பட்டுள்ளது ,மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே அவர்களுக்கு நினைவுஅஞ்ச்லி காக வைக்கபட்டது அனால் போஸ்டரில் உள்ள படம் மராத்திய மாநில தற்போதைய முதல்வர் திரு பிரிதிவிராஜ் சாவான் அவர்களின் படம் , இந்த தவறை உடனே திருத்த வேண்டும் ,போஸ்டரை அகற்ற வேண்டும் , இந்த போஸ்டர் செய்தி தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்களை வெருப்புயெற்ற வைக்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது

தாழ்வு மனப்பான்மையை போக்க!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...