|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 November, 2011

யாரைத்தான் நம்புவது...?


 மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி காயத்திரிதேவி, கடந்த 6-ம் தேதியன்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடப்பதாக சொல்லிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

முதல் கட்ட விசாரனையில், அதே பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக இருக்கும் தங்கவேலுவுக்கு காயத்திரி தேவி மீது ஒரு கண் இருந்தது என்பதை தெரிந்த போலீசார் மற்றும் காயத்திரி தேவியின் உறவினர்கள் உடற்கல்வி ஆசிரியரிடம் “முறைப்படி” விசாரித்ததில், தான் ஆறாம் தேதி காலையில் மாணவி காயத்திரி தேவியை பெருமாள் கரட்டுக்கு அழைத்துச்சென்றதாகவும், மதியம் வரை அங்கு இருந்து விட்டு பின்னர் மாணவி காயத்திரி தேவியை மட்டும் அங்கிருந்து மேட்டூருக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேட்டூரிலிருந்து மாணவி என்கே போனார் என்று விசாரணை நடந்தபோது, காயத்திரி தேவி, அவரது உறவினர் ஒருவரிடம் செல்போனில் தன்னை “யாரோ” மூன்று பேர் கடத்தி வந்து விட்டதாக சொல்லியுள்ளார். அந்த செல்பேசி எண்ணை தோண்டி எடுத்து விசாரணை செய்த போலிசார், சேலம் இரும்பாலைக்கு அருகில் உள்ள மங்களத்துக்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் ரமேஸ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர்.

மூன்று நாட்களாக காணாமல் போயிருக்கும் ரமேசின் செல்போன் “சுவிச்ஆப்” செய்யப்பட்டிருந்தது.   ஆனாலும் அந்தசெல்போனின் போகும் பாதையை கண்காணித்த போலீசார் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருப்பதைதெரிந்துகொண்டனர். பின்னர், அதே செல்போனுக்கு “சிம்கார்டு” மாற்றப்பட்டு தொடர்புக்கு வந்த போது ஒன்பதாம் தேதி இரவுகேரளாவிலிருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருப் பதாகவும், காயத்திரியை தான் திருமணம் செய்துள்ள தாகவும் தகவல் சொல்லியுள்ளான் ரமேஷ். இருவரையும் பிடிக்க,  ஈரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்த மேட்டூர் போலிசாரை ஏமாற்றிவிட்டு ரமேஷும் காயத்திரி தேவியும், திருப்பூரிலேயே ரயிலில் இருந்து இறங்கி விட்டனர். அங்கிருந்து நாமக்கல் போன இருவரும், செலவுக்கு பணம் இல்லாததால், பள்ளிபாளையத்தில் இருக்கும் ரமேசின் நண்பர் கலைச்செல்வன் என்பவருக்கு போன் செய்து தனக்கு அவசரமாக இரண்டாயிரம் ரூபாய் பணம்தேவைப்படுவதாகவும், பணத்தை  எடுத்துக்கொண்டு இரவே நாமக்கல் வருபடி கூறியுள்ளார் ரமேஷ். பள்ளிபாளையத்தில் குடியிருக்கும் கலையை இரவில் போய் பிடித்த போலீசார் “கலை”யை கூட்டிக்கொண்டு நாமக்கல்லுக்கு சென்று அங்கு மறைவான இடத்தில் போலீசார் நின்றுகொண்டு “கலை”யை விட்டு போன் செய்து ரமேஷை வந்து பணம் வாங்கிக்கொண்டு போக சொல்லியுள்ளார்கள்.

பணம் வாங்க வந்த ரமேசையும், காயத்திரி தேவியையும் பிடித்த போலீசார், மேட்டூர் கொண்டு வந்து விசாரணை செய்ததில், சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் பேருந்தில் கிளீனராக சென்று கொண்டிருந்த ரமேசுக்கும் காயத்திரி தேவிக்கும், நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் உடற் கல்வி ஆசிரியர் தன்மீது ஒரு மாதிரியான பாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார் காயத்ரி. மேலும்,   கடந்த ஆறாம் தேதியன்று சென்றாயபெருமாள் கோவில் கரட்டுக்கு கூட்டிப்போன உடற்கல்வி ஆசிரியர் தங்கவேலு,   நான் உன்னைத்தான் “உயிருக்கு உயிராய்” விரும்புகிறேன் என்று சொல்லியுள்ளார். ஆனால், காயத்திரி தேவி நான் “பஸ் கிளீனர்” ரமேசை விரும்பவதகவும், அவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ஆசிரியர் தன்னை மிரட்டி “பாலியல் பலாத்காரம்” செய்ததாகவும், பின்னர் பாலியல் பலாத்காரம் அப்படி செய்யவில்லை... உன்னுடைய பெற்றோரிடம், உனக்கும் ரமேசுக்கும் உள்ள தொடர்பை பற்றி சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார் என்றும் முன்னுக்கு பின் முறனாக சொல்லியுள்ளார். உடற்கல்வி ஆசிரியர் தங்கவேலுவுக்கும், காயத்திரி தேவிக்கும் நடந்த இந்த “கசமுசா”வில் மனச்சிதறல் ஏற்பட்ட மாணவி நேராக வீட்டுக்கு போகாமல் சேலத்துக்கு பஸ் ஏறிவிட்டார்.

அங்கு வந்து ரமேசுக்கு போன் செய்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அன்று இரவு சேலத்தில் உள்ள நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த இருவரும், 7 ம் தேதி காலையில் சேலம் அருகில் உள்ள சித்தர் கோவிலில் போய் திருமணம் செய்துகொண்டு, நேராக கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ரமேசின் தூரத்து உறவினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். இருவரும் திருமணம் செய்துள்ளார்கள்.   காயத்திரிதேவி பள்ளிகூட மாணவி, அவளது பெற்றோர்கள் எப்படியும் இந்நேரம் போலிசுக்கு போயிருப்பார்கள்...  நமக்கும் “ஏழரை” ஆரம்பித்து விட்டது என்பதை தெரிந்து கொண்ட உறவினர்கள் இருவருக்கும் “பஸ்” செலவுக்கு கொஞ்சம் காசை கையில் கொடுத்து இருவரையும் சேலத்துக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டனர்.


வரும் வழியில் தான் நாமக்கலில் போலீசார் இருவரையும் பிடித்துள்ளனர். “மைனர்” பெண்ணை கடத்திய குற்றத்திற்காக இப்போது ரமேஷை,  சிறைக்கு அனுப்பியுள்ளது போலிஸ். ஆனால், நன்றாக படித்துக்கொண்டிருந்த மாணவி காயத்திரி தேவிக்கு முதலில் “மனச்சீதைவை” ஏற்படுத்திய உடற்கல்வி ஆசிரியரை ஒன்றும் செய்யாமல் வெளியே விட்டுள்ள்ளார் மேட்டூர் கண்காணிப்பாளர் கோபால்.இந்த வழக்கு விசாரணைக்காக காவல் ஆய்வாளர் கேசவன் மூன்று நாட்கள் அலையாய் அலைந்துள்ளார், வகுப்பில் முதல் மாணவியாக இருக்கும் காயத்திரி தேவி, 10 வகுப்பு பொதுத்தேர்வில் 480, மதிப்பெண் எடுத்துள்ளார். எந்த பிரச்சனையும் இல்லாமல் படித்துக்கொண்ருந்த மாணவியின் “பாதை” மாற்றத்துக்கு காரணம் உடற்கல்வி ஆசிரியர் தங்கவேலு தான். அவர் மீதுதான் முதலில் வழக்கு போடவேண்டும் என்று சொல்லியுள்ளார் ஆய்வாளர் கேசவன். ஆனால், உடற் கல்வி ஆசிரியரிடம் “சமரசம்” ஆகியுள்ள டி.எஸ்.பி, கோபால், அவர் மீது வழக்கு போடாமல் பார்த்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...