|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 November, 2011

அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!

அரசியல்வாதிகள் மட்டும்தான் அரசியல் செய்யவேண்டும் என்பதில்லை பாலிடிக்ஸ் என்பது எங்கும் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் மாமனார், மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு செய்யப்படும் பாலிடிக்ஸ் தொடங்கி, நாத்தனார், ஓர்படி என அனைவரின் பாலிடிக்ஸ்சையும் சமாளித்து நிமிர்வதற்குள் அலுவலகத்தில் பாலிடிக்ஸ் ஆரம்பமாகி விடுகிறது.அலுவலகத்தில் அனைத்து தரப்பு பணியாளர்களும் ஏதாவது ஒருவிதத்தில் அரசியலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏனெனில் அலுவலக அரசியல் என்பது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது. இருப்பினும் அந்த அரசியலை நாசூக்காக கையாண்டால் எங்கும், எதிலும் வெற்றிதான். இதோ நிர்வாகவியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகள்:

இடம் பொருள் ஏவல்: நம்மிடம் இருந்தே வார்த்தைகளை பெற்று அதை நம்மை நோக்கி திருப்பிவிடும் அஸ்திரத்தை கற்றுக்கொண்ட எத்தர்கள் அதிகம் உண்டு. எனவே யாரைப் பற்றி எங்கு எப்போது பேசுகிறோம் என்பது முக்கியம். வீடோ, அலுவலகமோ, “யாகாவராயினும் நாகாக்க” இல்லையெனில் நாம் உபயோகித்த வார்த்தை நமக்கு எதிராக திரும்பும் ஜாக்கிரதை.

வேண்டாம் விவாதம்: உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்வதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறீகள் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

சிறப்பான செயல்பாடு அவசியம்: அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே. உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.

அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது. ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தோமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.

நிழல் விசயங்களில் கவனம்"  அலுவலக அரசியலில் மிக சவாலான விசயம் என்னவெனில் நம்மைப் பற்றி புகழ்ந்து கொண்டே நமக்கு எதிராக செயல்படுபவர்கள் அதிகம் இருப்பார்கள். இதுதான் பெரும் சவாலான விசயம். எனவே உங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்பொழுதான் அலுவலகத்தில் நமக்கெதிராக செயல்படும் நிழல் உலக 'தாதா'க்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.

நேருக்கு நேராக சந்தியுங்கள்: எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும். என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம். உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்தபட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக் கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.

நெருக்கடியில் உதவுங்கள் ; பிற துறையை சார்ந்தவர்கள் ஒரு வேலையை முடிக்க முடியாமல் திணறும் போது நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகாமல் உதவி செய்வது அவசியம். வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும்படி இது உதவும். சக அலுவலக நண்பர் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி : வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் உறுதியோடு இருக்க வேண்டும். உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சினையின் சிக்கலை தீர்க்க வேண்டும்.

புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள். உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள். எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம் எனவே குறைவாக பேசி அதிகம் கேட்கவேண்டும். எதையும், கேட்கவோ, சொல்லவோ மிகப் பொறுமையான தருணத்திற்காக காத்திருங்கள். அனைவரையும் சமமாக கருதுங்கள்

எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம். எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா? எனவே எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது. ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும். உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள். அப்புறம் என்ன நீங்கள் தான் எதையும் சமாளிக்கும் சமாளிப்பு திலகம்.

அவசரம் தேவையில்லை...!

தாம்பத்திய உறவின் கிளைமேக்ஸ் எனப்படும் உச்சநிலைதான். இது அனைவருக்கும் நேருவதில்லை. உச்சநிலை என்பது எந்த நிமிடத்தில் எவ்வாறு ஏற்படுகிறது என்பது தெரியாமலேயே இன்னும் பல தம்பதியர் தாம்பத்ய உறவில் ஈடுபடுகின்றனர்.

மனைவியரின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பிறகு தங்களுக்கு உச்சநிலை எட்டியதுடன் உறங்கிப்போகும் கணவர்களே அதிகம். இருவரும் ஏக காலத்தில் உச்சத்தை எட்டும் நிலையே முழுஇன்பம் என்பதை பல ஆண்கள் அறியாமலிருக்கிறார்கள். இதனால் உணர்ச்சிகளால் கிளறப்பட்டு உச்சநிலை அடையாத பெண்கள் பாலியல் வேட்கையை தணிக்க முடியாமல் ஏமாற்றத்திற்கும், தவிப்பிற்கும் ஆளாகிறார்கள். அதை வெளிப்படையாகக் காட்டமுடியாமல் வெறுப்புக்கு ஆளாவதால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், மணமுறிவுகள், பிரிவுகள், முறை தவறிய உறவுகள் என்று பல வழிகளில் இது வெளிப்பட ஆரம்பிக்கிறது. எனவே உச்சநிலை அடைவதற்கான வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர் பிரபல செக்ஸாலஜிஸ்ட்கள்.

அவசரம் தேவையில்லை : உலகளவில் பாலுறவு தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் பெரும்பான்மையினர் செக்சில் முழு திருப்தியடையவில்லை என கூறியிருந்தனர். திருமணமாகி பத்து ஆண்டுகளான பெண்களும் இதில் அடக்கம். இருவரும் ஒருசேர தொடங்கும் உறவில் ஆணுக்கு எளிதில் திருப்தி ஏற்பட்டு விடும். பெண்ணிற்கு தேவையான இன்பத்தை ஆண் முழுமையாக தரவேண்டுமெனில் மென்மையாக மெதுவாக தொடங்கவேண்டும். அவசரப்படாமல் உறவைத் தொடங்கினால் பெண்கள் உச்சபட்ச இன்பத்தை அடைவார்கள்.

நோ டென்சன் ரிலாக்ஸ்: படுக்கையறையில் டென்சன் ஆகாது. கோட்டையை பிடிக்கப்போவது போல் அவசரப்படாமல் இசைக்கு ஸ்வரம் சேர்க்கும் கலைஞன் போல உறவை ரிலாக்ஸ்சாக தொடங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு நரம்பும் அந்த உன்னத தருணத்தை அடையும் என்பது அவர்களின் கருத்து. தம்பதியரின் உடற்கூறு அமைப்பை பற்றி நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எங்கு தொட்டால் உணர்ச்சி மேலிடுகிறது என்பதை ஒவ்வொரும் தமது துணைக்கு புரிய வைத்து உறவு கொண்டால் உச்சநிலை அடையமுடியும் என்கின்றனர்.

ஈகோ தேவையில்லை: மனதும், உடலும் அமைதியான நிலையிலேயே உறவை தொடங்கவேண்டும். ஏதோ அவசரத்திற்கு உடல் தேவைக்கு என உறவு வைத்துக்கொண்டால் ஆர்கசம் அடைய முடியாது. சக்தி முழுவதையும் தயார்படுத்தி மனதளவிலும் உடலளவிலும் உறவுக்கு தயாரானால் மட்டுமே உச்சகட்ட இன்பத்தை அடையமுடியும். உறவில் ஈடுபடும் தம்பதியருக்கிடையே ஈகோ கூடாது. யாருக்கு என்ன தேவையோ அதை கேட்டுபெறுவதும். அதேபோல் துணைக்கு அதுபோல இன்பத்தை அளிப்பதும் அவசியம்.

உறவில் மெருகேற்றுங்கள்: ஒவ்வொருநாளும் புதுமையான முறையில் தொடங்கினால் ரெஸ்பான்ஸ் அதிகம் இருக்கும். இடத்தையும், செயல்பாட்டையும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்வது ஆர்கசத்தை அடையும் எளிய வழியாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உறவில் உச்சநிலை என்பது துரித உணவு போல உடனடியாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உறவில் அது ஒரு முக்கிய கட்டம். சிற்பியின் கையால் செதுக்க செதுக்க கிடைக்கும் சிற்பம் போல உறவில் மெருகேறினால்தான் உச்சத்தை அடையமுடியும். பாலுறவில் பெண்ணுறுப்பின் மேற்புறத்திலுள்ள கிளிட்டோரிஸ் தூண்டல் என்பது முக்கியப் பங்காற்றுகிறது. பெண்ணை முழுஇன்பப் பாதைக்கு கொண்டு செல்லும் முக்கிய நடவடிக்கை இது. கிளிட்டோரிஸ் என்பது உணர்ச்சி நரம்புகளின் முடிச்சு மையம். இதை சரியானபடித் தூண்டினால் காமனை வெல்லலாம்.

சி எஸ் அமுதன் இயக்கும் 'ரெண்டாவது படம்!

தமிழ்ப் படம் இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கும் அடுத்த படத்துக்கு 'ரெண்டாவது படம்' என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்த படங்களைக் கிண்டல் அடித்து வெளிவந்தது 'தமிழ் படம்'. மிர்ச்சி சிவா, திஷா பாண்டே நடிக்க, அமுதன் இயக்கி இருந்தார். 'க்ளவுட் நைன்' நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினி, கமல், பாக்யராஜா என ஒருவரை விடாமல் கிண்டலடித்த இந்தப் படம் ஓஹோவென ஓடியது.

இந்த நிலையில் இவரது இரண்டாவது படத்துக்கு தலவலி என்று பெயரிட்டிருப்பதாகவும், இதில் அஜீத், விஜய்யை கிண்டலடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது தனது இரண்டாவது படத்துக்கு 'ரெண்டாவது படம்' என்றே பெயரிட்டுள்ளனர்.

இதில் விமல், அரவிந்த், ரிச்சர்ட் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தியை படத்தின் பிஆர்ஓ மவுனம் ரவி இன்று வெளியிட்டுள்ளார். ஸ்கிரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கண்ணன் இசையமைக்க, விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளிவரும் இந்தப் படம் விஞ்ஞானமும் சரித்திரமும் இணைந்த காதல் படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அமர்த்தியா சென் சாதனையை சமன் செய்த மாணவி!

மஹிமா கன்னா என்ற கொல்கத்தா மாணவி பொருளியல் துறையில் எம்பில் ஆய்வுப் படிப்பில் அமர்தியா சென்னின் சாதனையை சமன் செய்தார். இத் துறையில் மிக உயர்ந்த ஸ்டீவன்சன் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் மஹிமா கன்னா (வயது 23). பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இதை முடித்த உடன், எம்.பில். ஆய்வு படிப்பை பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தார். 2010-11-ம் கல்வி ஆண்டு எம்.பில். (பொருளியல்) ஆய்வு படிப்பு மாணவ- மாணவிகளில் உயர் ரேங்கில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, இப்பல்கலைக்கழகத்தின் கெளரவ பரிசான ஸ்டீவன்சன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை வாங்கும் மூன்றாவது இந்தியர் மஹிமா கன்னா.

நோபல் பரிசு பெற்றவரும் இந்திய பொருளாதார மேதையான அமர்தியா சென் 1956-ல் இவ்விருதை பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியர் இவர். அடுத்து 1967-ல் தாஸ்குப்தா என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியருக்கு இந்த விருது கிடைத்தது. இப்போது மஹிமா கன்னா இந்த விருது வென்றுள்ளார். இந்த 3 பேரில் அமர்தியா சென்னும், மஹிமா கன்னாவும், பொருளாதார பாடத்தில் ஒரே பிரிவை எடுத்து ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமர்தியா சென்னின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார். மஹிமா தற்போது மும்பையில் வர்த்தக கணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தியாவிலேயே தொடர்ந்து பணிபுரிவேன் வேலைக்காக வெளி நாடு செல்ல மாட்டேன் என்று அவர் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

கேரளாவையும், இலங்கையையும் கண்டிக்காத கலாம் மீது வைகோ மறைமுக தாக்கு!

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்காக பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடும் சில பெரியவர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவையும், தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கையையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக தாக்கியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது சமீபத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அப்துல் கலாமை மறைமுகமாக அவர் விமர்சித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று விஞ்ஞானத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு சில பெரியவர்கள் பக்கம்பக்கமாக அறிக்கை கொடுத்து வருகிறார்கள்.

இதற்காக கரிகாலன் கட்டிய கல்லணை பாதுகாப்பாகத்தானே இருக்கிறது என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்படி அணு மின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பெரிய மனிதர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தை கண்டிப்பதில்லை. தமிழகத்துக்காக குரல் கொடுப்பதில்லை. இலங்கை கடற்படையினரால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்தும் அந்த பெரியவர்கள் கருத்து தெரிவிப்பதில்லை தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து மின்சாரம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார் வைகோ.

இன்று தேசிய கல்வி தினம்!


இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள்தான் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது. தனக்கென சிறப்பு வரலாற்றைக் கொண்டவர் மெளலான அபுல்கலாம் ஆசாத். மதரீதியாக பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து நின்று, சவாலான காலகட்டத்தில் இந்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று, நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணிபுரிந்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவுசெய்ய உறுதிபூண்ட இவர், அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில்நுட்ப கழகத்தை(IIT) அமைத்ததும், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) என்ற அமைப்பிற்கு அடித்தளமிட்டதும் இவரது பெரும் சாதனைகளில் சில. இவரது சாதனைகளை நினைவுகூர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், இவரது பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதி, தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என்று அபுல்கலாம் ஆசாத் கண்ட கனவு இன்று நிறைவேறி விட்டதா? என்றால், இல்லை, என்றே சொல்லலாம். அடிப்படை கல்வியை ஒவ்வொரு குடிமகனும் பெற வேண்டும் என்ற நிலைக்கே நாம் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. "அடிப்படை கல்வி உரிமைச் சட்டம்" என்றெல்லாம் பலவித சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது.
பாரபட்சமற்ற கல்விக்கு "சமச்சீர் கல்வி" என்ற திட்டமெல்லாம் கொண்டுவர வேண்டியுள்ளது. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளின் தரம் சொல்ல முடியாத அளவில் மிகவும் மோசமாக உள்ளது. அரசு நியமிக்கும் ஆசிரியர்களின் தரமோ, அதைவிட மோசமாக உள்ளது. கல்வியில் வியாபாரிகள் புகுந்து, பெரும் கொள்ளையடிக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் லாபம் கொழிக்கும் தொழில்களில் ஒன்றாக கல்வித் தொழில் பரிமாணம் பெற்றுள்ளது.தேசிய கல்வி நாள்" என்று ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது என்றே பலருக்கும் தெரிவதில்லை. எத்தனை ஆசிரியர்களுக்கு இந்த தினம் பற்றி தெரிந்திருக்கிறது என்று கேட்டால், நிலைமை மோசமாகிவிடும். அந்தளவில்தான் நமது சமூகம் இருக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வு, வியாபார நோக்கம், அதிகார வர்க்கங்களின் அலட்சியம், மக்களின் தெளிவின்மை, வறுமை, கிராமப்புற பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், கல்வி வளர்ச்சியில் இந்தியாவை வளர்ச்சியடையாத ஒரு நாடாகவே வைத்துள்ளன. "இந்தியா கல்வி வல்லரசாக உருவாகி வருகிறது" என்ற போலியான புள்ளி விபரங்களைக் கொடுத்து, அதன்மூலம் பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொள்வது அரசுகளின் வாடிக்கையாகிவிட்டது. அவர்கள் சொல்லும் வளர்ச்சி, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கானதே தவிர, ஒட்டுமொத்த மக்களுக்கானதல்ல. எனவே, கல்வியில் ஒட்டுமொத்த இந்திய சமூகமும் முன்னேற, நம்மிடையே, குறிப்பாக மாணவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வு வேண்டும். தேசிய கல்வி தினமான இன்று, அதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டியது நம் அனைவரின் கடமை!

47 ரன்களுக்கு சுருண்டது ஆஸி. நான்காவது குறைந்தபட்சம்!


கேப்டவுன் டெஸ்டில், தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் சிதறிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 47 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வேகத்தில் தடுமாறிய தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 96 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இதன்மூலம் முதல் டெஸ்டில், வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் மழை பொழிந்தனர். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.  நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. சதம் கடந்த மைக்கேல் கிளார்க் (151) நம்பிக்கை அளித்தார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. 


வாட்சன் மிரட்டல்: பின், முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, வாட்சன் வேகத்தில் தடுமாறியது. ருடால்ப் (18), கேப்டன் ஸ்மித் (37), ஆம்லா (3), காலிஸ் (0), பிரின்ஸ் (0), டிவிலியர்ஸ் (8), பவுச்சர் (4) உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 96 ரன்களுக்கு சுருண்டது. ஸ்டைன் (9) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் மிரட்டிய வாட்சன் 5, ரியான் ஹாரிஸ் 4 விக்கெட் கைப்பற்றினர்.


சரியான பதிலடி: பின், 188 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, தென் ஆப்ரிக்கா சரியான பதிலடி கொடுத்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க்(2), பாண்டிங்(0), மைக்கேல் ஹசி(0) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். நாதன் லியான் (14), பீட்டர் சிடில் (12*) போராடினர். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 47 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர் 5, மார்னே மார்கல் 3, ஸ்டைன் 2 விக்கெட் வீழ்த்தினர். பின், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ருடால்ப் (14) ஏமாற்றினார். இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து, 155 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஸ்மித் (36), ஆம்லா (29) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் பீட்டர் சிடில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
நான்காவது குறைந்தபட்சம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 47 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் அரங்கில் தனது நான்காவது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக மூன்று முறை இங்கிலாந்துக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது.
ஆஸ்திரேலியாவின் "டாப்-5' மோசமான ஸ்கோர்:
எதிரணி    ஸ்கோர்    ஆண்டு    இடம்
இங்கிலாந்து    36    1902    பர்மிங்ஹாம்
இங்கிலாந்து    42    1888    சிட்னி
இங்கிலாந்து    44    1896    ஓவல்
தென் ஆப்ரிக்கா    47    2011    கேப்டவுன்
இங்கிலாந்து    53    1896    லார்ட்ஸ்
மோசமான ஸ்கோர்
கேப்டவுன் டெஸ்டில் 47 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 1950ல் டர்பனில் நடந்த டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 75 ரன்களுக்கு சுருண்டது.
* முதல் இன்னிங்சில் 96 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏழாவது மோசமான ஸ்கோரை பெற்றது. முன்னதாக தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 (1932), 45 (1932), 80 (1910), 85 (1902), 85 (1902), 95 (1912) ரன்களில் "ஆல்-அவுட்' ஆனது.

ஊழல் பற்றி பேச தகுதி என்ன ஹசாரே?


தேர்தலில் போட்டியிடுவோர் மட்டும் தான், ஊழலைப் பற்றி பேச வேண்டுமா,'' என, காந்தியவாதி அன்னா ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேயை, மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், நேற்று முன்தினம் கடுமையாக சாடியிருந்தார். "அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் அரசியலில் சேர விரும்பினால் சேரலாம். அரசியலில் சேராமல் ஒதுங்கி இருந்து கொண்டு, ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ செயல்படுவதை, அவர்கள் கைவிட வேண்டும். தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா, இல்லை எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவிக்கப் போகிறீர்களா என்பதை வெளிப்படையாக கூறுங்கள்' என, சவான் கேட்டிருந்தார். இதற்கு, அன்னா ஹசாரே நேற்று அளித்த பதிலில், "தேர்தலில் போட்டியிட்டால் தான், ஊழல் பற்றி பேச வேண்டுமா? அப்படியானால், நாட்டில் உள்ள, 120 கோடி மக்களும், தேர்தலில் போட்டியிட்ட பின்னர் தான், ஊழலை விமர்சிக்க முடியுமா? "அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடத் தான் செய்கின்றனர். ஆனால், அவர்களால் ஊழலை ஒழிக்க முடியவில்லையே. கடந்த, 62 ஆண்டுகளாக, ஊழலை ஒழிக்க, அரசியல்வாதிகளால் சட்டம் கொண்டு வர முடியவில்லையே' என, கூறியுள்ளார்.

அமைதியாக இருங்கள்: மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், "லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சட்ட நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அரசு ஊழியர்கள் அனைவரும், மசோதா வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். "நீதித்துறை மற்றும் மீடியாக்களுக்கு விலக்கு அளிக்க, திட்டமிடப்பட்டுள்ளது. லோக்பால் மசோதா குறித்து குரல் எழுப்பி வருவோர், மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்' என்றார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறுகையில், "ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு தேவை என, அதிகாரப்பூர்வமாக யாரும் எங்களிடம் கேட்கவில்லை. எங்களுக்கும், அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும், ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளவர்களுக்கு, எந்த தடையும் நாங்கள் விதிக்கவில்லை' என்றார்.

கனிமொழிக்காக காஞ்சி கோவிலில் விசேஷ வழிபாடு!


ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு விசாரணை இன்று துவங்க உள்ள நிலையில், கனிமொழி விரைவில் விடுதலை பெற வேண்டி, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், நேற்று விசேஷ வழிபாடு நடத்தப்பட்டது. கனிமொழி சார்பில், தி.மு.க., எம்.பி., வசந்தி ஸ்டான்லி முன்னின்று வழிபாடு நடத்தினர்.

வழக்கில் இருந்து விமோசனம் தரும்...: காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சாலையிலிருந்து 6 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மறைந்த முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து ஐயமும், கருத்து வேறுபாடும் எழுந்தன. இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்த்துக் கொள்ளவும், அவற்றின் உண்மைப் பொருளை அறியவும், காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தார். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், "வழக்கறுத்தீஸ்வரர்' என காலம் காலமாக அழைக்கப்படுகிறார். "லோக்கல்' வழக்கு முதல் "ஸ்பெக்ட்ரம்' வரை:தற்போது, கோர்ட் வழக்குகளில் சிக்கித் தவிப்போர், இக்கோவிலில் வந்து வழிபட்டால், வழக்கிலிருந்து விடுதலை பெறுவதாக ஐதீகம். சமீப காலமாக வழக்குகளில் சிக்குவோர், இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது அதிகரித்து வருகிறது. அதிக அளவில் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் வந்து செல்கின்றனர். நேற்று வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது. அதைக் காண, பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இறைவனை தரிசிப்பதற்காக, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

மாலை 6.20 மணிக்கு, தி.மு.க., கொடி கட்டிய, வெள்ளை நிற டாடா சபாரி கார் (பதிவு எண்: டி.என்.10. ஏ.ஏ-5) கோவில் முன் வந்து நின்றது. அதிலிருந்து தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வசந்தி ஸ்டான்லி இறங்கினார். அவருடன் காங்கிரஸ், காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலர் விஜயகுமார் மற்றும் இருவர் வந்தனர். அவர்களை காங்கிரஸ் பொருளாளர் ஜோஷி வரவேற்றார். அனைவரும் கோவில் உள்ளே சென்றனர். வழியில் வசந்தி ஸ்டான்லியிடம், விஜயகுமார் வேட்டி எடுத்து வைத்துள்ளீர்களா எனக் கேட்டார். அவர் எடுத்து வைத்துவிட்டேன் என்றார். அனைவரும் பக்தர்கள் வெளியே வரும் பகுதி வழியாக, கோவில் உள்ளே நுழைந்தனர். மூலஸ்தானம் முன் சென்றதும், அர்ச்சகரிடம் வசந்தி ஸ்டான்லி, தான் கொண்டு வந்திருந்த, மஞ்சள் நிற பாலித்தீன் கவரைக் கொடுத்தார். அதில் வேட்டி மற்றும் அர்ச்சனைப் பொருட்கள் இருந்தன. அர்ச்சகர் அந்த பொருட்களுடன் கருவறைக்குள் சென்றார்.

சுவாமியைக் கண்ட வசந்தி ஸ்டான்லி, பக்தி பரவசத்துடன் கண் மூடி நின்றார். வரிசையில் நின்ற பக்தர்கள், சுவாமியை பார்க்க முடியவில்லை எனக் கூறியதால், வசந்தி ஸ்டான்லியை கீழே உட்காரும்படி அர்ச்சகர் கூறினார். மாலை 6.32 மணிக்கு, மின் தடை ஏற்பட்டது. அப்போது, கனிமொழி பேரில் அர்ச்சனை நடந்ததாகத் தெரிகிறது. அர்ச்சகர் அர்ச்சனையை முடித்துவிட்டு வந்து, அவருக்கு மாலை அணிவித்தார். விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்கினார். அவர் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டார். மற்றொரு அர்ச்சகர், அவர் கொண்டு வந்த பையை திரும்பக் கொண்டு வந்து கொடுத்தார். அவர் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அர்ச்சகர் மீண்டும் பையை, சுவாமியிடம் கொண்டு சென்றார். இரண்டு நிமிடத்தில் மின்சாரம் வந்தது. வசந்தி ஸ்டான்லி தனது வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பினார். கொடி மரம் முன் வணங்கிவிட்டு, மாலை 6.36 மணிக்கு, தனது காரில் புறப்பட்டு சென்றார். கனிமொழிக்காக ஏற்கனவே மொட்டை போட்டுள்ள வசந்தி ஸ்டான்லி, சிறையிலிருக்கும் கனிமொழி விரைவில் விடுதலையாகி வெளியில் வரவேண்டும் என்பதற்காக, வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.

முதல்வர் ஜெ., இலங்கைக்கு வரட்டும்!


மாலத்தீவில் சார்க் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஜெ., இலங்கைக்கு வரட்டும் அங்கு என்ன நடக்கிறது என்ற பணிகளை அவர் பார்க்கட்டும் அவரை வரவேற்கிறோம் என்றார். மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில்; புலிகள் மற்றும் இவரது ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மேலும் ஒரு போருக்கு தயாராக இருப்பதாகவும் இது குறித்து எங்களிடம் சரண் அடைந்துள்ள புலிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. புலிகளின் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. புலிகள் மீண்டும் உயிர்ப்பித்து விடுவார்‌களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் கண்காணித்து தான் வருகிறோம். தமிழர்கள் குடியமர்த்துதல் தொடர்பாக இந்தியா மற்றும் உலக நாடுகள் வந்து பார்த்து கொள்ளலாம். ஜெ., வை வரவேற்பீர்களா என்று கேட்டதற்கு தாரளமாக அவர் வரட்டும். அவரை வரவேற்கிறோம். அங்கு என்ன நடக்கிறது என்பதை அவரை நேரில் தெரிந்து கொள்ளட்டும் என்றார். இலங்கை சீனா உறவின் காரணமாக இந்திய உறவில் பாதிப்பு வருமா என்று கேட்டபோது இந்தியா எங்களின் தொப்புள் கொடி உறவு என்றார். இந்தியா எங்களுடைய உறவினர், சீனா எங்களுடைய நண்பர் இவ்வாறு கூறி முடித்து கொண்டார்.

இதே நாள்


  • போலந்து விடுதலை தினம்(1918)
  •  மாலத்தீவு குடியரசு தினம்(1968)
  •  வாஷிங்டன், அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
  •  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்(1930)
  •  இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த தினம்(1918)

2 ஜி வழக்கு விசாரணை துவங்கியது...!


2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. நாடே எதிர்பார்க்கும் இந்த வழக்கில் 150 பெரிய புள்ளிகள் சாட்சியம் அளிக்கவுள்ளனர். இதற்கென காலை 10 மணிக்கு குற்றவாளிகளான ராஜா, கனிமொழி, மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் , கார்ப்ரேட் நிறுவன நிர்வாகிகள் உள்பட 12 பேர் ஆஜர் படுத்தப்பட்டனர். ரிலையன்ஸ் அதிகாரி ஆனந்தசுப்பிரமணியன் முதல் கட்டமாக விசாரிக்கப்பட்டார். 

ராஜா தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி: மாஜி அமைச்சர் ராஜா, குறுக்கு விசாரணை நடத்த கூடாது என தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. 2 ஜி விவகாரம் தொடர்பான முழு விசாரணை கைதிகளிடம் சி.பி.ஐ., விசாரணை முடியும் வரை விசாரிக்க கூடாது என்ற கோரிக்கையையும் கோர்ட் நிராகரித்து விட்டது. இவரது மனுவுக்கு சில குற்றவாளிகளின் வக்கீல்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என்றனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவன (அனில் அம்பானி குரூப்) அதிகாரிகள் கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் உள்ளிட்ட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும், நம்பிக்கை மோசடி, சதி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்த வழக்கில்,குற்றப் பத்திரிகை தாக்கல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் பதிவு போன்றவை, சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடந்தன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, கடந்த மாதம் 22ம் தேதி, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டு, கைதாகி சிறையில் இருப்பவர்கள் ஜாமின் பெற முடியும் என்றும், வழக்கு விசாரணை துவங்கும் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நிராகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து, டில்லி ஐகோர்ட்டில் இவர்கள் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேநேரத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விட்டதால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, இன்று முதல் துவங்கவுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, 150 முக்கிய சாட்சிகளின் பெயர்களை, கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும், 28 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இவர்களில் 11 பேர், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள். சி.பி.ஐ., தாக்கல்செய்த சாட்சிகள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் சேதுராமன், அனந்த் சுப்ரமணியம், ஆஷிஸ் கர்யேகார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சாட்சிகளிடம் முதலில் விசாரணை நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டும் கண்காணித்துவருகிறது. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், வரும் நாட்களில் சாட்சியங்கள் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றப்பத்திரிகை: இதற்கிடையே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெறுவதற்காக, விதிமுறைகளை மீறியதாக எஸ்ஸார் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் மீது, சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்திலும் மண்...சிக்கலில் தி.மு.க!


கனிமொழிக்கு ஜாமின் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அவரை வரவேற்க டில்லியிலும், சென்னையிலும் தி.மு.க.,வினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால், அனைத்திலும் மண்... ஜாமின் கிடைக்கவில்லை. தற்போது, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார் கனிமொழி. அதிர்ச்சியில் உறைந்துள்ள கருணாநிதி, என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார். கனிமொழியின் ஜாமினை சி.பி.ஐ., எதிர்க்கவில்லை. உபயம் காங்கிரஸ். ஆனாலும், நீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக முடியுமா என்று தி.மு.க.,வில் கேள்விகள் எழுந்தாலும், எதைச் சொல்லி வெளியே வருவது? என்ற கேள்வி எழுந்துள்ளது."கனிமொழி விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கு, காங்கிரசை குறை சொன்னால் மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ராஜிவ் கொலையாளிகள் அல்லது கூடங்குளம் விவகாரத்தில் வெளியேறினாலாவது மக்கள் ஒத்துக் கொள்வார்கள். அப்படியே வெளியே வந்தால், மத்திய அரசு கவிழும். தேர்தல் வரும். அப்போது, தனியே தேர்தலில் போட்டியிட வேண்டியிருக்கும். எங்கள் நிலை என்னாகும். காங்கிரஸ் தோற்று, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், பழி எங்கள் மீது தான் விழும். நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் தான் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது என்று கூறுவார்கள்' என்கின்றனர் சீனியர் தி.மு.க.,வினர்.இப்படி சிக்கலாக உள்ளதால், தலைவர் தவித்துக் கொண்டிருக்கிறார் என்கிறது டில்லி தி.மு.க., வட்டாரம். தி.மு.க., குடும்பத்தினரிடமிருந்து போன் வந்தாலே, அது, கனிமொழி விவகாரமாகத்தான் இருக்கும் என்று போனை எடுக்கவே பயந்து கொண்டிருந்த தி.மு.க., மத்திய அமைச்சர்கள், ஜாமின் கிடைத்தால் பிரச்னை முடியும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், முடியவில்லை. இனிமேல் எங்கள் நிலை அதோ கதி தான் என்று நொந்து போயுள்ளனராம் தி.மு.க., அமைச்சர்கள்.

காங்கிரஸ் கட்சித் தலைவராகிறார் ராகுல்? சோனியா உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டில் இருந்தபோது, மத்திய அரசுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டன. "2ஜி' விவகாரத்தில் பிரணாப் - சிதம்பரம் தகராறு... பலவித ஆவணங்கள் வெளியாகின. இந்த பிரச்னைகள் தொடர்ந்து வருவதால், சோனியா, பல அதிரடி முடிவுகளை, விரைவில் எடுக்க உள்ளார் என்று கட்சி வட்டாரங்களில் கூறப்படுகின்றன. சமீபத்தில், காங்கிரசின் கூட்டணிக் கட்சி முக்கிய பிரமுகர்களை சோனியா சந்தித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பிரபுல் படேல், திரிணமுல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி ஆகியோர் சோனியாவை சந்தித்துள்ளனர். பிரதமரை மாற்றுவது குறித்து இவர்களோடு பேசியுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றன. அப்படியே பிரதமர் மாறினால், யார் பிரதமராக வருவார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால், பிரதமரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளிநாட்டு பயணத்தில் உள்ளார். இதோடு ராகுலை காங்., கட்சியின் தலைவர் பதவியில் அமர்த்த சோனியா திட்டமிட்டுள்ளார். தலைவர் பதவியிலிருந்து சோனியா விலகி, ராகுலை அங்கு அமர வைக்க, காங்கிரசின் காரியக் கமிட்டி கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் செய்திகள் அடிபடுகின்றன.

அன்னாவின் உண்ணாவிரதத்தை தடுக்க பலே முயற்சி; லோக்பால் மசோதா, பார்லிமென்டில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவில்லையென்றால், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் மாதம் 22ம் தேதி, பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டால், டில்லியில் பிரச்னை ஏற்படும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அதோடு அனைத்து மீடியாக்களும், அன்னா ஹசாரேவின் பின்னாலேயே போகும். இதையெல்லாம் தடுக்க மத்திய அரசு, திரை மறைவு வேலைகளை மேற்கொண்டு வருகிறது. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் டில்லியில் இருக்கக் கூடாது... வேறெங்காவது நடக்கட்டும் என்று மத்திய அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அமைச்சர், இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு உதவி செய்வதற்காக திக் விஜய் சிங், தினத்திற்கு ஒன்றாக, அன்னா ஹசாரேவிற்கு எதிராக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.


இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள்!


 மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனர் மூலம் இளநிலை உதவியாளர், உதவி சேமிப்பு கிடங்கு மேலாளர் பணியிடங்களுக்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டன. இளம் அறிவியலில் வேதியியல், தாவரவியல், விலங்கியலை முதல் பாடமாகவோ, துணைப் பாடமாகவோ படித்திருக்க வேண்டும். 01.10.11 அன்று, பகிரங்க போட்டியாளர், 30 வயதிற்குள், பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் 32 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பொதுப்பிரிவு, மிக பிற்பட்டோர், பகிரங்க போட்டியாளர் பிரிவில், 01.11.2011 வரை பதிவு செய்த ஆதரவற்ற விதவை, கலப்புத் திருமணம் புரிந்தோர், சுதந்திரப் போராட்ட தியாகியின் நேரடி வாரிசு, மொழிப்போர் தியாகியின் வாரிசு. ஆதிதிராவிடர் பொதுப்பிரிவு, பகிரங்க போட்டியாளர் பிரிவுக்கு 9.9.2005 வரையும், மிகவும் பிற்பட்டோர் பிரிவில் 30.6.2006 வரை பதிந்துள்ள  முன்னாள் ராணுவத்தினர், அவரைச் சார்ந்தவர்கள்.முன்னுரிமை இல்லாதவர் பிரிவில், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பெண்கள் பிரிவுக்கு 28.12.2004, ஆதிதிராவிடர் பொதுவானவர்கள் 9.3.2001, மிகவும் பிற்பட்டோர் 17.9.2003, பிற்பட்டோர் (முஸ்லிம்) 5.7.2001, பிற்பட்டோர் 5.12.2000, பகிரங்கப் போட்டியாளர் 8.,8.2001 வரை பதிவு மூப்பு செய்திருக்க வேண்டும்.கல்வித்தகுதி, வயது, பதிவுமூப்புள்ளவர்கள் மட்டும் இன்றும், நாளையும்(நவ.,9,10) காலை 11 மணிக்கு, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் அணுகலாம், என தெரிவித்து உள்ளார்.முகவரி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப், புதூர், மதுரை - 625 007.

தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆம்னி பஸ்களும், டிச., 22க்குள்,வேக கட்டுப்பாட்டு கருவி'யை பொருத்த வேண்டும்' சென்னை ஐகோர்ட்!


வழக்கறிஞர் காசிநாத பாரதி, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில், "கடந்த ஜூன் மாதம், வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் தனியார் ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணியும், டிரைவரும் மட்டுமே உயிர் பிழைத்தனர். விபத்திற்கு, லாரியை முந்திச் செல்ல முயன்றதே காரணம் என தெரிந்தது. "திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம்பிச்சை, பயணம் செய்த காரை முந்திச் செல்ல முயன்ற லாரியால் விபத்து ஏற்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார். அரசு பஸ்சில், 12 மணி நேரத்தில் செல்லும் ஒரு இடத்தை, ஆம்னி பஸ்கள் 8 மணி நேரத்தில் சென்றடைகின்றன. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் உயிரை பொருட்படுத்தாமல், நிர்ணயிக்கப்பட்ட மித வேகத்தை விட, அதிவேகத்தில் செல்கின்றன. "விதிகளை மீறும் ஆம்னி பஸ்கள் மீது, தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட ஆம்னி பஸ்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தனி விதிமுறைகளை உருவாக்கி, ஆம்னி பஸ்களின் முகப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, அதில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது: தமிழக அரசு, ஆம்னி பஸ்களில் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது குறித்து அறிவிக்கை வெளியிட வேண்டும். அடுத்த மூன்று மாதத்திற்குள், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து ஆம்னி பஸ்களிலும், டிச., 22க்குள் வேக கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 90 கி.மீ., வேகத்தை விட, அதிவேகத்தில் செல்லும் ஆம்னி பஸ்கள் மீது, போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும், விதிகளை மீறும் பஸ்களின் உரிமத்தை புதுப்பிக்கக் கூடாது. போக்குவரத்து அதிகாரிகள், ஓட்டுனர்கள், மதுபானம் அருந்தி வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை திடீர் சோதனைகள் நடத்தி கண்டறிய வேண்டும். அவ்வாறு ஓட்டுவது தெரிந்தால், ஓட்டுனர்களின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும். குறுகிய காலத்திற்குள் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தாத, "ஆல் இந்தியா பெர்மிட்' பெற்ற வாகனங்களிடமிருந்து வரி வசூலிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அணு உலை எதிர்ப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்?


கூடங்குளம் அணு உலை தொடர்பான பேச்சுவார்த்தையில், அணு உலை எதிர்ப்புக் குழுவினர், ஆவணங்களுடன் பதில் கேட்டுள்ள பல கேள்விகள், பல்வேறு ரகசிய விவரங்களை கேட்கும் வகையில் உள்ளன. இந்த விவரங்கள், எதிர்ப்பாளர்களுக்கு எதற்கு என்று திகைக்கும் போது, மேலும் குழப்பம் விளைவிக்கும் வகையில், தமிழ் மட்டுமின்றி, மலையாளம், இந்தி மொழிகளிலும் அவர்கள் பதில் கேட்டுள்ளனர். இது, அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எதிர்ப்பில் வெளிமாநில சக்திகளுக்கும் பங்கு உள்ளதா? இத்தகைய ஆவணங்களை தர முடியாது என தெரிந்து கொண்டே, போராட்டத்தை நீட்டிக்கும் வகையில் கேட்கின்றனர் என்பது உட்பட, பல கேள்விகள் எழுந்துள்ளன.

பேச்சுவார்த்தை: கடந்த இரு தினங்களுக்கு முன், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில், மத்திய நிபுணர் குழுவும், தமிழக அரசு அமைத்த குழுவிலிருந்த எதிர்ப்பாளர்களும் பேச்சு நடத்தினர். அவர்களுக்கு விழிப்புணர்வு விவரங்களை தெரிவிக்க, மத்தியக் குழுவினர் முன் வந்தனர். ஆனால், அதை ஏற்க, எதிர்ப்புக் குழுவினர் மறுத்து விட்டனர். பின், 50 கேள்விகள் அடங்கிய தொகுப்பை கொடுத்து, அதற்கு தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில், ஆவணத்துடன் பதில் கேட்டுள்ளனர்.

ஆலோசனை: இக்கேள்விகள், அணு உலையின் தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் ரகசியம் மற்றும் உயர்மட்ட அளவிலான ஒப்பந்தங்களை உள்ளடக்கியுள்ளதாக இருப்பதால், அதுகுறித்த ஆவண விவரங்களை தர முடியுமா என்பது குறித்து, அணுசக்தி கழக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அணு உலையின் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் பெரும்பாலும், அணு உலை கட்டுமான நிறுவனங்களுக்கும், அணு சக்தி நிறுவனங்களுக்கு மட்டுமே தேவைப்படும். இந்த விவரங்கள், சாதாரண மக்களுக்கு எந்த பதிலையும் தரப்போவதில்லை.

புதிர்: ஆனால், "அணு உலையே வேண்டாம்,' என, திட்டவட்டமாக கூறும், அணு உலை எதிர்ப்பாளர் குழுவுக்கு, இந்த விவரங்கள் ஏன் தேவை என்ற கேள்வி, அணுசக்தி வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதற்கிடையே, எதிர்ப்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது தொடர்பாக, வரும் 15, 16, 17ம் தேதிகளில், கூடங்குளம் அணு உலைக்கு, மத்திய குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.

எதிர்ப்பாளர்களின் கேள்விகள்

நாட்டின் பாதுகாப்பு, ரகசிய விவரங்கள் சார்ந்த கேள்விகள்
1. அணு உலை அமைந்துள்ள இடம்
2. அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு விவரம்
3. அணு உலையின் செயல்திறன் அறிக்கை
4. எரிபொருள் நிரப்புவது எப்படி?
5. யுரேனிய எரிபொருள் வாங்கும் முறை; எங்கிருந்து வாங்கப்படுகிறது
6. எரிபொருட்களை கொண்டு வரும் பாதைகள் மற்றும் போக்குவரத்து குறித்த விவரம்
7. தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது. அதன் பாதைகள் குறித்த விவரம்
8. அணு கழிவுகள் அகற்றுதல் மற்றும் கையாளும் தொழில்நுட்பம்
9. அணு மறு சுழற்சி குறித்த விவரம்
10. அணு மறு சுழற்சி நிலையம் குறித்த விவரம்
11. குளிர்நீர் வெளியேற்றும் தொழில்நுட்பம்
12. மன்னார் வளைகுடா பகுதிக்கான பாதுகாப்பு
13.மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கான பாதுகாப்பு
14.பயங்கரவாத அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கை
15. இத்திட்டத்தால், சீனா, இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான நட்புறவு மாற்றம் குறித்த விவரம்
16. எரிபொருளுக்கான கனிம சுரங்கங்கள், அதை தோண்டுவதால் ஏற்படும் விளைவுகள்
17. ரஷ்யா - இந்தியா இடையிலான நட்புறவு ஒப்பந்த விவரம்
18. ராணுவ கண்காணிப்பு விவரம்
19. அணு உலையின் தொழில்நுட்ப விவரம் 
மற்றும் அதற்கான மொத்த செலவு விவரம்
20. கடல் பாதுகாப்பை பலப்படுத்துவது எப்படி?
21. கடல் வழி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விவரம்
22. ராணுவம் பணியமர்த்தப்படும் பகுதிகள் எவை?
23. மீதமுள்ள நான்கு உலைகள் கட்டுவதற்கான ஒப்பந்த விவரம்
24. அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிடையேயான ஒப்பந்த விவரம்
25. ஆயுதங்கள் தயாரிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள்


மற்ற கேள்விகள்

26. சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த அறிக்கை
27. கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறிய விவரம்
28.பொது கருத்துக்கேட்பு நடத்திய விவரம்; அறிக்கை
29. கட்டுமான தரம் மற்றும் நம்பகத்தன்மை
30. கான்ட்ராக்டர்களின் செயல்பாடுகள்
31. வேலைவாய்ப்பு அளிக்கும் விவரம்
32. பேச்சிப்பாறை மற்றும் தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்தும் விவரம்
33. கடல் நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் விளைவுகள்
34. கதிரியக்க பாதுகாப்பு முறைகள்
35. அணு உலை இயக்கத்தில் வெளியேறும் மாசு குறித்த விவரம்
36. அணு உலை பகுதிகளில் மக்கள் வாழும் முறை
37. கடலியல் விவரம்
38. மீனவர்களுக்கான பாதுகாப்பு
39. நிலப்பகுதியில் மாற்றம் ஏற்படுமா?
40. இயற்கை பேரிடர் மேலாண்மை விவரம்
41. அவசர பாதுகாப்பு நடவடிக்கை விவரம்
42. மின்சாரம் உற்பத்தி மற்றும் கொண்டு செல்லும் வழி


தொடரும் நிலச்சரிவு காரணம்...?

மலை மாவட்டமான நீலகிரி, ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு இலக்காகி வரும் இடமாக மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பல்வேறு நிலச்சரிவுகள், மண் சரிவுகள், வெள்ளம் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்துள்ளன. 2009ல் இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சமீபத்தில் பெய்த மழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டு கோத்தகிரி அருகே மூவர் உயிரிழந்தனர். 

இதற்கான காரணங்களை ஆராய கொல்கத்தாவை சேர்ந்த பாய் ராப் கல்லூரியை சேர்ந்த புவியியல் துறை மாணவர்கள் 43 பேர் மற்றும் பேராசிரியர்கள் பாஷூ, ராக்கி, சிலி ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  அக்குழுவினர்,    ‘’மலை மாவட்டமான நீலகிரியில் இயற்கைக்கு பெரும் உதவியாக உள்ள வனப்பகுதிகளின் அடர்த்தி வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. 

தற்போது 48% காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு, விளை நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாறியுள்ளது. செங்குத்தான மலைப்பகுதிகளில் ஜேசிபி, பொக்ளைன் இயந்திரங்கள் மூலம் நிலச்சீரமைப்பு பணி செய்வதால் நில அமைப்பு மாறுகிறது. இதனால் மண் இளகி மண் சரிவுக்கு வித்திடுகிறது. விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டுதல், சாக் கடை கால்வாய் வசதி, மழை நீர் வடிகால் வசதிகளில் மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது.  இந்நிலை நீடித்தால் இங்கு பேரழிவுகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இயற்கையையும், மனிதர்களையும் பாதுகாக்க கட்டிடங்கள் மற்றும் விளை நிலங்களுக்கு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கவேண்டும். வன பரப்பளவு குறைந்ததால் வன விலங்குகள் குடியி ருப்புகளுக்கு வருகின்றன. முதல்தேவையாக வனத்தின் பரப்பை அதிகரிக்க வேண்டும்’’ என்று  கூறினர்.

யாரைத்தான் நம்புவது...?


 மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி காயத்திரிதேவி, கடந்த 6-ம் தேதியன்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடப்பதாக சொல்லிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

முதல் கட்ட விசாரனையில், அதே பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக இருக்கும் தங்கவேலுவுக்கு காயத்திரி தேவி மீது ஒரு கண் இருந்தது என்பதை தெரிந்த போலீசார் மற்றும் காயத்திரி தேவியின் உறவினர்கள் உடற்கல்வி ஆசிரியரிடம் “முறைப்படி” விசாரித்ததில், தான் ஆறாம் தேதி காலையில் மாணவி காயத்திரி தேவியை பெருமாள் கரட்டுக்கு அழைத்துச்சென்றதாகவும், மதியம் வரை அங்கு இருந்து விட்டு பின்னர் மாணவி காயத்திரி தேவியை மட்டும் அங்கிருந்து மேட்டூருக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேட்டூரிலிருந்து மாணவி என்கே போனார் என்று விசாரணை நடந்தபோது, காயத்திரி தேவி, அவரது உறவினர் ஒருவரிடம் செல்போனில் தன்னை “யாரோ” மூன்று பேர் கடத்தி வந்து விட்டதாக சொல்லியுள்ளார். அந்த செல்பேசி எண்ணை தோண்டி எடுத்து விசாரணை செய்த போலிசார், சேலம் இரும்பாலைக்கு அருகில் உள்ள மங்களத்துக்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் ரமேஸ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர்.

மூன்று நாட்களாக காணாமல் போயிருக்கும் ரமேசின் செல்போன் “சுவிச்ஆப்” செய்யப்பட்டிருந்தது.   ஆனாலும் அந்தசெல்போனின் போகும் பாதையை கண்காணித்த போலீசார் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருப்பதைதெரிந்துகொண்டனர். பின்னர், அதே செல்போனுக்கு “சிம்கார்டு” மாற்றப்பட்டு தொடர்புக்கு வந்த போது ஒன்பதாம் தேதி இரவுகேரளாவிலிருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருப் பதாகவும், காயத்திரியை தான் திருமணம் செய்துள்ள தாகவும் தகவல் சொல்லியுள்ளான் ரமேஷ். இருவரையும் பிடிக்க,  ஈரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்த மேட்டூர் போலிசாரை ஏமாற்றிவிட்டு ரமேஷும் காயத்திரி தேவியும், திருப்பூரிலேயே ரயிலில் இருந்து இறங்கி விட்டனர். அங்கிருந்து நாமக்கல் போன இருவரும், செலவுக்கு பணம் இல்லாததால், பள்ளிபாளையத்தில் இருக்கும் ரமேசின் நண்பர் கலைச்செல்வன் என்பவருக்கு போன் செய்து தனக்கு அவசரமாக இரண்டாயிரம் ரூபாய் பணம்தேவைப்படுவதாகவும், பணத்தை  எடுத்துக்கொண்டு இரவே நாமக்கல் வருபடி கூறியுள்ளார் ரமேஷ். பள்ளிபாளையத்தில் குடியிருக்கும் கலையை இரவில் போய் பிடித்த போலீசார் “கலை”யை கூட்டிக்கொண்டு நாமக்கல்லுக்கு சென்று அங்கு மறைவான இடத்தில் போலீசார் நின்றுகொண்டு “கலை”யை விட்டு போன் செய்து ரமேஷை வந்து பணம் வாங்கிக்கொண்டு போக சொல்லியுள்ளார்கள்.

பணம் வாங்க வந்த ரமேசையும், காயத்திரி தேவியையும் பிடித்த போலீசார், மேட்டூர் கொண்டு வந்து விசாரணை செய்ததில், சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் பேருந்தில் கிளீனராக சென்று கொண்டிருந்த ரமேசுக்கும் காயத்திரி தேவிக்கும், நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் உடற் கல்வி ஆசிரியர் தன்மீது ஒரு மாதிரியான பாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார் காயத்ரி. மேலும்,   கடந்த ஆறாம் தேதியன்று சென்றாயபெருமாள் கோவில் கரட்டுக்கு கூட்டிப்போன உடற்கல்வி ஆசிரியர் தங்கவேலு,   நான் உன்னைத்தான் “உயிருக்கு உயிராய்” விரும்புகிறேன் என்று சொல்லியுள்ளார். ஆனால், காயத்திரி தேவி நான் “பஸ் கிளீனர்” ரமேசை விரும்பவதகவும், அவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ஆசிரியர் தன்னை மிரட்டி “பாலியல் பலாத்காரம்” செய்ததாகவும், பின்னர் பாலியல் பலாத்காரம் அப்படி செய்யவில்லை... உன்னுடைய பெற்றோரிடம், உனக்கும் ரமேசுக்கும் உள்ள தொடர்பை பற்றி சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார் என்றும் முன்னுக்கு பின் முறனாக சொல்லியுள்ளார். உடற்கல்வி ஆசிரியர் தங்கவேலுவுக்கும், காயத்திரி தேவிக்கும் நடந்த இந்த “கசமுசா”வில் மனச்சிதறல் ஏற்பட்ட மாணவி நேராக வீட்டுக்கு போகாமல் சேலத்துக்கு பஸ் ஏறிவிட்டார்.

அங்கு வந்து ரமேசுக்கு போன் செய்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அன்று இரவு சேலத்தில் உள்ள நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த இருவரும், 7 ம் தேதி காலையில் சேலம் அருகில் உள்ள சித்தர் கோவிலில் போய் திருமணம் செய்துகொண்டு, நேராக கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ரமேசின் தூரத்து உறவினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். இருவரும் திருமணம் செய்துள்ளார்கள்.   காயத்திரிதேவி பள்ளிகூட மாணவி, அவளது பெற்றோர்கள் எப்படியும் இந்நேரம் போலிசுக்கு போயிருப்பார்கள்...  நமக்கும் “ஏழரை” ஆரம்பித்து விட்டது என்பதை தெரிந்து கொண்ட உறவினர்கள் இருவருக்கும் “பஸ்” செலவுக்கு கொஞ்சம் காசை கையில் கொடுத்து இருவரையும் சேலத்துக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டனர்.


வரும் வழியில் தான் நாமக்கலில் போலீசார் இருவரையும் பிடித்துள்ளனர். “மைனர்” பெண்ணை கடத்திய குற்றத்திற்காக இப்போது ரமேஷை,  சிறைக்கு அனுப்பியுள்ளது போலிஸ். ஆனால், நன்றாக படித்துக்கொண்டிருந்த மாணவி காயத்திரி தேவிக்கு முதலில் “மனச்சீதைவை” ஏற்படுத்திய உடற்கல்வி ஆசிரியரை ஒன்றும் செய்யாமல் வெளியே விட்டுள்ள்ளார் மேட்டூர் கண்காணிப்பாளர் கோபால்.இந்த வழக்கு விசாரணைக்காக காவல் ஆய்வாளர் கேசவன் மூன்று நாட்கள் அலையாய் அலைந்துள்ளார், வகுப்பில் முதல் மாணவியாக இருக்கும் காயத்திரி தேவி, 10 வகுப்பு பொதுத்தேர்வில் 480, மதிப்பெண் எடுத்துள்ளார். எந்த பிரச்சனையும் இல்லாமல் படித்துக்கொண்ருந்த மாணவியின் “பாதை” மாற்றத்துக்கு காரணம் உடற்கல்வி ஆசிரியர் தங்கவேலு தான். அவர் மீதுதான் முதலில் வழக்கு போடவேண்டும் என்று சொல்லியுள்ளார் ஆய்வாளர் கேசவன். ஆனால், உடற் கல்வி ஆசிரியரிடம் “சமரசம்” ஆகியுள்ள டி.எஸ்.பி, கோபால், அவர் மீது வழக்கு போடாமல் பார்த்துக் கொண்டார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...